சனி, ஆகஸ்ட் 26, 2006

Vettaiyaadu Vilaiyaadu - Movie Review

சுஜாதாவின் முதல் நாவல் நைலான் கயிறு. குமுதம் இதழில் 1968இல் வெளிவந்த அதே நெடியுடன் இன்னொரு படம் துவங்குகிறது.

கொலை செய்தவன் வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டிருப்பான். அவன் ஏறிக் கொண்ட இடத்தில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து சென்று அதிமுக்கிய தடத்தைக் கண்டுபிடிப்பார்.

அவருக்கு முன் அமெரிக்க போலீஸுக்கு இணையாக சித்தரிக்கப்படும் மாதவன் பல விஷயங்களில் சறுக்கியிருப்பார்.

நைலான் கயிற்றில் விமானப் பட்டியலை சரி பார்த்து குற்றவாளியை அடையாளம் காண முயலுவார்கள். இது போல் பல இடங்களில் 'அட... சுஜாதா!?' சொல்ல வைக்கிறார் இயக்குநர் கௌதம்.

நைலான் கயிற்றில் இராமநாதன் சீட்டு மாளிகை கட்டுவது போல் தடயங்களையும் லாஜிக்கையும் இணைப்பதாக சொல்வார். முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட முடிவுகளையே ஆதரித்துக் கட்டியது என்றாலும் சுவாரசியமான வசன நடையும் கட்டுக்கோப்பான புத்திசாலித்தனத்தையும் கொண்டது.

ரஜினிக்கு ஒரு சந்திரமுகி தேவைப்பட்டது போல் மும்பை எக்ஸ்பிரஸ் சறுக்கலுக்குப் பிறகு கமலுக்கு 'வேட்டையாடு விளையாடு' வேண்டியிருக்கிறது. நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்.

அதற்கு சில காரணங்கள்:

  • 'நான் ஆம்பிளைடா' என்று அமர்க்களமாக அறிமுகக் காட்சியில் முழங்குகிறார். (கொசுறாக அதே ராகவன் குணசித்திரம் 'நீ என்ன ஹோமோவா?' என்று மனம்பிழற்ந்தவனை உச்சகட்டத்தில் எகத்தாளமாக வினவுகிறது.)

  • 'காக்கி சட்டை' நினைப்பில் ஒற்றைக் கையில் push-up எடுக்க முயல்கிறார். (முடியவில்லை)

  • 'ராகவன் instinct' என்று விளக்க முடியாதவற்றுக்கு கேள்விகள் கேட்டால், பதில் பகர முடியாமல் தமிழ் சினிமா கோட்பாடுகளின் படி நடக்கிறார்.


    இலக்கியப் பிரியர்களுக்கும் இந்தப் படம் தீனி போடும். என் சிந்தையைக் கவர்ந்த சில:

  • சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' கவிதைப் புத்தகம் ஜோதிகாவின் மேஜையை அலங்கரிக்கிறது.

  • ம்துமிதாவின் சுபாஷிதம் அட்டைப்படம் போன்ற ஓவியத்துடன் கூடிய இன்னொரு (கவிதை?/ஆத்மாநாம்??) புத்தகம், கமல் & ஜோதிகாவிடையே காதல் சின்னமாக வலு சேர்க்கிறது.

  • Morgue என்பது பிணவரை என்று மொழிபெயர்த்து துணையெழுத்துக்கள் மூலம் தமிழ் பிணவறைக்குள் போனாலும், ப்ரூக்ளின் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் தமிழில் அளவளாவுவது மகிழ்ச்சி கொடுக்கிறது.


    ரொம்ப ஆராயாமல், மேலோட்டமாக, சன் தொலைக்காட்சி கேட்கும் வாயில் கணிப்பு நடத்தினால்...

  • முப்பது வயது - திருமணமானவர்: படம் அருமை. ரொம்ப ஜாலியா, கொஞ்சம் பயமா, தேவைக்கும் அதிகமான புணர்ச்சிகளுடன் இருக்கிறது. 'விக்ரம்' படத்தில் கலக்கல் 'வனிதாவனி... வனமோகினி' முடிந்தவுடன் அம்பிகா காலியாவாங்களே... அந்த மாதிரியே இங்கேயும் வைத்திருக்கிறார். ஆனால், பாட்டுதான் மனதில் நிற்கவில்லை.

  • நாற்பது வயது - அமெரிக்க பச்சை அட்டை: இங்கே 'சீரியல் கில்லர்' நிறைய பேர் செய்தியில் வந்துகொண்டேயிருப்பார்கள். அவர்களைக் குறித்து அவ்வப்போது திரைப்படங்களும் நிறைய எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு கொலையை சாஷ்டாங்கமாகக் காட்டி, சாவதானமாகக் கொண்டு சென்றாலும், ஒன்றரை மணி நேரத்தில் படத்தை விறுவிறுப்பாக முடித்துவிடுவார்கள். போகப் போக, 'தொடர் கொலைக்கான காரணம் என்ன?' என்று லாஜிக்கும், கஷ்டப்பட்டு புத்தியைத் தீட்டி போலீஸ் வலைக்குள் வீழ்த்துவதையும் முடிச்சிட்டு காண்பிப்பார்கள். இங்கே அந்த மாதிரி இல்லாமல், 'ஏன்/எதற்கு' என்பதை ஏப்பமிட்டு விட்டு, முடிவிலும் சோப்ளாங்கியாய் ஏனோதானோ என்று எண்பதுகளின் 'சகல கலா வல்லவன்'களை விட சப்பையான க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள்.

  • அவருடைய மனைவி: 'சிகப்பு ரோஜாக்கள்' கூட சங்கிலிக் கொலைகள்தானே... அங்கு கூட லாஜிக் & முடிவில் அயர்ச்சி ஏற்படாத த்ரில் இருக்கும். 'கலைஞன்' படத்தில் சஸ்பென்ஸ் கிடைக்கும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களினால், காமிராவை 360 டிகிரி சுற்றி வளைத்து, ஜீப்களை பறக்கவிட்டு, தமிழகக் காவல்துறை ட்ரேட்மார்க் தொந்தியுடன் இருபது வயது காளையை ஓடிப்பிடிக்கவைத்தாலும், கொட்டாவி வரவைக்கிறார்.

  • இருபத்தைந்து வயது - எச்1பி: எப்பொழுதாவது எட்டிப் பார்த்தாலும், கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை. 'கொஞ்சம் சிரிச்சா குறைஞ்சா போயிடுவீங்க' என்று எண்ண வைக்கும் அளவு அமைதியான கதாபாத்திரத்துக்கு, தேவையான குழப்பத்துடன் ஜோதிகா. தமிழில் கையாளப்படாத சங்கிலிக் கொலைவாணர்களின் செய்கை. நான் பார்த்து தேய்த்த நியு யார்க்கை 'வாவ்!' போட வைக்கும் ஒளிப்பதிவு. கமலாலினி ரொமான்ஸ். என்சாய் செய்தேன்.


    'வாயை மெல்லுவதற்கு அவல் ஏதாவது கிடைக்குமா' என்று காத்திருக்கும் அரசியல்வாதிகளுக்காக...

  • வில்லன் உருத்திராட்சக் கொட்டை அணிந்திருப்பதாக காட்டுவது எங்கள் மத அம்பிக்கைகளை புண்படுத்துகிறது. இதுவே ஒரு ____கவோ, ____கவோ வைத்திருக்காததன் பின்னணி என்ன?

  • கிராமப்புறங்களில் இருந்து மருத்துவம் படித்து வெளிநாடு செல்பவர்களை, இந்தப் படம் தாழ்மையுணர்ச்சி உடையவர்களாகவும் தற்பால் விரும்பிகளாகவும் ஜோடிப்பது நகரத்தில் வளர்ந்த படைப்பாளியின் ஆழ்மன வெளிப்பாடு.

  • அமெரிக்க காவல்துறை surveillance camera நிறுவாமலும், சமயயோசிதமாக செயல்படாமலும், மோப்ப நாய்களுக்கு கமல் போன்ற சக்தி இல்லாததும் அந்த நாட்டின் காவல்துறை லட்சணத்தை சரியாக சித்தரிக்கவில்லை.

  • தேடுவதற்கு உரிய வாரண்ட் இல்லாமல் அத்துமீறி நுழைவதையும்; போதிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஹீரோயிஸமாக பிடிக்க நினைப்பதையும் இந்தப் படம் தூண்டி விடுகிறது.



    | |

  • 41 கருத்துகள்:

    Thanks for the quick review.

    பாலா,
    அப்பாடி, ஒரு கமல்
    விசிறித்தனமாக
    இல்லாத விமர்சனம் படித்ததில் மகிழ்ச்சி.

    காமெடி இல்லையா?
    அதுவும் இவர்களெ செய்துவிடுகிறார்களா.

    It is ridiculous that I have to wait another week to see the movie.

    No comments on your review because I did not read it.

    There.

    Srikanth

    தயாரிப்பாளருக்கு குல்லாவா? தேறுவாரா?

    வள்ளி,
    ---காமெடி இல்லையா?---

    மூன்று, நான்கு இடங்களில் இயல்பாக இயைந்து வருகிறது. அரங்கம் முழுக்க வெடிச்சிரிப்பு கொடுக்கமளவு படத்தோடு ஒட்டி வரும் நகைச்சுவை.


    ரசித்தவற்றுள் ஒரேயொரு இடம்...

    'அவளுக்கு இந்த மாதிரி மீன் குழம்பு எல்லாம் செய்ய வராதே! ஏதோ, பிட்ஸா (படிக்க: manaosai - சந்திரவ்தனா :: பிற்சா (Pizza)), பாஸ்டா, லஸாக்னியா, க்வேஸடியா, கால்சோன் என்று இவ பண்ணுவதன் பெயரெல்லாம் பார்த்தால், திட்டறாளா அல்லது மெனு சொல்லுகிறாளா என்று கூட தெரியாது!'

    சுரேஷ் & ஸ்ரீகாந்த்... அவசியம் பாருங்க. விமர்சனங்களைப் படிக்காமல் வந்த என் மனைவிக்கு 'காக்க... காக்க'வின் சாயல் தெரியவே இல்லை. எனக்கு, 'இங்கு முந்தின படம் மாதிரி இல்ல?' என்னும் விமர்சன புத்தி எட்டிப்பார்த்துக் கொண்டேயிருந்தது.

    (படிக்க: வேட்டையாடு விளையாடு - நாடோடியின் தூரப்பார்வை)

    நிர்மல்,
    ----தயாரிப்பாளருக்கு குல்லாவா? தேறுவாரா? ----

    தற்போது வேறு நல்ல படங்கள் எதுவும் தமிழில் ஓடுவதாகத் தெரியவில்லை. குழந்தைகளுடன் பார்ப்பதற்கு சௌகரியமில்லாதது என்பதால், கல்லூரிக் கூட்டம் குறையப்போவதுமில்லை.

    நிச்சயம் நூறு நாள் தாண்டும்.

    One more here from My Farm--Click Here

    மின்மினி :: நெல்லை சிவா

    ஜெஸிலா

    இளா, படம் முழுக்க உங்க நினைப்புதான். இப்படி பயமுறுத்தற பெயரில் உலாவ விட்டுட்டாங்களே ;-))

    பாலா, வித்தியாசமா விமர்சனத்தில் கலக்கியிருக்கீங்க.. படம் பார்க்கிற மாதிரியா இருக்குங்கறது எனது எண்ணம்.

    நல்ல வேளைங்க பாலா, படத்துல அவரோட முழுப்பேரு இளமாறன்னு சில இடங்களில் சொல்லி வெச்சாங்க. இல்லைன்னா என் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். திரைஅரங்கை விட்டு வெளியே வந்த பின்னாடி பசங்க என்ன முன்னாடி நடக்க விட்டு, இளா, இளான்னு கத்தியே மானத்தை வாங்கிட்டாங்க. ராகவனுக்கு எதிரியா சித்தரிச்சதை வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணிறாதீங்கப்பா.
    ஒன்னு சொல்ல இரண்டு பேருமே மறந்துட்டோம். அது பிரகாஷ்ராஜின் நடிப்பு. மனசுல நிக்கலைன்னாலும் அந்த திகிலை ஆரம்பிச்சு வெச்சவர் அவர் தானே.

    நைலான் கயிறு படித்தது போல் ஞாபகம் இருக்கிறது எனினும் இதோட சம்பந்தப் படுத்தி பார்க்கவில்லை. நுணுக்கமான அலசல் வழக்கம் போலவே, இதெல்லாம் தானா வர்றது இல்ல... நம்மளோட விமர்சன சுட்டி வேட்டையாடு விளையாடு

    பாலா சொல்றதை தெளிவா சொல்றதுக்கென்ன?

    ஏன்ய்யா பாபா

    ///ம்துமிதாவின் சுபாஷிதம் அட்டைப்படம் போன்ற ஓவியத்துடன் கூடிய இன்னொரு (கவிதை?/ஆத்மாநாம்??) புத்தகம், கமல் & ஜோதிகாவிடையே காதல் சின்னமாக வலு சேர்க்கிறது.///

    'ம' தான் சரியா போடலை. பரவாயில்லை. நல்லா ஜூம் செய்து பாத்து அது 'பர்த்ருஹரி சுபாஷிதம்' தானான்னு பாத்து சொல்றதுக்கென்ன?

    (பாபா அது சுபாஷிதமா இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டே பாத்தீங்களா? இப்படி எழுதிட்டீங்களே!)


    இப்ப வேட்டையாடு விமர்சனத்தை விட இது முக்கியமா போச்சே.

    இதுக்கு இங்கே பதில் சொல்றப்ப
    எனக்கும் தனியா பதில் சொல்லிடுங்க.

    ஆழ்வார்பேட்டையாருக்கு நன்றி சொல்லணுமுல்ல:-)))))))))))))

    தமிழ் கூறும் நல்லுலகம் கண்டுக்காததை கண்டுக்கிட்டதுக்கு பெருசா ஒரு நன்றிப்பதிவு போட்டுடலாம். சீக்கிரமா சொல்லுங்க அப்பு:-))))))))

    பாபா

    ஜெயந்தி யின் வலைப்பதிவிலே

    http://jeyanthisankar.blog
    spot.com/2005/11/blog-post_30.
    html

    கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்) பதிவில் ஆரம்பமே பாருங்க.

    ///மகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி 'சுபாஷிதம்' என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. ஆகஸ்டு மாதத்திலேயே நூல் வந்து விட்டிருக்கிற விஷயம் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ செய்தியாக என்னை எட்டியது. அதைத் தொடர்ந்து

    'உலக நாயகர்(ன்)' புரட்டிப் பார்த்துவிட்டு, நூலினால் ஈர்க்கப் பட்டு ஒரு பிரதியை போகிற போக்கில் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்ற நம்பத் தகுந்த நபர் கூறக் கேட்டேன்.

    ஏற்கனவே நூலைப் படிக்க வேண்டும் என்றிருந்த ஆவல் இன்னும் மிகுந்தது.///

    அதனால் கேட்கிறேன். சீக்கிரமா பாத்து சொல்லுங்க பாபா.

    ஆனா ஜெயந்தி சொன்ன நம்பத்தகுந்த நபர் யாருன்னு கேட்கக்கூடாது:-)

    நேற்று சத்யத்தில் விடிந்தது பொழுது :) படம் தப்பு பண்ணாது என்று தோன்றுகிறது. பார்க்கிறவர்கள் அந்த டைட்டில் பாட்டினை தவறவிடாதீர்கள். ரஜினிக்கு ஸ்டார் காட்டி சூப்பர் ஸ்டார் என்று ஆரம்பிக்கும் தேவாவின் இசைக்கு இணையான ஒரு ஒபனிங் கமலுக்கு இல்லை. இந்த படத்தின் டைட்டில் பாட்டு போதும் 150 ரூபாய் கொடுத்ததற்கு ;) காக்க காக்க சாயல் அடிக்கிறது என்று விமர்சன ரீதியாக சொன்னாலும், so what? எல்லா மணிரத்ன படங்களிலும் இருக்கும் ஒரு மணிரதனமிஸ்ம் மாதிரி இது கொளதமிசம் என்று எடுத்துக் கொண்டு போக வேண்டியது தான். இயக்குநர் பளிச்சென்று நிறைய இடங்களில் தெரிகிறார். கமல் சில வசனங்களை சொந்தமாக பேசியிருக்கிறார் அல்லது கமலுக்காக சில வசனங்களை சேர்த்திருக்கிறார்கள் ( "என் பாஷையில் நீ காலி, போலிஸ் பாஷையில குற்றவாளிகளை கூடிய விரைவில் பிடித்து விடுவோம்" "நீங்க தமிழ் இல்லை, தெலுங்கா இருந்தாலும் காப்பாத்தி இருப்பேன்" ) இந்த படத்தில் பெயர் தட்டிக் கொண்டு செல்பவர்கள் ரவிவர்மன் (கேமராமேன்), டேனியல் பாலாஜி (அமுதன் - செம முன்னேற்றம் மச்சி, எங்க கே.கே.நகர் ஏரியா பார்ட்டி, மாமே நீ தேறிடுவே :)), பிரகாஷ்ராஜ் (ஆரோக்கியராஜ் - underplay பண்ணுவது எப்படி என்று பாருங்கள்), ஒரே சீனில் வந்தாலும் அந்த கீரணூர் பஸ் ஸ்டாண்டு பிச்சைகாரர் aka ஜமீன்தார்.

    Mr. Kamal, ஒத்துக்குங்க சார், வயசாயிடுச்சுன்னு ;) வேலைகள் கொஞ்சமதிகம். இந்த படத்தின் Taking பற்றி நிறைய பேசலாம். தனியாக எழுதுகிறேன்.

    ஒரங்கட்டி மேட்டருக்கு சம்பந்தமில்லாமல், கலரை மாத்துங்கய்யா, என்ன இது சிகப்பு நீலம்ன்னு ஒரே primary color வாடை, கசாப்பு கடைக்கு பக்கத்துல தயிர் சாதம் சாப்பிடறா மாதிரி ;)

    மதுமிதா,
    ----சொல்றதை தெளிவா சொல்றதுக்கென்ன?---

    சல்மா புத்தகம் என்னிடம் இருந்ததாலும் ஏற்கனவே பழகிய அட்டைப்படமாக இருந்ததாலும் காண்பித்த அரை விநாடியிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. உங்களின் புத்தகம் (அனேகமாக) படம் முழுக்க பல முக்கிய தருணங்களில், திருப்புமுனைக் காட்சிகளில் வந்தாலும், இன்னும் நான் புரட்டிப் பார்க்காததால் 100% சொல்லமுடியவில்லை.


    ----சுபாஷிதமா இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டே பாத்தீங்களா? இப்படி எழுதிட்டீங்களே----

    :-))) நம்ம ஆளு கவிதைத் தொகுப்பு, இவ்வளவு பெரிய படத்தில் இம்புட்டு முக்கியத்துவத்துடன் இடம்பெற்றிருக்குமா என்னும் ஆச்சரியம் கலந்த பொறாமைதான் :-D)

    டிவிடி வந்தவுடன் ஃப்ரீஸ் போட்டு ஜூம் செய்து, நிச்சயம் சொல்லிவிடுகிறேன்.

    இணையத்தில் படம் ஏற்கனவே கிடைப்பதாக (:-(((() நண்பர்கள் சொல்கிறார்கள். அவசரத்திற்கு பாவமில்லை என்றால், வலையிறக்கி செக் செய்து விடுங்களேன்....

    ஸ்ரீகாந்த்,

    உம்ம ஆப்பிள் மடிக் கணினிதான் கமலும் படம் நெடுக ஒளிர விடுகிறார். நேரில் பார்த்தபோது, எட்டிப்பார்த்த மாதிரி கிட்டத்தட்ட உங்களின் ஃப்ரொஃபைல் படம் போலவே கொண்ட காட்சியமைப்புகள் வருகிறது.

    சந்தித்த பிறகு புது புகைப்படம் மாற்றிப் போட்டதற்கு இதுதான் காரணமோ ;-)

    ராசு,
    நேற்று இரவே உங்களின் பதிவைப் படித்தேன். சுருக் & நறுக்!

    நாராயண்,
    ----இந்த படத்தின் டைட்டில் பாட்டு போதும் ----

    அது :-)


    இளா சொன்னது போல்...
    ----ஒன்னு சொல்ல இரண்டு பேருமே மறந்துட்டோம். அது பிரகாஷ்ராஜின் நடிப்பு. ----

    நாங்க ரெண்டு பேருமே ஒன்றிப் போகுமளவு ரொம்ப இயல்பான தந்தையின் பாச வெளிப்பாடு.


    ----எல்லா மணிரத்ன படங்களிலும் இருக்கும் ஒரு மணிரதனமிஸ்ம் மாதிரி----

    நிச்சயமாக. இனி கௌதம் படம் என்றால், வில்லன் பயமுறுத்துவார் (மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது, வில்லன்கள் அச்சுறுத்துவதற்காகவே உலா வந்தாலும், கடைசியில் செத்துடுவானே என்னும் நம்பிக்கை, இவர் படத்தில் நிச்சயமாய் assume ஆகாது!).


    ----கமலுக்காக சில வசனங்களை சேர்த்திருக்கிறார்கள்----

    வேறு எவர் திரையில் தோன்றியிருந்தாலும் சாதாவாகக் கூடிய இடங்களில், timing மற்றும் லாகவமான உடல்மொழி அவருக்கே உரியது.


    ----ஒரே சீனில் வந்தாலும் அந்த கீரணூர் பஸ் ஸ்டாண்டு பிச்சைகாரர் aka ஜமீன்தார்----

    யாருங்க இவர். அடுத்த படத்தில் வில்லன் மெட்டிரீயல்!

    //
    मौनान्मूक: प्रवचनपटुर्वातुलो जल्पको वा धुष्ट:
    पाष्रे वसति च सदा दूरस्चाप्रगल्भ:
    क्षन्त्या भिरुर्यदिं न सहते प्रायशे नाभिजात:
    सेवाध्रम: परमगहनो योगिनामष्यगम्य: ॥

    மெளனான்முகா ப்ரவசான்படுர்வாதுலோ ஜல்பகோவா த்ருஷ்ட:
    பார்ஷ்வே வஸதி ச ஸதா: துரதஸ்ச ப்ரகல்ப:
    க்ஷந்த்யா பிருர்யதி ந ஸஹதே ப்ராயஸோ நபிஜாத:
    சேவாதர்ம: பரமகஹனி யோகினாமன்யாகம்யா:

    இந்த ஸ்லோகத்தில் பத்ருஹரி சொல்கிறார் - ஜீவனத்துக்காக வேலை (சேவை) செய்யும் ஒரு மனிதன் கண்ணியமாக வாழவே முடியாது. ஒரு சேவகனின் நற்குணங்களெல்லாம் அவனது பலவீனங்களாக பொருள்கொள்ளப்படுகின்றன. குரலுயர்த்தாமல் பணிபுரியும் சேவகன் ஏமாளி ஊமையன் இளிச்சவாயன் என்று கொள்ளப்படுகிறான். தன் விருப்பங்களை உரத்து சொல்லும் சேவகனோ அதிகப்பிரசங்கி எனப்படுகிறான். அருகிலேயே இருந்து சேவை செய்யும் சேவகனை எரிச்சலூட்டுவதாக உணர்வார்கள். அருகிலேயே வராமல் மறைவிலேயே இருப்பவனை வேலைக்கு உகந்தவனாக கருதமாட்டார்கள். மன்னிக்கும் குணமுடைய சேவகனை கோழை என்பார்கள். சகித்துக்கொள்ள முடியாத சேவகனையோ அவமதிப்பவன் என்று கொள்வார்கள். அந்தோ! சேவையின் பாதை சுயத்தை துறந்த யோகிகளால் கூட கடக்க முடியாதது !!!
    //

    இது பத்ருஹரி சுலோகம்.
    ஸ்ரீகாந்தின் தளத்தில் சுட்டது.
    இதை கொஞ்சம் மாற்றி சினிமாவுக்கும் சொல்லலாம்

    ஒரு மனிதன் நல்ல சினிமாவே எடுக்க முடியாது. இயக்குனர் தனக்குரிய முத்திரையில எடுத்தா போன படம் சாயல்னு சொல்லுவிங்க. சாயல் இல்லாம எடுத்தா இயக்குனரோட முத்திரையே இல்லேம்பிங்க. சென்டிமென்ட் போட்டு எடுத்தா புளிச்சு போன விஷயம்பிங்க. சென்டிமெண்ட் இல்லாம எடுத்தா படம் ட்ரையா இருக்குமிங்க.சீரியல் கில்லர் படம் நியுயார்க் போய் எடுத்தா எதுக்கு நியுயார்க் கேட்பிங்க. உள்ளுரிலியே போலிஸ் படம் எடுத்தா இதத்தான் எல்லாம் காட்றானே இதுக்கு எதுக்கு இவன்னு சொல்றிங்க.ரொம்ப ரியலிஸ்டிக் இருந்தா ஆர்ட் முவிபிங்க. இல்லாட்டி வழக்கமான மசாலாம்பிங்க.
    என்னத்ததான் சாமி எடுக்கறது.

    Thaaanks a lot Bala. atlast i got a review! :-)

    M.K.

    நிர்மல்,
    ----என்னத்ததான் சாமி எடுக்கறது.---

    பதிவு போடுவதற்கு விஷயம் வேண்டாமா?? எதைத்தான் எழுதுவது ;-))

    பொருத்தமாக பத்ருஹரியை எடுத்து விட்டதற்கும் நன்றி.

    எம்கே... இன்னும் நீங்க பார்க்கவில்லையா :-ஓ

    எல்லாரும் சொல்லவது போல் படத்திற்கு வேண்டுமானால் கமல் மாதிரி ஒரு நடிகர் வேண்டும்.ஆனால் கமலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கண்டிப்பாக இல்லை.

    இனி கெளதம் பற்றி..
    இவருடைய காக்க காக்க மற்றும் வே.வி இரண்டுமே அபபட்டமான் காப்பி.சரி காப்பி அடித்தாலும் ஒழுங்காக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.(கஜினி,அன்பே சிவம்,அவ்வை சண்முகி போன்ற வெற்றிப் படங்கள்).இந்த மாதிரி படம் எடுக்க கெளதம் தேவையில்லை.ஒரு 5 அல்லது 6 ஆங்கில படங்கள் பார்த்து சீனை மாத்தி மாத்தி போட்டால் படம் ரெடி.

    இந்த படத்தில் ஒரு ஒரத்தில் தேதி மற்றும் நேரம் காட்டப் படுகிறது.நானும் ஏதோ சொல்ல வருகிறார்கள் என நினைத்து ஏமாந்து போனேன்.தேதி நேரம் காட்டிக் கொண்டே இருக்கும் போது பிளாஷ் பேக்(இது ஒன்றே போதும் இயக்குநரின் வறண்ட கற்பனை சக்திக்கு)..அப்புறம் பிளாஷ் பேக்கிற்குள் ஒரு 'குட்டி' பிளாஷ் பேக்..அப்படி என்றால் ஏன் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தேதி மற்றும் நேரம்(இந்த உத்தியும் ஒரு ஆங்கில படமே).

    மற்றபடி படகளின் உள்ள மற்ற 'காமெடிகளை' மற்றவர்கள் நன்றாகவே அலசி விட்டார்கள்.

    /அமெரிக்க காவல்துறை சுர்வெஇல்லன்cஎ cஅமெர நிறுவாமலும், சமயயோசிதமாக செயல்படாமலும், மோப்ப நாய்களுக்கு கமல் போன்ற சக்தி இல்லாததும் அந்த நாட்டின் காவல்துறை லட்சணத்தை சரியாக சித்தரிக்கவில்லை/
    நம்மவர்களிக்கு அமெரிக்காகாரர்கள் ஏமாறுவது போல காட்டினால் ரசிக குஞ்சுகளின் விசிலகளுக்குப் பஞ்சம் இருக்காது.

    /'அட... சுஜாதா!?' சொல்ல வைக்கிறார் இயக்குநர் கௌதம்./
    அட காப்பி அடிப்பதில் சுஜாதவையும் விட்டு வைக்கவில்லை..

    இப்படியாக பல ஆங்கில படங்களில் உள்ளதையெல்லாம் இந்த படத்தில் புகுத்துகிறேன் பேர்வழி என்று நம்மை 'கழுத்து அறுக்கிறார்கள்' .இவர் படங்களில் வரும் வில்லன்களும் ஒரே டைப்..ஒரே இரைச்சல்(இதே மாதிரிதான் பாலா ,செல்வராகவன் ஒரே மாதிரியான பாணி)..

    /இலக்கியப் பிரியர்களுக்கும் ??
    உண்மையாகவா ? அல்லது ஏதாவது உள் குத்தா ??

    விஞ்ஞானிகளுக்கு ??
    வில்லன் கடைசியில் ஒரு டயலாக் சொல்வானே..ஏதோ மரணமிலா வாழ்வுக்கு கண்டுபிடிதுக் கொண்டிருபதாடவும்..

    /தயாரிப்பாளருக்கு குல்லாவா? தேறுவாரா?/
    ஏற்கனேவே முதலில் தாயாரித்த தாயரிப்பாள்ர் தற்கொலைக்கு முயற்சித்தார்..


    அன்புடன்
    மாயக்கூத்தன் கிருஷ்ணன்

    Nirmal,

    // ஒரு மனிதன் நல்ல சினிமாவே எடுக்க முடியாது.....என்னத்ததான் சாமி எடுக்கறது.

    Enjoyed

    Bala,

    //பதிவு போடுவதற்கு விஷயம் வேண்டாமா?? எதைத்தான் எழுதுவது

    Agreed

    இன்று பின்னூட்டமாக இட்ட லாஜிக் சொதப்பல்கள்:

    எனக்கு தோன்றிய சில:
    1. அமெரிக்காவில் காவல்துறை காட்சிகள்
    - கண்காணிப்பு காமிராவை பொருத்தி விட்டு, தூரத்தே நின்று குற்றவாளிகளை வலையில் விழ வைப்பது இவர்களின் அணுகுமுறை. இரண்டு வாயிற்காப்போனை நிற்கவிட்டு, இரண்டு பேரும் 'ஹாண்ட்ஸ் அப்' என்று வருவது காமெடி டைம்.

    - வாரண்ட் இல்லாமல், பூட்டை உடைப்பதின் ஆபத்தை உணர்ந்தவர்கள். ராகவன் அவ்வாறு செய்தால் கூட, உடனடியாக இன்னொருவர், காருக்கு சென்று, 'backup' உடனடியாக வருமாறு அழைத்து விட்டு, வெளியில் நின்று வேவு பார்ப்பார். அவரும் உள்ளே போய் ஆராய மாட்டார்.

    - அமெரிக்காவில் சீரியல் கில்லர்களுக்கு பெருத்த மரியாதை உண்டு. இந்த மாதிரி நான்கு அமெரிக்க உயிர்கள் கழன்றிருந்தால், 'America's Most wanted' பட்டியல் போட்டு, அதற்கென்று தனிக் குழு அமைத்து, சந்தேகத்தில் இருக்கும் பத்து பேரையும் ஒரே சமயத்தில் லபக்கி, கடும் விசாரணையில் கொணர்ந்திருப்பார்கள்

    2. அமெரிக்காவில் இயலாத இன்ன பிற காட்சிகள்
    - ஜோதிகாவின் வாசஸ்தல கதவை ஒரே மோதலில் தள்ளி உள்ளே நுழைவது. இவர்கள் இருப்பது கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டலாக காண்பிக்கிறார்கள். சாதா இடத்திலேயே, அப்படி உடைப்பது நடவாத காரியம்.

    - இந்தியா கஃபேயில் காலையுணவு சாப்பிட செல்லும் காட்சி. அனைத்து இந்திய உணவகங்களும், 11/11:30 மணிக்கு மதிய சோற்றோடுதான் துவங்கும். காலையிலேயே திறந்தாலும், அமெரிக்க/மேற்கத்திய பிரெட், பேகல் போன்றவைதான் கிடைக்கும்.

    - கமல், பொதுத் தொலைபேசியில் பேசுவது. இது 'அழைப்பு அட்டை' (calling card) உலகம். நான் வந்த புதிதில், கிட்டத்தட்ட ஐந்து அமெரிக்க டாலருக்கு 25 பைசாவாக மாற்றி, ஒவ்வொன்றாக உள்ளே தள்ளி, இந்தியா அழைத்ததுண்டு. ஒரேயொரு முறை; அதுவும் ஒரு நிமிடம்தான் பேச முடியும். காலிங் கார்ட் இல்லாமல் தொலைபேசுபவர்கள் எவரும் இலர். ஹோட்டல் அறையிலிருந்தே கூவ முடியும்.

    ராஜேஷ்குமார் கதை படிக்கும்போது கேள்வி கேட்காமல் படித்து செல்வது போல், எதுவும் ஆராயாமல் பார்க்க வேண்டும்.

    இவ்வளவுதானா!!!


    அவனவன் படமே ஓட்டையா எடுக்கறான். அதுல ஆறு ஓட்டைக்கே இப்படி சொல்றிங்க

    நிர்மல்

    ----காப்பி அடித்தாலும் ஒழுங்காக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.(கஜினி,அன்பே சிவம்,அவ்வை சண்முகி போன்ற வெற்றிப் படங்கள்)---

    கஜினி :-(

    அ.சி., அ.ச., மற்றும் பல கமல் படங்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும்போது பொருத்தமாக திரைக்கதையை மாற்றி அமைத்து ரசிக்க வைத்திருந்தார்கள்.


    ----கமலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கண்டிப்பாக இல்லை.---

    அன்பே சிவம் போன்ற திரைப்படங்கள் வெற்றியாகாததால், கமல் செம கடுப்பில் உள்ளதையே அவருடைய சமீபத்திய படங்கள் வெளிக் கொணருகிறது. தமிழ் ரசிகர்களுக்கு 'இப்படி' நடித்தால் போதுமானது. ரசனையை உயர்த்துகிறேன், உரையாடல்களில் கூர்மை காட்டுகிறேன், வித்தியாசமான களத்திற்கு நகர்த்துகிறேன் என்பது நடவாத காரியம் என்பதன் வெளிப்பாடுகளே சமீபத்திய ஜாலி படங்கள்.

    தசாவதாரம் கூட கேயெஸ் ரவிக்குமாருடன் கூட்டு சேர்வதன் மூலம், பணப்பெட்டிக்கு பங்கம் வைக்காமல், அனைவரையும் திருப்திப்படுத்தும் முயற்சியே. மீண்டும் இயக்குநரின் நடிகராவதன் மூலம், செல்வராகவன், ஷங்கர், தரணி, சுசி கணேசன் போன்ற பலதரப்பட்ட இயக்குநர்கள் கமலை தைரியமாக அணுகி, வித்தியாசமாக கையாள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    ரஜினி போல் பயப்படாமல், வருடத்துக்கு ஒரு படமாவது வெளிவரவைப்பதன் மூலம் ஏவியெம், ஆஸ்கார் மூவிஸ் போன்ற பெரு முதலீடு தயாரிப்பாளர்களும் விஜய்/விக்ரமை வைத்து தொடர்ந்து படமெடுப்பது போல் கமலும் approachable நட்சத்திரம் ஆக மாறும் முயற்சிதான் 'வேட்டையாடு விளையாடு'?

    ----அவனவன் படமே ஓட்டையா எடுக்கறான். அதுல ஆறு ஓட்டைக்கே இப்படி சொல்றிங்க-----

    கடற்புறத்தான் கருத்துக்கள்: வேட்டையாடு விளையாடு: பொதுவாகவே கமல் படம் என்றாலே ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் குறை சொல்லுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வரிசைப்படுத்துவது என்று ஒரு பெருங்கூட்டமே கிளம்பி விடும் .மற்ற நடிகர்கள் படங்களுக்கு இந்த அளவுக்கு அவர்கள் மெனக்கெடுவதில்லை . இதிலிருந்து கமல் மட்டுமே சீரியஸாக எடுத்துகொள்ளக் கூடிய நடிகர்களில் முதன்மையானவர் என்பது தெளிவாகிறது

    ஏறக்குறைய இதே கருத்தை அடியொற்றி என் எண்ணங்களை சொன்னால்....

    1. 'உனக்கும் எனக்கும்', 'நீ வேணுண்டா செல்லம்' போன்ற படங்கள், ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வருவதில்லை. சந்திரமுகியில் விரல் அசைத்தாலும் உள்ளர்த்தம் கண்டுணரப்படும். டாம் க்ரூஸ், மெல் கிப்ஸன் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் துவக்கதின கலெக்சன் எக்கசக்கம். ஏன்? இவர் படம் என்றால் 'நிச்சயம் கொடுக்கிற காசுக்கு நேரம் போவது தெரியாது'; 'வித்தியாசமாக புதுசா ஏதாவது செஞ்சிருப்பார்'; 'என்னுடைய ஆதர்ச நட்சத்திரம்' போன்ற ஏதோ ஒன்றுக்குள் அடைபடும். அந்த எதிர்பார்ப்பு திருப்தியுறாததால், விமர்சனங்கள் எழும்.

    2. குமுதத்தில் ஒரு பக்க கதை எழுதுபவருக்கு விமர்சனங்கள் எதுவும் வலையில் விழாது. குமுதத்தில் ஒரு பக்க கதை எழுதுபவர் வலையிலும் எழுதுபவராக இருந்தால் விமர்சனங்கள் வலையில் குவியும்.

    3. திரைப்படத்தில் Continuity, Anachronisms, Factual errors, Errors in geography,Audio/visual unsynchronized, Revealing mistakes, Crew or equipment visible, Plot holes ஆகிய குற்றங்களை சுட்டி பெயர் வாங்குவது பொழுதுபோக்கு.

    பெரும்பாலும், 'அதே சட்டை, எந்த வித மடிப்பு,' இத்யாதிகளை கண்டினியூட்டி பிழைகளை யாருமே தமிழ் சினிமாவில் கண்டுக்காமல் விட்டு விடுவார்கள்.

    ஜோதிகாவுக்கு ரோகிணி குரல் கொடுக்கும் தமிழ் உலகில் உச்சரிப்பு சறுக்கல்களை சொன்னால், கை கொட்டி சிரிப்பார்கள்.

    'புல்லட்' அப்பொழுது கிடையாது போன்ற Anachronisms சுட்டப்படும்; வரவேற்பும் பலமாக இருக்கும்.

    பூகோள ரீதியாக, காலையில் சென்னை, மதியம் நியு யார்க் என்றால் கூட 'கனவுக் காட்சி'யாக இருக்கும் என்று விட்டுக் கொடுத்து விடுவோம்.

    நான் மேலே சுட்டிக்காடிய ஆறும் Factual கடுப்புகள்.

    ஃப்ரேமில் உதவியாளர் தெரிகிறார், பாடல் காட்சியில் வேடிக்கை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் போன்ற Revealing தவறுகளை சொன்னால், சத்தியமாக 'லூஸு' அடைமொழி ஒட்டிக் கொள்ளும்.

    நாற்பது வயது - அமெரிக்க பச்சை அட்டை: இங்கே 'சீரியல் கில்லர்' நிறைய பேர் செய்தியில் வந்துகொண்டேயிருப்பார்கள். அவர்களைக் குறித்து அவ்வப்போது திரைப்படங்களும் நிறைய எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு கொலையை சாஷ்டாங்கமாகக் காட்டி, சாவதானமாகக் கொண்டு சென்றாலும், ஒன்றரை மணி நேரத்தில் படத்தை விறுவிறுப்பாக முடித்துவிடுவார்கள். போகப் போக, 'தொடர் கொலைக்கான காரணம் என்ன?' என்று லாஜிக்கும், கஷ்டப்பட்டு புத்தியைத் தீட்டி போலீஸ் வலைக்குள் வீழ்த்துவதையும் முடிச்சிட்டு காண்பிப்பார்கள். இங்கே அந்த மாதிரி இல்லாமல், 'ஏன்/எதற்கு' என்பதை ஏப்பமிட்டு விட்டு, முடிவிலும் சோப்ளாங்கியாய் ஏனோதானோ என்று எண்பதுகளின் 'சகல கலா வல்லவன்'களை விட சப்பையான க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள்

    change the age to thirties, it
    fits you :)

    ---change the age to thirties---

    என்னோட யோசனையெல்லாம் எப்படிய்யா கண்டுபிடிக்கறீங்க :-)) டூ மச் ;-)

    நிறைய பேர் விமர்சனம்ல ஏதோ ஆங்கில படம் தழுவல் சொன்னாங்க.
    என்ன படம்னு யாரும் சொல்ல்லியே.

    Bone collector படம் USA NETWORKல
    இந்த வாரம் போட்டாங்க. சம படம்.எத்தனை தடவை பார்த்தாலும் நல்லாதான் இருக்கு.

    வேட்டையாடு விளையாடுனு அதை எடுத்திருக்கலாம்.

    நிர்மல்

    sir nalilan kayirai na last wekthan padichane..but innum vv padam parkka mudiyalai..aavalodu irukirane..ungal vimarsan maaravargalil irundhu miga marupatu irundhadhu..nandri for ur review

    நான் படித்த திரைவிமர்சன பதிவுகளில் இருந்து வேறுபட்டு மட்டும் இன்றி ஒரு படத்தை பற்றி இப்படியும் விமர்சனம் எழுதலாம் என்று காட்டியதுக்கு சபாஷ்.

    பாலவின் விமர்சனத்தை இப்போழுதுதான் முதன்முதலாக படித்தேன் ஆதாலால்,வெகுகாலமாக படிப்பவர்கள் இவர் இப்படித்தான் என்றால்.... அவர்களுக்கு மட்டும் ஹிஹிஹி ...

    ராஜா... நன்றி :-)

    ஏற்கனவே படம் பார்த்துவிட்டாலும் மறுபடியும் தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை உங்கள் விமர்சனம் ஏற்படுத்தியது

    இறுதிக்காட்சியில் இரண்டு மாணவர்களில் ஒருவனை கமல் கொன்றுவிட அதனைக்கண்டு ஆத்திரத்தில் இன்னொரு சைக்கோ மாணவன் தானாய் ஓடி வந்து கமலிடம் மாட்டுவது போல காட்டியிருப்பது உறுத்துகிறதே பாலா..கவனித்தீர்களா?

    ----ஆத்திரத்தில் இன்னொரு சைக்கோ மாணவன் தானாய் ஓடி வந்து கமலிடம் மாட்டுவது ----

    ரசிகவ்,

    ஹீரோ தப்பிப் பிழைப்பது என்பது உறுதி. எனவே சட்டு புட்டென்று முடித்தார்களே என்று சந்தோசப்படுவீர்களா :-)

    (காக்க காக்க படத்தில் வில்லன் சொல்வான்: 'டேய் உன்ன நடுரோட்டில் தனியாளாக நிற்க வைக்கிறேண்டா... உன் பொண்டாட்டி, நண்பர்கள் எல்லாரையும் ஒழிக்கறேண்டா... வீடு வாசல் எல்லாம் அழியணும்டா...' என்கிற ரீதியில் சவால் விட்டு ஜெயித்தும் காட்டுவான். அந்த இயக்குநரின் அடுத்த படம் என்பதால் கொஞ்சம் நப்பாசை கலந்த பயம் இருந்திருக்கும். ஆனால், இது பக்கா குப்பை)

    //ம்துமிதாவின் சுபாஷிதம் அட்டைப்படம் போன்ற ஓவியத்துடன் கூடிய இன்னொரு (கவிதை?/ஆத்மாநாம்??) புத்தகம், கமல் & ஜோதிகாவிடையே காதல் சின்னமாக வலு சேர்க்கிறது.
    //

    பாலா, அது சுபாஷிதமே தான்... கழுகுப் பார்வை உங்களுக்கு :-)
    குங்குமதிதில் வந்திருக்கு

    http://www.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2006/sep/10/14

    நன்றி உதய் :)

    I think the movie is worth a watch. I gave the movie a rating of 7/10 here: Vettaiyadu Vilaiyaadu Tamil Movie Review

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு