வியாழன், அக்டோபர் 12, 2006

Chennai Airport land acquisition opposed - Citizens displaced

பொழிச்சலூரைக் காப்பாற்றுங்கள்: மேதா பட்கர் வந்தார். அனைத்து தினசரிகளிலும் செய்தி வந்தது.

தினமணி செய்தி இங்கே: Save Pozhichaloor Houses from Airport Extension Project

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சில தகவல்கள்:

  1. முன்னூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 1457.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கி இருக்கிறார்கள்.

  2. நாலாயிரம் வீடுகள்; 15,000 குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

  3. நான்கு கோவில்கள், இரண்டு தேவாலயங்கள், ஒரு மசூதி, 558 வீடுகள், 156 குடிசைகள், 156 மாடி வீடுகள் உட்பட 883 கட்டிடங்கள் இடிக்கப்படும்.

  4. புதிய விமான நிலையத்தை முடிக்க இரண்டாயிரம் கோடி (20,00,00,00,000) செலவழிக்கிறார்கள்

  5. புதிய விமான நிலையத்தை முடிக்க மூன்று வருடங்கள் ஆகும்.

  6. புதிய விமான தளத்தை (terminal) முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும்.

  7. புதிய விமான தளத்தை (terminal) முடிக்க 650 கோடி தேவைப்படும்.

  8. பாதிக்கப்பட்டோர் சார்பாக மத்திய மந்திரி பிரஃபுல் படேலை, சக அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்திருக்கிறார்.

  9. சென்னை மீனம்பாக்கத்தின் அண்ணா & காமராசர் விமான நிலையத்தில் கடந்த வருடத்தில் - 43.2% பயணிகள் அதிகரிப்பு

  10. சென்னை மீனம்பாக்கத்தின் அண்ணா & காமராசர் விமான நிலையத்தில் கடந்த வருடத்தில் - 37.5% விமானப் போக்குவரத்து அதிகரிப்பு

  11. ஜூலை 2000த்தில் திட்டத்திற்கு கால்கோள்.

  12. செப்டம்பர் 2005 வரை மணப்பாக்கம், தாரப்பாக்கம், தண்டலம், கோவூர், கௌல் பஜார், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பெரிபணிச்சேரி ஆகிய கிராமத்தின் நிலங்களைக் கொண்டிருந்தது.

  13. டிசம்பர் 14, 2005 கொடுக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தில் பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் திடீரென்று இணைந்தது.

  14. வீடு கையை விட்டுப்போகும் நிலையில், திருமணங்கள் கூட தடைப்படுகின்றன.



சில கேள்விகள்:
  1. சென்னையில் துணை நகரம் அமைப்பதை தடுத்த பெரும் பணக்காரர்களும், நிலச்சுவான்தார்களும், கூட்டணிக் கட்சிகளும்தான், இந்தத் திட்டத்தை மாற்றுவதற்கு காரணமா?

  2. யாருமே விட்டுக்கொடுக்கா விட்டால் விமான நிலையத்தை எங்குதான் அமைப்பது?

  3. நஷ்ட ஈடாக எவ்வளவு கொடுக்கிறார்கள்?

  4. மணமுடிப்பைக் கூட வீட்டை காரணம் காட்டி தட்டிக் கழிப்பவர்களை, வரதட்சிணை வழக்கு போட்டு முட்டிக்கு முட்டி தட்ட முடியுமா?

  5. இன்றைய கூட்டணி ஆட்சியில் அங்கத்தினராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு இன்னும் பலமாக குரல் எழுப்புமா?

  6. இன்றைய கூட்டணி ஆட்சியில் அங்கத்தினராக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), துணை நகரத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு கவனிப்பைக் கோரி கைவிடச் செய்கிறது?

    தொடர்புள்ள செய்திகள்:
    1. வண்டலூர் அருகே 30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு : துணை நகரம் அமைக்கும் திட்டம்: உடனே கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்

    2. சேர்த்து வைத்த துணைநகரம் :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! - எஸ்.சரவணகுமார் (ஜூனியர் விகடன்)


துணை நகரம் (தினமணி தலையங்கத்தில் இருந்து):
எந்த ஓர் அபிவிருத்தித் திட்டமானாலும் அது மக்களில் ஏதோ ஒரு பிரிவினருக்கு ஓரளவில் பாதிப்பை விளைவிப்பதாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற அளவுகோல் பின்பற்றப்படுவதானால் மேட்டூர் அணையில் தொடங்கி சென்னை சென்ட்ரல் நிலைய விரிவாக்கம் வரை எந்த ஒரு திட்டத்தையும் நம்மால் நிறைவேற்றி இருக்க முடியாது. ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உலகெங்கிலும் இந்த நோக்குத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டநோக்கில் மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆராய வேண்டுமே தவிர அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது.

கடைசியாக என்னுடைய ரெண்டணா:
என்னுடைய வீடு, பாதிக்கப்பட்ட பகுதியில் இல்லாததால்தான் இப்படி சாவகாசமாக நீட்டி முழக்கி எழுத முடிகிறது. மேதா பட்கர் போல் உறைவிடம் விட்டு அகல்வோர் அனைவருக்கும் அயராமல் ஓட முடிவதை பாராட்ட மட்டுமே மனம் நினைக்கிறது.




| | | | |

7 கருத்துகள்:

//கடைசியாக என்னுடைய ரெண்டணா:
என்னுடைய வீடு, பாதிக்கப்பட்ட பகுதியில் இல்லாததால்தான் இப்படி சாவகாசமாக நீட்டி முழக்கி எழுத முடிகிறது. மேதா பட்கர் போல் உறைவிடம் விட்டு அகல்வோர் அனைவருக்கும் அயராமல் ஓட முடிவதை பாராட்ட மட்டுமே மனம் நினைக்கிறது.
//

நிஜமாங்க. இந்த நிலமையில் இருந்தால்தான் கஷ்டம் தெரியும். இப்படி விரிவாக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும்போது இன்னும் அனுமதியில்லாத கட்டிடங்கள் ரோட்டோரங்களில் விட்டுவைக்கப்பட்டிருப்பது நம்ம ஊர்லதான் நடக்கும்னு நினைக்கிறேன்.

hmmm :(

எங்கள் வீடு அனகாபுத்தூரில் இருக்கு.

அது வரை விமான நிலையம் வருதா தெரியலை, ஆனா இது சுத்த அநியாயம்.

ஏன் போரூர் பக்கத்துல இருக்குற பொறம்போக்கு இடத்துல கட்ட வேண்டியதுதானே ? மாட்டாங்க

அது டி.ஆர் பாலு, தயாநிதி மாறன் அவங்க பினாமி பேருல வளைச்சு போட்டு இருக்காங்க.

பொறம்போக்கு இடத்தை வளைச்சு போட்டிருக்கும் பொறம்போக்குகளுக்கு என் கண்டணம்.

//ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.//

பாதிக்கப்படும் மக்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு, மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது அரசாங்கத்தின் கடமை..

Tehelka - The People's Paper :: GROUND TURBULENCE IN TN:

AIRPORT EXPANSION THREATENS TO WIPE OUT CHENNAI SUBURB
Pozhichalur residents say land acquisition was changed to suit land sharks, politicians and hoteliers

OVERVIEW
* Almost 30,000 people are likely to be displaced if the project is implemented in Pozhichalur and its neighbourhood

* Families have built houses through bank loans and by investing their retirement benefits

* In March, the state government passed an order freezing building activities in the area

* Plan for greenfield airport in the outskirts of the city have no takers

in any case such great inconvenience and displacements cannot be avoided be it pozhichalur or other areas around sriperumbudur or guduvancheri susburs, when such big schemes are implemented. the golden quadrilteral roads which we r enjoying now for speedy drive in national highways has swollowed many housing colonies, cultivable lands,topes schools etc.

விமான நிலைய விரிவாக்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை: கருணாநிதி தகவல்

சென்னை, டிச. 6-

சட்டசபையில் இன்று சிவபுண்ணியம் (இந்திய கம்ïனிஸ்டு) பேசும் போது சென்னை விமான நிலையம் விரிவாக்கத்தால் 4,629 வீடுகள் மற்றும் கோவில்கள், பள்ளிகள் உள்பட பல கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என்ற பீதி காரணமாக அங்குள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே அங்குள்ளவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் விமான நிலைய விரிவாக்கம் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் சிலருக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் நலிந்தவர்கள், மெலிந்தவர்களை பார்த்துதான் அரசு முடிவு எடுக்கும். தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கு குறிப்பிட்ட இடம்தான் என்று பிரசாரம் செய்து பீதி கிளப்பப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் கேரளாவில் 30 லட்சம் பேர் இறந்து விடுவார்கள் என்று அர்த்த மற்ற பீதி கிளப் பப்பட்டது. அது போல இந்த பீதியையும் யாரும் நம்ப வேண்டாம்.
விரிவாக்க விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

இடைத்தரகர்கள் லாபத்துக்காக ஏழை மக்களை கிளப்பி விட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிவபுண்ணியம் உள்பட யாரும் இதை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு