Harlot's Prerogative
தேஸிபண்டிட் - 2
'வாக்கு கொடுத்துட்டேன் வேலு' என்பதால், தேசிபண்டிட் காவியத்தில் இரண்டாம் பதிவு.
முதல் பதிவு: ஈ - தமிழ் :: Desipundit plans to close shop
நேற்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் 'சுதந்திரத்தைப் அச்சுறுத்தும் நீதிபதிகள்' (படிக்க - OpinionJournal - John Fund on the Trail :: Taking the Initiative - How judges threaten direct democracy) கிடைத்தது.
WSJ நீலிக்கண்ணீர் வடித்தாலும் சொல்ல வந்த அடிநாதமான விஷயம் அர்த்தபுஷ்டியானது.
அமெரிக்காவில் குடியுரிமை என்பது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தவிர மற்ற சிலவற்றுக்கும் பயன்படும்.
போன்ற சமூக அமைப்புக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்து, சொந்த மாநிலத்தின் சட்டதிட்டத்தை மாற்றப் பரிந்துரைக்கலாம்.
போன்ற வினாக்களும் கேட்பார்கள். (இந்த வருட மற்றும் சென்ற வருட எடுத்துக்காட்டுகளுக்கு :: Massachusetts ballot questions -- 2006 Election | Boston.com | 2004 General Election Results)
எம்.பி.க்கள் மட்டும் திட்டங்கள் தீட்டாமல், பொதுமக்களும்
என்று தீர்மானம் போட்டு மக்கள்மன்றத்தில் வென்றால், சட்டம் இயற்றும் வாய்ப்பு இருக்கிறது. இந்த உரிமையை 'கனம் கோர்ட்டார் அவர்கள்' தட்டிப் பறிக்கிறார்கள் என்கிறது அந்தக் கட்டுரை.
கிட்டத்தட்ட தேஸிபண்டிட் (eponym போன்ற பிரயோகம்; eponym குறித்து அறிய: கேள்வியும் நானே... பதிலும் நானே) பங்களிப்பாளர்களை நீதிபதியாகக் கருதலாம். பயனருக்கு எது உகந்தது, எவ்வாறு சமூகம் அமைய வேண்டும், எப்படியெல்லாம் யோசிக்க வேண்டும், எதை கருத்தில் கொள்ளலாம், எது பொருட்படத்தக்கது, எது பொதுபுத்தியிடம் விடக்கூடாது என்று சில கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை.
ஊடகத்தில் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு harlot's prerogative வந்து விடுவதாக குற்றஞ்சாட்டுவதும் இயல்பே. (Media proprietor - Wikipedia: British Prime Minister Stanley Baldwin once accused the London press of "exercising the prerogative of the harlot through the ages: power without responsibility.")
'பதவி வரும்போது பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும் தோழா' என்பது போல் அதிகாரத்துடன் பாரமும் பழியும் உத்தரவாதம்.
Judges | desipundit | Media
இது போன்ற சட்டதிட்டங்களில் மாற்றம் கொண்டுவரவும் நிறைய குழுக்களில் கலந்து கொள்ளவும் குடியுரிமை வேண்டும் என்பதில்லை. நீங்கள் கட்டும் வீட்டுவரி/ மின்சார கட்டணம் கட்டும் சான்று போதும்.ஓட்டு போடும் கூடுதல் உரிமைக்கு மட்டுமே குடியுரிமை வேண்டும்.
சொன்னது… 10/17/2006 12:36:00 PM
//'பதவி வரும்போது பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும் தோழா' என்பது போல் அதிகாரத்துடன் பாரமும் பழியும் உத்தரவாதம்.//
வால் ஸ்ட்ரீட் ஜார்னலுக்கும் வாத்தியார் பாடலுக்கும் லிங்க் போட்டு தாக்குறீங்க.
:)
நம்ம ஊர்ல பலத்த சிக்கல். படம்போட்டு (சின்னங்கள்) ஓட்டுபோடச் சொன்னாலே செல்லாத ஓட்டாப் போடுவாங்க. படிப்பறிவு இன்னும் வளரணும். அப்போ இப்படி ஓட்டுப் பெட்டியில அரசின் திட்டங்களை மக்கள் அங்கீகரிக்க வைக்கலாம்.
இந்த முறையை நம்ம கம்பெனியிலெல்லாம் கொண்டு வரலாம். வெறுமனே சர்வே எடுத்துக்கிட்டு ஒண்ணும் செய்யாமப் போறதுக்கு வெளிப்ப்படையான ஓட்டெடுப்பு மூலம் பாலிசி முடிவுகளை எடுக்க முயலலாம்.
சொன்னது… 10/17/2006 01:29:00 PM
சிடிசன் ஆனா வோட்டு போடறத தவிர நீங்க சொன்னது எல்லாம் பண்ணலாமா? ம்! நம்ம மாதிரி ஆளுங்களுக்கு பொருந்தாட்டியும், நம்ம அடுத்த தலைமுறைக்கு பொருந்தும் !
சொன்னது… 10/18/2006 07:46:00 AM
பத்மா
---குழுக்களில் கலந்து கொள்ளவும் குடியுரிமை வேண்டும் என்பதில்லை.---
அப்படியா! அடுத்த டவுன் ஹால் சந்திப்புக்கு செல்ல முயல்கிறேன்.
குடியுரிமை பெறாத நண்பர் தன்னுடைய அனுபவத்தை விவரித்திருந்தார். அவர்களின் வீட்டிற்கு வெகு அருகே 'ஷாப்பிங் மால்' வரப்போவதை தடுத்த விதத்தை சொன்னார். இவரும் பக்கத்து வீட்டுக்காரருமாக சென்று, strip mall வருவதால் அதிகரிக்கும் போக்குவரத்து, சிறார்களின் நடமாட்டம், குப்பை தொடர்பான பிரச்சினைகள் என்று விளக்கி வெற்றிகரமாக, கட்டுமானத்தை தடுத்திருக்கிறார். வழக்கு கிடையாது; நீதிமன்றம், வக்கீல் எதுவும் இல்லை.
சொன்னது… 10/18/2006 03:10:00 PM
நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து...
US democracy is riddled with a lot of fraud and strong arm tactics. It is so layered with corruption of many kinds that an average citizen can't even see or know the layers. To begin with most cities would not permit a street gathering, as it would block traffic and affect citizen's normal lives. Fair enough, but there are only a few places in most cities to hold a meeting and they would hold only a few hundreds at the most. Fire, insurance, safety regulations would come into play. Then of course the cost of hiring a hall would be prohibitive for a person with no money. There are regulations about posters, graffiti on the wall, broadcasting on the streets (noise regulations), and so on.
As a result no non organizational private person can ordinarily be able to contest unless they are national stars in another way.
In addition of course, the problems you read on WSJ opinion page which conveniently cites only the cases where conservative efforts to stifle poor people's rights as legitimate expressions of direct democracy. The same journal would not write a single line about Christian coalition people blocking pregnant women seeking abortion from entering clinics and yelling at them or parading around doctor's homes with posters saying 'baby killer' etc. There if the courts intervened the WSJ would strenuously object. After all the opposing side is using the same intimidation techniques the conservatives used for such nefarious individual rights denying activities as above? Why is it now suddenly objectionable?
If Churches can be used to mobilize people against politicians they oppose, and yet claim tax exemptions, why can't labor unions be used to mobilize people against politicians the unions dislike? After all politics is closer and more relevant to labor unions than Churches?
In short US democracy is Bihar democracy, but done with a cloak of respectability. If you go into the history of Gerrymandering in the usa you would really laugh out loud, to hear bush go on about exporting democracy to the unwashed barabarians of arab lands! India for the most part has a much more expressive and free democracy in most areas of the country by comparison.
Having said that I should say that functioning democratic institutions like parent teacher council, written in candidates in elections, petition for recall, electing police officers and judges, and city hall meetings to learn of people's ideas about new constructions, bridges, highways, schools etc are all strong points of U.S. democracy. We just don't have such powerful institutional framework empowering the ordy. citizens in India.
There is something to learn from comparative studies of methods of democratic participation and efficient administration among many different democracies in the world.
சொன்னது… 10/18/2006 03:12:00 PM
சிறில்
---இப்படி ஓட்டுப் பெட்டியில அரசின் திட்டங்களை மக்கள் அங்கீகரிக்க வைக்கலாம்.---
இந்தியாவிற்கு, தற்போதைய நிலையில் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
கலர் டிவிக்கும் இலவச நிலத்திற்கும் மயங்கும் நிலை கிட்டத்தட்ட அமெரிக்காவிலும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, மக்கள் விரும்பினாலும், சட்டமன்றம் அந்த பரிந்துரையை அங்கீகரித்து சட்டமாக மாற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கலாம்.
பல காலம் முன்பே மாஸாசூஸட்ஸ் வருமான வரியை 5.3%-இல் இருந்து 5%-ஆக குறைக்க பெருவாரியான ஆதரவுடன் மக்கள் மன்றம் கோரியது. சட்டசபையும் கவர்னரும் இன்னும் மனசு வைக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
தற்போது கவர்னருக்கு போட்டியிடும் ரிபப்ளிகன் வேட்பாளர் 'இந்த வருமான வரி தள்ளுபடியை உறுதிப் படுத்துவேன்' என்று கேட்டு வாக்காளர்களை குளிர்வித்து ஓட்டு கேட்கிறார்.
---இந்த முறையை நம்ம கம்பெனியிலெல்லாம் கொண்டு வரலாம்---
பங்குச்சந்தை நிறுவனங்களா? (அல்லது) வேலை பார்க்கும் இடத்திலா??
சொன்னது… 10/18/2006 03:21:00 PM
---நம்ம மாதிரி ஆளுங்களுக்கு பொருந்தாட்டியும், நம்ம அடுத்த தலைமுறைக்கு பொருந்தும் !---
வெகு வெகு சரி அருணா
சொன்னது… 10/18/2006 03:21:00 PM
வேலை பார்க்கும் கம்பெனியைத்தான் சொல்கிறேன்.
சொன்னது… 10/18/2006 03:53:00 PM
பாலா
Town Hall கூட்டங்களில் நீங்களே கூட ஒரு கருத்தை ஆரம்பிக்கலாம். எல்லா County நிதி கூட்டம், பள்ளி நிதி கூட்டம் போன்றவை, குழந்தைகளின் பாடதிட்ட குழுக்கள் போன்றவற்றில், ஏதேனும் ஒரு சட்டம் இயற்றுவது அவசியம் என்று தோன்றினால் அதை செயலாக்க ஈடுபடலாம். Even if you are not a citizen you are a resident and have rights to stop. All States are actively seeking volunteers for medical reserve corp. We will train the volunteers, disease outbreak investigation, on risk communication, incident command training and issue certificates from Feds. Its all free and mostly conducted on weekends on weekday evenings.Then you can even work as a key player. No citizenship required.
சொன்னது… 10/18/2006 04:39:00 PM
Padma,
---All States are actively seeking volunteers for ---
Thanks again for the specific details and motivating me to contribute back to the society. My gratitudes for leading by sample.
சொன்னது… 10/23/2006 10:32:00 AM
கருத்துரையிடுக