Tamil Cinema - 2006 Top Movies List
சென்ற வருடத்துப் பட்டியல்:
இந்த வருடத் திரைப்படங்கள் குறித்த பட்டியல்...
எதிர்பார்ப்பை மிகவும் உடைத்தெறிந்த திரைப்படம் (அதாவது மிக மோசமான படம்)
5. பச்சக் குதிர (இயக்குநர் பார்த்திபன் (அல்லது) நமீதா)
4. கள்வனின் காதலி (எஸ்.ஜே. சூர்யா)
3. திமிரு (விஷால்)
2. சில்லுன்னு ஒரு காதல் (இயக்குநர்)
1. வல்லவன் (சிம்பு)
போன மச்சான் திரும்பி வந்ததில் சிறந்த படம்:
1. ஆச்சார்யா (விக்னேஷ்)
2. பாரிஜாதம் (இயக்குநர் பாக்யராஜ்)
3. கை வந்த கலை (பாண்டியராஜன்)
4. உனக்கும் எனக்கும் ('ஜெயம்' ரவி)
5. நாளை (ரிச்சர்ட்)
ஹீரோ:
5.5. மாதவன் (தம்பி)
5. பரத் (எம் மகன்)
4. ஜீவன் (திருட்டுப் பயலே)
3. ஜீவா (ஈ)
2. கரண் (கொக்கி)
1. தனுஷ் (புதுப்பேட்டை)
ஹீரோயின்:
5. அசின் - வரலாறு
4. த்ரிஷா - உனக்கும் எனக்கும்
3. நயந்தாரா - வல்லவன், ஈ
2. பாவ்னா - சித்திரம் பேசுதடி
1. சந்தியா - டிஷ்யூம்
சிறந்த நகைச்சுவை படம்:
5. ஜெர்ரி
4. சுயேச்சை எம்.எல்.ஏ.
3. தர்மபுரி
2. வரலாறு
1. வேட்டையாடு விளையாடு
சிறந்த படம்:
- சாசனம்
- ஆணிவேர்
- பட்டியல்
- சித்திரம் பேசுதடி
- அமிர்தம்
Tamil Films | Lists | Actors | Rajini | Kamal | Cinema | Movies | Actress
ஆக, ஒண்ணும் சரியில்லேன்றீங்க:-)
இதென்ன இடதுகை அவார்டுகளா? 23ம் புலிகேசியைக் காணோம், வெயிலைக் காணோம்..
சிறந்த நகைச்சுவைப்படத்தில் தர்மபுரியும் திருப்பதியும் விடுபட்டனவா, ஒதுக்கப்பட்டனவா?
புதுப்பேட்டை 2006தானே?
(எனக்கு கேக்கதான் தெரியும்)
சொன்னது… 1/02/2007 10:03:00 AM
veyil parkalaiyo?
பெயரில்லா சொன்னது… 1/02/2007 10:17:00 AM
வேட்டையாடு விளையாடு - இதை comedy படம் ஆக்கிடீங்களா?
இம்சை அரசனை விட்டுடீங்களே?
பெயரில்லா சொன்னது… 1/02/2007 10:37:00 AM
வெயில் and ஈ missing?
வே.வி - comedyயா?
உ.குத்து padhivaa? :)
Here is my list of Best Pictures:
சிறந்த திரைப்படம் சர்வே
பெயரில்லா சொன்னது… 1/02/2007 10:37:00 AM
சிறந்தப் படம் லிஸ்டுல, சித்திரம் பேசுதடி, பட்டியல் தவிர வேற எந்தப் படமும் நான் கேள்விப் பட்டதே இல்லையே...
பெயரில்லா சொன்னது… 1/02/2007 10:51:00 AM
சிறந்த நகைச்சுவை படம்:
//வேட்டையாடு விளையாடு//
பாபா இது எப்படி? ஏன் இந்த கொலவெறி?
சொன்னது… 1/02/2007 10:51:00 AM
@சர்வேசன்...
முடிவுகளைப் பார்த்தேன்:
2006ன் சிறந்த திரைப்படம் சர்வே!!
வெயில் (26%)
வேட்டையாடு விளையாடு (18%)
ஈ (15%)
வரலாறு (11%)
புதுப்பேட்டை (11%)
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி (11%)
சில்லுனு ஒரு காதல் (4%)
சித்திரம் பேசுதடி (3%)
பட்டியல் (1%)
எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்னும் விவரம் கிட்டுமா?
சொன்னது… 1/02/2007 04:04:00 PM
---ஒண்ணும் சரியில்லேன்றீங்க---
அடடே... நல்ல நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்து பகிர்ந்திருக்கின்றேனே : P
---இடதுகை அவார்டுகளா? 23ம் புலிகேசியைக் காணோம், வெயிலை---
வெயில், திருவிளையாடல் போன்றவை இன்னும் பார்க்கவில்லை. இம்சையை எங்காவது உருப்படியாக நுழைத்திருக்க வேண்டும் : )
---சிறந்த நகைச்சுவைப்படத்தில் தர்மபுரியும் திருப்பதியும் விடுபட்டனவா,---
கேப்டன் எப்போதுமே ஏமாற்றமாட்டார். 'பேரரசு'வும் போட்டால் ரண ஒதுக்கீடு அதிகரித்து விடுமே என்பதால் விட்டிருந்தேன் ; )
கேப்டன் வழியில் அஜீத்தும் ஏமாற்றாமல் மக்கள் (வயிற்றை) புண்ணாக்குவதால், அவருடைய திருப்பதியும் இடப் பற்றாக்குறையில் அடிபட்டு விட்டது.
---புதுப்பேட்டை 2006தானே---
ஹீரோவை மையப்படுத்தும் படம்தானே! மாப்பிள்ளையை #1 ஆக்கியாச்சே ; )
சொன்னது… 1/02/2007 04:10:00 PM
உதய்...
வெயில் இன்னும் பார்க்கவில்லை. (அது போல் இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரு சிலப் படங்களை இனிமேல்தான் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க விமர்சனங்களை நம்பி சிலதை சேர்த்திருக்கிறேன்)
சொன்னது… 1/02/2007 04:12:00 PM
---வேட்டையாடு விளையாடு - இதை comedy படம் ஆக்கிடீங்களா---
புத்தாண்டு தலை பத்து போட்ட சன் டிவியில் நான் ரசித்த சில நகைச்சுவை காட்சிகளை மீண்டும் காண்பித்தார்கள். படம் பார்த்த மாறாத் திகைப்புடன் எதிர்பாரா நகைச்சுவை ரசத்தில் திளைத்தவுடன் எழுதிய விமர்சனம்: E - T a m i l : ஈ - தமிழ்: "Vettaiyaadu Vilaiyaadu - Movie Review"
சொன்னது… 1/02/2007 04:16:00 PM
ஜி...
சாசனம் - மகேந்திரன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கௌதமி, ரஞ்சிதா நடித்த படம்.
ஆணிவேர் - ஈழப்போராட்டத்தை பின்னணியாகக் கொண்ட காதல் கதை. மகேந்திரன் மகன் இயக்கியது
அமிர்தம் - எழுத்தாளர் சுஜாதா தயாரிப்பில் 'வேதம் புதிது' கண்ணன் இயக்கியது. கிரீஷ் கர்னாட் நடித்திருக்கிறார்
சொன்னது… 1/02/2007 04:19:00 PM
@தம்பி...
---இது எப்படி? ஏன் இந்த கொலவெறி?---
'இளா'வே Blog'க்கு டாட்டா காட்டுகிறார். இருந்தாலும் ஏன் துரத்துகிறேன் என்று கவலை கொண்டுட்டீங்களா : )
(வே.வி. வில்லன்களில் ஒருவரின் பெயர் இளா)
சொன்னது… 1/02/2007 04:22:00 PM
பாலா,
//எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்னும் விவரம் கிட்டுமா?//
64 வாக்குகள் விழுந்திருக்கு இதுவரை.
பெயரில்லா சொன்னது… 1/02/2007 05:44:00 PM
அக்மார்க் பாபா பதிவு வாழ்த்துக்கள்
சொன்னது… 1/03/2007 03:09:00 AM
சர்வேசன்...
உங்களைப் போலவே இட்லி-வடையும் சில வாக்கு கணிப்புகள் நடத்தியிருக்கிறார்:
IdlyVadai - இட்லிவடை: 2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 1: 2006 - வில்லன்கள்/வில்லிகள் நாமினேஷன்'ஸ்:
1. திமிரு - சிரேயா ரெட்டி
2. எம்-மகன் - நாசர்
3. ஈ- ஆஷிஸ் வித்யார்த்தி
4. கலாபக் காதலன் - அக்ஷயா
5. தலைநகரம் - ஜூடோ ரத்னம்
IdlyVadai - இட்லிவடை: 2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 2
2006 - சிறந்த வரிவிலக்கு நாமினேஷன்'ஸ்:
1. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்:
2. காட்ஃபாதர் - வரலாறு.
3. எம்டன் மகன் - எம் மகன்
4. ஜில்லுனு ஒரு காதல் - சில்லுனு ஒரு காதல்
5. by2 - இருவர் மட்டும்.
என் விருப்பம்: KD --> கேடி
IdlyVadai - இட்லிவடை: 2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 3
2006 - சிறந்த புதுவித அறிமுக நடிகர் நாமினேஷன்'ஸ்:
1. இம்சை அரசன் - நகைச்சுவை நடிகர் வடிவேலு
2. வெயில் - பசுபதி
3. தலைநகரம் - சுந்தர் சி
4. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - பாக்யராஜ்
5. உயிர் - சங்கீதா
சொன்னது… 1/03/2007 07:03:00 AM
@கார்த்திக் பிரபு
புது மாப்ளே பிசியிலும் வாழ்த்தியதற்கு நன்றி : )
சொன்னது… 1/03/2007 07:04:00 AM
அப்படியே நம்ம கருத்து :
பிடித்த படம் : 23ஆம் புலிகேசி
பிடித்த நடிகர் : அஜித் (வரலாறு), வடிவேலு (புலிகேசி), பசுபதி (வெயில்)
பிடித்த நடிகை : தாமண்ண (கேடி)
பிடித்த இயக்குனர் : செல்வராகவன் (புதுப்பேட்டை)
ஏமாற்றியவர்கள் :
கௌதம், கமல் - வே.வி
சில்லுனு ஒரு காதல் இயக்குனர் (நியூ யார்க் நகரம்-மிக மோசமாக படம் பிடிக்கப்பட்டிருந்த பாடல்)
சிம்பு (வல்லவன்)
ரவிக்குமார் (வரலாறு)
ஏமாற்றாமல் கேவலமாக கொடுத்தவர் - பேரரசு ;)
சொன்னது… 1/03/2007 02:35:00 PM
ஆணிவேர்??? கேள்விபடக்கூட இல்லீங்க..
சொன்னது… 1/03/2007 03:50:00 PM
கப்பி...
---ஆணிவேர்???---
நீங்க புவனாஸ் ஏயர்ஸ் போனபோது வந்த வேகத்திலேயே காணாமல் போயிருக்கும்...
சில பதிவர்களின் விமர்சனங்கள்:
Snap Judgement: "aani Ver - Thamizh Eezham Conflicts"
அபத்தம்: அக்கரைப் பச்சை
ஆணிவேர் « ஒரு படம்
சலனம் : நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் - ஆணிவேர் - ஜான்
manaosai, மனஓசை: "தமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் ஆணிவேர் - தேவபுத்திரன்"
சத்தியக் கடதாசி » Blog Archive » கொலையும் கலையும்
சொன்னது… 1/03/2007 07:55:00 PM
---பிடித்த படம் : 23ஆம் புலிகேசி---
ஒத்துக் கொள்கிறேன். மிக வித்தியாசமான படம். முன்னோடியாக அமையும்.
---பிடித்த நடிகர் : அஜித் (வரலாறு),
வடிவேலு (புலிகேசி), பசுபதி (வெயில்)---
வடிவேலு இரண்டு வேடத்தில் வாழ்ந்திருந்தார். மிடுக்கும் உண்டு. கோமாளியும் கிடைத்தது. மேக்கப் மட்டும் மாற்றி, குரலை உசத்தினால் அண்ணன், பவ்யமாக இருந்தால் தம்பி என்னும் காலகட்டத்தில், வடிவேலு... அபாரம்!
---பிடித்த நடிகை : தாமண்ண (கேடி)---
என்னாச்சுய்யா!??? எப்படியோ போங்க...
'அழகிய அசுரா'வின் நாயகி என்று சொல்லாதவரைக்கும் சரிதான் ; )
---பிடித்த இயக்குனர் : செல்வராகவன் (புதுப்பேட்டை)---
மணி ரத்னத்துக்குப் பிறகு படத்திற்கு படம் வித்தியாசம்; முத்திரை; திரைக்கதை; இயல்பான பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றிலும் வாய் பிளக்க வைப்பவர்.
ஏமாற்றியவர்கள் :
---ரவிக்குமார் (வரலாறு)---
இவரும் பேரரசு ரகம்தானே ; )
---ஏமாற்றாமல் கேவலமாக கொடுத்தவர் - பேரரசு ;)---
நான் மிகவும் ரசித்து பார்த்த திரைப்படம் : சிவகாசி (சென்ற வருடப் பட்டியலில் தலை பத்தில் இட்டு மகிழ்ந்திருந்தேன் : D
சொன்னது… 1/03/2007 08:01:00 PM
busy lam illai baba ji.
சொன்னது… 1/03/2007 09:29:00 PM
What is this Bala, Sirantha Nagaichuvai Padam enru Vettaiyadi vilaiyadu va serthirukinga. Miga sirantha padam enru Eethethu theriyatha padathai serthirukireergal(Chithiram Pesuthadi thavirthu). Neengal oru murpokku vathiuya. On what basis u r selected this movies? Just for sake or considered any parameters?
I am new to Blogger. Muyarchikku vazhthukal.
பெயரில்லா சொன்னது… 1/04/2007 03:42:00 AM
Nagaichuvai padangalai thavirthu anaithum arumai. Meendum thodara valthukkal.
பெயரில்லா சொன்னது… 1/04/2007 03:48:00 AM
@கிங் நன்றி.
விளிப்பிலி... முந்தையப் பின்னூட்டங்களைப் பாருங்களேன்...
---considered any parameters---
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! என் கவனத்தைக் கோரி, பிடித்திருந்ததை நினைவுபடுத்திக் கொண்டேன்.
சொன்னது… 1/04/2007 06:58:00 AM
2006- Hits & Misses! - Sify.com:
NUMBER OF FILMS RELEASED IN 2006: 106
2006’s Top 5 films at the box-office
No-1 : Vetayadu Vilayadu
No-2 : Imsai Arasan 23 am Pulikesi
No-3 : Varalaaru
No-4 : Unakkum Enakkum
No-5 : Thiruttu Payale
Top five stars in 2006
(only actors with releases this year are included)
1. Kamal Hassan
2. Ajit
3. Vadivel
4. Vishal
5. Bharath
Top five heroines in 2006
1. Asin
2. Jyothika
3. Trisha
4. Nayanthara
5. Shriya
Stock Taking
Bharat- 5 films
Jyothika and Nayanthara- 4 each
Prakash Raj- 8 films (Negative roles)
Director-
K.S. Ravi Kumar,
Saran,
Perarasu- 2 each
Music Director-
D.Imman - 9,
Yuvan- 7
சொன்னது… 1/04/2007 08:01:00 AM
2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர்-நடிகைகள் பரத், சினேகா, சந்தியாவுக்கு விருது
சென்னை, ஜன. 2-
2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு `எம்.ஜி.ஆர்.-சிவாஜி' விருது வழங்கும் விழா ராயப்பேட்டை வெஸ்லி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. கார்பரேட் கிளப்பும் சினிமா மக்கள் தொடர்பாளர்களின் `வி4' அமைப்பும் இணைந்து இவ்விழாவை நடத்தின.
சிறந்த நடிகருக்கான விருதை பரத் பெற்றார். வெயில், எம்.மகன் படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இவ்விருது கிடைத்தது.
* தனுஷ் (புதுப்பேட்டை),
* ஜெயம் ரவி (உனக்கும் எனக்கும்),
* ஜீவா (ஈ) ஆகியோருக்கும் சிறந்த நடிகருக்கான விருதுகள் கிடைத்தன.
* சினேகா (புதுப்பேட்டை),
* சந்தியா (வல்லவன்),
* நவ்யா நாயர் (அமிர்தம்),
* சரண்யா (பாரிஜாதம்) ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்கள்.
சரத்குமார், பிரபு ஆகி யோர் விழாவில் பங்கேற்று இவ்விருதுகளை வழங்கி னார்கள்.
சிறந்த பத்திரிகைக்கான சாதனையாளர் விருது "மாலைமலர்'' பத்திரிகைக்கு வழங்கப்பட்டது. பிரபு இந்த விருதை வழங்கினார்.
* சிறந்த குணசித்திர நடிகர் விருது ராதாரவிக்கும்,
* குணசித்திர நடிகை விருது சரண்யாவுக்கும் அடைக்கலம் படத்தில் நடித்ததற்காக கிடைத்தன.
* சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை சுந்தர்.சி (தலைநகரம்), பிருதி ஆகியோர் பெற்றனர்.
* சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை வடிவேலு பெற்றார்.
சிறந்த டைரக்டருக்கான விருதுகள்
* எஸ்.ஏ.சந்திரசேகரன்,
* பி.வாசு,
* கே.எஸ்.ரவிக் குமார்,
* ராஜா,
* தருண்கோபி,
* சிம்புத்தேவன்,
* சாமி,
* வசந்த பாலன்,
* கிருஷ்ணா ஆகியோ ருக்கு கிடைத்தன.
* சரத்குமார்,
* பிரபு,
* சத்யராஜ்,
* மனோரமா,
* ஸ்ரீப்ரியா ஆகியோர் சாதனையாளர்கள் விருது பெற்றனர்.
* நடிகர் பசுபதி,
* தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்,
* எடிட்டர் மோகன்,
* எஸ்.பி.முத்துராமன்,
* கவுதம்,
இசையமைப்பாளர்கள்
* தேவா,
* ஹாரீஸ் ஜெயராஜ்,
* ஷோபா சந்திரசேகரன்,
* லட்சுமிராய்,
* கனல் கண்ணன்,
* பேரரசு,
* டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்,
* ஸ்ரீகாந்த்,
* பொன் பழனியப்பன்,
* பாடலாசிரியர் தாமரை,
* ஒளிப்பதிவாளர் ரவிவர்மா,
* ராஜீவன்,
* பிலிம் நிïஸ் ஆனந்தன்,
* நிகில் முருகன் ஆகியோருக்கும் பல்வேறு சாதனைக்காக விருதுகள் வழங்கப்பட்டன.
தயாரிப்பாளர்கள்
* ஏ.வி.எம். சரவணன்,
* தியாகராஜன்,
* முரளிதரன்,
* `வி4' அமைப்பு நிர்வாகிகள் டைமண்ட் பாபு,
* சிங்காரவேலன்,
* மவுனம் ரவி,
* ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சொன்னது… 1/04/2007 09:17:00 AM
//
---பிடித்த நடிகை : தாமண்ண (கேடி)---
என்னாச்சுய்யா!??? எப்படியோ போங்க...
'அழகிய அசுரா'வின் நாயகி என்று சொல்லாதவரைக்கும் சரிதான் ; )//
பாபா,
நீங்க படம் பார்த்துட்டு சொல்லுங்க :-)
ஜோதி கிருஷ்ணா படத்துலயே நல்லா நடிச்சிருந்தாங்க :-)
//ஏமாற்றியவர்கள் :
---ரவிக்குமார் (வரலாறு)---
இவரும் பேரரசு ரகம்தானே ; )//
பேரரசு ரேஞ்சுக்கு ரவிக்குமாரை இறக்க கூடாது... காமெடியெல்லாம் ரவிக்குமார் படத்துல ஓரளவு நல்லா இருக்கும்.. பஞ்ச தந்திரம், தெனாலி...
//---ஏமாற்றாமல் கேவலமாக கொடுத்தவர் - பேரரசு ;)---
நான் மிகவும் ரசித்து பார்த்த திரைப்படம் : சிவகாசி (சென்ற வருடப் பட்டியலில் தலை பத்தில் இட்டு மகிழ்ந்திருந்தேன் : D//
திருப்பதியும், வரலாறும் பார்த்த பிறகும் உங்களுக்கு பேரரசு மேல் நம்பிக்கையிருக்கா???
சொன்னது… 1/04/2007 09:25:00 AM
---காமெடியெல்லாம் ரவிக்குமார் படத்துல ஓரளவு நல்லா இருக்கும்.. பஞ்ச தந்திரம், தெனாலி---
சார்... அதெல்லாம் கமல் படம் :)
கமல் எப்போதுமே நகைச்சுவையில் பஞ்சம் வைத்ததில்லை.
---உங்களுக்கு பேரரசு மேல் நம்பிக்கையிருக்கா?---
அண்ணன் பேரரசு அடுத்த ப்ரவீன் காந்த் :D
சொன்னது… 1/08/2007 07:48:00 PM
கருத்துரையிடுக