செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006

TK-TO Contest: #28 - #31 : Snap Reviews


  • சிந்திக்கலாமா?: பயணம் - எண்ணம் எனது

    (அறிபுனை) மதிப்பெண் - 1.5 / 4

    சிறப்பான இறுதிப்பகுதி. அறிவியல் தகவல் மனதில் விழுமாறு தரவில்லை. கதாமாந்தர்களின் அவசரம் கதையினூடும் ஜெர்க் ஆட்டம் காணுகிறது.

  • ஸ்மைல் பக்கம்: "உறவுகள்" - லிவிங் ஸ்மைல் வித்யா

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 1.5 / 4

    பாதித்த பதில்மொழிகள்:
    • மனதின் ஓசை: எத்தனையோ உறவுகள் கண்ணாடியை போல வெளிக்காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் உண்மை வேறு விதமாய் இருப்பதுண்டு...

    • சந்திப்பு : உறவு என்ற கண்ணாடியை உடைக்கலாம். ஆனால், கண்ணாடி பிரதிபலிக்கும் உருவத்தை உடைக்க முடியாது. உறவு பிரதிபலிப்பதாகட்டும்.


  • தேன்: உறவுகள் - சிறில் அலெக்ஸ்

    (சிறுகதை) மதிப்பெண் - 2.5 / 4

    நண்பர் என்றாலே சிறப்பாய் கவனிக்க ஆசை பிறக்கும். அதுவும் முந்தைய போட்டியில் வாகை சூடியவர். ஏமாற்றவில்லை.


  • ராசபார்வை... : என்ன உறவு ? - 'கொங்கு' ராசா

    (சொந்தக்கதை) மதிப்பெண் - 3.25 / 4

    ராத்திரி எத்தனை சுத்து போனாலும், நீ மட்டும் எப்படிடா காலங்காத்தால சரியா ஆபீஸ் வர்றேன்னு நம்ம சக பொட்டிதட்டியாளர்கள் கேக்கும் போதெல்லாம் எனக்கு போசு தான் ஞாபகத்துக்கு வருவான்.

    8.57 வண்டி வழக்கம் போல, கட்டுக்கு அடங்காம திமிறிகிட்டு இருக்கிற வக்கப்போரு லாரி மாதிரி நிறைஞ்சு வந்துச்சு, எப்படியோ ஒரு காலை.. காலா, ஒரு ரெண்டு விரலை வைக்க கதவுகிட்ட இடம் கிடைச்சுது,

    விமர்சனம் செய்யவேண்டும் என்று ஆரம்பித்தாலும், உள்ளிழுக்கும் லாவகம் கட்டிப்போடுகிறது. 'என்ன ஆச்சோ' என்று பதற வைக்கும் விவரிப்பு. உபகதைகளைப் பொருத்தமான இடங்களிலும், ஒப்புமைகளை தேவையான விகிதத்திலும் கலந்து, ஆரவாரமில்லாத பேச்சுமொழி. டெல்லியில் பேருந்து ஓட்டத்தில் இருந்து தப்பித்த நினைவுகளை் கண்முன்னே மீட்டுவதால் முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

5 கருத்துகள்:

நண்பர் என்றாலே (உண்மை)

சிறப்பாய் கவனிக்க ஆசை பிறக்கும்(அப்படியும் 2.5தனா?).

அதுவும் முந்தைய போட்டியில் வாகை சூடியவர்(போச்சு பத்து ஓட்டாவது காணாமப்போச்சு..)

ஏமாற்றவில்லை.(உள்குத்து?)

:))

ஆனந்த விகடன் ஸ்டைலில் மார்க் போட்டு கலக்கல்தான் போங்க.. இந்தப் பதிவுகளையெல்லாம் போட்டியில சேத்துக்க வேண்டியதுதானே.. 4/4 போடுவேன். :)

//சிந்திக்கலாமா?: பயணம் - எண்ணம் எனது//

பாபா இவர் கடைசியில் ஆதாம் ஏவாள் கதையில் முடித்துவிட்டிருப்பது கவனித்தீர்களா?

நன்றி சிறில் :-)

3.25 / 4.. ஆஹா சொக்கா.. இதென்ன கலாட்டா..

நன்றி பா.பா.

அப்படியே நம்ம மார்க் என்னென்னு சொல்லுங்க? ஒரு ஆர்வம்தான்!!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு