கேள்வியும் நானே... பதிலும் நானே
பாலாஜி,
'தமிழ் வலைப்பதிவுகளில்' என்ற பதத்தை பலரும் பிரயோகிப்பதில்லையே? 'தமிழ்மணத்தில் நேற்று', 'தமிழ்மணத்தில் சூடு' போன்ற உபயோகங்களையே கண்ணுறுகிறேன். ஏன் இந்த நிலை?
பாலாஜி...
இதற்கான விடையை நான் முன்பே Daedalus & Kamalhasan என்னும் பதிவில் கோடிட்டுள்ளேன்.
அதாகப்பட்டது, வேலை தேடி பாரதத்தின் தலைநகரங்களில் அலைந்தபோது ஜெராக்ஸ் செய்திருப்பாயே; ஹௌ டு கோட் இன் சி++ போன்ற புத்தகங்களை 18 பைசாவிற்கு அடையார் ஜெராக்ஸில் கொடுத்தது போலத்தான் இந்தத் தமிழ்மண பயன்பாடும் இருக்கிறது. நிறுவனத்தின் பெயரை பொதுப்பெயராக மாற்றும் அளவு - நகல் எடுத்தலும் செராக்ஸ் நிறுவனமும் நாயகிகளுடன் பின்னிப் பிணைந்து கமல் கொடுக்கும் முத்தம் போல் ஒன்றையேக் குறிக்கிறது.
காலில் ஒரு முள்ளு பட்டா 'பாண்ட்-எயிட்' போடு; கண்ணில் ஒரு தூசி விழுந்தா 'க்ளீனெக்ஸ்' எடுத்துக் கொடு என்பார்கள். அதுபோல் வலைப்பதிவுக்கு ஒரு நோவு; தமிழ்மணத்திற்கு இன்னொரு வலி என்பது இனி தமிழ் தட்டச்சும் நல்லுலகில் கிடையாது.
பாலாஜி,
நேற்று நான் வேலைக் களைப்பில் சோர்வுற்றிருந்தபோது டிசே தமிழனின் கட்டுரை படிக்க கிடைத்தது.
DISPASSIONATED DJ: வாசிப்பு இடைமறிப்பு :: ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து....
ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமான்வையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், 'சிலுவைராஜ் சரித்திரம்' 'காலச்சுமை' போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
ராஜ்கெளதமன் புத்தகங்களின் வெளியீட்டாளர் மேல் ஆதாரமற்ற அவதூறு போல் அள்ளிவீசப்பட்ட குற்றச்சாட்டுக்களை படித்தவுடன் இது புத்தகத்தைப் பற்றியக் குறிப்பா, புத்தகப் பதிப்பாளர் பற்றிய மேலோட்டமான கிசுகிசுக்களா, வருங்காலத்தில் என்ன நடக்கும் என்னும் பயமுறுத்தல் ஆருடங்களா என்று குழம்பினேன். தட்டச்சுப் பலகை 'வா வா' என்று தூண்டி, அலுவல் 'போ போ' என்று துரத்தி என்னை பின்னூட்ட ஆலோசனை வழங்கத் தூண்டியது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?
பாலாஜி...
உனக்கு பின்னூட்ட பெட்டியைக் கண்டால் கை பரபரக்கும் என்று அறியப் பெறுகிறேன்.
'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்; அவன் மாம்பழம் வேண்டுமென்றான்... ஒன்று கொடுத்தாலும் நகரவில்லை; இந்தக் கன்னி வேண்டுமென்றான்' என்று ம.கோ.ரா. பாடல் காதில் ரீங்காரமிடுகிறது.
புத்தகக் குறிப்பில் எதற்கு ராஜ்கௌதமனுக்கு 'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா... வஞ்சகன் கண்ணனடா!' போன்ற இடைச்செருகல்கள் என்று கேள்வி எழுப்ப எத்தனிக்கிறாய். எனக்கும் இவ்வாறு துடிதுடித்து நிறைய தேவையற்ற அடைமொழிகளையும் பொறுத்தமற்ற விளிப்புகளைகளையும், சுட்டிக் காட்டி வாங்கிக் கட்டியிருக்கிறேன்.
அதன் பிறகு அங்கு நிலவும் மறுமொழி நிலவரத்தை உன்னால் கையாள இயலுமா என்பதை சிந்தித்துப் பார்க்கவும். தமிழினி மூலம் உன்னுடைய புத்தகம் வரப்போவதாக சொன்னால் வலைவாசகர்கள் முட்டாள்கள் இல்லாத காரணத்தால் நம்ப மாட்டார்கள் என்றாலும் உன் மீதும் அவர்கள் வருத்தம் கலந்த கோபம் பாயக்கூடும்.
ஆனால், போகிற போக்கில் சேறு தெளிக்கப்பட்டவர்கள் மேல் பரிதாபப்படுவதில் தவறில்லை. இந்த சமயத்தில் எனக்கு நேர்ந்த சமீபத்திய நிகழ்வை நினைவு கூறுகிறேன்.
முந்தாநாள் நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரியில் பின்மதியம் நான்கரை மணிக்கு குளம்பி வாங்குவதற்காக ஸ்டார்பக்ஸ் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவன் 'கால் ஸ்பூன் சர்க்கரை; 1/2 & 1/2 பாதி; மீதத்திற்கு 2% பால்; அதி சூடு டிகாசன்' என்று அனுபவித்து தனக்கு வேண்டிய காபியின் பாகங்களை விரிவாக சொல்லி முடித்தான். சொல்லி முடித்த அடுத்த நொடியே படு கோபமாக 'எனக்கு ஏற்கனவே உங்க ஊரில் பார்க்கிங் டிக்கெட் ஒரு தடவை கொடுத்துட்டாங்க... சீக்கிரம் கலந்து கொடுங்க... உங்க தயவில் இன்னொன்றை உங்க குக்கிராமத்துக்குக் கொடுக்க தயாராக இல்லை' என்று கடுமையாக சுடுசொல் உதிர்த்தான். அவனை கண்டிக்க மனசு முயன்றாலும், ஜிம்முக்கு போய் வளர்த்த ஆஜானுபாகத் தோற்றத்தைப் பார்த்த மூளைத் தடுத்து நிறுத்தியது.
அவனுக்கு கொட்டை வடிநீர் வழங்கிய பிறகு, தேவையில்லாத சாடலுக்கு உள்ளான காபி தயாரித்து வழங்குபவர்களைப் பார்த்து 'That was rude' என்று பகிர்ந்தவுடன் மனசு லேசானது.
அதே போல் முடிந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக 'ஏன் இப்படி சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம், எகத்தாளமாய் சேறு அள்ளித் தெளித்து மகிழ்கிறார்களோ' என்று சொல்லவும். Fame invites scrutiny போன்ற பொன்மொழிகளைப் போட்டு சொல்வதும் சமயத்திற்கேற்ப பொருந்தலாம்.
சில சமயம் காபி வாங்கிக் கொண்டு கதவருகே செல்பவர்களின் காதிலும் உன்னுடைய மறுமொழிகள் விழலாம். அதனால், தங்களின் இடைச்செருகல்களையும் ஜாதகக் கணிப்புகளையும் செவிவழி வம்புகளையும் அடுத்த முறை குறைத்தும் கொள்ளலாம்.
Blah | Answers | Dumps
முதல் கேள்வியும் பதிலும் ஷார்ப்!
"கொடுத்தாலும் வாங்கவில்லை, இந்தக் கன்னம் வேண்டுமென்றான்..."
சினிமா பாட்டைக் கூடத் திரிக்கிற காலமாகப் போய்விட்டது இந்த இருபத்தோராம் நூற்றாண்டு!
பெயரில்லா சொன்னது… 9/07/2006 12:53:00 PM
ஓ... பாடல் வரி பிசகி விட்டதே. நன்றி.
சொன்னது… 9/07/2006 01:23:00 PM
இப்டி புரியாத மாதிரி சொன்னா எங்களுக்கெல்லாம் புரியாமப் போயிருமா என்ன.
பாடல்: ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே..
சொன்னது… 9/07/2006 01:29:00 PM
பின்னூட்டம் கூட இப்படி கேள்வி எழும்ப வைக்குமா!
அலெக்ஸ், நீங்க புரியுதுங்கறீங்களா? புரியலேங்கறீங்களா? (தென்பாண்டிச் சீமையிலே பின்னணியில் படிக்கவும்)
சொன்னது… 9/07/2006 02:00:00 PM
ஆகா உங்களையே திறணடிக்கவைத்துவிட்டேனா? (வழக்கமா நீங்கதான் திணறடிப்பீங்க)
பாதி புரிஞ்சது பாதி புரியல.
சரி நம்ம போட்டிக் கதைக்கு ஒரு விமர்சனம் போடக் கூடாதா?
சொன்னது… 9/07/2006 02:31:00 PM
முதல் கேள்வி பதில் என்ன கில்லியில் எழுதியதற்கு பரிகாரமா ?
http://gilli.in/2006/09/06/tamilblogscom-thamizh-blog-feed-reader/
ஊம்... நடத்துங்க நடத்துங்க..
யாராவது வாந்தி எடுக்காத வரை சரி.
பெயரில்லா சொன்னது… 9/07/2006 08:21:00 PM
பாபா,
அசத்தல். பாபாவா இது? ஆஹா கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா...
இப்பிடி சொல்லி கில்லி மாதிரி அடிச்சு ஆடுபா... அத்த வுட்டுப் போட்டு சுட்டி மேல சுட்டி கொடுத்து கொல்லாதீஹப்பு...
அப்புறம் உம்ம இஷ்டம்...மத்தவா கஷ்டம்... :-)
சொன்னது… 9/07/2006 09:59:00 PM
சிறில், விமர்சனப் பதிவுகள் எழுத அனைத்து இடுகைகளையும் படிக்க வேண்டும். அலுவலில் கொஞ்சம் அவ்வப்பொழுது வேலை பார்க்க வைக்கிறார்கள்... சே... மோசமானவர்கள் ;-))
சொன்னது… 9/07/2006 10:07:00 PM
அனானி,
---முதல் கேள்வி பதில் என்ன கில்லியில் எழுதியதற்கு பரிகாரமா ?---
ஐபி தெரியாத இங்கே சொந்தப் பெயரில் கேட்டால் தன்யனாவேன் சாமீ.
கில்லியில் கேட்டதற்கு பதில் அங்கே. தோணினதை பதிலெழுதுவது இங்கே.
அப்படியே மறுப்புக்கூற்று FYI: கில்லியில் அந்த மாதிரி அவதானிப்பை சசி முன்வைப்பதற்கு முன்பே இந்தப் பதிவு எழுதி வலையேற்றமும் நடந்து விட்டது.
சொன்னது… 9/07/2006 10:09:00 PM
----அப்புறம் உம்ம இஷ்டம்...மத்தவா கஷ்டம்... ----
இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
என்பது போல் சுட்டி(க் ;-) காட்டி படுத்துவதே என் நோக்கம்.
அதற்காக 'சேற்றில் முளைத்த செந்தாமரையோ' என்று ராஜ்கௌதமனை செந்தாமரையாகவும் தமிழினியை சேறாகவும் விளக்கமாக பதவுரை தரும் விரித்துப் பொருள்படுமாறு பதிவுகள் எழுதமாட்டேன்.
சொன்னது… 9/07/2006 10:15:00 PM
//இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை//
"கண்டேன் கண்டேன்
மீண்டும் பாபா கண்டேன்"
;-)
சொன்னது… 9/08/2006 01:15:00 AM
Is any one know how to translate different Tamils fonts to one?
Currently I am under the process aggregating all the Tamilnadu newspapers headline into one in madurainews.com.
Please let me know if you have any idea.
சொன்னது… 12/30/2006 05:33:00 PM
கருத்துரையிடுக