ஞாயிறு, நவம்பர் 26, 2006

Tamil Blogs - Comaprison with the English World

தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை குறித்த மா சிவகுமாரின் கட்டுரைகள் (வலைப்பூத் திரட்டிகள் | 2 | 3 | 4 | 5 ) வாசிக்கக் கிடைத்தது. தமிழ்மணம் விவாதக்களம் (படிக்க: தமிழ்மணம் அறிவிப்புகள்) வரப்போவதும் அறிய முடிகிறது. சில எண்ணங்கள்...


  1. பத்திரிகையாளர்களையும் பதிவாளர்களையும் ஒன்று கோர்த்து, லாபமும் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட்டால், வலைப்பதிவுகளை வெகுஜன வாசிப்பாளர்கள் பக்கம் நோக்க வைக்கலாம். (ஆங்கில உலகில் இருந்து எடுத்துக்காட்டு: NewAssignment.Net | an experiment in open-source reporting)


  2. வலை மேய்வதில் ஆய பலனாக, தன்னுடைய பிரச்சினைக்கு விடையாக, கேள்விக்கு பதிலாக - இணையமும் பதிவும் அமையும் என்பது, கூகிள் பயனாளர்களின் கருத்து. இதற்குத் தீனியாக விக்கி பசங்க போன்றோர் இருந்தாலும் Answers.com அல்லது Yahoo! Answers அளவுக்கு தமிழில் மேட்டர் காட்ட வேண்டும். (காட்டாக: VideoJug - Life Explained. On Film. | eHow.com - How To Do (Just About) Everything!)


  3. தீவிர வலதுசாரி கருத்தாக்கம் உடையவர் ஏதாவது எழுதினால், அந்தப் பதிவுடன் மாறுபடுபவர், சாய்ஸில் படிக்காமல், மேற்சென்று விடலாம். அல்லது, எதிர் கருத்தை காட்டமாக எழுதலாம். இந்த விவாதத்தினால், எதிரெதிர் பதிவுகளில் ஆதரவாளர்கள் அப்படியே நிலையாக நிற்பது அல்லது கொண்ட கொள்கை நம்பிக்கையில் இருந்து இன்ச் கூட நகராமல் மல்லுக்கட்டுவது போன்றவை நிகழ்கிறது.

    ஆங்கிலப் பதிவுலகத்திலும் கருத்துப் பற்றாளர்களை மாற்ற முடியாத நிலை நீடிப்பதாக சமீபத்திய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை தீட்டியது. இதற்குத் தீர்வாக எதையும் அந்த அலசல் முன்வைக்கவில்லை.


  4. சன் டிவி நெடுந்தொடருக்கு அடிமையானவர் உண்டு. வலைப்பதிவு வலையில் மாட்டிக் கொண்டவர் உண்டு. சீரியலை ரசிக்காதவர்கள் போல் வலைப்பதிவை விரும்பாதவரை (அல்லது பொருட்படுத்தாதவரை) தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் (அதாவது இன்றியமையாததாக கருதவைக்க வேண்டும்). (விக்கி-க்கு அடிமையாயிட்டிங்களா? - Wikipedia:Are You a Wikipediholic Test)


  5. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல், தமிழ் சினிமாவும், சிஃபியில் அன்றாட கிசுகிசுவும் படிப்பவர்கள் எக்கச்சக்கம். இவர்களுக்கு தமிழ் பாட்காஸ்ட் பயனுள்ளது. பதிவர்கள், வலையொலிபரப்பில் ஈடுபட வேண்டும். ஒலிபரப்பில் இடம்பெறும் தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களை - கூடிய சீக்கிரமே, கூகிள் மூலம் தேடும் வசதியைக் கொடுக்க வேண்டும்.


  6. சிடிசன் ஜர்னலிசம் என்பது வலைப்பதிவின் தாத்பர்யம். கோவைப் பக்கமாக வீட்டை வைத்திருக்கும் பதிவர் மாலைமலரில் 'மேட்டுப்பாளையம் நகரசபையில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்த கவுன்சிலர்' என்னும் செய்தியைப் பார்க்கிறார்.

    நேரமும், வாரயிறுதியும் கிடைக்கும்போது, அந்தக் குப்பையை படம் பிடித்து, தி ஹிந்து, தினமலர், டெக்கான் க்ரானிகிள் தாளிகைகளுக்கு அனுப்பலாம். வலைப்பதிவில் இடலாம். குறிப்பிட்ட ஆணையருக்கு தபால் மற்றும் மின்னஞ்சல் இடலாம். தொடர்ச்சியாக சேலம் என்றால் இந்த அணி, கிருஷ்ணகிரி என்றால் இன்னொரு க்ரூப் என்று MSM-ஐ மிரட்டி, மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லலாம்.


  7. நீண்ட நெடுங்காலம் முன்பு நான் வலையில் வயதுக்கு வருவதற்கு முன்பே திண்ணை விவாதக் களம் மூடுவிழா கண்டிருந்தாலும், அப்பொழுது நிகழ்ந்த பிரச்சினைகள் இன்றும் பல்கிப் பெருகியே வருகிறது. (படிக்க: நான்காவது கொலை முயற்சி :: திண்ணைக்குழு | விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து | திண்ணை என்ன சொல்கிறது?)

    இத்தகைய ஆழ் காரண காரியங்கள் கற்பிக்கும் சூழலில் கருத்து பரிமாற்றத் தளம் பரிமளிக்குமா, பரிகசிப்புக்குள்ளாகுமா என்பதை ஆராய்ந்து, அறிதல்களைப் பகிரலாம். (சில வலையகங்கள்: TamilnaduTalk.com | The Forum Hub | Tamil Movies Chat | sulekha groups | முத்தமிழ்மன்றம் | தமிழ்மன்றம்.காம்)


  8. வலைப்பதிவின் பார்வையாளர்கள் மூலம் பொதுசேவைக்கான நிதி திரட்டலையும் தொண்டு அமைப்புகளுக்குப் பணியாற்றுவதையும் கடமையாக மாற்றலாம். தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள், நிதி திரட்டலை match செய்யும் கொள்கை வைத்திருந்தால், நண்பர்கள் மூலம் பெறும் கொடையை இரட்டிப்பாக்கலாம்.

    அறிவொளி, கண் பார்வையற்றவர்களுக்கு படிப்போர்கள் (Scribe for the Visibility impaired - Srivatsan Aravamudhan) போன்ற இயக்கங்களில் இருப்போர்கள், வாசகர்களையும் உள்ளிழுக்கலாம்.





| |

19 கருத்துகள்:

பாபா,

அருமையான அலசல்!!!

(ஆமா நீங்க இன்னும் தூங்க போகலிய்யா???)

சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் நம் வலைப்பதிவுகளிலும் நடக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்.

Bala!!
When do you THINK about Ceylo Tamils? USE YOUR PEN FOR USEFUL WORK.

VANNI TAMILAN

பாலா
நீங்கள் சொன்ன ஆலோசனைகள் நன்று. எனக்கு குறிப்பாக 5வது பிடித்தமான கருத்து. இதையும் தாண்டி சில மனித உரிமை மீறல் செய்கைகளை ஐநா போன்ற இடங்களுக்கு எடுத்துசெல்லலாம்:)

I see the effect of late night blogging in your title - I think you meant "Comparison", not "Comaprison" ?

வாவ்,

பயனுள்ள கருத்துக்கள், சிந்தனைகள். இவற்றை எப்படிச் செயல்வடிவில் எடுத்துச் செல்வது என்று நாம் திட்டமிட ஆரம்பிக்க வேண்டும்.

1. நேரெதிர் நிலையில் இருப்பவர்களை எதிராளிக்கு செவி சாய்க்க வைப்பது அது வலைப்பூவுலகில் மட்டுமில்லை, காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. அது இருந்து கொண்டேதான் இருக்கும்!

2. தமிழ் விக்கிபீடியாவில் இன்னும் பரவலான பங்களிப்பு ஏற்பட்டால்தான் தமிழில் தகவல் களஞ்சியமாக இணையம் உருவாக முடியும். பல இடங்களில் சிதறிக் கிடக்கும் தகவல்களைத் திரட்டி விக்கிபீடியாவில் கட்டுரைகளாக உருவாக்கும் வேலைகளை முதலில் ஆரம்பிக்கலாம்.

3. விவாதக் களம் ஆரம்பிப்பதற்கும் சாதகமான சூழல் நிலவுகிறது என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

தடுக்கி விழுந்ததில் தொடர்புள்ள பதிவு: IdlyVadai - இட்லிவடை: தமிழும் இணையமும்

நல்லாத்தான் அலசி ஆராய்ஞ்சுருக்கீங்க.

ஒவ்வொண்ணா இங்கேயும் வந்துருமுன்னு நம்புவோமே!

நீங்க சொன்னதுல 6வது அருமையா இருந்துச்சு...

இதை பற்றி என்னுடைய கருத்தை சீக்கிரம் ஒரு பதிவாகவே போடுகிறேன் :-)

@ராம்

---நீங்க இன்னும் தூங்க போகலிய்யா?---

இல்லையே! இப்பத்தான் மதியம் நான்கு மணி ; )

@தருமி

---சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் நம் வலைப்பதிவுகளிலும் நடக்கும்---

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது பரவலாகும் நாளை நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

@பத்மா __/\__

@ராஜ் __/\__

---I see the effect of late night blogging in your title ---

uh..oh...

It is a combination of late night & night drink ; ) Don't think that it is Dutch courage : P

@சிவா

---நேரெதிர் நிலையில் இருப்பவர்களை எதிராளிக்கு செவி சாய்க்க வைப்பது---

சந்திப்புகளின் மூலம் இது நிகழலாம். கில்லி, பூங்கா போன்றவற்றின் மூலம் கூட சாத்தியம்.


---தமிழ் விக்கிபீடியாவில் இன்னும் பரவலான பங்களிப்பு---

ஹ்ம்ம்ம்...


---விவாதக் களம் ஆரம்பிப்பதற்கும் சாதகமான சூழல் நிலவுகிறது ---

என்னுடைய குழப்பம் இதுதான்... (ஆங்கில) வலைப்பதிவுகள் வந்தபோது, அவற்றை, விவாதக் களங்களின் அடுத்த கட்டமாக எண்ணினார்கள். சில காரணிகள்:

1. பழைய முறையில் மின்னஞ்சலாக (Push) பெறலாம். புதிய முறையாக எப்பொழுது வேண்டுமோ (Pull) படிக்கலாம். பழைய இழைகள் தொலையாமல் இருக்க, லேபிள்/tag/குறிச்சொற்கள் இடலாம்.

2. சுதந்திரம். (கருத்தோட்டம் & எண்ணங்களுக்குக் கட்டுப்பாடில்லாத வெளி) இன்னும் நிறைய அடுக்கலாம்.

டிஸ்கஷன் ஃபாரம் என்றால் 'தொழில் நுட்ப உதவி கோருவதற்கு', 'அறிவிப்புகளை வெளியிடுவதற்கு' என்ற அளவில் இன்றும் பரந்த பயன்பாட்டில் உள்ளது.

@துளசி

---ஒவ்வொண்ணா இங்கேயும் வந்துருமுன்னு நம்புவோமே---

அட... ஏற்கனவே காணக் கிடைத்தவற்றிலிருந்து சில உதாரணங்கள்:

1. அதிர வைக்கும் ஆர்குட் :: கவிதைச் சாலை தமிழோசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை

2. ஸ்பெஷலிஸ்ட்டாக ஒரு சிலர் உடனடியாக நிழலாடுகிறார்கள்: அறிவியல்/ஆராய்ச்சி - சுந்தரவடிவேல்; சுற்றுச்சூழல் - இயற்கைநேசி; லீனக்ஸ் - மயூரன்/வெங்கட்... இதே போல் ஒவ்வொரு துறையிலும் சிறப்பு வித்தகர் வாய்த்தால் வலைவாசகருக்கு பதிவுகள் தவிர்க்க இயலாத கருவூலமாகத் தென்படும்.

5. விளம்பரம் : ) Podcast: See what people are saying right now on Technorati

6. பத்ரியின் பதிவுகள் பலவற்றை சொல்லலாம். சமீபத்திய உதாரணம்: தருமி: 180. (கொஞ்சம்) நேரடியாக ஒரு ELECTION REPORT

8. எ.எ. பாலா, பத்மா அரவிந்த் என்று பலர் முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

இவை 3டி படம் மாதிரி டைனோசார் மாதிரி வளரவேண்டும் ; )

நம்ம பேரைச் சொன்னதுக்கு நன்றிங்க. அப்படியே நீங்க எல்லாரும் வந்து கலந்து புதிய விஷயங்கள் எல்லாம் சொன்னா நல்லா இருக்கும்.

நன்றி

விக்கிபசங்க சார்பாக
கொத்ஸ்

5ஆம் எண்ணம் எளிதாக செயல்படுத்தக் கூடியது! Podcasting மூலம் கருத்துகளை இன்னும் வேகமாச் சொல்லலாம்! நம்ம கானா பிரபா அவர்களை ஆலோசனைகள் கேட்கலாம்!

tamil.net இல் ஒன்று சேர்ந்தவர்களின் கூட்டு முயற்சி இன்று project madurai ஆக மாறி, பல தமிழ் நூல்களை ஒருங்குறி (unicode) ஆக்க முடிந்தது. இது ஒரு மிகப் பெரும் சேவை! இது போல் இலக்கியம்/ஆன்மிகம் தாண்டி மற்ற நூல்களையும் கொண்டு வர யோசிக்கலாம்!

நம் இன்றைய பிரச்னைகளை யோசிக்கும் அதே சமயத்தில், நாளை வரும் தலைமுறை மற்றும் அதன் தமிழ் அடைவு (tamil reach) பற்றியும் யோசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்

talkr தளம் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி. உங்களின் இந்தப் பதிவும் சிந்தனையைத் தூண்டுவது. நன்றி

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு