ரசிக்கும் சீமானே
ஓ...
ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ...
ரசிக்கும் சீமானே வா
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ...
ரசிக்கும் சீமானே வா
அன்றும் இன்றும்
இன்று: நேரு உள்நாட்டு விளையாட்டரங்கத்தில் சினேகா ஆடுகிறார். கலைஞர் இளமையில் எழுதிய பாடலுக்கு புது முலாம் பூசப்படுகிறது. திரையுலகின் மணிரத்னம், அஜீத் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர குறிப்பிடத்தக்க அனைவரும் ஆஜர். பொதுஜனம் லத்திசார்ஜ் வாங்கினாலும், ஆஜர் ஆகிவிடுகிறார்.
இன்று: 'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?' என்று எண்ண வைக்கிறார்.
இன்று: பக்கத்து வீட்டில் சிகுன் குனியா, அண்டை மாநிலத்தில் டெங்கு என்று நோய்கள் பிரச்சாரம் இல்லாமல் பெருகினாலும், பிரச்சாரத்திற்காக பெருவிழா எடுத்து இளைஞர்களைக் கவரும் ரெகார்ட் டான்ஸ் விழா.
திரையுலகக் கலைஞர்கள் எடுத்த விழா குறித்த தமிழ்ப்பதிவுகள்:
1. நுனிப்புல்: நல்லா நடிக்கிறாங்கப்பா!
2. பினாத்தல்கள்: பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..
3. அலசல்: யார் இதை சொன்னாங்கன்னு தெரியுமா?
4. கில்லி - Gilli » Tamil Cinema felicitates Chief Minister Karunanidhi
Chief Minister | Tamil Nadu | Campaign | Sun TV | Appreciation
அன்று: ஆட்சியில் இல்லாததால் மக்களைப் பற்றித் தெரிந்திருந்தது.
இன்று: ஆட்சி மோகத்தில் திளைத்திருப்பதால் மக்கள் நலம் மறந்து போனது
சொன்னது… 10/09/2006 11:38:00 AM
நிர்மல் __/\__
நன்றி!
எஸ்.கே.
இன்னுமொரு அன்றும் இன்றும்...
தமிழகத் தேர்தல் 2006: Flashback - 5 Years Back & Still unanswered Questions - என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்? :: அ.கி. வேங்கட சுப்ரமணியன்
சொன்னது… 10/09/2006 11:53:00 AM
நல்ல பதிவு பாபா,
//பொதுஜனம் லத்திசார்ஜ் வாங்கினாலும், ஆஜர் ஆகிவிடுகிறார்.//
நமக்கு சினேகா டான்ஸ் தானே முக்கியம் மானமா முக்கியம். அதே மாதிரி மக்களும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் பாலா அவர்கள் திருந்த ஆரம்பித்தால் இவர்களும் திருந்தத்தானே வேணும்?
சொன்னது… 10/09/2006 11:56:00 AM
சந்தோஷ்
---அவர்கள் திருந்த ஆரம்பித்தால் இவர்களும் திருந்தத்தானே வேணும்?---
கவர்ச்சியாட்டத்தை மக்கள் விரும்பிப் பார்ப்பதில் தவறில்லை. அதற்கு நடுவில் 'மானே, தேனே' போட்டுக் கொள்வதிலும் தப்பில்லை. திரைப்படத்தின் துவக்கத்தில் வருவது போல் 'இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கற்பனையே! நிஜத்தில் வாழ்பவர்களை ஒத்திருந்தாலோ, பிரதிபலித்தாலோ, அது தங்களின் மிகையான கற்பனையே!' என்னும் எச்சரிக்கை போட்டிருக்கலாம்.
சன் டிவியில் தற்போது பல திரைப்ப்டங்களுக்கு முப்பது நிமிட சிறப்பு விளம்பரம் கொடுக்கிறார்கள். 'கேடி', வேட்டையாடு விளையாடு' போன்ற படங்களுக்கு, படத்தை எடுத்தவர்களே, பேட்டி + சில காட்சிகள் + பாடல் துளிகள் + ஒலிப்பேழை வெளியீட்டு விழா + முன்னோட்டம் என்று சுவாரசியமாகக் கலந்து கொடுப்பார்கள். அந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது, 'இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. சன் டிவியின் தயாரிப்பல்ல!' என்று மறுப்புக்கூற்று போடுவார்கள்.
அதே போல் இந்த ஒளிபரப்பிலும்,
* 'இது திரையுலகினருக்கு வரி ஏய்ப்பை அதிகாரபூர்வமாக்கியதற்கான நிகழ்வு.'
* 'இது தி.மு.க. கட்சி விளம்பரம்.'
என்பது போன்ற தகவல் அட்டைகளை காண்பித்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
சொன்னது… 10/09/2006 12:35:00 PM
I thank meself for not having SunTV(If I watch Sneha dancing, I may end up in the hospital :) ).
On the other hand, I realize how much I miss these clowns' activities.
சொன்னது… 10/09/2006 12:48:00 PM
ம.கோ.ரா?
பெயரில்லா சொன்னது… 10/09/2006 01:06:00 PM
ஒருத்தராவது கேட்டீங்களே ;) நன்றி.
BBC Tamil | ஆளும் அரிதாரம்: "எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன்"
எம். ஜி. இராமச்சந்திரன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)
சொன்னது… 10/09/2006 01:42:00 PM
என்னா டான்ஸ்? என்னா சாங்?
சொன்னது… 10/09/2006 08:00:00 PM
//பிரச்சாரத்திற்காக பெருவிழா எடுத்து இளைஞர்களைக் கவரும் ரெகார்ட் டான்ஸ் விழா.//
தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.
சொன்னது… 10/09/2006 08:31:00 PM
ராஜேஷ்,
திங்கள் இரவு ஃபுட்பாலா? ஸ்டூடியா 60-ஆ?? எதற்கு வாக்கு???
முத்து,
மனைவியிடமிருந்து திட்டு விழும்போது, நான் சொன்ன டய்லாக், உங்களுக்கு எப்படி தெரிய வந்தது :)
சொன்னது… 10/09/2006 08:55:00 PM
தொடர்புள்ள இன்னொரு பதிவு: ஓ...!!!: அம்மாவுடன் ஒரு உரையாடல்
சொன்னது… 10/09/2006 09:14:00 PM
"தமிழ்த் தலைப்பு? பாஸ்டன் பாலா?"
என்று ஓடி வந்தேன்.. நல்ல பதிவு :)
சொன்னது… 10/09/2006 09:31:00 PM
---"தமிழ்த் தலைப்பு? பாஸ்டன் பாலா?"---
முத்தமிழ் அறிஞரையும், முத்தமிழில் நிகழ்ச்சிகளை ரீ-மிக்ஸ் செய்து கொடுத்த தமிழ் தலைப்பு படக்கலைஞர்களையும் விமர்சிப்பதால், 'தமிழ் தலைப்பு' :P :)
சொன்னது… 10/09/2006 09:48:00 PM
ஆக மொத்தம் ஒருத்தரும் (தனும்) பார்க்காம விடவில்லை :-)
பாபா! விளம்பரத்துக்கு நன்னி.
சொன்னது… 10/09/2006 09:52:00 PM
பாபா தலைவர் பாட்டை வச்சு தலைவருக்கே ஸ்டார்ட் மீசிக்கா... ஆட்டோ பாஸ்டன் வராது நினைப்பா?? நோட் பண்ணிட்டாங்க இல்ல....
பாராட்டு விழாப் பத்தி கச்சேரி பதிவு பாருங்க
http://chennaicutchery.blogspot.com/2006/09/blog-post_115933976189497531.html
இதுக்குத் தான் பாராட்டுனாங்களாம் அதையும் பாருங்க..
http://chennaicutchery.blogspot.com/2006/10/blog-post.html
சொன்னது… 10/09/2006 09:58:00 PM
நமீதா டான்ஸை பாராட்டாத இந்த பதிவை வன்மையாக
கண்டிக்கிறோம் :-))))
***
கருணாநிதி புகழ்மழை ரொம்ப ஓவர்.. கஷ்டகாலம்.. புனேயில் ரெண்டே ரெண்டு தமிழ் சானல்கள் மட்டும் வருவதால், வேறு வழியில்லை :-)))
சொன்னது… 10/09/2006 10:04:00 PM
கருணாநிதி ஸ்நேகாவின் நடனம் பாக்குறது தப்பா ?
முதல்வர் கருணாநிதி ஸ்நேகாவின் நடனம் பாக்குறது தப்பா ?
வயசான காலத்தில் முதல்வர் கருணாநிதி ஸ்நேகாவின் நடனம் பாக்குறது தப்பா ?
வாயைப் பிளந்து வயசான காலத்தில் முதல்வர் கருணாநிதி ஸ்நேகாவின் நடனம் பாக்குறது தப்பா ?
தப்பு தாங்க !
:)))))
சொன்னது… 10/10/2006 05:45:00 AM
பாலா,
ஓட்டு இந்த அணிகள் ஃபுட்பால் விளையாடினால் - Patriots, Broncos, Chargers, Bengals, Colts,Eagles, Giants, Bears, Seahawks, Falcons and Panthers.
இல்லையென்றால் மற்றவை. ஸ்டூடியோ 60 பார்க்கவில்லை. விளம்பரம் கவரும்படியே இருந்தது. Two and a Half Men பார்ப்பதுண்டு.
அதென்ன...The Bachelor -ஐ விட்டுட்டீங்க :)
சொன்னது… 10/10/2006 05:46:00 AM
---ஒருத்தரும் (தனும்) பார்க்காம விடவில்லை---
பிரசாந்த் போன்ற சிலர் தனியாக வந்து ஆடினாலும், பொறுமை கடைபிடித்து, பார்த்திருப்பதற்கு பாராட்டு விழா கிடைக்குமா, உஷா? :)
சொன்னது… 10/10/2006 05:52:00 AM
விழா முடிந்த சூட்டோடு பதிவு போட்டிருநதீங்களே தேவ்...
சென்னைக் கச்சேரி: பாராட்டுறாங்கய்யா பாராட்டுறாங்க: ILA(a)இளா said…
அண்ணனுக்கு ஜே! காளையனுக்கு ஜே!
இந்தப்படத்தை போட்ட தேவுக்கு ஜே!
சென்னைக் கச்சேரி: வரி விலக்கு - :))))
சொன்னது… 10/10/2006 05:59:00 AM
சோ.பை.,
---புனேயில் ரெண்டே ரெண்டு தமிழ் சானல்கள் மட்டும் வருவதால்---
இங்கு கே டிவி மற்றும் சன், ஆகிய இரண்டு மட்டுமே கிடைக்கிறது. அங்கு???
அமெரிக்க இணையவாசிகளுக்கு பயந்துகொண்டிருப்பதால்தான் ஜெயா இன்னும் இங்கு காலூன்றவில்லை ;)
சொன்னது… 10/10/2006 06:00:00 AM
---வாயைப் பிளந்து வயசான காலத்தில் முதல்வர் கருணாநிதி ஸ்நேகாவின் நடனம் பாக்குறது தப்பா ?---
பார்க்க வருகிறவர்களிடம் ஐநூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலித்த பிறகு, உள்ளே அனுமதித்தால், வாயைப் பிளந்தால் என்ன... வயசானால் என்ன?
அப்படி ஏதாவது நிதி சேகரித்திருந்தாலாவது என்னுடைய தாபம் குறைந்திருக்கும், கோவி சார். :D)
சொன்னது… 10/10/2006 06:53:00 AM
ராஜேஷ், நேரம் கிடைத்தால் ஸ்டூடியோ 60 பார்க்க ஆரம்பியுங்க...
நிகழ்ச்சித் தயாரிப்பவர்கள், வசனங்களை எழுதுபவர்கள், மனம் புண்பட்டதாக கிண்டலை எதிர்ப்பவர்கள், விளம்பரதாரரின் நிர்ப்பந்தம், ரேட்டிங் நிர்ணயம் செய்யும் சூழல்....
சூப்பரோ சூப்பர்.
சொன்னது… 10/10/2006 06:57:00 AM
//முத்து,
மனைவியிடமிருந்து திட்டு விழும்போது, நான் சொன்ன டய்லாக், உங்களுக்கு எப்படி தெரிய வந்தது :)
//
அனுபவம் புதுமை..:))
சொன்னது… 10/10/2006 07:08:00 AM
புனேயில் சன், ஜெயா இரண்டு தமிழ் சானல்கள் மட்டுமே தெரிகின்றன...
***
உங்கள் மற்ற சீரியஸான இடுகைகளை விட, இதற்கு அதிக பின்னூட்டம்/வரவேற்பு இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள் ????
***
வடிவேலு காமெடி நன்றாக இருந்தது...
சொன்னது… 10/11/2006 12:40:00 AM
// SK said...
அன்று: ஆட்சியில் இல்லாததால் மக்களைப் பற்றித் தெரிந்திருந்தது.
இன்று: ஆட்சி மோகத்தில் திளைத்திருப்பதால் மக்கள் நலம் மறந்து போனது
//
நச்!!!
சொன்னது… 10/11/2006 07:30:00 AM
சோ.பை.
---மற்ற சீரியஸான இடுகைகளை விட, இதற்கு அதிக பின்னூட்டம்/வரவேற்பு இருப்பதற்கான காரணம்---
'எல்லாப் பதிவுகளிலும் வெட்டி-ஒட்டுபவன்... இன்று ஏதோ... சொந்தமா நாலு வார்த்தையும் கூட சேர்த்து எழுதியிருக்கானே' என்று வளரும் கலைஞரைப் பாராட்டும் நோக்கமாகத்தான் இருக்கும் என்பது என் அனுமானம் ; )
சொன்னது… 10/11/2006 08:23:00 AM
பாபா,
மிகவும் ரசித்த பதிவு... நன்றி
சொன்னது… 10/11/2006 08:49:00 AM
One more narration of the inevitable: Prabhu n Ferrari » Kaaka Vizha
சொன்னது… 10/11/2006 10:44:00 AM
ராம் நன்றி : )
சொன்னது… 10/11/2006 10:45:00 AM
//* 'இது தி.மு.க. கட்சி விளம்பரம்.'//
பாபா,
இதை தனியா சொல்லணுமா என்ன?
சொன்னது… 10/11/2006 06:31:00 PM
மிக நல்ல பதிவு.
சொன்னது… 10/11/2006 08:10:00 PM
//ரசிக்கும் சீமானே//
என்ன பாலா, ஞாபக மறதியா இல்ல வரிவிலக்கு ஏதாவது கெடச்சதா? அதிசயமா தமிழ்ல தலைப்பு வச்சிருக்கீங்களே :-))
சொன்னது… 10/11/2006 09:02:00 PM
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலொத்துங்க ராஜ ராஜ வீர கேசரி வருகிறார். பராக். பராக். பராக்.
டேய்....ராஜ குலோத்துங்கத்த விட்டுட்டடா! தொலஞ்ச நீ!
========================================
மாமன்னர் நடனம் பார்ப்பதையா கிண்டல் செய்கின்றீர்கள். போன ஆண்டு மகாராணி பார்த்தாரே. மன்னருக்கும் பொழுது போக்கு வேண்டாமா? நாட்டைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா?
========================================
ஏங்க...மதுரைய கண்ணகி எதுக்குக் கொளுத்துனாங்க? அவங்க கற்பு உள்ளவங்கன்னு காட்டவா?
இல்லடி எம் பொண்டாட்டி. மன்னரு ஆட்டம் பாத்துட்டுக் கடமைல தவறுனாரு. அந்த வெனதான் மதுரை எரிஞ்சது.
========================================
ஐயா, நீங்க சாப்பிட்டதும் எலைய எடுக்காதீங்க?
ஏன்?
அடுத்தாளுக்கும் இதே எலையத்தான் போடனும். அதுனால நாங்களே பதமா எடுத்துக் கழுவிக்கிறோம்.
ஏங்க? நானே எடுத்துப் போட்டுர்றேன்.
வேண்டாங்க..இப்ப நீங்க சாப்புடுறதுக்கு முன்னாடி இன்னொருத்தரு இதுல சாப்பிட்டு ஒழுங்கா எலைய வெச்சிட்டுப் போகலையா....அடம் பிடிக்காதீங்க.
========================================
சொன்னது… 10/11/2006 09:34:00 PM
சுந்தரமூர்த்தி
---ஞாபக மறதியா இல்ல வரிவிலக்கு ஏதாவது கெடச்சதா? அதிசயமா தமிழ்ல தலைப்பு வச்சிருக்கீங்களே ---
அடுத்த பதிவு பார்க்கவும்... திருந்திட்டேன் : D
savepozhichalur...
Chennai Airport land acquisition opposed - Citizens displaced :: பொழிச்சலூரைக் காப்பாற்றுங்கள்
சொன்னது… 10/12/2006 09:34:00 AM
ஜி.ரா.
ஒவ்வொன்றும் அருமை. அடுத்த திரைப்படங்களில் சுட்டுக்கொள்வார்கள்.
---இப்ப நீங்க சாப்புடுறதுக்கு முன்னாடி இன்னொருத்தரு இதுல சாப்பிட்டு ஒழுங்கா எலைய வெச்சிட்டுப் போகலையா....அடம் பிடிக்காதீங்க.---
: )))
சொன்னது… 10/12/2006 09:36:00 AM
சந்தோஷ்
வெள்ளிடை மலை, உள்ளங்கை நெல்லிக்கனி என்றாலும்
'இம் மலை காணுதும், ஏழை மானை; அச்
செம்மலை நீக்குதும், சிந்தைத் தீது' என
விம்மலுற்று, உவகையின் விளங்கும் உள்ளத்தார்,
அம் மலை ஏறினார், அச்சம் நீங்கினார்.
சொன்னது… 10/12/2006 09:42:00 AM
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே ரஜினி பாபாவின் பினாத்தல்தான். போனமுறை ஜெயலலிதாவை வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி என்று துதிபாடியவர் இன்று, கலைஞருக்கு அடுத்து வேறு ஒரு முதல்வர் வந்தால் இந்த சலுகைகளெல்லாம் பறிக்கவிடாமல் தடுக்க போராடணும். நானும் உங்க கூட நிப்பேன். இப்பிடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டுதானய்யா ரசிகர் மன்ற மக்கள் உடம்பெல்லாம் ரணமாபோச்சு! அடுத்தமுறை பா.ம.க ஜெ கூட கூட்டணியில் இருக்கும். அதுக்கு பயந்து அங்க போய் பினாத்துவார்.
அப்பறம் அமிதாப் பச்ச்சன் வீடு ஏலத்துக்கு வந்தது, இந்த ரஜினியெல்லாம் ஒண்ணுமில்லை! ஏன்யா, விழா எடுதது கிழத்தை பாராட்ட, நடுவுல நீ ஏன் சுயபுராணத்த வுடுற?
அந்த காலத்துல எம்.ஜி.ஆர் அடிச்ச அடி, இன்னும் தலைவர் தெளியல!
பெயரில்லா சொன்னது… 10/12/2006 08:06:00 PM
Cinema nearing its death in India! : indian, cinema, tv, viewer, decline : IBNLive.com : CNN-IBN: "
In spite of all the hype and hoopla surrounding the film industry, cinema is on a sharp decline in India. This phenomenon, which started some five years back in Pakistan, is finally here.
The National Readership Survey (NRS) 2006 says the cine-goers community is fast getting smaller and smaller and it is only the urban audience, which watches movies in multiplexes, that is holding the fort for the industry. In the hinterland, especially the Northeast, cinema is already a dead media with hundreds of halls closed and the remaining ones facing the same fate.
According to NRS, cinema has seen a sharp decline from 51 million regular movie-goers (monthly) to 39 million during 2005-06.
On the positive side, the survey says the number of urban movie-goers has increased: from 23 million last year to 25 million in 2006. "As a proportion, this means a marginal increase from 9.6 per cent to 10.0 per cent," the survey says.
One reason for cinema's decline could be the invasion of satellite television in the hinterland. The NRS says satellite TV has grown considerably in reach during the past one year: from 207 million viewers in a week in 2005 to as many as 230 million individuals in 2006.
In fact, television now reaches 112 million homes, reflecting a growth of 3.2 per cent over last year. Homes with access to cable and satellite television have increased by 12 per cent from 61 million to 68 million this year. Cable and satellite reach has now penetrated 61 per cent of all TV homes, up from 56 per cent last year.
Tamil Nadu, Karnataka and Andhra Pradesh dominate the markets with TV reach touching 76.2 per cent, 76.2 per cent and 78 per cent respectively. These states also have high penetration of cable and satellite television at 60 per cent, 53 per cent and 59 per cent respectively.
Interestingly, the NRS estimates a considerable resurgence for radio. Thanks to the expansion of the FM network, radio today reaches 27 per cent of the population from 23 per cent last year. This is almost close to the number of newspaper readers in India. FM radio, in particular, has seen a 55 per cent growth. About 119 million individuals listen to FM radio in an average week in 2006, up from 76 million in 2005."
சொன்னது… 10/24/2006 11:59:00 AM
கருத்துரையிடுக