வியாழன், செப்டம்பர் 07, 2006

New York Upstate Lakes Tour

மண்ணும் மந்திரியும் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

இதுதான் ப்ளாசிட் ஏரி. இந்த ஏரியின் பெயரில் ஆங்கிலப் படம் வெளி வந்திருக்கிறது. கொடைக்கானல் போல் மலை வாசஸ்தலம். கோடை காலம் கூடிய சீக்கிரமே பூப்பெய்தி இலைகளைத் துறப்பதால், காடுகள் மலைகள் பிரதேசத்திற்கு ஒரு சுற்றுலா.


உள்ளோட்டம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

ப்ளாசிட் ஏரியில் இரு முறை குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடந்துள்ளது. 1980-இல் நடந்த பனி விளையாட்டு மைதானத்தை இங்கே காணலாம். உயர்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் இருவர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.


கனவு :: ஞானக்கூத்தன் கவிதைகள்

மலைமுகடுகளின் பிரதிபலிப்பு ஏரியில் விழுகிறது. துடுப்பு படகு, சைக்கிள் படகு, பெடல் படகு என்று விருப்பமானதை வாடகை எடுத்து 'அமைதியான நதியினிலே ஓடம்' என்றோ, 'வசந்த கால நதிகளிலே' என்றோ பாடி தேனிலவை அசை போட வைக்கிறது.


எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

அடிராண்டாக் மலைப்பகுதியில் இந்த வகை ஈஸி-சேர் மிகவும் பிரபலம். அடிராண்டாக் இருக்கை என்றே அழைக்கிறார்கள். காலை முழுவதும் மலையேறி சிகரங்களைத் தொட்ட களைப்பு நீங்க மாலையில் ஏரிக்கரையோரமாக ஆற அமரச் சொல்கிறது.


யாரோ ஒருத்தர் தலையிலே :: ஞானக்கூத்தன் கவிதைகள்

அடுக்கடுக்கான குழாய்களை வைத்து நீர்வீழ்ச்சியை சித்தரிக்கும் அமைப்பு. அருகில் உடைந்து போன சக்கரம். மறுசுழற்சியாகும் தண்ணீர். இயற்கையில் மேகம் என்னும் நீர்தொட்டி. பக்கத்திலேயே 700 அடி படிக்கட்டு அருவி. குளித்து நனைந்து மகிழ முடியாத சக்கரமாக என்னை நினைத்துப் பார்க்க வைத்தது.

உங்களுக்கு ஏதாவது கவித்துவமாக (aka அச்சுபிச்சுத்தனமாக) நினைக்க வைக்கிறதா?


மருதம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்தப் பகுதி எப்படி உருவானது? எத்தனை வருடமாக இங்குள்ள பாறைகள் பழமையானது? ஆங்காங்கே காணப்படும் விநோத குழிகளின் காரணம் என்ன? போன்ற தகவல்களை அவ்வப்போது விளக்கும் பலகைகளையும் படித்துப் பயனடைந்தேன்.

மழைநாள் பாதை :: ஞானக்கூத்தன் கவிதைகள்

'எங்கே செல்லும் இந்தப் பாதை?' அல்லது 'அங்கும் இங்கும் பாதையுண்டு; இன்று நீ எந்தப் பக்கம்?'


சூரியனுக்குப் பின்பக்கம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

ஜார்ஜ் ஏரி நகரத்தின் நீதிமன்றம். அந்தந்த ஊருக்கு சென்றவுடன் நுழையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள தலங்களை கண்டுபிடிப்பது பிடிக்கும்.


எழுதக் குவிந்த :: ஞானக்கூத்தன் கவிதைகள்

வெள்ளைமுக (வைட் ஃபேஸ்) மலையுச்சியில் இருந்து ப்ளாசிட் ஏரியின் இன்னொரு தோற்றம். பனிச்சறுக்கு காலங்களில் புகழ் பெற்ற மையம். மலையில் இருந்து சைக்கிள் ஓட்டி கீழே இறங்குவதை பலரும் தேர்ச்சியுடன் விரைவாக சாகஸமாக செய்தார்கள்.


மேலும் சில நிழற்படங்கள் (எட்டு ்ஞானக்கூத்தன் கவிதைகள்)
| | | |

8 கருத்துகள்:

மூணு நாள் நல்லா சுத்தி பாத்துருக்கீங்க.

நான் இங்கே சிக்காகோவை இன்னொரு முறை போய் பார்த்ததோடு சரி.

:)

பாபா
அருவி படம் அருமை !

மில்லேன்னியம் பூங்கா, நேவி பியர் போன்ற இடங்கள் எல்லாம் அவ்வப்போது படம் பிடித்து (விவரித்தும்தான் :-) கொடுங்களேன்.

ஆன&, புகைப்பட பிதாமகர் வாயால் பிரமாதமா.... :-D நன்றி

உங்க பெயரை சுருக்க இன்னொரு யோசனை : *-:)& என்று போட்டுக் கொள்ளலாம். (புரியாவிட்டால் யாஹூ தூதுவனில் *-:) போட்டுப் பாருங்க)

படங்கள் நன்று. ஆனால் அவற்றுக்கு கவிதைகளுக்கும் இடையிலான கனிக்சன் புரியவில்லை.

-----அவற்றுக்கு கவிதைகளுக்கும் இடையிலான கனிக்சன் புரியவில்லை.----

அதுவா... மாந்திரிக படாவாதம் :-P (ஒன்றுமில்லை; சும்மா போட்டுப் பார்த்தேன்; அம்புட்டுதான்)

படங்களும் தகவல்களும் LAKE PLACIDக்கு நல்லதொரு CURTAIN RAISER:)

தேவ்
நன்றி.

தாங்கள் சென்றதுண்டா? அருகில் இருந்தால் தவறவிடாமல் செல்லவும். அமைதியாக ஓய்வெடுக்க உகந்த சுற்றுலா.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு