2006 - E-Tamil Person of the Year
2006-இன் நாயகர் யார்?
டைம் போன்ற வெகுஜன ஊடகங்கள் 'நீங்கதான்' (படிக்க: பொன்ஸ் பக்கங்கள்: டைம் இந்த வருட மனிதர் 2006) என்று வலைப்பதிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மற்றொரு பக்கத்தில் கட்டுப்பெட்டியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'அவங்க தண்டம்' (படிக்க: OpinionJournal - Extra: "Written by fools to be read by imbeciles") என்று நற்சான்றிதழ் வழங்குகிறது.
காலை எழுந்தவுடன் கண்ணை மூடிக் கொண்டே உள்ளங்கை மஹாலஷ்மி தரிசிப்பது போல், கண்மூடித்தனமாக வலைப்பதிவு படிப்பதால், என்னுடைய நாயகர் பட்டியலில் blogகளுக்கு இடம் கிடையாது.
தண்டோரா - இது கண்டதை சொல்லும் - » Bye Bye 2006: TamilNadu Top Keywords முல்லைப்பெரியாறு, கேப்டன், சிக்குன்குனியா, நுழைவுத்தேர்வு, சிலைகள், தேர்தல் என்று முக்கியமானவற்றை தொட்டு செல்கிறது. நான் மார்ச் (படிக்க: March: patterns, trends and news) மாதத்திற்கு மட்டும் இட்டிருக்கிறேன்.
விஜய்காந்த்தாலோ சிலைகளாலோ சாதாரண பொதுஜனத்திற்கு எவ்வித உபகாரமோ உபத்திரவமோ இல்லை.
அடுத்த கோடையில் இன்னொரு இடைத்தேர்தல் போல், மற்றொரு டெங்கு வந்தால் விபரீதத்தை உணரலாம்.
தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் முதலமைச்சராகவோ, கூட்டணி ஆட்சியோ வந்திருந்தால் ஆச்சரிய அல்லது முதல் நிகழ்வாக வித்தியாசமாகி இருக்கும். மற்றொரு அமைச்சரவை. இன்னும் நிறைய carrotகள். உள்ளாட்சித் தேர்தலில் stickகள்.
வலைப்பதிவுகளுக்கு எதிர்மறை செய்திதான் தீனி. தப்பு செய்தது, கால் சறுக்கியது, விமர்சனத்தில் விளாசுவது கைவந்த கலை. அதற்கு ஏற்ப திறம் சிறிதுமின்றி கையாலாகத்தனம் மிளிர்ந்த தருணங்கள் என்று பார்த்தால் பூச்சிகளும் பயங்கரவாதமும் விசுவரூப தரிசனம் தருகிறது.
1. 2006 Malegaon blasts
2. Reactions to Varanasi Blasts
3. Pakistan 'role in Mumbai attacks'
4. Train Stories
5. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள் (கால அட்டவணை)
தீவிரவாதத்தை ஒன்றும் செய்ய முடியாது.
குழப்பத்தை காசு செலவில்லாமல் உருவாக்கலாம். தடுப்பது மிகவும் கஷ்டம். எங்கோ ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்த்தால் போதும். அனைத்து பாலங்களுக்கும் காவலாளிகளின் தேவை தோன்றும். ஒரு தியேட்டருக்குள் குண்டு வீசினால் போதும். எல்லா பொது இடத்திலும் நுழைவதற்கு முன் சோதனை போடும் அவசியம் உருவாகும்.
- Counterinsurgency Warfare: Theory & Practice by David Galula, 1964
(படிக்க: Problems in Iraq / பிரச்சினை 2005 - ஈராக்)
ஆனால், கடலில் விழும் மழைத்துளியெல்லாம் உப்புநீராவது போல் கடித்த இடமெல்லாம் நோய் பரப்பும் கொசு?
என் குடும்பத்திலேயே நான்கு பேருக்கு சிக்குன்குனியா வந்ததாலும், நண்பர்கள் இருவரின் குடும்பத்தில் சிக்குன்குனியாவினால் இறப்புகள் நேர்ந்ததாலும் அதற்கு முக்கியமான இடம் உண்டு. மத்திய சுகாதார மந்திரியாக தமிழர் அன்புமணி ராமதாஸ் இருந்தாலும், தமிழ்நாட்டு கொசுக்களை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது மேலும் துயரம்.
இந்த மாதிரி தொற்று நோய் பரவல் சூரத்தில் ப்ளேக் வந்த மாதிரி, ஆங்காங்கே நுழைந்த சார்ஸ், மீண்டும் எட்டிப் பார்த்த கோழிக் காய்ச்சல் என்று வந்த பின் காப்போன் strategy கூட எதுவும் இல்லாத இந்தியாவின் ஜனத்தொகையை கணிசமாகக் குறைக்கிறது.
அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளியாய் தாக்கியது. செய்வதறியாது ஸ்தம்பித்தார்கள். அதற்குப் பிறகாவது ஊடக கவனிப்போ, அரசியல் நிர்ப்பந்தமோ? ஏனோதானோவென்று செயல்திட்டங்களும் வியூகங்களும் வகுத்து dry-run ஆக நடக்கப்போகும் ourbreakகளுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முறைப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த் ஓட்டைகளை சரிபார்த்து செப்பனிடுகிறார்கள்.
இந்த வருடத்து நாயகன்: கொசு.
News | Mosquito | Healthcare
நாயகர் என்ற வார்த்தை பால்மாறாட்ட (ஆண்/பெண்) த்துக்கு அப்பாற்பட்டதா? ஏன் கேக்கிறேன்னா, உங்க லுக்கு படி, டெங்கு மற்றும் சிக்கன்குனியாவுனாலதான் கொசுவுக்கு லைம் லைட்டுன்னா, தலைப்பு 2006ன் நாயகி யார்னுல்ல இருந்திருக்கணும்? கொசு இனத்துல(யும்) நாயகிங்க மட்டும்தான் கடிப்பாங்கன்னுல்ல கேட்டிருக்கேன் ( பாக்கணுமின்னு அறிவு தாகம் எடுக்குதுதான், ஆனா இன அடையாளம் கண்டிபிடிக்க முடியாத அளவு சின்னது, கொசு )
சொன்னது… 1/03/2007 03:01:00 PM
BB,
Totally I agree with you. Even after whole village or town is affected by this fever, Media's hand's are tied.
Banglaore city officials distributed homepathic pills to public to contain the disease.
What to do. It is our fate to live in TN.
Anbudan
Ganesh
சொன்னது… 1/03/2007 03:22:00 PM
முகமூடி,
நாயகர் என்பது இருபாலாருக்கும் பொருந்தும்.
---கொசு இனத்துல(யும்) நாயகிங்க மட்டும்தான் கடிப்பாங்க---
ஓ! நவீன பாண்டியர்களுக்கு சந்தேக விளக்கம் கொடுக்கும் விக்கிப்பசங்களிடம் மனுத்தாக்கல் செய்து விடுகிறேன்.
சொன்னது… 1/03/2007 05:02:00 PM
---Even after whole village or town is affected by this fever,---
கேரளாவிடம் காட்டிய கருணையையும் மரியாதையையும் கூட மத்திய மந்திரி, தமிழ் நாட்டிடம் காட்டவில்லை.
ஆரம்பத்தில் ஜெயலலிதா ஆட்சி என்பதால் அலட்சியம். தொடர்ந்த கருணாநிதி ஆட்சியில் மூடி மறைக்கும் கையாலாகத்தனம்.
கூட்டணி ஆட்சி வந்திருந்தாலாவது, கம்யூனிஸ்ட்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருப்பார்கள்.
சொன்னது… 1/03/2007 05:05:00 PM
முந்தைய பதிவுகள்:
Chikungunya - Lots of Talk; Little Action; Zero Results: "வெற்றிகரமான நூறாவது நாள் - சிக்குன் குன்யா"
ஈ - தமிழ்: "சிக்குன் குனியா-டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் மழை- குளிரால் அழியும்:"
சொன்னது… 1/03/2007 05:08:00 PM
நம்ம ஊருல சிக்குன் குனியாதான் 'person of the year'.
கொசு அடிக்க தெரியாத அன்புமணி உப-person of the yearனு வெச்சுக்கலாம்.
உலக அளவில் பாத்தா (G. புஷ்ஷை கணக்கில் கொள்ளாமல்) Warren Buffet க்கு அந்த பதவியை தரலாம்.
கிட்டத்தட்ட $50 billionஐ, இனாமாக பொது நலனுக்கு கொடுத்த Warrenஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சொன்னது… 1/03/2007 06:15:00 PM
6. Serial killing in Noida விட்டுப் போச்சே! :(
பெயரில்லா சொன்னது… 1/03/2007 06:19:00 PM
கெட்ட செய்தி,
---உலக அளவில் பாத்தா (G. புஷ்ஷை கணக்கில் கொள்ளாமல்) Warren Buffet க்கு அந்த பதவியை தரலாம்.---
என்னுடைய பரிந்துரைகள் சில...
* தேர்தலில் மீண்டும் வென்ற ஹ்யூகோ சாவஸ்,
* செத்தும் அமெரிக்காவை கெடுத்த சதாம்,
* இஸ்ரேலைக் குழப்பி உலக கவனத்தைக் கோரிய ஹெஸ்பொல்லாவின் நஸ்ரல்லா,
* விண்ணுக்கு சென்றாலும் மண்ணை மதிக்கும் பகவத் கீதையையும் எடுத்து சென்ற சுனிதா வில்லியம்ஸ்,
* ஆர்சலாரை கஷ்டப்பட்டு பிடித்துப் போட்டுக் கொண்ட லஷ்மி மிட்டல்,
* ரயில் கவிழ்ந்தாலும் லாபத்தைத் தூக்கிப் பிடித்து பிரதம மந்திரிக்கு அடித்தளம் அமைத்த லாலூ பிரசாத் யாதவ்,
* சட்டம்_ஒழுங்கின் மேல் நம்பிக்கை வளர்த்த பல தீர்ப்புகள் வழங்கிய நீதிமன்றங்கள் (ஜெஸிகா லால், சித்து, ப்ரியங்கா, முல்லைப் பெரியாறு...)
------
வாரன் பஃபே குறித்தும் பல விமர்சனங்கள் உண்டு! (கெட்ட செய்தி என்று நல்ல பெயர் வைத்திருப்பதால் உங்களுக்காக சில...)
--> வைத்திருப்பதோ பல கோடி பில்லியன்கள். கொடுப்பதோ சில ஆயிரங்கள்.
--> இந்த மாதிரி தானம் வழங்காவிட்டால், வருமான வரி தீட்டி விடுவார்கள்.
--> கம்பெனியின் பங்கைத்தான் ஆண்டுதோறும் கொடுக்கப் போகிறார். பெர்க்ஷைர் ஹாதவே விலை சரிந்து விட்டால், கொடுத்த பணம் மதிப்பின்றி போகும்.
--> மெலிண்டா கேட்ஸ் அமைப்புக்கு மட்டும் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்?
--> ஏற்கனவே இது போல் அள்ளித் தருவதாக வாக்கு கொடுத்த சிலர் (சி.என்.என். தலைவர் டெட் டர்னர் போல்) விளம்பரம் மற்றும் பெற்றுக் கொண்டு விட்டு, டிமிக்கிக் கொடுத்திருக்கின்றனரே!
எல்லாவற்றையும் விமர்சிக்க சிலர் இருக்கிறார்கள் ; )
சொன்னது… 1/03/2007 07:16:00 PM
---Serial killing in Noida விட்டுப் போச்ச---
கொடூரம்... கூடவே உடந்தையான காவல்துறை... ஹ்ம்ம்ம் :(((
சொன்னது… 1/03/2007 07:17:00 PM
:-)
இந்த வருடம் பார்த்திங்களா
வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்திருக்காங்க.
சென்ற வருட குறைகளை களைய முதல் படி.
பெயரில்லா சொன்னது… 1/03/2007 07:38:00 PM
Interesting.
Here is my old survey on Indias many of the year 2006, with some interesting choices and interesting results :)
http://justsurveys.blogspot.com/2006/11/todays-survey-who-is-indias-man-of.html
பெயரில்லா சொன்னது… 1/03/2007 07:46:00 PM
Surveysan,
(Just Surveys: Todays Survey - Who is India's Man of the Year 2006..? & Just Surveys: Todays Survey - Who is Man of the Year 2006...?)
Pretty cool one! Two out of five aint bad ; )
சொன்னது… 1/03/2007 08:21:00 PM
நிர்மல்,
தவறவிட்ட தலைப்பு செய்திகள். நன்றி.
(இஸ்ரேலில் ராணுவப்பணி கட்டாயம் என்பது மாதிரி; அமெரிக்காவில் military draft கொண்டு வரலாமா என்று மோவாய்க்கட்டையை சொறிவது மாதிரி; இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்றோர், கண்டிப்பாக நான்காண்டுகள் தனியார் மருத்துவமனை அமைக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரலாம்.
டாக்டர்களுக்குப் பஞ்சமில்லை; ஆனால், கிராமங்களில் மருத்துவ அவசியமும் எளிதாகக் கைக்கெட்டும் தூரத்தில் மருந்துகளும் சிகிச்சையும் இல்லை.)
சொன்னது… 1/03/2007 08:26:00 PM
மருத்துவபடிப்பை முடித்த பிறகு டாக்டர்கள் கிராமங்களில் 1 ஆண்டு பணியாற்ற வேண்டும்: மத்தியமந்திரி அன்புமணி தகவல்
பூந்தமல்லி, ஜன. 4- 59-வது தேசிய விழிப்புணர்வு மனநல கருத்தரங்கம் வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. மத்திய சுகாதார மந்திரி அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-
10-வது ஐந்தாண்டு திட் டத்தை விட 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மனநலம் சார்ந்த மருத்துவ வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க மத்திய திட்டக் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளோம்.இதன் மூலம் நாடு முழு வதும் மனநல சிகிச்சையை மேம்படுத்த முயற்சி மேற் கொள்ளப்படும்.
இந்த ஆண்டு தேசிய அளவில் மனநல விழிப்புணர்வு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் சார்ந்த சிறப்பு பயிற்சி டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் அளிக் கப்படும் இந்த பயிற்சிமூலம் சாதாரண மக்களுக்கு மனநல தீர்வு காண முடியும்.
இந்திய மக்கள் தொகையில் 8சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு மனநல பிரச்சினை ஏற்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். யோகா பயிற்சி, நடைபயிற்சி, சுற்றுப்புறசுழல் பயிற்சி அளிக்கப்படும்.
மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்கள் கிராமங்களில் 1 ஆண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
விழாவில் ஏ.கே.மூர்த்தி எம்.பி., அம்பத்தூர் நகரசபை தலைவர் கே.என்.சேகர் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
சொன்னது… 1/04/2007 08:39:00 AM
கே:- ஆரம்ப சுகாதார மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
ப:- ஆரம்ப சுகாதார மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு எந்தவிதமான முயற்சியையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோயாளிகள் நலச் சங்கம் அமைத்திட வேண்டும் என்றும் அதற்கென மானியமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.30 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்ததை யொட்டியும், ஏற் கனவே இது போன்ற நோயா ளிகள் நலச் சங்கங்கள் கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும் அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நோயாளிகள் நலச்சங்கங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவிடுமே தவிர, ஒரு போதும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிர்வாகத்தை அந்த சங்கங்கள் எடுத்து நடத்த எந்தவிதமாக அனுமதியும் கிடையாது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து மருத்துவ மனைகளிலும் எல்லா நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை என்பதில் எந்த வித மாற்றமும் இந்த அரசிடம் கிடையாது.
நோயாளிகள் நலச் சங்கங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் முதல் அரசு அதிகாரிகள் தான் தலைவர்களாக இருப்பார்கள் நோயாளிகள் நலச்சங்கங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் வாலியலாகவும், சங்க உறுப்பினர்கள் வாயிலாகவும் கேட்டறிந்து அதன் செயல்பாடுகளில் ஏதாவது குறை காணப்படுமே ஆனால் அதன் மீது அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சொன்னது… 1/04/2007 08:44:00 AM
Communal Riots 2006 By Asghar Ali Engineer
This was comparatively an year with few riots. In fact post-Gujarat India has witnessed fewer riots. Gujarat was indeed another watershed like the one after post-Babri riots. It has been witnessed that after some major riot, subsequent years witness smaller and fewer riots
Blasts Galore: Communalism 2006 By Ram Puniyani
The optimism for the future of democratic values lies in the rising resistance to the assertions of sectarianism, amongst a section of people who are becoming more aware of the threat posed by the communal fascism. Various secular action groups, peace activists and minority rights groups are making their presence felt through their campaigns and deliberations
சொன்னது… 1/05/2007 09:40:00 AM
கருத்துரையிடுக