Plus Two Tamil & Current Thamil
இன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com - TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.
பதில் தெரிகிறதா?
- யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
(கூகிள் பிட் அடிக்கவும்)- பாடல் இடம் பெற்ற நூல் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- 'கள்வன்' யார்?
- இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
- பாடல் இடம் பெற்ற நூல் எது?
- நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
நாயடா வினை நடத்துமோ?
(கூகிள் பிட் அடிக்க முடியாது)- இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- யார் யாரிடம் கூறியது?
- 'கரி' என்பதன் பொருள் யாது?
- இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
- 'காலத்தினால்' எனத் தொடங்கும் குறளையும், 'செயல்' என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
- உறுப்பிலக்கணம் தருக.
- வேண்டேன்
- களையாத
- கேட்டி
- ஏகுவாய்
- பொறுத்தல்
- சொல்லுமின்
- வேண்டேன்
- இலக்கணக் குறிப்பு எழுதுக.
- கயன்முன்
- திரைகவுள்
- கூர்ம்படை
- படூஉம்
- சிறைப்பறவை
- வல் விரைந்து
- கயன்முன்
- புணர்ச்சி விதி தருக.
- வினைத்திட்பம்
- பெருந்தேர்
- வீறெய்தி
- நிறைஉடைமை
- இற்பிறப்பு
- சின்னாள்
- வினைத்திட்பம்
- பொதுவியல் திணை - சான்று தந்து விளக்குக.
- தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
நிறுவனத்துக்கு கணினி வேலை நேர்காணலுக்குத் தேர்வாகுவதற்கு, முதல் படியாக பரீட்சை வைப்பார்கள். நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை சி#, ஜாவா, டேட்டாபேஸ் தேர்வுகளை எழுதி 70+ மதிப்பெண் எடுத்தால்தான் ஸ்திரமான வேலையில் நிரலி தட்ட முடியும்.
நல்ல வேளை.
வலைப்பதிவு நுழைவதற்கு இலக்கண வினாக்கள் படிக்கல்லாக இல்லை. 'நான் படிக்கிற காலத்தில்' என்று பெற்றோர் ஆரம்பிப்பது போல் அந்தக்கால மதிப்பெண்ணை வைத்தே காலத்தை ஓட்ட முடிகிறது.
விடை தெரியாதவர்களுக்காக மாற்றுத் வினாத்தாள்:
- தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்- பாடல் இடம் பெற்ற படம் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- 'தேய்பிறை' எது?
- இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
- பாடல் இடம் பெற்ற படம் எது?
- கடல் கொண்ட நதியோ முகம்தன்னை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புதுமுகம் கிடைக்கும்- இப்பாடல் வரி இடம் பெற்ற படம் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- யார் யாரிடம் கூறியது?
- 'புதுமுகம்' என்பதன் பொருள் யாது?
- இப்பாடல் வரி இடம் பெற்ற படம் எது?
- 'விடுகதையா' எனத் தொடங்கும் துண்டுப்பாடலையும், 'கனாக்கண்டேன்' என முடியும் பாடலையும் அடிபிறழாமல் எழுதுக.
- உறுப்பிலக்கணம் தருக.
- ரஜினி விரல்
- விஜய் காலணி
- கமல் மார்பு
- அஜீத் தல
- கவுண்டமணி கால்
- ரஜினி விரல்
- புணர்ச்சி விதி தருக.
- வில்லன் - நாயகனின் தங்கை
- வில்லன் - கதாநாயகி
- கதாநாயகன் - கதாநாயகி
- கதாநாயகன் - கவர்ச்சி நாயகி
- இராம நாராயணன் - பிராணி
- வில்லன் - நாயகனின் தங்கை
- ஹீரோயின் சப்ஜெக்ட் - சான்று தந்து விளக்குக.
- அரசியல் தமிழை விளக்குக.
Comedy | Parody | Tamil | Cinema
முதல் பரிட்சையில் நான் முற்றிலும் ஃபெயில்
இரண்டாம் பரிட்சையில் ஜஸ்ட் பாஸ்
சிறில் அலெக்ஸ் சொன்னது… 1/23/2007 12:22:00 PM
Ha Ha Ha..
Good One!!
Sivabalan சொன்னது… 1/23/2007 12:27:00 PM
சிறில் அலெக்ஸ்
---முதல் பரிட்சையில் நான் முற்றிலும் ஃபெயில்---
என்ன மாதிரியா நீங்க!
---இரண்டாம் பரிட்சையில் ஜஸ்ட் பாஸ்---
எனக்கு கேள்வித் தொடுக்கத்தான் தெரியும் :D
Boston Bala சொன்னது… 1/23/2007 02:14:00 PM
சிவா
தற்போதைய மாணவர்களின் படிப்புச்சுமை, தங்களுக்கு சிரிப்பைக் கொடுக்கிறதா ; )
Boston Bala சொன்னது… 1/23/2007 02:15:00 PM
2. கரினா யானை
3. காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
5.
படூஉம் - இன்னிசையளபடை???
கூர்ம்படை - கூரிய ஆயூதங்களை உடைய படை (அதுக்கு என்ன இலக்கண குறிப்புனு மறந்து போச்சி :-( )
தற்குறிப்பேற்றணி - இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றி சொல்வது.. (எ.கா. கோவலனும், கண்ணகியும் மதுரை நகருக்குள் வரும் போது அங்கே சுவற்றிலிருந்த கொடி காற்றிலாடியதை இளங்கோவடிகள் மதுரை நகருக்குள் வர வேண்டாம் என்று எச்சரிப்பதாக சொல்லியிருப்பார்... பாட்டி மறந்து போச்சி :-( )
கூகிள்ல இருந்து பிட் அடிக்காம சொல்லிருக்கேன்... தப்பா இருந்தா சொல்லிடுங்க :-)
நாமக்கல் சிபி சொன்னது… 1/23/2007 02:38:00 PM
முதல் கேள்விகளில் குறள் மட்டும் தெரிந்தது,மற்றதில் "சுத்தம்".
யோசிப்பதுக்கு பதில் சிரிப்பு தான் வந்தது.
பெயரில்லா சொன்னது… 1/23/2007 04:30:00 PM
2. தேம்பாவணி ??
டேவிட்டுக்கும் கோலியாத்துக்குமான உரையாடல் ??
பாலாஜி அந்த சிலப்பதிகார வரிகள்
"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட"
ஜெயஸ்ரீ சொன்னது… 1/23/2007 05:09:00 PM
1. குறுந்தொகைப் பாடல் ??
ஜெயஸ்ரீ சொன்னது… 1/23/2007 05:12:00 PM
பாபாண்ணா, நான் ரெண்டு டெஸ்டிலும் பெயில்! :(
இலவசக்கொத்தனார் சொன்னது… 1/23/2007 06:14:00 PM
பாபாண்ணா, நான் ரெண்டு டெஸ்டிலும் பெயில்! :(
ரிப்பிட்டே :(
நாடோடி சொன்னது… 1/24/2007 03:47:00 AM
:))) :(((
பெயில் ஆனா இம்போசிஷன் எழுத சொல்வீங்களா? :D
பெயரில்லா சொன்னது… 1/24/2007 08:26:00 AM
//பாபாண்ணா, நான் ரெண்டு டெஸ்டிலும் பெயில்! :(
ரிப்பிட்டே :(//
நானும் :(
சேதுக்கரசி சொன்னது… 1/24/2007 10:01:00 AM
@வி.பி.,
---இன்னிசையளபடை---
அட.. ரெஹ்மான் பாட்டு கூட போட்டிருந்தாரே! பல கேள்விக்கு பதில் சொல்லி, மாணவப்பருவத்தை மறக்காத ஆசாமி என்று நிரூபிச்சுட்டீங்க : )
Boston Bala சொன்னது… 1/25/2007 12:31:00 PM
குமார்
---யோசிப்பதுக்கு பதில் சிரிப்பு தான் வந்தது---
'நாம் படிப்பது மனுசனத்தாண்டா!' என்று சொல்லிக்கலாம். : D
Boston Bala சொன்னது… 1/25/2007 12:32:00 PM
ஜெயஸ்ரீ
---தேம்பாவணி---
ஓ!!! நிஜமாகவே கலக்கல் பதில்.
ஞாபக சக்திக்கு என்ன செய்யறீங்க : )
Boston Bala சொன்னது… 1/25/2007 12:35:00 PM
ஜெயஸ்ரீ
---குறுந்தொகை---
சரி!
யாருமில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டு தான் மணந்த ஞான்றே
தலைவன் நெடுங்காலம் மணஞ்செய்து கொள்ளாமலிருந்தல் பற்றி வருந்திய தலைவி, தலைவர் அருள் பூண்டு என்னை வரைந்து கொண்டாலன்றி எனக்கு உதவி செய்யத் தக்க சான்று பகர்வார் வேறு ஒருவரும் இலர் - என்று கூறியது. மணம் செய்தல் நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
நன்றி: thamizham.net
Boston Bala சொன்னது… 1/25/2007 12:38:00 PM
@இ.கொ.
---நான் ரெண்டு டெஸ்டிலும் பெயில்---
நீங்க ஒன்-டே ஆல்ரவுண்டர். உங்களைப் போய் டெஸ்ட் ஆட சொன்னா ; )
Boston Bala சொன்னது… 1/25/2007 12:40:00 PM
நாடோடி
---ரிப்பிட்டே---
'தேவுடா... தேவுடா' பாடலில் ராஜ்குமார், பி.வாசு, ரஜினியின் முன்னாள் சகா வருவார்களே... அந்த மாதிரி முதலில் கொத்ஸ்; அடுத்து நீங்களா : )
Boston Bala சொன்னது… 1/25/2007 12:41:00 PM
கப்பி
---பெயில் ஆனா---
பெயில்!?
எது அந்த மூன்று குச்சிக்கு மேல் வைப்பார்களே... அதுவா?
இல்லாக்காட்டி, கோர்ட்டுக்குப் போய் ஜாமீன் கொடுப்பாங்களே... அந்த சமாச்சாரமா?
; )
Boston Bala சொன்னது… 1/25/2007 12:46:00 PM
@சேதுக்கரசி
மூணாவது ரிப்பிட்டே!
'வாழ்க்கையென்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்' : )
Boston Bala சொன்னது… 1/25/2007 12:50:00 PM
ஐயகோ!!
பெயில்லயே பெயிலா..ச்சே ஃபெயிலா?
:))
பெயரில்லா சொன்னது… 1/25/2007 12:55:00 PM
பெயில் எடுத்தவன் எல்லாம் ஃபெயில் ஆவறதில்ல...
ஃபெயில் ஆகிற எல்லாருக்கும் பெயிலும் தேவைப்படறதில்ல :-D
Boston Bala சொன்னது… 1/26/2007 11:24:00 PM
கருத்துரையிடுக