வியாழன், நவம்பர் 02, 2006

Va Vaa Sangam scores Centum

கிரிக்கெட்டில் சதம். சிக்ஸரும் ஃபோருமாய் அடித்துத் தள்ளினால் சீக்கிரமே வந்து சேரும்.

திரைப்படத்திற்கு நூறாவது நாள். வெற்றி விழா எடுப்பார்கள். அல்லது 'நூறாவது நாள்', 'வெற்றி விழா', என்றே தலைப்பிட்டு கொண்டாடுவார்கள்.

ஆட்சியில் 100 நாள் முடிந்தவுடன், பத்திரிகைகள் அனைத்தும் தங்கள் மதிப்பீடுகளை வழங்கும்.

வேலையில் சேர்ந்து டிரெயினிங் முடிந்து, கணினி கையில் கிடைத்து, திறமையை நிரூபிக்க நூறு தினங்கள் போதும்.

அந்தக்காலமாக இருந்தால் திருமணமாகி நூறு நாள் ஆனால், 'பொண்ணு குளிக்கறாளா?' என்று ப்ரெஷர் போட ஆரம்பிப்பார்கள். இந்தக் காலமாக இருந்தால் தேனிலவு கூட முடிந்திருக்காது.

பிறந்த குழந்தைக்கு தலை தூக்கி நின்று விடுவது என்னும் முக்கியமான அடையாளத்துக்கு நூறு நாட்கள்.

விநாயகருக்கு கொழுக்கட்டை பிடித்தால் நூறு. தெய்வங்களுக்கு தேங்காய் உடைத்தால் நூறு.

பூஜ்யத்துக்கு அர்த்தம் சேர்ப்பது ஒன்று.
வாழ்க்கையின் மைல்கல் நூறு.

சங்கத்து சின்னம்ஒற்றை ரூபாயாக எளிதில் லஞ்சம் கொடுக்க வசதியான ரூபாய் நூறு.

அவசர போலீஸ் 100.

நூற்றுக்கு நூறு என்பது கணக்கு பரீட்சையில் சாத்தியம். தமிழில் சாத்தியமில்லை என்பதை முறியடிக்க பிறந்தவர்கள் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம். பெயருக்கு ஏற்றமாதிரி வருத்தப்படாமல் ஒரு காரியம் செய்து இருக்கிறார்கள். என்னைக் கூப்பிட்டு எழுத சொல்லியிருக்கிறார்கள்.

உஷா சொல்வது போல் வ. வா சங்கத்தில் பாபாவா?- தெய்வமே.. தெய்வமே


வ.வா.ச. நூறாவது பதிவு.
| | |

18 கருத்துகள்:

சங்கத்தின் 100வது பதிவினை எழுதி சிறப்பித்த நட்புக்குரிய பாபாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

சங்கத்தின் நூறாவது பதிவை ஒரு திறனாய்வு பதிவாக எழுதிச்
சிறப்பித்த பாஸ்டன் பாலா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த
நன்றிகள்

சங்கத்தில் பதிவிட்டு பெருமைப்படுத்தியதற்கும், 100 வது பதிவை மக்களிடம் எடுத்து சென்றதிற்கும் மிக்க நன்றி பாபா...

பாபா, திமுக இளைஞர் அணிக்கு தலைவரா ஸ்டாலின் இல்லையா? அதுப்போல என்று நானும் மனசை தேத்திக்கிறேன் :-))

அங்கிட்டு சொன்னதுதான் இங்கியும்.

எங்கள் அழைப்பை ஏற்று எங்களை பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி பா.பா.

நீங்க சொன்ன நூறு எல்லாத்தையும் கேட்டா நூறு தான் ரொம்ப முக்கியம் போல இருக்கு ;-)

அது சரி...வாலிபர் சங்கத்தில் உமக்கு என்ன ஐயா வேலை? :)

//பாபா, திமுக இளைஞர் அணிக்கு தலைவரா ஸ்டாலின் இல்லையா? அதுப்போல என்று நானும் மனசை தேத்திக்கிறேன் :-)) //

ஆகா, உஷாக்கா இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா?
:-)

விவசாயி

வ.வா.ச. நூறு ஆயிரமாக பல்கி பல்சுவை பெருக எல்லாம்வல்ல கைப்பு துணைபுரிவாராக : )

வி.பி.

அழைப்பிற்கு __/\__

உஷா

சுந்தரபுருஷனில் ரசித்த காட்சி நினைவுக்கு வந்தது. இருபது வருடம் கழித்து ரம்பாவை சந்திக்க செல்கிறார் லிவிவ்ஸ்டன். டக்கென்று நினைவுக்கு வரவேண்டுமே என்று பள்ளிக்கூட யூனிஃபார்ம், அரைக்கால் சட்டை அணிந்து செல்வார். இளமை ஊஞ்சலாடுகிறது ; )

பெருசு __/\__

நட்சத்திர வாரத்திலும் எட்டிப் பார்த்து, பின்னூட்டம்! நன்றி சிவா

ராஜேஷ்

---வாலிபர் சங்கத்தில் உமக்கு என்ன ஐயா வேலை---

பாட்ரியாட்ஸ் டீமில் இல்லாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை ராத்திரி Adam Vinatieri ஆடறாரு இல்ல... அந்த மாதிரிங்க ; ) சந்தடி சாக்கில என்னை ஆடம் டேஞ்சுக்கு கூட்டிட்டுப் போயிட்டேன்... பார்த்தீங்களா : P

எதுக்கு எல்லாரும் இப்படி பதர்றீங்க!

இப்ப என்ன ஆயிப்போச்சுன்னு கூவுறீங்க?

நூறாவது பதிவுக்கு அந்த வயசு ஆளைக் கூப்பிட்டதுல என்னங்க தப்பு?

சுத்த சிறுபுள்ளைத்தனமால்ல இருக்கு.... !!

"ஸ்விங்க்க்க்க் இந்த ரெயின்
அயாம் சிங்க்க்கிங் இந்த ரெயின்ன்ன்ன்!"

நீங்க ஆடுங்க பாபா!

:))

வாழ்த்துகள்!

என்னது, வ.வா சங்கத்துல பாபாவா?????

<<>>

ஏற்கனவே சங்கம் கலக்கி பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்கு, இதுல பாபா வேற அங்க போய் எழுத ஆரம்பிச்சா என்னத்த சொல்றது... ஏற்கனவே எங்க ப்ளாக்கெல்லாம் காத்து வாங்குது :-))))

நூறாவது பதிவோட நிறுத்திப்பீங்களா, இல்ல தொடர்ந்து..... ?

<<>>

போனாப்போவுது, சங்கத்து என்னோட வாழ்த்துக்களும் !

:)))))))))))))

பூங்கா - இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் - எல்லாமே கைப்புள்ள மயம்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு