செவ்வாய், ஆகஸ்ட் 01, 2006

Tamil Bloggers' Faces - Identify

உன் கண்
உன்னை ஏமாற்றினால்...

நம்மிடையே முகத்தைக் காட்டி உலாவும் வலைப்பதிவர்களில் சிலரின் கண்கள். தன்னை அறிந்தவர்கள் பின்னூட்டமிடலாம். 1. இசைஞானி


 2. தேவா பிரியர்


 3. கல்யாணமாம் கல்யாணம்


 4. அக்கம் பக்கம் பார்க்காதீங்க... பின்னாடி பார்த்தாலே போதும்


 5. கவிஞர்களுக்கு பிடித்த பாடுபொருள்


 6. பதிப்பகத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்


 7. உம் கொட்டுங்க... ஒரு U போடுங்க...


 8. அறிமுகத்தில் 'வலைப்பகுதிகளை உருவாக்கி, "எழுதித்தள்ளாமல்", யோசித்து எழுதுபவன்' என்றவர்.


 9. மண்ணின் மணம் மாறி மினசோட்டா வந்தாலும் சொந்த ஊரை மறவாதவர்.


 10. ஒரு க்ரூப்பாகத்தான் துவக்கியிருக்காங்க


 11. தந்தை என்று செல்லமாய் சதாய்க்கப்படுபவர்


 12. அவர் தந்தை என்றால், இவர் படைக்கும் கடவுள்


 13. டவுட் வந்தால் இவரிடம் தெளியலாம்


 14. அண்மையில் இவர் படித்த புத்தகங்கள் :
  1. நட்புக்காலம் - அறிவுமதி
  2. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை - என்.சொக்கன்
  3. பாலகாண்டம் - நா.முத்துக்குமார்
  4. தெருப்புழுதி - எம்.ஏ.இளஞ்செல்வன்


 15. இப்பொழுதெல்லாம் இவரைப் பார்த்தால் 'யானை வரும் பின்னே; மணியோசை...' புதுமொழி தோன்றுகிறது.


 16. குஷ்பு படம் கிடைக்குங்களா?


 17. குசும்பு செய்தாலும் மனதில் விகல்பம் இல்லாத நல்லவர்; வல்லவர்.
| |

32 கருத்துகள்:

//கல்யாணமாம் கல்யாணம்//
வாத்தியாரூ...

//கவிஞர்களுக்கு பிடித்த பாடுபொருள்
//
இந்த மாத வெற்றியாளர்..

//அறிமுகத்தில் 'வலைப்பகுதிகளை உருவாக்கி, "எழுதித்தள்ளாமல்", யோசித்து எழுதுபவன்' என்றவர்.//
மரபூரார்

//மண்ணின் மணம் மாறி மினசோட்டா வந்தாலும் சொந்த ஊரை மறவாதவர்.//
குமரன்

//ஒரு க்ரூப்பாகத்தான் துவக்கியிருக்காங்க//
முத்துகுமரன்

//தந்தை என்று செல்லமாய் சதாய்க்கப்படுபவர்//
தருமி??

//கல்யாணமாம் கல்யாணம்//
- இது தப்பா சொல்லிட்டேன்.. நம்ம ஞானியார் இல்ல..

//இப்பொழுதெல்லாம் இவரைப் பார்த்தால் 'யானை வரும் பின்னே; மணியோசை...' புதுமொழி தோன்றுகிறது.//
யாருங்க இது?? ஆர்வத்தைக் கிளப்பிட்டீங்க..

2.கானா பிரபா
3.நிலவு நண்பன்
4.tbr.joseph
8.மரபூர் ஜெயசந்திரன்
9.குமரன்(Kumaran)?
10.முத்துக்குமரன்
12.காசி
16.ஆசிப் மீரான் ?

இசைஞானி - சிவா புராணம் எழுதும் சிவா

உம் கொட்டுங்க... ஒரு U போடுங்க...

மயூரன்

அறிமுகத்தில் 'வலைப்பகுதிகளை உருவாக்கி, "எழுதித்தள்ளாமல்", யோசித்து எழுதுபவன்' என்றவர்.

மரப்பூர் JC

மண்ணின் மணம் மாறி மினசோட்டா வந்தாலும் சொந்த ஊரை மறவாதவர்.

குமரன்

ஒரு க்ரூப்பாகத்தான் துவக்கியிருக்காங்க

முத்துக்குமரன்


அவர் தந்தை என்றால், இவர் படைக்கும் கடவுள்

காசி

குட் ஐடியா பாபா. வாழ்த்துக்கள். ஒரு நாலஞ்சு தெரியும். அது எல்லாருக்குமே தெரியும்ன்னு நினைக்கிறேன்.

எதனையும் தேடாமல் நினைவுக்கு வந்தது இவர்கள்...
1) siva
3) Rasikov
5) Nila
9)Kumaran
10) Muthuk kumaran
11) Badri
12)Kasi
16)Asif Meeran
17) Neengala Grrrrrrrrrrrrrrr

..aadhi

அ) ...ஆதி: சொன்ன அனைத்துமே கண்குறி தப்பாமல் சரி (1,3,5,9,10,11,12,16,17) - எட்டு

ஆ) கேல்கரியார்: 7, 8, 9, 10, 12 & 1 - விழியை வைத்து வலைப்பதிவர்களை பிடிச்சிருக்கீங்க - ஆறு

இ) கப்பி: 2, 3, 4, 8, 9, 10, 12 & 16 - கண்கொட்டாமல் பிடித்திருக்கிறீர்கள் - எட்டு

ஈ) பொன்ஸ்: 3, 5, 8, 9, 10, (12) - இளைய தளபதி இல்லாத சோகத்தில் #12-ஐ தவறவிட்டுட்டீங்க போல ;-) - ஐந்து

பாலா,
பதிவர்கள்ல எல்லாம் விஜயை எதிர்பார்க்க முடியுமா?.. விடுங்க.. ம்ம்ம்ம் (பெருமூச்சு .. ) :-D

நான் 12 சொல்லவே இல்லையே? 11 தப்புன்னு சொல்றீங்களா?

1. siva
2.gana prabha
3. ilavanji
4. tbr joseph
5. nila

7. mayuran
8. marabur jc
9.kumaran
10. muthukumaran
11. badri
12. kasi
13. rama.ki

15. dondu
16. asif meeran

அப்பாவித் தமிழா: #3 தவிர்த்து அனைத்தும் கண்ணுபடப் போகுதய்யா
----------
பொன்ஸ்,
----12 சொல்லவே இல்லையே? ---

பதினொன்றுதான் எழுத நினைத்தேன் :-D)

1 - சிவா
7 - பத்ரி

17. boston bala?

5. நிலா
6. முத்து (தமிழினி) ?

நம்ம அறிவுக்கு வேற ஒண்ணும் கண்டு பிடிக்க முடியவில்லை..

ஆமாம், இதுல ஏன் 33% ஒதுக்கலை? ;) பேருக்கு ஒண்ணே ஒண்ணு.. அதுக்கும் ஒரு உப்பு சப்பில்லாத க்ளூ.. :(

i) கப்பி: 5 & 6 - எட்டு +2 = 10

ii) யப்பா தமிழா - :-D #6 & #14 மட்டும்தான் பாக்கி!! ==> 15 :O

iii) பொன்ஸ்: #1 & #7 - ஐந்து + 2 = 7

ஒருவர் முதலை வாயில் தலை வைத்திருக்கிறார்; இன்னொருவர் கறுப்பு வெள்ளை; மற்றொருவர் நாலு வயதில் ஸ்டூடியோ; நியுசிலாந்தை வெட்டி ஒட்டியிருக்கலாம்; நீங்களோ குடுகுடுன்னு ஓடுகிறீர்கள்...

(ஆறும் அது ஆழமில்ல மெட்டில் பாடிப் பார்க்கலாம் ;-))

ஹீரோயின் அம்மாவைக் கூட ஷூட்டிங்கில் இருந்து வெட்டி விட்டுடலாம்
கலைஞர் கையால் ஜெயமோகனுக்குக் கூட பரிசு கொடுத்திடலாம்
சச்சினும் அணித் தலைவர் ஆகிவிடலாம்

ஆனால், பதிவாளர்களின் புகைப்படம் மட்டும் கிடைக்காதய்யா... :-)

பாலா, 100%

[ இதுக்கு முன்னே வந்ததை பப்ளிஷ் பண்ணாதீங்களேன்.. ப்ளீஸ் .. :) ]

பாபா, வலைப்பதிவர்களின் புகைப்படங்களை கவனித்துப் பார்த்ததில்லை. அதனால நான் ஆட்டைக்கு வரலை. அடுத்தமுறை மறுபடி பிரபலங்கள் படம் போட்டா கலந்துக்கறேன்.

ஒண்ணு மட்டும் சொல்றேன்.
...
...
...
...
அருமையான பதிவு!

புதிரெல்லாம் போடறீங்கன்னு ஆசை ஆசையா வந்தா எல்லாத்தையும் அமெரிக்கா காரங்களே மிச்சம் வெக்காம முடிச்சிட்டீங்களே?
:(

பாலா ....! பாபா படம் ஏன் போடவில்லை ? ஏமாற்றமாக இருக்கிறது :)))

போட்டி முடிஞ்சு போச்சா! சரி.

என் கண்ணை என் கணிணியில பாக்க முடியலையே....:-(

நான் கொடுத்து வச்சது அவ்வளவுதானா??.

நல்ல விளையாட்டு பாலா..

* இலவச விளம்பரச் சேவைக்கு நன்றி*

----எல்லாத்தையும் அமெரிக்கா காரங்களே மிச்சம் வெக்காம முடிச்சிட்டீங்களே?----

----போட்டி முடிஞ்சு போச்சா!----

கைப்புள்ள & ராகவன்,
இன்னும் #14 யாருமே கண்டுபிடிக்கவில்லை :-)

-----என் கண்ணை என் கணிணியில பாக்க முடியலையே-------

ஏன் முத்துகுமரன்? ஏதாவது தடா-வா?

----பாபா படம் ஏன் போடவில்லை---

பஜ்ஜி படம் கேட்காத வரைக்கும் சரிதான் ;-)

-----ஒரு நாலஞ்சு தெரியும். அது எல்லாருக்குமே தெரியும்ன்னு நினைக்கிறேன்.----

பதிவருக்கு பதிவரே பொறாமை கொள்ளுமளவு பின்னூட்ட ஜாம்பவானின் மறுமொழிக்கு __/\___ ;-)

***** அப்பாவித்தமிழன் said...
7. mayuran *****

-- Boston Bala said...
அப்பாவித் தமிழா: #3 தவிர்த்து அனைத்தும் கண்ணுபடப் போகுதய்யா --

***** பொன்ஸ் said...
7 - பத்ரி ******

--- Boston Bala said...
iii) பொன்ஸ்: #1 & #7 - ஐந்து + 2 = 7 --

குழப்புறீங்க.. அப்பாவியா? பொன்ஸா? யாரு சரி?

14. அருள்குமார்

14. பாலு மணிமாறன்..

ரொம்பவே கஷ்டப்பட வைச்சிட்டீங்க.. எங்கேர்ந்து போட்டோ பிடிச்சீங்கன்னு இப்போ புரியுது.. அதான் உங்களுக்கு பெண்பதிவாளர்கள் போட்டோ கிடைக்காம போய்டிச்சி.. (ஏப்ரல் எல்லாம் சமீபத்துல சேர்ப்பாங்களா? )

ம்ம்ம்.. நான் நேத்து தமிழ்மணத்தில் இணைந்துள்ள எல்லா பதிவாளர்கள் லிஸ்டும் எடுத்து பக்கம் பக்கமா போய் போட்டோ தேடிப் போட்டேன்.. என்ன பண்ண.. தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவதே வழக்கமாப் போய்டுச்சு.. :((

-----குழப்புறீங்க.. அப்பாவியா? பொன்ஸா? ----

'அப்பாவி'யுடைய பதில் சரியானது. 'புகைப்படங்களில்' பத்ரி இருக்கிறார் என்பதில் குழம்பிட்டேன்.


-----எல்லா பதிவாளர்கள் லிஸ்டும் எடுத்து பக்கம் பக்கமா போய் போட்டோ ----

வெகு சிறப்பு. சில நாள் முன்பு பொழுது போகாத நேரத்தில் முதல் நூறு பதிவுகளைக் கணக்கெடுத்து பார்த்தேன். இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு - சுந்தரவடிவேல் பதிவின் தொடர்ச்சியாக தமிழ் பதிவுகளில் ஆண்/பெண் சதவிகிதம், இலங்கை/இந்தியத் தமிழர்கள், இந்து/முஸ்லீம்/கிறித்துவம் என்று வகைப்படுத்திப் பார்க்க முயன்றேன். தங்களின் லிஸ்ட் போலவே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெண் பதிவர்கள் காணக் கிடைத்தார்கள். (முழு ஸ்டாடிஸ்டிக்சும் செய்ய பொறுமை இல்லை :-)


----எங்கேர்ந்து போட்டோ பிடிச்சீங்கன்னு இப்போ புரியுது..----

மரபூருக்கான துப்பில் 'கோடிட்டு' காட்டியிருக்கிறேன் :-D

அட.. என் தலையும் இங்கே உருளுதா:-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு