செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

Tamil Cinema Dialogue Lollu

வெட்டிப்பயல் - லொல்லு படித்தவுடன் எனக்கும் கை பரபரக்க, சிலவற்றை என்னால் முடிந்த அளவு நக்கல் விட்டுள்ளேன். பொறுத்தருள்க...

உதவிய & தொடர்பான பதிவுகள்: டயலாக் டென் | அந்நியலோகம்: டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள் | ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...: தத்துவம்


  1. முத்து

    ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது!

    தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி: அச்சச்சோ... ஹீரோவாச்சே! கால்ஷீட் கொடுத்திருக்கீங்க... அப்படி சொல்லாதீங்க.

    தமிழன்: உங்களுக்கு மட்டுமாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா சார்?


  2. பாபா

    ரஜினி: கதம்... கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு

    இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ஆமா...


  3. பாரத விலாஸ் - மகள் மதம் மாறி காதலிப்பதால் கோபப்படுகிறார் சிவாஜி.

    கே ஆர் விஜயா (திரைப்படத்தில் சொன்னது): 'நீங்க எதற்கு எடுத்தாலும் அதிகமா உணர்ச்சிவசப்படறீங்க!'

    சிவாஜி கணேசன் (திரைப்படத்தில் சொல்லாமல் விட்டது): 'பின்ன... சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!'


  4. பராசக்தி

    சிவாஜி கணேசன்: ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்..

    வழக்கறிஞர்: ஓரம் மட்டும் ஓடினால், வாழ்க்கையில் தடுக்கித்தான் விழுவாள்.


  5. வீரபாண்டிய கட்டபொம்மன்

    சிவாஜி: .'என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?'

    ஆஷ் துரை: 'யூ மேன்... மெஷின் கொடுக்கறேன் சொன்னேன்... காசு கொடுத்தியா... அதில் மஞ்சள் என்ன... உன் மூளைக்கு மசாலா அரைக்கலாம் மான்'


  6. வள்ளி

    ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.

    ப்ரியா ராமன்: அதுக்காக உன்ன மாதிரி கோ ஆப்டெக்ஸ் போர்வை என்னை காதலிச்சா, அதையெல்லாம் கட்டிக்க முடியாது.


  7. மன்னன்

    ரஜினி: ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா? ஒரு சாக்லேட்டு வேணுமா? இரண்டு சாக்லேட்டு வேணுமா?

    மாமனார் விசு: நல்ல வேளை மாப்பிள்ளை. ஒரு கூட்டணிக்கு ஆதரவு வேணுமா? ரெண்டு கூட்டணிக்கு ஆதரவா பேசணுமா என்று கேட்காம இருக்கீங்களே.


  8. திருவிளையாடல்

    நக்கீரன்: குறையற்ற பாடலைக் கேட்டால் எம்மை விட மகிழ்ச்சி அடைபவர் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். சங்கம் வளர்த்த அரசர், தரமற்ற பாடலுக்கு பரிசு கொடுக்கிறார் என்பதே என் கோபம்.

    இறையனார்: சங்ககாலத்திலேயே விமர்சகர்கள் லொள்ளு தாங்க முடியலியேடா சாமீ


  9. தம்பி

    பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

    பொருத்தமான பதில்கள் வரவேற்கபடுகின்றன:


  10. வேட்டையாடு விளையாடு

    கமல்: யூனிஃபார்ம் போட்ட திமுருன்னு சொன்னியாமே? இப்போ நான் யூனிஃபார்ம்ல வரலை. ஆடகளோட வரலை. ஒரு டிசிபி-யா வரலை. தனி ஆளா ஆம்பளையா வந்திருக்கேன். நீ எப்படி? தம்பி கேட்ட சாத்துப்பா.

    வில்லன்: தம்பி... அப்படியே அந்த சாமானை எடுத்து வச்சுக்கப்பா




| |

19 கருத்துகள்:

ஆஹா. இப்படிப் போட்டுத் தாக்கறீங்களே. செம காமெடி! :) :)

//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

1. தோழி: ஆனா அந்தாளு (மேடி) மட்டும் ஷாலினில ஆரம்பிச்சு நிறைய பொண்ணுங்களை கூலா உள்ள தள்ளிக்கிட்டு இருக்காருடி!.

2. அதான் அந்தாளு ஒன்னை "ஆறிப்போன கஞ்சி"ன்னு சொன்னானா?

3. உனக்கு மட்டும் இரைப்பை நெஞ்சுல இருக்கா? மொதல்ல டாக்டரைப் பாரு!

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

.....


//
நக்கீரன்: குறையற்ற பாடலைக் கேட்டால் எம்மை விட மகிழ்ச்சி அடைபவர் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். சங்கம் வளர்த்த அரசர், தரமற்ற பாடலுக்கு பரிசு கொடுக்கிறார் என்பதே என் கோபம்.

இறையனார்: சங்ககாலத்திலேயே விமர்சகர்கள் லொள்ளு தாங்க முடியலியேடா சாமீ//

சூப்பர்...

//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்//

1. அதுக்காகவாச்சும் சாப்பிட்டுப் பாரு; சூடு பட்டு கொஞ்சம் நகருதான்னு பார்க்கலாம்.

2. கார்ப்பரேஷன் தண்ணி மட்டும் குடிக்கிறே? அதுவே ஒத்துக்குதுன்னா எது வேணா ஒத்துக்கும்.

3. அப்படின்னா கொஞ்சம் சென்ட் குடியேன் - கப்பாவது கொறையும்.

//ரஜினி: கதம்... கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ஆமா...//

பாலா !
எங்கத் தலைவனை ரொம்பவே கலாய்ச்சிருக்கிங்க சிவாஜி வரட்டும் எல்லோரும் துண்டக்காணும் துணியக் காணும் என்று தியேட்டரை நோக்கி ஓடத்தான் போறாங்க. ஏவிஎம் சரவணன் சாரைத் தவிர !
:))

//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்//

இரைப்பை பூஜாவுக்கு நெஞ்சில் இருக்கிறதா ? மிகப் பெரிய நெஞ்சு !!!
:))

Nitpicking - even though it is a humour post. Ash durai was the contemporary of Vanchi Nathan, Kattabomman fought with Jackson Durai.

//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்//

அப்ப எச்சில்பட்ட தண்ணில டெய்லி குளிக்றாருன்னு சொல்லுங்க.

அன்புடன்
ஆசாத்

//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

பொருத்தமான பதில்கள் வரவேற்கபடுகின்றன: //

தூ..தூ..தூ.
வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெரியில இதுல லவ் ஒரு கேடா
--நிர்மல்

sir innnum niraya edirparkirane ungaltta!!!!!!!!!

பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

மாதவன்: இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆறின காபியும், பூச்சிக் கொல்லி பானங்களுமா கொடுத்து சாகடிக்கிறாளே!!

கட் அன்டு பேஸ்ட்ல எங்க தலைவரை காப்பி அடிக்காதே...

சுந்தர்,
----உனக்கு மட்டும் இரைப்பை நெஞ்சுல இருக்கா? மொதல்ல டாக்டரைப் பாரு!----

வெட்டி,
----ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...----

ரங்கா,
----கார்ப்பரேஷன் தண்ணி மட்டும் குடிக்கிறே? அதுவே ஒத்துக்குதுன்னா எது வேணா ஒத்துக்கும்.----

எல்லா வசனத்தையும் கொடுத்துவிட்டு, உங்களிடமே எதிர்வினைகளை கேட்டிருக்கலாம் என்று சொல்ல வைக்கும் அருமையான லொள்ளுகள்! நன்றி :-D)



கோவி,
-----எங்கத் தலைவனை ரொம்பவே கலாய்ச்சிருக்கிங்க ----

மனதிற்கு பிடித்தவரைத்தானே அதிகம் கவனிப்போம் ;-)


செந்தில்,
ஜாக்சன் துரையா... அப்பொழுதே 'எதுவோ' சரியில்லை என்று பட்சி சொல்லியது.


ஆசாத், கார்த்திக், பொன்ஸ் ___/\___

நிர்மல்,
-----வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெரியில இதுல லவ் ஒரு கேடா----

:-)))) (வசனகர்த்தாவோ விவேக்கோ பார்த்தால் கவ்விக் கொள்ளப் போகிறார்கள்)

பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

(தொடர்கிறார்) குளிராவும் சாப்பிட மாட்டேன் ஏன்னா அவருக்கு சளி பிடிச்சிரும்..

தோழி: அப்ப நீ சாப்பிடவே மாட்டியா?
பூஜா: ஆமா. அவ்வளவு ஃபீலிங்
தோழி: இப்ப என்ன ஃபீல் பண்ற?
பூஜா: பசியா ஃபீல்பண்றேன்.

//-----வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெரியில இதுல லவ் ஒரு கேடா----//

அதான் காதலிச்சா வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில ஒரு உருண்டை உருளும்னு வயிரமுத்து அய்யா எளுதியிருக்கார்ல, அது இறைப்பை வளியா போவுதோ என்னவோ!

சிவாஜி: .'என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?'

ஜாக்ஸன் துரை: 'என்னய்யா சுத்த பட்டிக்காடா இருக்க? இப்பல்லாம் நாட்டுக்கட்டைங்ககூட Fair and Lovely தான் போடறாங்க!'

ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.

விசு: ஏண்டா கண்ணா, ஒரு கல்யாணமாகத கல்யாணிங்கற பொண்ண ஒரு கல்யாணமான கல்யாணராமன்கிற பையன் காதலிச்சா, அந்த கல்யாணமாகத கல்யாணி, கல்யாணமான கல்யாணராமனை காதலிக்க் முடியுமா? கல்யாணியும் கல்யாணராமனும் கல்யாணம்தான் பண்ணிக்கமுடியுமா? சொல்லுடா கண்ணா?

கமல் மகன்: அப்பா, நீங்க நல்லவரா கெட்டவரா?

கமல்: கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை நான்.

கலைஞன்,
படித்தவுடன் பதில் பின்னூட்டம் போட வேண்டும் என்று எண்ணுவதுதான். செயலில் காட்ட முடிவதில்லை. மிகவும் அருமை. (கர்ணன் இடது கையாலேயே தானம் வழங்கிய மாதிரி, இனி உடனுக்குடன் எண்ணங்களை மறுமொழிய வல்லமை வேண்டும் :-)

விசு & ஜாக்ஸன் - இரண்டும் வெகு சிறப்பு.


சிறில் ... கொஞ்சம் பெருசா வந்திருக்கே; ட்ரிம் செய்யலாமே :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு