வியாழன், பிப்ரவரி 22, 2007

தினசரி தத்துவம்

சொல்லவேண்டுமென்று ஆசை. சொல்வதற்கு ஆதாரமோ ஆராய்ச்சியோ தேவைப்படாத பொன்மொழி வகை தத்துவம்.

'எவனோ மார்க் ட்வெயினாம்... எழுதியிருக்கான்.'

'உதிர்த்தது யார் தெரியுமா? இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்.'

'திருக்குறளிலேயே இருக்கிறதே!'

'தேவா பிழைச்சுடுவான்! தேவாவே முனகினான்' என்பது போல் axiomatic premise-ஐ தமிழுக்கு தாரை வார்க்க வேண்டும்.

நாளொரு சூத்திரமும் பொழுதொரு உத்தேசமுமாக பதிந்தால், பாரிசுக்குப் போகாத தமிழனைக் கூட பார் போற்றும்.

என் பங்கு புனைந்துருவாக்கம்:

மதிப்பின்பால் மயக்கம் கொண்டர்வர்தான், முகமூடி மாட்டமாட்டார்.


தெனாலிராமன் மூன்று விரல் காட்டிய கதையாக, விரித்து விளக்கக் கூடாது. தாமரை, நீர்மட்டம் என்று சமாளிக்க வசதிப்படும்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்று
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.


உங்களின் பகுப்பாய்வு கட்டமைப்புக்காக சில வார்த்தைகள்:
வெறி, கோபம், மூர்ச்சை, வியாதி, நித்திரை, பஞ்சம், பீதி, பயம், அச்சம், படக் படக், நடுங்கல், மருட்சி, கிலி, கூச்சம், கவலை

துலச்சல் இடவும்.

வார்த்தைபெயர்ப்புக்கு: விக்சனரி பின்னிணைப்பு:சிந்தனை சொற்கள் - தமிழ் விக்சனரி (Tamil Wiktionary)-அகரமுதலி / அகராதி - Tamil Dictionary

8 கருத்துகள்:

அண்ணா, நீங்க நல்லா இருக்கணும்!!

இதில எது தத்துவம்?

எப்படித்தான் இதெல்லாம் கண்ணுலே மாட்டுதோ?

இ.கொ.
தமிழ்ப்பட வில்லன் மாதிரி பேசறீங்க :P

@சிந்தாநதி

---இதில எது தத்துவம்?---

ஆஹா... உங்க பதிலே மன விசாரணைகளை முடிக்கி விடும் தத்துவமாக இருக்கிறதே ; )

@துளசி

---எப்படித்தான் இதெல்லாம் கண்ணுலே மாட்டுதோ---

ஏன்தான் இந்தப் பதிவு கண்ணிலே மாட்டிச்சோ என்று வருத்தப்பட வைக்கலியே :D

வழக்கம்போலவே ஒண்ணும்
புரியல! :((

@தம்பி

---வழக்கம்போலவே ஒண்ணும் புரியல---

சும்மா... ஜாலியாக எழுதிப் பார்த்தது. ரொம்ப சிரமப்படாததால், தாவித் திரியும் Brand identity, anonymous posts, prosecution என்றெல்லாம் எண்ணத்தை அப்படியே இறக்கி வைத்ததால், கொஞ்ச நாள் கழித்து எனக்கே புரியாமல் போகலாம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு