வெள்ளி, ஜனவரி 05, 2007

Railway Salad - TV Smokes - Asia Times - Telugu Dubbing - Pokkiri non-cooperation

எல்லாமே பழைய செய்தி. வசதிக்காக சேமிக்கிறேன்.

 • ரயில் நிலையங்களில் 'காய்கறி சாலட்': லாலுவின் புதிய அறிமுகம்: 'ரயில்நிலையங்களில் மண் குடுவையில் தேநீர், மோர் ஆகியவை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இப்போது 'லிட்டி சோகா' என்ற சுவையான தின்பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.'

  சோக்காத்தான் இருக்கு. அப்படியே தண்டவாளத்தை விட்டு நீங்காத இருப்புப் பாதைக்கு பாதுகாப்பு மேம்படுத்தலும் செய்யலாம்.


 • டி.வி.’யில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றால் 2 ஆண்டு ஜெயில்: 'விதியை மீறினால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. 2-வது முறையாக இந்த விதி மீறல் நடந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.'

  யாருக்கு சிறை? ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனருக்கா? தயாரிப்பாளருக்கா? இயக்குநருக்கா? கேபிள் இணைப்பு கொடுத்தவருக்கா? புகை பிடித்தவருக்கா? பார்வையாளருக்கா?


 • ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் காந்தி, நேரு, சச்சின், தெரசா, நாராயணமூர்த்தி: 'வெளிநாடு வாழ் இந்தியரும் இரும்பு ஆலை அதிபருமான லட்சுமி மிட்டல், சர்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோரும் பெருமைக்குரிய இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

  பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா, ஆப்கானிஸ்தானின் அகமது ஷா மசூத், சீனாவின் டேங் சியோபிங், திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா, மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரும் ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.'

  'கொசு' இல்லாமல் போச்சே :-(


 • தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு: 'கடந்த ஆண்டு தெலுங்கில் 200 திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டவை.'

  'சிவாஜி' தமிழில் மட்டுமே வெளிவருமா? 'குரு'??


 • விஜய் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு: 'ஆதி' திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வரையில் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.'

  சென்ற டப்பிங் செய்திக்கும், இந்த ரீமேக் செய்திக்கும் சம்பந்தமில்லை.

  'போக்கிரி' வருவாரா? பேக்கிரி வைப்பாரா?
| | | | | | |

2 கருத்துகள்:

இலவச இணைப்புக்கு நன்றி பாபா.

:)

சிறில்...
உங்க ஊரிலும் வெயில் காலம்தானா ;)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு