செவ்வாய், ஜனவரி 30, 2007

Help - 100 days of Kindergarten : Ideas Required

உதவி தேவை

மகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததன் நூறாவது நாள் நெருங்குகிறது. ஆசிரியர் 'நூறை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து வா!' என்று கேட்டிருக்கிறார்.

'நீதான் பார்த்திபன் மாதிரி யோசிப்பியே... அதை விட்டுட்டு உருப்படியா நூறு என்பதை எண்ணிக்கையிலும் வடிவத்திலும் கொண்டு வா' - இது மனைவி.

'நூறு சாக்லேட் கொண்டு போகலாம்ப்பா. எல்லாருக்கும் பிடிக்கும். நமக்கும் ஈஸி' - இது மகள்.

சாதாரணமாக 'நீ இதுவரை கற்றுக் கொண்ட நூறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்குப் போதிய குறிச்சொற்களை கொடுத்து, ஆங்கிலத் தலைப்பிட்டு கொடுத்துவிடு' என்பது என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.

1 முதல் 100 வரை எழுதிக் கையில் கொடுத்து விடுவாள்.

ஃபெப்ரவரி 14 'அன்பர் தினம்' வருகிறது. இந்த வாரத்திலேயே க்ரௌண்ட் ஹாக் (Groundhog Day) தினம் உண்டு. இந்தியப் பின்னணியில் யோசிக்க குடியரசு தினம் சென்றிருக்கிறது.

யோசனை சொல்ல வாங்க...

கீழ்க்கண்ட நெருக்கடிகளை மனதில் வைத்துக் கொள்ளலாம்:

  • குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கணும்.

  • அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டிருக்கணும்.

  • ஆறு வயதினரே முழுவதுமாக (பெரும்பாலும் பெரியோரின் உதவியின்றி) செய்து முடிக்கணும்.

  • காசை ரொம்பக் கரியாக்கக் கூடாது.

  • என் மகளுக்கு ஓவியம், வரைதல், ஒட்டுதல், வெட்டுதல், வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

ஏதாவது தோன்றுகிறதா?

25 கருத்துகள்:

இங்கு சில குழந்தைகள் நூறாவது நாள் என்று
எழுதிய (பேப்பர்) தொப்பியுடன் வந்திருந்தார்கள்.

பத்து தலைப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்குப் பிடித்த நபர்கள்
எனக்குப் பிடித்த உணவு
எனக்குப் பிடித்த படங்கள்
எனக்குப் பிடித்த இடங்கள் கதைகள் பாட்டு (ரைம்ஸ்)

ஒவ்வொரு தலைப்பிலும் பத்து பெயர்கள் தரலாம். முடிந்த அளவு படங்கள் எடுத்து ஒட்டலாம்.

ஒரு சார்ட் பேப்பரில் ஒரு வட்டம் வரைந்து, அதைப் பத்து பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் ஒரு தலைப்பெனச் செய்யலாம்.

மீண்டும் வருகிறேன்!

உங்கள் மகளும் அவளது நெருக்கமான ஒன்பது நண்பர்களும் சேர்ந்து ஒரு சார்ட் பேப்பரில் அவர்களது கை விரல்களை பல வண்ண நிறங்களில் தோய்த்து ஒத்தி எடுக்கலாம்.

நூறு நாட்கள் கண்ட விரல்கள் எனத் தலைப்பிடலாம்.

@ஆதிரை

---(பேப்பர்) தொப்பி---

சுளுவா இருக்கே... அவளிடம் சொல்கிறேன்

@இ.கொ.

---பிடித்த நபர்கள்
எனக்குப் பிடித்த உணவு---

மிகவும் சுவாரசியமான வேலை. அவளைக் குறித்து எனக்கு அறிந்து கொள்ளவும் உதவும்!

@இ.கொ.

---நெருக்கமான ஒன்பது நண்பர்களும் சேர்ந்து ஒரு சார்ட் பேப்பரில்---

அட்ரா சக்கை. ஒன்பது பேரை மசிய வைக்கணும். அவளுக்குக் கொஞ்சம் கஷ்டம்!? (வகுப்பில் மொத்தமே 19 பேர்தான்). மற்றவரும், 'நான் உனக்கு வைக்கிறேன், நீ எனக்கு வைப்பாயா' என்று உடன்பாடு போடும் அபாயம் இருப்பதால், ஆசிரியர் ரத்து செய்து விடலாம் ;-)

100 நட்சத்திரங்கள் வடிவில் பேப்பரை வெட்டி ஒரு சார்ட்டில் ஒட்டலாம். சிறிதும் பெரிதுமாகப் பண்ணலாம். பெரியவற்றில் 19 வகுப்புத் தோழர்களின் பெயரை எழுதலாம். நடுவில் ஒரு சூரியனை ஒட்டி அதில் டீச்சர் பேரை எழுதலாம். மற்ற நட்சத்திரங்களை விதவிதமாக வண்ணம் தீட்டலாம்.

(இப்படி வேலை செய்ய முடியாமல் படுத்திட்டீங்களே!!!!)

@இ.கொ.

---100 நட்சத்திரங்கள் வடிவில் பேப்பரை வெட்டி ஒரு சார்ட்டில் ஒட்டலாம்---

கிட்டத்தட்ட இதே மாதிரி 'இதயங்களை' ஒட்டுவது என்று மனைவி தீர்மானித்திருந்தாள். பெரிய இதயம் வரைவது.அதற்குள் 1 0 0 என்று பெரிதாக எழுதுவது. அதற்குள் 99 இதயங்களைப் பொருத்துவது.

----19 வகுப்புத் தோழர்களின் பெயரை எழுதலாம். நடுவில் ஒரு சூரியனை ஒட்டி அதில் டீச்சர் பேரை எழுதலாம். ---

இந்த ட்விஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு!

டாலர் ஸ்டோரில் கிடைக்கும் ப்ளாஸ்டிக் பூக்கள் ஒரு 100 பூக்கள் வாங்கலாம். அவற்றை ஒரு பேப்பரில் 100 என்ற வடிவத்தில் ஒட்டலாம்.

வண்ணமயமாக இருக்கும்.

100, WOW, GREAT அல்லது இது போன்ற ஒரு வார்த்தை வருமாறு ஒன்றிலிருந்து நூறு வரை எண்களை எழுதி Connect the dots எனப் பண்ணச் செய்யலாம்.

(இன்னைக்கு இங்க சம்பளம் கிடைக்காதுன்னு நினைக்கறேன். நீர் எதாவது பார்த்துப் போட்டுக்குடுமைய்யா!)

1. அப்பா ஐடியா கொடுக்கிறது மட்டுமில்லாமல் கொஞ்சம் வேலையும் செய்யலாம் என்றால் 100 வெவ்வேறு font ல் 100ஐ print out எடுத்து கொடுங்க. அவங்க அதை விதவிதமா வெட்டி கலர் சார்ட்லே ஒட்டட்டும்.

2. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் 100ஐ வைத்து செய்யப் பட்ட சாதனைகளை தொகுத்து எழுதலாம். கிரிக்கெட் செஞ்சுரிகளையும்....

3.ஒவ்வொரு நூற்றாண்டுகளின் (நூறாவது ஆண்டு) சரித்திர நிகழ்வுகளை தொகுக்கலாம்...படங்களோடு ஆல்பம் தயாரிக்கலாம்.

கொத்ஸ் ஒரே ஐடியா மழையா கொட்டுறார்..பேசாம விக்கி குட்டிப் பசங்கன்னு ஒரு ப்ளாக் தொடங்கி எல்லாத்தையும் செஞ்சே போட்டுடலாம் போலிருக்கு :)) [100ன்னதும் பின்னூட்டக் கணக்கு நினைவுக்கு வந்ததனால், ஒரே யோசனையா கொட்டுதோ:))))]

ஒரு நூறு டாலரை "லஞ்சமா" வெச்சுக்க என்று வாத்தியாரிடம் கொடுக்கலாம்... ( ஐடியா - மேட் இன் இண்டியா)

அடச்சே...எப்படி யோசிச்சாலும் உருப்படியான ஐடியா வரமாட்டேங்குதே !!! யாருக்காவது ஒரு நூறு ரூபா அமவுண்டு கொடுத்து யோசிக்க சொல்லலாமா ? ( மறுபடியுமா !! )

100 ஒரு பென்னி காயின்களை எடுத்துக் கொண்டு ஒரு சார்ட் பேப்பரில் 100 என்ற எண் வருமாறு ஒட்டலாம்.

ella heros 100th film.. collect senju, chae..

101 sriramajayam, vambu vennam

100 சாதனையாளர்கள் பட்டியல்

inimae எல்லா கணக்கு பரிட்சையிலும் 100/100 vanguvenu paper la 100 murai ezhudhalam...

1. பத்து உடல் உறுப்புகள்
2. பத்து வீட்டு உபயோகப் பொருட்கள்
3. பத்து நபர்கள் (பெற்றோர் / உறவினர் அண்டை அயலார் / நண்பர்கள்)
4. பத்து தலைவர்கள்
5. பத்து உயிரினங்கள் (பறவைகள் / விலங்குகள் / நீர்வாழ் இனங்கள்)
பத்து புத்தகங்கள்
6. பத்து கதை மாந்தர்கள் / கதாபாத்திரங்கள் (காமிக் கேரக்டர்கள்)
7. பத்து மரங்கள் / செடி / கொடி இனங்கள்
8. பத்து வகை வாகனங்கள்
9. பத்து புகழ்பெற்ற கட்டிடங்கள் / சிலைகள் / இடங்கள்
10. பத்து எண்கள் - 0 முதல் 9 வரை:-)))))

I used your old blogdesign to visit to other tamil blogs. You catagorised very well. But in new blog design i missed that.

A Tamil Anani

//[100ன்னதும் பின்னூட்டக் கணக்கு நினைவுக்கு வந்ததனால், ஒரே யோசனையா கொட்டுதோ:))))]//

அம்மிணி, விஷயம் தெரியாமப் பேசப் பிடாது. நம்ம பையனும் பள்ளியூடம் போறாரில்ல. எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்!!

Hi,
I did this last year for my son's 100th day. I gave him 100 pennies and he counted himself and gave it to his teacher to donate for a needy cause. Now this year he wants again to donate some 100 things and still looking for ideas. Hope this helps.

நல்ல ஐடியா பத்து வெச்சு ஒரு சர்வே போட்ரலாம்ல. :)

பாலா
ஏதேனும் ஒரு கலை பொருள் கடை அல்லது டாலர் கடையில் மணிகள் கிடக்கும். 100 கோர்த்து ஆசிரியருக்கு அதையே வாலந்தை பரிசாக தந்துவிடலாம். இல்லை என்றால் 100 என்று எழுதி நிறம் சேர்த்து அதை ஒரு hand puppet இல் ஒட்டி தன் 100 நாள் அனுபவத்தை சொல்லலாம்.தொப்பி ஐடியா கூட நன்றாய் இருக்கிறது.

schoolukku pona antha 100 nalla paditcha, therinjikitta visayangal noora eduthu, ovvoru naalaikkum onnunnu assign panni, oru paperla (chartla) color coloraa datesoda ezuthi kodukalaam :))

என்னங்க 100 பிரச்சனை solve பண்ணலியா? இத முடிக்காம தக்காளி, வெங்காயம் போடோ பிடிக்க கிளம்பினா வூட்டுக்காரம்மா வுடுவாங்களா?

பேசாம, பாக்யராஜ் ஸ்டைல்ல ஒரு chart பண்ணி கொடுத்திட சொல்லுங்க.
"Teacher teacher என் first 100 days வரைக்கும் கூட இருந்த நீங்க 100 years நல்லா இருக்கணும் teacher."

கொத்ஸ் கலக்கறாரு :)

//எனக்குப் பிடித்த நபர்கள்
எனக்குப் பிடித்த உணவு
எனக்குப் பிடித்த படங்கள்
எனக்குப் பிடித்த இடங்கள் கதைகள் பாட்ட//

இது நாலு விசயங்கள், ஆறு விளையாட்டு மாதிரி இருக்கு :)

சரி சரி கடைசில என்ன செய்யப்போறீங்கன்னு சொல்லிடுங்க பாபா. இந்தப் பக்கத்தைக் குறிச்சு வைக்கணும்.. அப்புறமா எங்க வீட்டுல தேவைப்படும்போது உதவும் :)

அப்பாடா... இப்பத்தான் வேலைய முடிச்சாங்க. நான் படம் ஒண்டி பிடிச்சேன்.

ஐடியா கொடுத்த அனைவருக்கும் நன்றியோ நன்றி!!!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு