செவ்வாய், ஆகஸ்ட் 01, 2006

Movies: Mini Reviews, Ultra small reflections

சினிமாவாய் பார்க்கிறேன் விமர்சனம்தான் வரவில்லை


  1. லொலிடா (Lolita): சின்ன வயதில் மேட்டர் எங்கே இருக்கும் என்பதற்காக நோடிய படம். அமிதாப் நடிக்கப் போவதாக சன்னாசி பயமுறுத்த மீண்டும் பார்ப்பதற்காக எடுத்தேன். நபகோவ் கதையை (நான்) படித்திருந்தால், படத்தை இன்னும் ரசிக்க முடிந்திருக்கலாம்.

    A normal man, given a group photograph of school girls and asked to point out the loveliest one, will not necessarily choose the nymphet among them.


  2. இகிரு: Ikiru குறித்து மிக அழகாக பலர் எழுதி இருக்கிறார்கள். இறுதிக் காட்சி 12 Angry Men போல் வளர்ந்தது. Autumn Spring போல் பல எண்ணங்களை தளிரவிட்ட படம்.


  3. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது: நிலவுவெளி சிவராமன் கருத்துடன் ஒத்துப் போகிறேன். பினாத்தல்கள்: சினிமா ரசிகர்களில் ஒரு கோயிஞ்சாமி போல் முரளியின் காபிரைட் சொல்லாத காதலை இரண்டாம் பாதில் உபயோகப்படுத்தி சொதப்பாமல் இருந்திருந்தால் மிக நல்ல நகைச்சுவைப்படமாக வந்திருக்க வேண்டியது என்று சபிக்குமளவு ஒழுங்காக சென்ற படத்தை பிற்பகுதியில் படுத்தி எடுத்தார்கள். கொஞ்சம் Addicted to Love வாசம். ஆனால், அது ரம்மியமான ரகளை.

  4. The Life and Death of Peter Sellers (2004): விவரணப் படம் எடுத்தால் கூட மனிதர்களின் குணாதிசயங்களை இலகுவாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். வாழ்க்கையில் பெரிய நிலையை அடைய எடுக்கும் முயற்சிகள்; பெற்றோரின் வளர்ப்பு விதங்கள்; இல்லற எதிர்பார்ப்பு... ஸ்டான்லி க்யூப்ரிக் இப்படிப்பட்ட ஆளா?

    Peter Sellers: Can't I have your support?
    Anne Sellers: You've always had my support. It's my patience



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு