சனி, ஆகஸ்ட் 19, 2006

Sun TV - August 15th Special Programmes

சன் டிவி - சுதந்திர தின நிகழ்ச்சிகள்

 • பட்டிமன்றம் பார்க்கவில்லை. அரட்டை அரங்கத்திற்குள் சாலமன் பாப்பையா & இராஜா கூட்டணி நுழைந்து விட்டார்கள். தீர்ப்பில் இந்த மாத தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவர் போட்டியின் தலைப்பான உறவுகள் தோற்று நட்பு வென்று விட்டதாக நண்பர் சொன்னார்.

 • ஏ. ஆர். ரெஹ்மான் இயல்பாக அளவளாவினார். விஜயசாரதியின் தேர்ச்சியான கேள்விகள், பேட்டியாளர் எவ்வாறு ஆராய வேண்டும், எங்கு ஒதுங்கி பேசவைக்க வேண்டும் என்று வழக்கம் போல் சிறப்பாக இருந்தது. நூர் (YouTube - nooair) தயவில் இணையத்தில் இருக்கிறது.
 • விஜயசாரதி போன்ற தூண்டுகோல் இல்லாமல் பேசக்கூடியவர் ஸ்னேஹா (இன்னொருவர் பாடகர் பிரசன்னா - Music Listing - Music India OnLine). என்னவோ பேசிக் கொண்டிருந்தேயிருந்தார். கட்டியிருந்தது புடைவையா அல்லது சூரிதாரா என்று தெரியவில்லை. ஆனால், இம்புட்டு தடவை இழுத்து விடவைத்து ரொம்பவே படுத்தியது. வெகு பிடிப்பான ஆடையில் (ஹைதராபாத்??) வெயிலில் 70-களின் ரவிக்கை போல் வேர்த்து விறுவிறுத்து மடை திறந்து பேசிக் கொண்டிருந்தார்.

 • மாலதி, சைந்தவி, மாணிக்க விநாயகம் என்று பாடகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு எதிர்பார்த்தது போலவே அமைந்து, அலுக்கவும் வைக்காமல் ஆச்சரிய 'அட...'வும் போட முடியாமல் பசிக்கு சோளப்பொரியானது.

 • விஷால் கொட்டாவி கொண்டு வந்தார். 'ஜெயம்' ரவி தூக்கத்தை மேம்படுத்தினார். 'நம்ம காட்டுல மழ பெய்யுது' பத்மப்ரியாவை பார்க்க முடியாதபடி சன் டிவியிலும் ஏதோ நிகழ்ச்சி குறுக்கிட்டு சதி செய்தது.

 • சூர்யா உருப்படியாக, இராணுவத்திற்கு வீரர்களை வாரி வழங்கும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார் போல. இன்னும் பார்க்கவில்லை.

 • 'வணக்கம் தமிழக'த்தில் சுதந்திரத்திற்கானப் பாதையின் முக்கிய மைல்கல்களை பத்து நிமிடம் தொகுத்திருந்தார்கள். விழிநீர் மல்கி, மெய் புளக அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து கரும்பின் களித்து, மொழி தடுமாறி, பித்தன் போல தரிசித்தேன். மஹாத்மாவைத் (படிக்க: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: காந்தி) தவறாக உச்சரித்த மகளை (வழக்கித்திற்கு மாறாக) மிகக் கடுமையாக கண்டித்தேன். அவள் கொஞ்சம் மிரண்டு போய், அம்மாவிடம் 'இன்று அப்பா ஏன் இப்படி இருக்கு?' என்று வினவும் அளவு உணர்ச்சிவசப்பட வைத்த தமிழர்களின் சுதந்திரப் பங்களிப்பு குறித்த அருமையான விவரணக்கோப்பு.  | |

 • 0 கருத்துகள்:

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு