skip to main |
skip to sidebar
பஹல்பூர் ரயில்வே நிலையத்தில், ரயில் ஒன்றின் பெட்டியின் மீது மேம்பாலம் விழுந்ததில் அந்தப் பெட்டி முழுமையாக இடிபாடுகளால் மூடப்பட்டது.
அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்த போது அந்தப் பெட்டியில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்ததார்கள்.
140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தில் கீறல் விழுந்ததால் பயணிகள் செல்வதில்லை. எனவே அதை இடித்து அகற்ற ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக அதன் அருகில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் புதிய நடை மேம்பாலம் திறக்கப்பட்டது. இதையடுத்து பழைய நடைமேம்பாலம் கடந்த 4 நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி நேற்று இடிக்கப்பட்ட நிலையில் அப்படியே விடப்பட்டு இருந்தது. அந்தமீதி பகுதி வலு இல்லாமல் இருந்ததை ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லை.
சனிக்கிழமை இந்த பாலத்தின் ஒரு பகுதியையும் மேம்பாலத்தை தாங்கியிருந்த மூன்றாவது தூணையும் அகற்றும் நடவடிக்கையில் ரயில்வே துறையினர் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நேரிட்டது. ரெயிலின் S-8 (நடுத்தர வர்க்கம் முன்பதிவு செய்து பயணிக்கும்) பெட்டி அப்பளம் போல நொறுங்கியது.
சுமார் 2 மணி நேரமாக மீட்புபடைவீரர்கள் வரவில்லை. ஆம்புலன்சும் வரவில்லை. இதையடுத்து பகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளே மீட்பு பணியில் ஈடுபட்டனர். 14 பேரை அவர்கள் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை உபகரணங்கள் ஏதுமின்றி வெறுங்கைகளாலேயே பலரும் மீட்டனர்.
விபத்து நடந்த இடத்தை இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத்யாதவ் பார்வையிட்டார். பலியானர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவியும், அவர்களது குடும்பத்தின் தகுதியானவர்களுக்கு ரெயில்வேதுறையில் வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பாலத்தின் அருகே ஓடிக்கொண்டிருந்த ரயிலால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. எனினும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததாலேயே மோசமான இச் சம்பவம் நடந்திருக்கிறது.
"மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேம்பாலத்தை இடிக்கும் பணியைப் பார்வையிடும் பொறுப்பு இவ்விரு பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாததால் இத்தகைய துரதிருஷ்ட சம்பவம் நேரிட்டுவிட்டது,'' என்றார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்.
'விபத்து நடந்த போதெல்லாம், என்னுடைய ராஜினாமாவை லாலு பிரசாத் கோரினார். நான் அவரை மாதிரி லாலுவின் பதவி விலகலைக் கோரப் போவதில்லை' என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துப் பேசியுள்ளார் முன்னாள் இரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார்.
Bhagalpur train mishap kills 47 - NDTV.com: Chief Minister Nitish Kumar's response was to blame his archrival Union Railway Minister Lalu Yadav for the accident. "Such an incident has never happened before and should never happen again. The whole railway department seems to lack leadership," said Nitish Kumar.
இரயில்வே அமைச்சகம் பயணிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதி: ரூபாய் 17,000 கோடி.
டீசல் விலை குறைப்பால் ரயில்வே துறைக்கு ரூ.220 கோடி லாபம் கிடைக்கும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.
In Bihar, goons take care of Gods : Bihar, temples, auction : IBNLive.com : CNN-IBN - இரயில்வேயை பொறுப்பற்ற அதிகாரிகளின் அசமஞ்சமான நிர்வாகத்தில் இருந்து, தாதாக்களிடம் ஒப்படைத்தால் கூட, மனித நேயத்தோடும் நேர்மையாகவும் நடத்துவார்கள்.
Train rams into auto, 18 killed - Railway Ministry will not construct Underpass or Flyover « Tamil News: தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம்.
தன்னுடைய உல்லாசப் பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியில் 'லெவல் க்ராஸிங்' இருந்ததால், சிறப்பாக துரிதகதியில் ஃப்ளை-ஓவர் கட்டிக் கொண்டவர், அன்றைய இரயில்வே துறை அமைச்சர் ஜாஃபர் ஷரீஃப்.
அதே மாதிரி இந்தியாவெங்கும் அவருக்கும் மற்ற ரயில்வே மந்திரிகளுக்கும் தோட்டத்து வீடுகளைக் கட்டிக் கொடுப்பதன் மூலமே, இந்த மாதிரி பொதுமக்கள் பிணமாகும் விபத்துகளை தவிர்க்க இயலும்.
செய்தி ஆதாரம்: தினமணி.காம், மாலைமலர்.காம் மற்றும் தி ஹிந்து
Trains | Railways | Accidents
முகப்பு
(-:
சொன்னது… 12/02/2006 10:57:00 PM
இன்றைய தினமணி தலையங்கம்:
Uphill task for victims’ kin to get compensation - Bihar Bhagalpur « Tamil News: "அபூர்வ ரயில் விபத்து"
சொன்னது… 12/03/2006 05:04:00 PM
//அதே மாதிரி இந்தியாவெங்கும் அவருக்கும் மற்ற ரயில்வே மந்திரிகளுக்கும் தோட்டத்து வீடுகளைக் கட்டிக் கொடுப்பதன் மூலமே, இந்த மாதிரி பொதுமக்கள் பிணமாகும் விபத்துகளை தவிர்க்க இயலும்//
ரொம்ப சரியா சொன்னீங்க...
சொன்னது… 12/04/2006 12:59:00 PM
பாலம் இடிந்து விழுந்ததை ரெயில்வே என்ஜினீயர்களோ, புதிய பாலத்தின் கட்டுமான காண்டிராக்டரோ சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 30-ந் தேதி ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலியாகி உள்ளனர்.
எனவே இந்த விபத்துக்கு ரெயில்வே என்ஜினீயர்களும், கட்டுமான காண்டிராக்டருமே பொறுப்பு. இதுதொடர்பாக ஒரு துணை தலைமை என்ஜினீயர், உதவி என்ஜினீயர், இளநிலை என்ஜினீயர் ஆகியோர் சஸ்பெண்டு (Temporarily out of job & responsibility) செய்யப்பட்டு உள்ளனர். பகல்பூர் ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் புகாரின்பேரில், 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்."
- Lalu
சொன்னது… 12/05/2006 03:37:00 AM
எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்?
ரோட்டில் குழி தோண்டினாலும் எந்த வேலை செய்தாலும்.. எச்சரிக்கை அறிவிப்பு என்று ஏதும் கிடையாது.
யோகம் இருப்பவன் வாழ்வான் --இந்தியாவில். அனைவருக்கும் நித்திய கண்டம்தான்.
ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் பொறுப்போடு செயல்படும் வரை இந்த கதிதான்.
சொன்னது… 12/06/2006 03:52:00 AM
Kalvettu... nanri
சொன்னது… 12/15/2006 09:51:00 AM
கருத்துரையிடுக