வெள்ளி, ஜனவரி 05, 2007

அக்கம் பக்கம் பாரடா சின்னராசா

குளிரால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் எண்பது பேர் மரணம்.

பங்களாதேஷில் 56 வறியவர்கள் பனிக்காலத்தின் பாதுகாப்பின்மையினால் பலியாகி இருக்கிறார்கள்.

தற்போதைய காவு நிலவரம்:
உத்தர பிரதேசம்: 34
பிஹார்: 35
ஜார்கண்ட்: 11


இன்னொரு செய்தி:

சதாம் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் பேசியது:

சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட சம்பவம் கண்டனத்துக்கு உரியதாகும். அவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட போது, இந்திய அரசு, போப்பாண்டவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைக் கேட்காத அமெரிக்கா, சதாமுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஏகாதிபத்திய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ள இது, தண்டனை அல்ல; படுகொலை ஆகும்.

முதல்வர் கருணாநிதியை வியாழக்கிழமை சந்தித்தார் திருமாவளவன். அப்போது,

  • கடலூர் அருகே தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது
    மற்றும்
  • எம்.எல்.ஏ. ரவிக்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியன குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.    | |

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு