வியாழன், ஜனவரி 04, 2007

Calcutta Military - DMK Power Abuse - Dhanush Lecture - Entrance Exams

கேள்விகள் பட்டுவாடா

இன்று கண்ணில் பட்ட செய்திகளைப் பகிரும் விதமாக சில துக்கடா சிந்தனை:

1. 'சிம்பு என் மச்சான்' - தனுஷ்:

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பொறி' படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், "இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது."

படத்தின் தலைப்பு 'பொறி' என்பதால், பொடி வைத்துப் பேசி பொறியில் சிக்க வைக்கிறாரா! சன் டிவியில் ஒளிபரப்பப் போகும், பாலச்சந்தரின் 'பொய்' படத்தின் பத்தாவது நாள் வெற்றி விழாவுக்கு சென்றிருந்தால் என்ன பேசியிருப்பார்?

வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி 'இசை அமைத்தாயா? பிஜியெம் இட்டாயா? என் மாமனார் வயதொத்த நாயகர்களுக்கு முகப்பூச்சுதான் போட்டு விட்டாயா? என்று முழங்காதவரைக்கும் சந்தோசம்.


2. 'தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?' - அ.கி. வேங்கடசுப்ரமணியன்:

தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் 'கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது."

ஏதோ கிரிக்கெட் ஆடுதளத்தை நினைத்துப் பார்க்க சொல்கிறார் என்று எண்ணாமல் சேரியமாய் அலசியிருக்கிறார்.


3. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரை ஆதரவாளர்களுடன் விடுவித்த திமுக எம்எல்ஏ:

சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த திமுக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவும், அவரது ஆதரவாளர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை விடுவித்து சென்றனர்.

எண்ணூர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் விடுவித்துச் சென்றனர்.

சினிமா பார்த்துதான் தாங்கள் கெட்டுப் போனதாக சொல்கிறார்கள்.

கத்தியின்றி, ரத்தமின்றி கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கைத் திரித்து வெளியிடும் வெகுஜன ஊடகங்களின் துஷ்பிரயோகத்தை நினைத்து ஆற்றாமையாக இருக்கிறது.


4. பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர் - கொல்கத்தாவில் சம்பவம்:

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு - காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் செல்வாக்கு இல்லாவிட்டால் ஆயுதம் ஏந்த வேண்டும்.



| | | | | |

7 கருத்துகள்:

என்ன பாலா, இன்னுமா இவங்க இவங்களை புரிஞ்சுக்க முடியல?!!! இதெல்லாம் சகஜமப்பா!

//கத்தியின்றி, ரத்தமின்றி கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கைத் திரித்து வெளியிடும் வெகுஜன ஊடகங்களின் துஷ்பிரயோகத்தை நினைத்து ஆற்றாமையாக இருக்கிறது.//

வாழைப்பழ ஊசி !
:)))
இதுக்குப் பேறுதான் உள்குத்தா ?

I have put the article by Venkatasubramanian in my blog.
Such voices are rare.One need not be an expert in education to know that mere aboloition of entrace exam will not help rural students
unless the quality of education that is offered to them is improved and adequate infrastructure is made available.
Yet in the name of populism measures like abolishing entrance exam are implemented without much
thought.ravi srinivas

---இன்னுமா இவங்க இவங்களை புரிஞ்சுக்க முடியல---

ஆதி...

மறப்போம்; மன்னிப்போம் :P

---வெகுஜன ஊடகங்களின் துஷ்பிரயோகத்தை நினைத்து ஆற்றாமையாக இருக்கிறது.//

வாழைப்பழ ஊசி---

வலைப்பதிவரின் வஞ்சகத்தை வாழைப்பழத் தோலாக வழுக்கிவிடும் வழக்கு :D என்றும் சொல்லலாம் :))

நன்றி கோவி. கண்ணன்.

ரவி... தாமதமாகத்தான் பார்த்தேன்.

நல்ல பயனுள்ள கட்டுரைகள், தங்கள் கண்ணில் இருந்து தப்புவதில்லை!!

Good post and this post helped me alot in my college assignement. Say thank you you seeking your information.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு