சனி, ஆகஸ்ட் 19, 2006

Three Books and a Movie

சில புத்தகங்கள், ஒரு படம்

நூலகத்தில் மேய்ந்தபோது கிடைத்த சில முத்துக்கள்:

  1. The End of Iraq: How American Incompetence Created a War Without End: - Peter W. Galbraith

    ஈராக்கில் நடக்கும் சிவில் போராட்டம் குறித்து நேரடியாக வசித்தவரிடம் இருந்து அறிந்து கொள்ளலாம்.




  2. Virginity or Death!: And Other Social and Political Issues of Our Time: - Katha Pollitt

    என்னுடைய கருத்துக்கள் சரியானவை என்னும் அபார நம்பிக்கை எனக்குண்டு. அதை சரியான முறையில் எழுதுவதெப்படி என்று விழித்ததுண்டு. கொண்ட நம்பிக்கைகளை சுவாரசியமாக எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இதைப் படிக்கலாம்.




  3. The Looming Tower: Al-Qaeda and the Road to 9/11: - Lawrence Wright

    எப்படி? எப்படி? அல்-க்வெய்தா வந்ததும் வளர்ந்ததும் எப்படி? அதன் கூட 9/11 குறித்த தகவல் அறிந்தும் நம்ப மறுத்த கதை. 9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி போன்ற புத்தகக்களைப் படித்து முடித்தவுடன் மேற்சென்று புரிதலை மேம்படுத்த உதவும் சரளமான நடையில் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்.




  4. The Last Mogul: The Life and Times of Lew Wasserman: DVD

    முன் பதிவு செய்திருக்கிறேன். இனிமேல்தான் கைவசமாக வேண்டும். ஹாலிவுட்டை அறுபது வருடமாக ஆட்டிப் படைத்தவரின் கதை. கருப்பு பணத்தை வைத்து தாதா ராஜ்ஜியத்தை பின்னணியிலிருந்து யூனிவர்சல் ஸ்டூடியோஸை வாங்கி, ரீகனின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்ட விவரங்களை சொல்லும் கதை.





| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு