Pakistan 'role in Mumbai attacks'
செய்தி: பிபிசி
மும்பை குண்டுவெடிப்புகளைத் துப்பறிந்த இந்திய காவல்துறை, 186 மக்கள் இறந்த சதிக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு, லாஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Toiba) நிறைவேற்றியிருக்கிறது. சிமி (Students' Islamic Movement of India)யும் நாசவேலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் பயிற்சியும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் இந்த துப்பு துலக்கின் முடிவுகளை நிராகரித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்துள்ளதாக தாரிக் ஆஸிம் கான் (Tariq Azim Khan) பிபிசியிடம் சொன்னார். பாகிஸ்தானின் மதிப்பை இந்தியா தொடர்ந்து பாழ்படுத்துவதன் நோக்கத்தின் ஓர் அங்கமே இந்த முடிவுகள் என்று முடித்துக் கொண்டார்.
முந்தைய பதிவுகள்
1. Train Stories
2. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள்
Bomb Blasts | India Terrorists | Mumbai
Thanks.
//பாகிஸ்தானின் கைவரிசையுடன் கூடிய அப்பாவி இந்திய மக்கள் இறக்கும் அடுத்த குண்டுவெடிப்பு வரை பாகிஸ்தானை கண்டித்து பதிவு வெளிவிடுவேனா என்பது தெரியவில்லை.
//
I know what you mean...
:-(
Srikanth
சொன்னது… 9/30/2006 09:27:00 AM
//
பாகிஸ்தானின் கைவரிசையுடன் கூடிய அப்பாவி இந்திய மக்கள் இறக்கும் அடுத்த குண்டுவெடிப்பு வரை பாகிஸ்தானை கண்டித்து பதிவு வெளிவிடுவேனா என்பது தெரியவில்லை.
//
இந்திய அரசின் கையாலாகாத தனத்தை எண்ணி வருத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதை கொஞ்சம் தெளிவாக லிபரல் அறிவு வாளிகளுக்குச் சொன்னால் war mongers என்று சொல்வார்கள் சரியா? அல்லது இந்த பாயிண்டை நான் தவறாக புரிந்துகொண்டேனா?
off topic: VS Naipaul பற்றி தனி வலைப்பூ வைத்திருக்கிறீர்கள்...புதிதாக எதுவும் பதிக்கவில்லையா?
சொன்னது… 9/30/2006 02:37:00 PM
வஜ்ரா
அவ்வப்போது நய்பால் குறித்து வரும் செய்திகளை சேகரிக்கவும், அனைத்து புத்தகங்கள் குறித்த என்னுடைய விமர்சனங்களை சேமிக்கவும் பயன்படுத்தலாம் என்று எண்ணம். கொஞ்ச காலம் கழிந்தவுடன் கவனம் சிதறி, அலுத்துவிட்டது.
சொன்னது… 10/03/2006 03:34:00 AM
கடந்த ஆண்டு தில்லி குண்டு வெடிப்புக்கு பணம் தந்தவர்கள் 37 பாகிஸ்தானியர்கள்
புது தில்லி, அக். 3: தில்லி நகரில் கடந்த ஆண்டு 67 பேரின் உயிரைப் பலிவாங்கிய நிகழ்ச்சிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 37 பேர் நிதி உதவி அளித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தில்லி மாநகர சிறப்புப் போலீஸ் பிரிவின் மூத்த அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்த தகவல்கள் வருமாறு:
"கடந்த ஆண்டு தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளுக்கு முன்னதாக அக்டோபர் 29-ம் தேதி தில்லி மார்க்கெட்டில் பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்தன. அதில் 67 பேர் இறந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த தாரிக் அகமது தர் என்பவரைக் கைது செய்தோம். அவருடைய தில்லி, ஸ்ரீநகர் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த 37 பேர் சவூதி ரியால்களாகவும் அமெரிக்க டாலர்களாகவும் அவருக்குப் பண உதவி செய்தது தெரியவந்தது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து கொண்டு செயல்படும் இதற்கு பாகிஸ்தானியர்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர். சமீபத்தில் மும்பை மாநகரில் ரயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் இதே வகையில் பண உதவி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதிலும் அந்த 37 பேருக்குத் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம்.
இந்த பண பரிமாற்றங்களை அபு ஒஜிபா என்ற பாகிஸ்தானியர்தான் கண்காணித்து வந்திருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் அவர் சமீபத்தில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ரொக்கமாகவே பணத்தைக் கொண்டு வந்து காஷ்மீர் எல்லையில் ஹர்வான் என்ற பகுதியில் தாரிக் அகமது தர் என்பவரிடம் கொடுத்திருக்கிறார். குலாம் அகமது கான் என்பவர் தாரிக் அகமது தர்ருக்கு இதில் உதவியாகச் செயல்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார் அந்த அதிகாரி.
சொன்னது… 10/03/2006 03:36:00 AM
Pakistan & Pervez Musharraf’s Strategy in using Terrorism as Bargain Pawn « Tamil News: முஷாரபின் மிரட்டல்
சொன்னது… 10/03/2006 09:15:00 AM
இந்தியா ஆதாரங்களை கொடுத்தால் அவன் அடுத்த தடவை இந்த மாதிரி விஷயம் செஞ்சா மாட்டிக்கொள்வோம் அதனால modus operandiஐ மாத்துன்னு போயிகிட்டே இருப்பான்.
வேற வழியில்ல...அடிச்சிக்க வேண்டியது தான்.
சொன்னது… 10/03/2006 09:52:00 AM
இந்தியர்கள் இப்படிப் பொருமி பொருமி விடும் மூச்சிலேயே இந்தியாவின் வெப்பநிலை இன்னும் 4 டிகிரி கூடிவிட்டது :(
சொன்னது… 10/03/2006 09:53:00 AM
Pak nationals were financing terror networks across India and huge amounts in dollars and riyals through hawala and foreign remittances « Tamil News: மும்பை குண்டு வெடிப்பை செயல்படுத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு ரூ.20 லட்சம் நிதி உதவி: ஹவாலா மூலம் பணபரிமாற்றம்
சொன்னது… 10/03/2006 10:11:00 AM
Zee News - Mumbai blasts: Pak says no to handing over suspects: Pakistan today promised it will take action against any of its nationals having links with the attack if provided information about it but would not hand over any suspect.
சொன்னது… 10/03/2006 10:24:00 AM
கருத்துரையிடுக