Desipundit plans to close shop
தேசிபண்டிட் வலைப்பதிவிற்கு மூடுவிழா. தமிழில் இருக்கும் பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்த சுட்டிகளை துளசியும் (துளசிதளம்) டுபுக்கும் (Dubukku- The Think Tank) கோர்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் எண்ணற்ற இந்திய வலைப்பதிவுகளில் மேய பொறுமை இல்லாதவர்களுக்காகத் தொடங்கப்பட்டது தேஸிபண்டிட். தமிழில் தமிழ்ப் பதிவுகள், தமிழ்மணம், தேன்கூடு, இருப்பது போல் ஆங்கிலத்தில் இம்புட்டு வசதிகள் கிடையாது.
இடதுசாரி பதிவர்களுக்கென்று விஐபி ஒருவர் இருப்பார். வலதுசாரி, கிரிக்கெட், சினிமா, அச்சுபிச்சு, சென்னை, நிழற்படம் என்று ஆளுக்கொரு கிரவுண்ட் கட்டி பின்னூட்டத்தில் ஜமாபந்தி கச்சேரி அமர்க்களப்படும்.
ரொம்ப காலம் முன்பு நான் சின்னப்பையனாக இருந்தபோது ப்ளாக்மேளா நடத்தி வந்தார்கள். கூத்தாக சுவாரசியமாக இருந்தது. தமிழ் வலையின் அசுவாரசியங்களை பருக்கை விடாமல் கவனித்ததினால், 'ப்ளாக்மேளா' (blogmela - Google Search) ஏன்/எதற்கு/எப்படி முக்கியத்துவம் இழந்து நிறுத்தப்பட்டது என்று அறியேன்.
கிட்டத்தட்ட வலைப்பூ (site:valaippoo.yarl.net வலைப்பூ yarl - Google Search & Valaippoo) & இந்த வார தமிழ்மண நட்சத்திரம் மாதிரி ப்ளாக்மேளா நடந்து வந்தது. வாரம் ஒரு வலைப்பதிவர். தனக்குப் பிடித்த, தீர்க்கமாக எழுதப்பட்ட பதிவுகளை உரல் கொடுத்து இரண்டு வரி விமர்சனம் வழங்கி, வாசகர்களுக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுவார்.
பல பதிவர்களும் சொந்தமாக எழுதுவதையே பெரிதும் விரும்பியதாலும், பற்பலரின் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை படித்து டெலீட் செய்ய முடியாததாலும், இந்த ப்ளாக்மேளாவில் சுணக்கம் விழுந்திருக்கும்.
தமிழுக்கு கூகிள் தேடல் போல் (Google Blog Search: site:http://) ஆங்கிலத்திலும் டெக்னோரட்டி தேடலும் கூகிளும் மட்டுமே பெரும்பாலும் கை கொடுத்தது. காமத் போன்ற சிலரின் அட்டவணை, இற்றைபடுத்தாத இடுகைகளையும் காட்டி சோர்வுறச் செய்யும். சுன்சுனா, மைடுடே, இண்டிப்ளாக், சுலேகா, தேஸிப்ளாக்ஸ், ப்ளாக்தேசம் என்று திரட்டிகள் குட்டி போட்டு பெருகினாலும், தேசிபண்டிட் தொடங்கிய காலத்தில் இருந்த குறைபாடுகள், இவற்றில் இன்னும் களையப்படவில்லை.
இதன் அடுத்த பரிணாமமாக பூங்கா, கில்லி - Gilli, போன்று முன்மாதிரி சேவையை தேஸிபண்டிட்காரர்கள் சுபயோகதினத்தில் துவக்கினார்கள். ஆங்கிலத்தில் பிடித்த, பார்க்கவேண்டிய, சர்ச்சைக்குள்ளான, தேமேயென்று அப்பாவியான, சோப்ளாங்கியல்லாத எழுத்துக்களாக தேர்ந்தெடுத்து கோர்க்க ஆரம்பித்தார்கள்.
மோகம் முப்பது நாள் கணக்காக, சூட்டோடு சூடாக, இண்டிப்ளாகீஸ் (The Indibloggies » The Word is out) தேர்தலிலும் வெற்றிவாகை சூடியது. அதே தேர்தலில் (Best IndiBlog directory/service/clique) தமிழ்மணத்தை ஆயிரத்து சொச்சம் தமிழ் வாக்காளர்களே வாக்குசாவடிக்கு சென்றோ செல்லாமலோ காலைவாரி விட்டது தனிக்கதை.
ஆசை அறுபது நாள் முடிந்ததும் அழுத்தங்கள் ஆரம்பித்தது. தேர்தலில் தில்லுமுல்லு என்னும் பொருமலுடன் மெல்ல துவங்கிய சர்ச்சைகள், 'என்னை இணைப்பதில்லை', 'இந்தக் கருத்தை ஒதுக்குகிறார்கள்' என்னும் விம்மலுடன் வெடித்தது. இன்று தேஸிபண்டிட்டிற்கு அஸ்தமனம்.
தொடர்பான முக்கியமான சில பதிவுகளும், கருத்தைக் கவர்ந்த கருத்துகளும்:
ரெண்டணாக்கள் போடாவிட்டால் சில்லறை தேறாது என்பதால்...
blogs | desipundit | english
// ஏழெட்டு பதிவுகளை இட்டு //
அப்போ இன்னும் ஆறேழு வரப் போகுதா!!!
நல்ல பதிவு.. அப்படியே, கில்லியின் வரலாறுன்னு அதைப் பத்தியும் ஒரு பதிவு போடுங்களேன்..
சொன்னது… 10/16/2006 09:58:00 PM
---இன்னும் ஆறேழு வரப் போகுதா!---
நித்திராதேவியும் நியு மேலாளரும் என்ன நினைக்கிறாங்களோ? அதை பொறுத்து பெருக்கலாம் : )
---கில்லியின் வரலாறுன்னு அதைப் பத்தியும் ஒரு பதிவு---
சாதித்தவர்களுக்கு வரலாறு இருக்கும்... நண்பர்களின் சேமிப்பு வங்கி் கணக்குகளான கில்லிக்கோ, பற்று (பாஸ்புக்) புத்தகம்தான் கொடுக்க முடியும் ; )
சொன்னது… 10/16/2006 10:07:00 PM
// ரெண்டணாக்கள் போடாவிட்டால் சில்லறை தேறாது என்பதால்...//
:-))))O
// தனி மனித விமர்சனங்களை எதிர்கொள்வது எளிது; //
?????
// தேஸிபண்டிட் போல் முகம் தெரிந்த குழுக்களின் வலைப்பதிவுகளில் என்ன எழுதுகிறார்களோ, அதுவே குழுவின் நோக்கமாக நாமகரணமிடப்பட்டு, சாயம் தீட்டி, வண்ணம் அடிக்கப்படும்.//
!!!!!
//இந்த மாதிரி ஏதாவது மூடினாலோ, திறந்தாலோ, ஏப்பை சாப்பையாய் நாலைந்து பேர் ஏழெட்டு பதிவுகளை இட்டு ஆறேழு நாள்களை ஓட்டிக் கொள்வார்கள்.//
1 :->>
2,3,4,5,6,7 ????
சொன்னது… 10/16/2006 10:22:00 PM
It is a good news.Desi Pundit IMHO
did not consider blogs worth mentioning and everything was left to whims and fancies of the persons who chooses from the blogs.
Regarding Tamil blogs it was a disaster (again IMHO) as neither Premalatha nor Thulasi did a good
job.They chose what they liked,
not what was good or better.
So I shed no tears for demise
of DesiPundit.It deserves a simple
decent burial or funeral without
any sentimentality about the demise.Saying good riddance would
be too unpolite.
பெயரில்லா சொன்னது… 10/17/2006 12:29:00 AM
நித்திராதேவி- your better better half :)
பெயரில்லா சொன்னது… 10/17/2006 12:31:00 AM
---நித்திராதேவி- your better better half---
பத்த வச்சுட்டீங்களே ; )
சொன்னது… 10/17/2006 10:00:00 AM
சோ.பை.
---2,3,4,5,6,7 ????---
வெயிட்டீஸ் விட்டுருக்கேன்; போட்டுடலாம் : P
சொன்னது… 10/17/2006 10:01:00 AM
---did not consider blogs worth mentioning and everything was left to whims and fancies of the persons who chooses from the blogs.---
Did U try using their hat-tip page? Let me bring a must-add-but-really-no-need metaphor here : )
Everybody watches TV. It is like changing channels. Sometimes, I stumble upon something interesting. If I have my favorite programs, actors, themes and one might stick to them.
It is pretty rare that I like something from MTV. But, when I was channel surfing I got into MTV cribs, which got me hooked. There might be so many goodies out there, which I may be missing; unless and until those folks have a promo or one of my friend enlightens, it is virtually impossible to be self-sufficient.
சொன்னது… 10/17/2006 10:07:00 AM
கில்லி - Gilli » DP is back again!
சொன்னது… 10/23/2006 10:34:00 AM
A great blog, it has a lot of useful information to me
Village Talkies a top-quality professional corporate video production company in Bangalore and also best explainer video company in Bangalore & animation video makers in Bangalore, Chennai, India & Maryland, Baltimore, USA provides Corporate & Brand films, Promotional, Marketing videos & Training videos, Product demo videos, Employee videos, Product video explainers, eLearning videos, 2d Animation, 3d Animation, Motion Graphics, Whiteboard Explainer videos Client Testimonial Videos, Video Presentation and more for all start-ups, industries, and corporate companies. From scripting to corporate video production services, explainer & 3d, 2d animation video production , our solutions are customized to your budget, timeline, and to meet the company goals and objectives.
As a best video production company in Bangalore, we produce quality and creative videos to our clients.
சொன்னது… 6/01/2021 02:11:00 AM
கருத்துரையிடுக