Why Software developers are similar to Bloggers?
இன்று மைக்ரோசாஃப்ட் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு. கொஞ்சம் தெரிந்த விஷயங்களை நீட்டி முழக்கியதிலும், தெரியாத விஷயங்களை அவசரகதியில் ஓட்டியதிலும் போர் அடித்ததில் கிடைத்த ஞானோதய வெளிப்பாடுகள்:
- காபி/பேஸ்ட் செய்வதில் சூரர்.
- மேனேஜர் வசைபாடினால், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுபவர்.
- தான் எழுதியது அனைத்தும் குறையொன்றுமில்லாத குணக்குன்று என்று தீவிரமான நம்பிக்கை கொண்டவர்.
- தன்னுடைய code-ஐ, பத்து மாதம் கழித்து படித்துப் பார்த்தால், தனக்கே context புரியாதபடி, design செய்பவர்.
- தன் இஷ்டப்படி user-interface வடிவமைப்பவர். பயன்படுத்தப் போகிறவரின் வேண்டுகோளுக்கு செவிமடுப்பது போல் தோன்றினாலும், தான்தோன்றித்தனமாக அமைத்து, அதுதான் அவர்களின் விருப்பம் என்று வாதாடுபவர்.
- முந்தா நேற்று சி; நேற்று ஜாவா; இன்று சி#; நாளை ?? என்று பச்சோந்தியாய் ஜெயிக்கிற கட்சிப்பக்கம் சாய்பவர்.
- இவரின் பேச்சும் எழுத்தும் சாதாரணர்களுக்கு ஒரு எழவும் விளங்காது. மொழிபெயர்க்க tech writer அவசியம்.
- Object oriented, W3C validation, pattern, BCNF, என்றெல்லாம் வக்கணையாக வாய்கிழித்தாலும், செயலில் ஒன்றும் காட்டாமல் குழப்பமாக சமரசங்களை செய்து கொள்பவர்.
- தங்களுடைய நிரலிகளைப் பயன்படுத்துபவர், குற்றங்குறை கண்டுபிடித்து முறையிட்டால், அவர்களை விநோத ஜந்து போல் உதாசீனப்படுத்துபவர்.
- தனக்குப் பிடித்தமான மென்கலனைக் கொண்டு எழுதத் தெரியாதவரை வேற்று கிரகத்து ஆசாமி போல் அசூயை கொண்டு ஒதுக்குபவர்.
- Code-இல் பிழை சொன்னால், தனி மனிதத் தாக்குதலாக ஃபீலிங் ஆகி சுருங்கிப் போகிறவர்.
- பக்கம் பக்கமாக code எழுதினாலும், அதை பலருக்கும் கொண்டு செல்லும் விதமாக, பக்கபலமான டாகுமெண்ட் எழுத சோம்பித் திரிபவர்.
- இவர்கள் பேசும் பரிபாஷை வெளியாட்களுக்கு விளங்காது.
மீட்டிங் முடிந்து போய் விட்டது.
Tamil Blogs | Epiphany | Programmer | Species | Cult
நல்லா இருக்குங்க பாலா!
:))
சொன்னது… 11/30/2006 09:37:00 PM
நன்றி சிபி :-)
கூடவே ஒரு குசும்பு கேள்வி: நீங்களும் சொவ்வறை வல்லுநரா ; )))
சொன்னது… 11/30/2006 09:45:00 PM
சொவ்வறை என்றால் என்ன?
உங்கள் கேள்வி புரியவில்லை என்றாலும் ஊகித்துச் சொல்கிறேன்.
நானும் மென்பொருள் துறையில்தான் இருக்கிறேன்
சொன்னது… 11/30/2006 09:51:00 PM
B.B,
/*தான் எழுதியது அனைத்தும் குறையொன்றுமில்லாத குணக்குன்று என்று தீவிரமான நம்பிக்கை கொண்டவர்.
தன்னுடைய code-ஐ, பத்து மாதம் கழித்து படித்துப் பார்த்தால், தனக்கே context புரியாதபடி, design செய்பவர். */
வாய்விட்டுச் சிரிக்க வைத்த வரிகள்.
நன்றி.
சொன்னது… 11/30/2006 09:52:00 PM
@சிபி... சொவ்வறை என்றாலும் மென்கலன் என்றாலும் ஒன்றேதான். இன்னொரு வார்த்தையை நூல் விட்டுப் பார்ப்பமே என்று போட்டேன்.
யாம் பெற்ற தொழில் பெறுக இவ்வையகம் : ))
சொன்னது… 11/30/2006 09:56:00 PM
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
சொன்னது… 11/30/2006 09:56:00 PM
//இன்னொரு வார்த்தையை நூல் விட்டுப் பார்ப்பமே என்று போட்டேன்//
நல்லா உட்டீங்க நூலு!
:))
இன்னாபா இது சொல்லறை அஞ்சறைன்னு ஆடிப் போயிட்டேன் நானு!
சொன்னது… 11/30/2006 09:57:00 PM
@வெற்றி...
அனுபவித்து எழுதிய வரிகள். : )
'நீ எழுதியதுதானே... புரியறதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கறே?' என்று மேலாளர் வினவியபோது ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்று பிட்டா போட முடியும் ; )
சொன்னது… 11/30/2006 09:57:00 PM
சிபி...
கல்லில் அடிச்சா அது காயம்.. காயும்...
சொல்லில் அடிச்சா அது ஆறாது.. ஆகாது!
; ))
பாடல் இடம்பெற்ற படம் தெரியுமா :D
சொன்னது… 11/30/2006 10:00:00 PM
நாடோடி... நிறைவா சிரிச்சிருக்கீங்க... நன்றீங்கோ :)
சொன்னது… 11/30/2006 10:01:00 PM
:-)
சூப்பர் பாபா. எங்க கம்பெனியில் குப்பை கொட்டும் சில மூஞ்சிகள் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை!
சொன்னது… 11/30/2006 10:02:00 PM
வளவு: நினைவகம்
சொவ்வறை = software,
கடுவறை = hardware;
பகிர்வறை = shareware;
பரிவறை = freeware;
உளவறை = spyware;
வறைக்கூடம் = warehouse.
சிதறல் = to fragment (v);
சிதறு = fragment (n);
சிதறு எடுத்தல் / சிதறல் எடுத்தல் = defragment;
Virus - வெருவி
துழவல் = check
கட்டகத்துள் (system)
புதுக்குதல் = to make new;
ஏன் என்னும் காரணங்களுடன் இராம.கி.யின் விரிவான விளக்கமும் உண்டு.
சொன்னது… 11/30/2006 10:03:00 PM
---எங்க கம்பெனியில் குப்பை கொட்டும் ---
இ.கொ... உங்களுக்கும் ஒரு பாடல்:
'நீ எந்த ஊரு...
நான் எந்த ஊரு?
மொகவரீ தேவயில்ல
அவன் எங்கியோ பொட்டிதட்ட
நான் இங்கேயோ பொட்டிதட்ட
ஆனாலும்
நீயும் நானும் ....'
- பாசமலர் பாலாஜி
சொன்னது… 11/30/2006 10:06:00 PM
///Code-இல் பிழை சொன்னால், தனி மனிதத் தாக்குதலாக ஃபீலிங் ஆகி சுருங்கிப் போகிறவர். ///
கலக்கல் சிந்தனை இது...பல இடங்களில் நடப்பது...:))
சொன்னது… 11/30/2006 11:09:00 PM
//கல்லில் அடிச்சா அது காயம்.. காயும்...
சொல்லில் அடிச்சா அது ஆறாது.. ஆகாது!
//
கிழக்கு வாசல்! (கார்த்திக், ரேவதி & குஷ்பூ)
பாடிப் பறந்த கிளி, பாதை மறந்ததடி பூமானே!
சொன்னது… 11/30/2006 11:44:00 PM
///////////////////////////
சொவ்வறை = software,
கடுவறை = hardware;
பகிர்வறை = shareware;
பரிவறை = freeware;
உளவறை = spyware;
வறைக்கூடம் = warehouse.
////////////////////////
can be used as glossary..:))
after seeing this.. i am having doughts if tamil is still my mothertounge...(sorry to post in english)
Deepa
பெயரில்லா சொன்னது… 12/01/2006 01:51:00 AM
கலக்கல் பாபா! :))
நானும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளவா?
//காபி/பேஸ்ட் செய்வதில் சூரர்.
//
காபி/டீ பிரேக் எடுப்பதில் சூராதி சூரர் ;)
//மேனேஜர் வசைபாடினால், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுபவர்.//
மேனேஜரை வசைபாடுவதில் வல்லவர்
////தான் எழுதியது அனைத்தும் குறையொன்றுமில்லாத குணக்குன்று என்று தீவிரமான நம்பிக்கை கொண்டவர். //
//தங்களுடைய நிரலிகளைப் பயன்படுத்துபவர், குற்றங்குறை கண்டுபிடித்து முறையிட்டால், அவர்களை விநோத ஜந்து போல் உதாசீனப்படுத்துபவர். //
மற்றவர் எழுதியதெல்லாம் 'குப்பையென' மிகத் தீவிரமான நம்பிக்கை கொண்டவர்.
//தன்னுடைய code-ஐ, பத்து மாதம் கழித்து படித்துப் பார்த்தால், தனக்கே context புரியாதபடி, design செய்பவர். //
இப்படி நடக்குமெனத் தெரிந்து பத்து மாதத்திற்ற்குள் அடுத்த கம்பெனிக்கு வலை வீசுபவர்.
//இவரின் பேச்சும் எழுத்தும் சாதாரணர்களுக்கு ஒரு எழவும் விளங்காது. மொழிபெயர்க்க tech writer அவசியம்.//
இவருக்கு requirements ஒரு எழவும் விளங்காது. அதனால் //தன் இஷ்டப்படி user-interface வடிவமைப்பவர். பயன்படுத்தப் போகிறவரின் வேண்டுகோளுக்கு செவிமடுப்பது போல் தோன்றினாலும், தான்தோன்றித்தனமாக அமைத்து, அதுதான் அவர்களின் விருப்பம் என்று வாதாடுபவர்.
//
//Object oriented, W3C validation, pattern, BCNF, என்றெல்லாம் வக்கணையாக வாய்கிழித்தாலும், செயலில் ஒன்றும் காட்டாமல் குழப்பமாக சமரசங்களை செய்து கொள்பவர்.//
வாய்கிழிக்காமல் செயலில் இறங்குபவர்களை கிண்டலடிப்பவர்.
சொன்னது… 12/01/2006 06:05:00 AM
@ரவி
---பல இடங்களில் நடப்பது.--
என் கோட்-தான்...
எனக்கு மட்டும்தான்! ; )
சொன்னது… 12/01/2006 08:41:00 AM
@சிபி
---பாடிப் பறந்த கிளி, பாதை மறந்ததடி பூமானே!---
பிடித்த சோகப் பாடல்களில் ஒன்று...
(வட்ட நிலவு அது மேலே மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது!)
சொன்னது… 12/01/2006 08:47:00 AM
@கப்பி
---காபி/டீ பிரேக் எடுப்பதில் சூராதி சூரர்--
; ))
---மேனேஜரை வசைபாடுவதில் வல்லவர்---
இதுவும் தோணிச்சு... செல்ஃப்-பால் ஆகாது என்பதால் சாய்ஸில் விட்டாச்சு.
---மற்றவர் எழுதியதெல்லாம் 'குப்பையென' மிகத் தீவிரமான நம்பிக்கை கொண்டவர்.---
வெகு அருமை : )))
---இப்படி நடக்குமெனத் தெரிந்து பத்து மாதத்திற்ற்குள் அடுத்த கம்பெனிக்கு வலை வீசுபவர்.---
ஆஹா... ட்ரேட் சீக்ரெட் எல்லாம் சந்தி சிரிக்குதே : P
---வாய்கிழிக்காமல் செயலில் இறங்குபவர்களை கிண்டலடிப்பவர்.---
நச்! உண்மையும் கூட.
சொன்னது… 12/01/2006 08:50:00 AM
//பிடித்த சோகப் பாடல்களில் ஒன்று...
(வட்ட நிலவு அது மேலே மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது!)
//
வீணாசை தந்தவரு யாரு? யாரு?
பாடிப் பறந்த கிளி, பாதை மறந்ததடி பூமானே!
சொன்னது… 12/01/2006 09:02:00 AM
//---இப்படி நடக்குமெனத் தெரிந்து பத்து மாதத்திற்ற்குள் அடுத்த கம்பெனிக்கு வலை வீசுபவர்.---
//
கப்பியாரே! சூப்பர்!
அதான் எந்த ஒரு புராஜெக்டுமே அடுத்த புராக்ரமர் வந்து புரிஞ்சிரிக்கறதுக்குள்ளே அந்த புரோக்ராமருக்கு வேற வேலை கிடைச்சி புராஜெக்ட் விளங்காம போயிடுது!
சொன்னது… 12/01/2006 09:04:00 AM
:-))))))))
சொன்னது… 12/01/2006 09:22:00 AM
ஒரே ஒரு இடத்தில் பதிவர் உயர்ந்து விடுகிறார்!
மென்பொருள் எழுதுபவரால் ஒரே நாளில் ஒரு மென்பொருளை எழுதி முடிக்க முடியாது
ஆனால் பதிவர் நினைத்தால் ஒரே நாளில் பத்துப் பதிவுகள் என்றாலும் சிறப்பாக எழுதிப் பதிவு செய்து விடமுடியும்
என்ன சொல்கிறீர்கள்?
சொன்னது… 12/01/2006 09:40:00 AM
@சிபி
---வீணாசை தந்தவரு யாரு? யாரு?---
சத்தியமா நான் இல்லீங்க : P
போனஸ் கொடுப்போம், ஸ்டாக் ஆப்ஷன் உண்டு என்று சொன்னது எல்லாம், என்னுடைய மேனேஜர்தான் ; )
சொன்னது… 12/01/2006 09:42:00 AM
@சிபி
---அடுத்த புராக்ரமர் வந்து புரிஞ்சிரிக்கறதுக்குள்ளே அந்த புரோக்ராமருக்கு வேற வேலை கிடைச்சி ---
Ulta song : D
நிறையை மட்டுமே நிரலாளர் பார்க்கும்
குறையை மட்டுமே க்வாலிடி அஷ்யூரன்ஸ் பார்க்குமே கண்ணா
Coder பார்ப்பது பாதி கண்ணில்
QA பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
Obfuscation-ம் Sophistication-ம்
ரசிக்கும் ரசிக்கும் டிஸைனர்
டெலிவரி ஆனாலே
துரும்பெல்லாம் தூணாக ஏன்...
ஏன் மோதல்?
உறவோடு சில காலம்...
பிரிவோடு சில காலம்
நாம் இன்ஸ்டால் செய்வோம் வா... வா!
ரிலீஸ் என்பதைத் தள்ளிப்போடு
இறுதி வரைக்கும் பீட்டாவில் patch போடு
சாஃப்ட்வேர் இல்லாமல் உங்களுக்கு ஆறுதல் கிடைக்காது
சாஃப்ட்வேரே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது!
சொன்னது… 12/01/2006 09:51:00 AM
@குமரன்
---:-)))))))) ---
நீங்க நாடோடி அளவு சிரிக்கலை போல இருக்கு : P
அளவோடு சிரித்து வளமோடு கலகலக்க!
சொன்னது… 12/01/2006 09:52:00 AM
//நிறையை மட்டுமே நிரலாளர் பார்க்கும்
குறையை மட்டுமே க்வாலிடி அஷ்யூரன்ஸ் பார்க்குமே கண்ணா//
நாங்கள் நக்கீரன் பரம்பரை :-)
//Coder பார்ப்பது பாதி கண்ணில்
QA பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே//
ஆனா ஒரே சம்பளம்தான் :-(
சூப்பர் பதிவு பாபா...
இந்த டெவலப்பர்ஸ் இருக்காங்களே....
சரி வேணாம் அதுக்கு அப்பறம் ஒரு கச்சேரி வெச்சிக்கலாம். (கப்பி டென்ஷனாகிடுவாரு ;))
சொன்னது… 12/01/2006 09:55:00 AM
@சுப்பையா சார்
---பதிவர் நினைத்தால் ஒரே நாளில் பத்துப் பதிவுகள் என்றாலும் சிறப்பாக எழுதி---
இது மேட்டர்!!!
இந்த மாதிரி ஒரு பின்னூட்டமே, கணிப்பொறியாளரின் டெபாசிட்டை பறிபோக வைத்து விடும் என்பதும் உண்மையே.
சொன்னது… 12/01/2006 09:55:00 AM
@வி.பி.
---நாங்கள் நக்கீரன் பரம்பரை ---
நாங்க அவரை நெற்றிக்கண்ணைத் திறந்து சுட்டெரிச்சுட்டோம்... பார்த்து நடந்துக்கவும் : P
---ஒரே சம்பளம்தான் ---
குற்றங்களைக் குறைவாக முறையிட்டு, திருப்தியுடன் வாழும் coder பெரியவரா?
அல்லது எடுத்ததற்கெல்லாம் சள்ளை சவுக்கிணைப்பட்டு, ரிப்போர்ட் செய்யும் QA பெரியவரா?
('மன்னன்' ஸ்டைலில் படிக்கவும் ; )
---அப்பறம் ஒரு கச்சேரி வெச்சிக்கலாம். ---
டெவலபர்ஸை கவனிக்க நீங்க சரியான ஆள்தான். டிசம்பர் சீஸன் ஆரம்பிச்சுரும்.. நீங்க தொடங்குங்க ; )
சொன்னது… 12/01/2006 10:05:00 AM
//நாங்க அவரை நெற்றிக்கண்ணைத் திறந்து சுட்டெரிச்சுட்டோம்... பார்த்து நடந்துக்கவும் : P//
நெற்றிக்கண் திறப்பினும் Bugu bug தான் :-)
//குற்றங்களைக் குறைவாக முறையிட்டு, திருப்தியுடன் வாழும் coder பெரியவரா?
அல்லது எடுத்ததற்கெல்லாம் சள்ளை சவுக்கிணைப்பட்டு, ரிப்போர்ட் செய்யும் QA பெரியவரா?//
Requirement புரியாமல், டொமைன் நாலேட்ஜிம் இல்லாமல் கோட் செய்யும் டெவலப்பர்கள் தொல்லை தாங்க முடியாது. அதுவும் Integration Testing காமெடி கொஞ்சமா நஞ்சமா?
சின்ன சின்ன தப்பெல்லாம் கண்டுபிடிக்க வெச்சி நம்ம மானத்தை வாங்குவானுங்க :-)
சொன்னது… 12/01/2006 10:30:00 AM
What The Hell Is Going Here?
What About the Tomorrows Deliverables?
How could Be Development & Testing People get together in Gossips?
பெயரில்லா சொன்னது… 12/01/2006 10:31:00 AM
No wonder I am not a good blogger!!
சொன்னது… 12/01/2006 02:10:00 PM
---What About the Tomorrows Deliverables---
நாளைக்கு லீவாச்சே ; )
---Development & Testing People get together in Gossips---
ப்ராஜெக்டுக்காக உயிரையும் கொடுப்போம்!
சொன்னது… 12/01/2006 02:29:00 PM
@பத்மா
---No wonder I am not a good blogger---
பதிவின் அடிநாதத்தை பொதிவாக உள்ளடக்கிய சூட்சுமமான பதில் : )
சொன்னது… 12/01/2006 02:30:00 PM
கலக்கல் பாபா. இரணு உலகையும் நல்ல புரிஞ்சு எழுதியிருக்கீங்க.
:)
எனக்குத் தோண்ற ஒண்ணு.
விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.
சொன்னது… 12/01/2006 06:07:00 PM
Cyril.. __/\__ :-)
சொன்னது… 12/04/2006 09:48:00 AM
// இவர்கள் பேசும் பரிபாஷை வெளியாட்களுக்கு விளங்காது.
பின்ன E-Mailக்கு பின்னூட்டம் அனுப்ப சொன்னா ;)
// விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.
அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல் ;)
// மீட்டிங் முடிந்து போய் விட்டது.
இதற்கு reaction Thank Godஆ இல்லை அச்சச்சோவானு சர்வே எடுக்க சர்வேசனுக்கு பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க பாபா ??
பெயரில்லா சொன்னது… 12/04/2006 12:25:00 PM
வி.வி.சி... :-)
மீட்டிங் போட்டு இப்படி மானத்த வாங்கிட்டீங்களே...சரி அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்... :-)
சொன்னது… 12/04/2006 12:54:00 PM
கலக்கிட்டிங்க பாலா,
ஒரு வேளை பெரும்பாலான பதிவர்கள் developersஆக இருப்பதால் இது இருக்குமோ? இருந்தாலும் நீங்கா testing ticketsகளை விட்டு இருக்க கூடாது :)) (இதுக்கு மேல சொன்னா வெட்டி கோச்சுகுவாரு :)))
சொன்னது… 12/04/2006 01:39:00 PM
//அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல் ;)//
:)
சொன்னது… 12/04/2006 02:27:00 PM
@சந்தோஷ்
---இருந்தாலும் நீங்கா testing ticketsகளை விட்டு இருக்க கூடாது---
உப்புப் பெறாத விஷயத்தையெல்லாம் கண்டுபிடித்து, எண்ணிக்கையில் பெருமைப்படும் டிக்கெட்வாலாக்களை சொல்கிறீர்களா ; )
தனிமனிதத் தாக்குதல் இல்லீங்க... எல்லா QA-காரர்களையும் சொல்றோம்னு தப்பிச்சுடுவோம் : D)
சொன்னது… 12/05/2006 04:05:00 PM
@விக்கி
---// விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.
அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல்---
ஓ... தனியாக கோடிங் செய்து பெயர் தட்டி செல்பவர்கள்தான் விடிய விடிய முழுச்சிருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா... ரைட்டு!
(நீங்க பின்னூட்டிய நேரத்தை கவனிச்சேன் : D)
சொன்னது… 12/05/2006 04:10:00 PM
@Syam
---அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்..---
ரிவ்யூவில் ரிவிட்டு கொடுத்தாலும், துடைச்சுப் போட்டு நிமிர்ந்து நிற்கிற சிங்கம்லே ; )
சொன்னது… 12/05/2006 04:12:00 PM
@சிறில்
---விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.---
உட்கார்ந்து மட்டும் இருப்பது - நெத்தியடி! : )
சொன்னது… 12/05/2006 04:13:00 PM
சூப்பர் பாபா, எப்பிடி இதே இத்தனை நாளா படிக்கமே மிஸ் பண்ணினேன்...?
:-)))))))))))))))))))))))))))))))))
சொன்னது… 12/12/2006 08:26:00 AM
//சிதறல் = to fragment (v);
சிதறு = fragment (n);
//
இவையிரண்டு மாறி வரவேண்டுமென்று நினைக்கிறேன்.
'சிதறு' வினையாகவும் 'சிதறல்' பெயராகவுமல்லவா இருக்க வேண்டும்?
எதெற்கும் ஐயாவிடமும் கேட்டுவைப்போம்.
சொன்னது… 12/12/2006 06:38:00 PM
நல்லாயிருக்கு
ஊரோடி பகீ
சொன்னது… 12/12/2006 07:33:00 PM
கருத்துரையிடுக