வெள்ளி, அக்டோபர் 20, 2006

US Markets: Dow's First Close at 12000

அமெரிக்கப் பங்குச்சந்தைக்கு இது மகிழ்ச்சியான தருணம். வட்டி விகிதம் ஏறாமல் இருக்கிறது. கடன் கிடைப்பது கஷ்டமாக இல்லை. நத்தார் தினம் வரப்போகிறது. மக்களும் நிறைய செல்வழிக்கிறார்கள். நிறுவனங்களும் வஞ்சனையில்லாமல் வருவாய் காட்டுகிறார்கள்.

எல்லாம் சேர்ந்து டௌ ஜோன்ஸ் குறியீடு பன்னிரெண்டாயிரத்தைத் தாண்டியது. 11,000த்தில் இருந்து 12-க்கு செல்ல ஆறு வருடம் எடுத்துக் கொண்டிருக்கிறது.


செய்திப்படம் நன்றி: Today's Markets - WSJ.com

அமெரிக்கப் பங்குச்சந்தையையே ஒட்டுமொத்தமாக டௌ ஜோன்ஸ் குறியீடு அளப்பதில்லை. இருப்பதிலேயே பெரிய, மாட்சிமை பொருந்திய மகாகனம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ராஜாதிராஜர்களைக் கொண்டது டௌ 30.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், போயிங், சிட்டி க்ரூப், எக்ஸான் மோபில், டிஸ்னி, வால்-மார்ட், மைக்ரோசாஃப்ட், மெக்டோனால்ட்ஸ் போன்ற முப்பது நிறுவனங்களை அறிய :: Dow Jones Industrial Average - Wikipedia

கட்டுப்பெட்டியான வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கடைக்கண் எப்போது கூகிள், அமேசான் மேல் பரிபாலிக்கப்படும் என்பதை அறிய இயலாது.



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு