வியாழன், செப்டம்பர் 28, 2006

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (1)

musharraf_book

Manmohan-Musharraf-NY-25-10-2004பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு:

ஜேம்ஸ் ஃப்ரே (James Frey) என்று ஒருவர் இருக்கிறார். "A Million Little Pieces" என்னும் நனவோடை எழுதினார். பால்ய காலத்தின் பாலியல் கொடுமைகளை புத்தகமாக்கினார். இணைய ஆய்வாளர்கள் அது அவருடைய சொந்தக் கதை அல்ல என்பதை பிட்டு வைத்தவுடன் 'கண்டு / கேட்டு / தீர விசாரித்து' கட்டியதை சொன்னவுடன், கட்டுரை பகுதியில் இருந்த புத்தகத்தை, 'புனைவு' என்று வகை செய்து மாற்றினார்கள்.

Times of India cartoonபாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் எழுதி உள்ள புத்தகத்தில் கூறியருப்பதை சரிபார்க்க கூகிள் வழியாக 'நியூக்ளியர்' என்று இஸ்லாமாபத்தில் தேடியவர்களைக் கண்டுபிடித்து என் விசாரணையைத் துவக்கினேன். பாகிஸ்தான் நுட்பங்களை காப்பி அடித்து இந்திய அணுவிசை திட்டங்கள் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை என்பதை பாகிஸ்தானின் தொழில்நுட்பியலாளர் அப்போது தெரிவித்தார். மேலும் 'கூகிள் அந்தக் காலத்தில் இல்லை' என்று நினைவூட்டி 'லெக்சிஸ்-நெக்சிஸ்'க்கு யுரேனியம் செறிவூட்டல் ப்ராஜெக்ட் நன்றிக்கடன் பட்டிருப்பதாக முடித்துக் கொண்டார்.




| |

6 கருத்துகள்:

:-))))

திண்ணையில் சின்ன கருப்பன் இதை பற்றி அருமையாக ஒரு பதிவு எழுதியுள்ளார்.எங்கெங்கு காணிணும் முஷாரப் பற்றியே பேச்சு:-))

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609294&format=html

//பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு: //

பாலா,

"In the Line of Fire" என்பது போர்முனையில் நிற்பதைக் குறிக்கும் ஒரு 'Idioms & phrases' வகையைச் சார்ந்த வாக்கியம். அதனை 'நெருப்புக் கோட்டினில்' என்று தமிழ்ப்படுத்துவது கொஞ்சம் literal ஆக இருக்கிறதே. கவனிக்கவும்.

பாபா
அவரின் சுய சரிதை புனைவாக இருப்பதில் சந்தேகம் இருக்காது. அவரின் அவ்வப்போதைய பேச்சுக்களைத் தொகுத்தாலே தெரியும்.

ஆனால் டெய்லி ஷோவில் அவர் பங்குபெற்றதைக் கவனித்தீர்களா? He handled the situation greatly. You could not make out if he is for or against Bush.

மிஸ் பண்ணிட்டீங்கன்னா என் பதிவொன்ற்ல் லிங்க் இருக்கு பாருங்க, அரசியல் தவிர்த்து அவரைப் பார்த்தால் இத இன்னும் ரசிக்கலாம்.

In tha line of fire. உங்கள் மொழி பெயர்ப்பு லிட்டெரல். இதே தலைப்பில் ஒரு க்ளிண்ட் ஸ்ட்வுட் படம் உள்ளது.

குண்டுகளின் அல்லது நம்மை நோக்கி சுடுபவர்களின் முன் தைரியமாயெதிர் நிற்றல் எனப் பொருள்படும்.

Thinnai - மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல் :: சின்னக்கருப்பன்: "நீண்டகால திட்டமாக, பாகிஸ்தான் என்ற கருத்துருவத்தை அழித்து பாகிஸ்தானிய மாநிலங்களை இந்தியாவுடன் சேர்ப்பதுதான் இந்திய மக்களுக்கும் நல்லது இன்று பாகிஸ்தானிய ராணுவத்தின் கீழ் மாட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் நல்லது."

கொஞ்சம் அதிகப்படியான அக்கறை!

உலகின் புதிய கடவுள்: 174.முஷாரப்பின் நகைச்சுவை விருந்து

சன்னாசி said...
ஜான் ஸ்டூவர்ட் ஷோவுக்கு இதுவரை எந்த head of stateம் வந்ததில்லை - முஷாரஃப் தான் முதல் ஆசாமி.

செல்வன்

புத்தகத்தின் மேல் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார். நூலகத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும்.


மீனாக்ஸ்

கவனிக்கவில்லை :( (தினமணியில் வந்த தலையங்கத்தில் கையாண்டதை, நானும் பயன்படுத்திக் கொண்டேன்.)

சில பரிந்துரை...

* அடலாருக்கு அருகே
* யுத்தகளத்தின் கணங்கு சூட்டில்
* ஏவுகணைகளின் பாதையில்
* காளபப்படைவீரருக்கு எதிரே

சிறில்

----மிஸ் பண்ணிட்டீங்கன்னா என் பதிவொன்ற்ல் லிங்க் இருக்க----

ஸ்டூடியோ 60, பாஸ்டன் லீகல், சிக்ஸ் டிகிரீஸ் என்று நெடுந்தொடர் பார்ப்பதில் மும்முரம். தவறவிட்டேன்; அவசியம் பார்க்கிறேன்.

---இதே தலைப்பில் ஒரு க்ளிண்ட் ஸ்ட்வுட் படம் உள்ளது---

டர்டி ஹாரி போல் வந்த இன்னொரு படம் என்று நினைக்கிறேன். இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு