வியாழன், ஆகஸ்ட் 03, 2006

Talkative & Unspeakable

பாடுபொருளும் பேசாப்பொருளும்

நண்பர்களுடன் தேநீர் விருந்து; வலைவாசிகளுடன் மறுமொழி அரட்டை; உறவினர்களுடன் மணமண்டபத்தில் வட்ட்மேஜை; அலுவலில் மதிய உணவு விவாதம்.

உரையாடுவதற்கு ஏற்ற தலைப்புகள்:

 1. வானிலை

 2. போக்குவரத்து

 3. தொழில் நுட்பம்

 4. அரசியல் கலக்காத மனமகிழ் சினிமா

 5. விளையாட்டு

 6. தகவல் செய்தி

 7. பொழுதுபோக்கு கேளிக்கை

 8. மேலோட்டமான சொந்தக்கதை விசாரிப்பு

 9. வீடு/கார்/கணினி ஆலோசனை

 10. சமையற்குறிப்புநெருங்கியவர்கள் இல்லாத பொதுவில், பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன், எந்த எழுவாய்களை எழாமல் தவிர்க்கிறேன் என்று யோசித்த பட்டியல்:

 1. காமம் - Trailing Technology: Sex Work in a Traditional City (வழி)

 2. மாதவிடாய் - தோழி.காம் - கனிமொழி :: ஆணியப் பழமைவாதிகளுக்குக் கூடுதல் ஆயுதம்: மாதவிடாய் - வேண்டும் இன்னொரு ஆலயப் பிரவேசம்

 3. பொருளாதாரம் - கடன், சம்பளம், பங்கு வருவாய், முதலீட்டு சாதனம்

 4. சொந்தக் கதை - மனங்குன்றிய தருணம், வெட்கி தலைகுனிந்தவை, நாணும் நிகழ்வு,

 5. சுடுசொல்

 6. எதிர்மறை விமர்சனம் - தனிப்பட்ட நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவது, பாதிப்பினால் உருவான கருத்துக்களை விவாதிப்பது, சர்ச்சைக்குரியவர்களை சர்ச்சைக்குள்ளாமல் விட்டுத்தள்ளுவது.

 7. மருத்துவ நோய் - சுகவீனம்

 8. குறை சுட்டல் - குற்றம் பார்க்கின் உறவுகள் இல்லை ;-))

 9. இதற்கு மேல் சொல்ல கூச்சமாக இருக்கிறது. பேசாப்பொருள் எப்படி எழுத வரும்?
| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு