சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (5)
ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது:
ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு இலக்கியப் பணிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட நிருபர், ஆர்.எம்.வீரப்பனைக் குறித்து கம்பன் பாடவில்லையே என்று ஜெகத்ரட்சகனார் நெக்குருகி நின்றதை மனமுருகி வர்ணித்தார்.
மேலும், 'வள்ளுவர் கோட்டம்' என்பது எதுகையும் இல்லாமல் மோனையும் இல்லாமல் மொண்ணையாக இருப்பதால், 'கம்பன் கோட்டம்' என்று ஒன்றை அமைப்பதை டாக்டர் கலைஞரிடம் கோரிக்கை வைத்திருப்பதை உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். 'அகில உலக கம்பன் கழக விருது' கொடுத்தால் கலைஞர் கருணாநிதியிடம் மனு வைக்க முடியும் என்று முழக்கத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்.
நன்றி: திண்ணை
Satire | News | Online
//விழாவில் கலந்து கொண்ட நிருபர், ஆர்.எம்.வீரப்பனைக் குறித்து கம்பன் பாடவில்லையே என்று ஜெகத்ரட்சகனார் நெக்குருகி நின்றதை மனமுருகி வர்ணித்தார்//
என்ன கொடுமை சார் இது?:-))
சொன்னது… 10/01/2006 01:27:00 PM
இதெல்லாம் சிறப்பு நிருபரின் அட்டகாசமப்பா...
சொன்னது… 10/03/2006 03:32:00 AM
கருத்துரையிடுக