திங்கள், மார்ச் 08, 2004

மகளிர் - கலை... விளையாட்டு... சமூகம்

கல்கி - 01.02.2004

'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தின் நாயகி அபர்ணா, அமெரிக்க அழகிப் போட்டியில் 'மிஸ் ஃபோட்டோ ஜெனிக்' ஆகத் தேர்வு பெற்றவர். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அண்ணி என இவரது குடும்பமே கல்விப் பணியில் இருக்கிறது. "சென்னை, திருச்சி, துபாய் ஆகிய பகுதிகள்ல மொத்தம் பதினான்கு ஸ்கூல் நடத்தறோம். நானும் அந்தத் துறைக்கு வரணும்னுதான் வீட்ல எல்லோருக்கும் ஆசை. லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருந்தேன். கேமராவுக்குப் பின்னால் நிற்கிற படைப்பாளிக்கான படிப்பு"

- அப்பு (அபர்ணாவை விரட்டிய பேய்!)


அபர்ணாவின் முழு பேட்டியையும் துரத்திய பேயையும் அறிய கல்கி - 01.02.2004 பார்க்கலாம்.




டென்னிஸ் உலகின் மகளிருக்கான பிரிவில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஸ்டெர்ஸ். சென்ற ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓப்பனின் இறுதி சுற்றையும், ஆஸி. ஓப்பன் மற்றும் விம்பிள்டனின் அரையிறுதிச் சுற்றையும் அடைந்தவர் (ஏனுங்க அம்மணீ... ஒண்ணுத்திலும் கோப்பையை தூக்க மாட்டேன்றீங்க?!)

வரும் ஒலிம்பிக் பந்தயத்தில் இவர் கலந்து கொள்ளப் போவதில்லையென்று அடம் பிடிக்கிறார். காரணம் பதக்கம் அவர்கள் நாட்டுக்குத்தான் (என்பதாக இருக்கலாம்). பெரும் தொகையும் கிடைப்பதில்லை. இவர் மணக்கவிருக்கும்
ஆஸ்திரேலிய டென்னிஸ் சாம்பியனான லேட்டன் ஹெவிட்டும், ஏதென்ஸில் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.

- குல்லூ (அடம் பிடிக்கிறார் க்ளிஸ்டெர்ஸ்)





"உலகத்திற்கு சேவை செய்யவும், ஆன்மிக ஞானத்தைப் பரப்புவதற்கும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது இரண்டு இளம் வயதினராவது முன் வந்தால், சமாதானமும் அன்பும் அனைவரும் ஒரே குடும்பம் என்னும் உணர்வும் நிறைந்த புதிய உலகை நாம் உருவாக்கிவிடலாம்" என்று அருளுரைக்கிறார் அம்ருதானந்தமயி. அப்படியொரு பக்குவம், ஆன்மிக நாட்டம், தன்னலம் நினையாத பெருமனம் எல்லோருக்கும் வாய்க்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.

சின்ன வயதிலேயே வீட்டில் 'அம்மா' காசு திருடியதுண்டு. எந்த வீட்டிலாவது யாராவது பசித்திருந்தால் கதாமணிக்குப் பொறுக்காது. தாயாரின் உண்டியல் பணம் அங்கு இடம் மாறிப் பசி தீர்க்கும்.

ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் 'அமிர்தகுடீரம்' முக்கியமானது. வரும் பத்தாண்டுகளில் நாடெங்கிலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுகிற குறியீடு. இதுவரை உருவாகியிருப்பதில் புனேயில் உள்ள அமிர்தகுடீரம்தான் பெரியது; 1750 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது.

இன்னும் ஆதரவற்ற பெண்களுக்காக உதவும் மாதாந்திர உதவித் திட்டம் 'அமிர்த நிதி, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான 'அமிர்த நிகேதன்', அன்பு இல்லம் என்கிற பெயரில் 'முதியோர் இல்லம்' என்று சிறு சிறு திட்டங்கள் ஒரு புறம்.

"இந்த உலகமே உங்களுடைய குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை அறியாமல், நீங்கள் உங்களது இடது கையைக் காயப்படுத்தி விட்டால், உடனே உங்களது வலதுகை, இடதுகைக்கு உதவ முன் வருகிறது. ஏனெனில்,
அந்தக் கையும் உங்களது உடலின் அங்கமே என்னும் உணர்வு உங்களுக்கு உள்ளது. இதே போன்ற ஐக்கிய உணர்வோடு, உலகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவ வேண்டும்" என்கிறார் அம்மா.

- பாலன் (வேறென்ன வேண்டும்?)



அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்... :)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு