ஞாயிறு, ஜனவரி 21, 2007

Hinduism Today

கண்ணில் பட்ட இரு செய்திகள்:

1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

'கிழக்கே போகும் ரயில்' ஞாபகம் வந்துச்சே!

2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.

இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

'பெரியார்' திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா?| | |

8 கருத்துகள்:

//இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.//

பாலா,
கண்ணீரென்ன செந்நீர் வரவழைக்கும் செய்தி !!! :)))
திடீர் பரபரப்பு பக்தி குறித்து திண்ணையில் முன்பு ஒரு சிறுகதைஎழுதினேன். 100 ... இல்லை 1000 ... வந்தாலும் ஹூகூம் :)

Report: Malaysian Hindu temple gets quality assurance certification - International Herald Tribune: "A Hindu temple in Malaysia has reportedly become the first in the world to receive an international quality service certification, a news report said Sunday.

The Sri Sundararaja Perumal temple in Klang, just outside of Malaysia's largest city Kuala Lumpur, received the International Organization for Standardization's ISO 9001:2000 certificate last November, the national news agency Bernama said.

"We wanted to set a benchmark by achieving this award so that people will know we provide quality services in religious faith," the temple's president S. Anandakrishnan was quoted as saying. "By standardizing our religious procedure, devotees will get similar and fair treatment in terms of wedding ceremony and other rituals."

The report said the temple was probably the first in the world to receive such a certification. The claim could not be independently verified immediately.

Anandakrishnan said the temple had been working on getting certified for three years from the Geneva-based International Organization for Standardization, which certifies companies and service providers worldwide for quality upon achieving certain benchmarks.

A Hindu temple in Malaysia has reportedly become the first in the world to receive an international quality service certification, a news report said Sunday.

The Sri Sundararaja Perumal temple in Klang, just outside of Malaysia's largest city Kuala Lumpur, received the International Organization for Standardization's ISO 9001:2000 certificate last November, the national news agency Bernama said.

"We wanted to set a benchmark by achieving this award so that people will know we provide quality services in religious faith," the temple's president S. Anandakrishnan was quoted as saying. "By standardizing our religious procedure, devotees will get similar and fair treatment in terms of wedding ceremony and other rituals."

The report said the temple was probably the first in the world to receive such a certification. The claim could not be independently verified immediately.

Anandakrishnan said the temple had been working on getting certified for three years from the Geneva-based International Organization for Standardization, which certifies companies and service providers worldwide for quality upon achieving certain benchmarks."

பூஜையில் அவ்வை ஷண்முகிக்கு அட்மிஷன் கிடைக்குமா?

:)

ஜடாயு எண்ணங்கள்: பெங்களூர் இந்து சமூக விழா காட்சிகள் -- Communal violence flares in Bangalore « Tamil News: "பெங்களூர் வன்முறையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுவன் சாவு; ஊரடங்கு உத்தரவு அமல்"

கோவி

கதை இன்னும் படிக்கலை... படிச்சுட்டு வாரேன்

சிறில் அலெக்ஸ்

---அவ்வை ஷண்முகிக்கு அட்மிஷன் கிடைக்குமா---

தொடர்ந்து பார்த்து வரும் 'பாஸ்டன் லீகல்'-இல் க்ளாரீஸ்/க்ளாரென்ஸ் என்று மாற்று ஆடை தரித்து, வேஷ வித்தியாசத்தை வெளிக்கொணரும் கதாமாந்தர் அமைத்திருக்கிறார்கள். (Clarence Bell - Boston Legal)

மகளிர் மட்டுமே பயன்படுத்தும் உடற்பயிற்சி நிலையத்தில், பெண்ணாக ஆடை தரித்த வரை அனுமதி தருகிறார்கள். நிஜ ரூபத்தைக் காட்டியவுடன் நுழைவதற்கு தடை. முகமூடி போட்டால் சப் குச் சலேகா.

தலைப்பு சரியில்லை.

---தலைப்பு சரியில்லை---

'நான் என்று சரியாகத் தலைப்பு வைத்திருக்கிறேன் ; )' என்று மழுப்ப எண்ணம்தான்.
இருந்தாலும், இந்த மாதிரி மூடநம்பிக்கைகள்தான் இந்து மதத்தை பிற்போக்காக வைத்திருக்கிறது : (

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு