பொன்மொழிகள் - போடுங்கம்மா ஓட்டு
TheStar.com: ஹமீத் கர்சாய் பெரிய மனதாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். மகளிர் தினத்தை இவ்வளவு சிறப்பாக நையாண்டி செய்ய முடியாது. "அன்பு சகோதரர்களே! உங்கள் மனைவியையும் (அல்லது மனைவிகளையும்) சகோதரிகளையும் ஓட்டளிக்கப் பதிவு செய்யுங்கள். அவள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள்; ஆனால், ஓட்டளிக்க அனுமதியளிப்பது முக்கியம்".
ஆஃப்கானிஸ்தாலுள்ள நூறு லட்சம் வாக்காளர்களில், இதுவரை பதின்மூன்று லட்சம் மட்டுமே வாக்காளர் அட்டை பெற்றிருக்கிறார்கள். இதில் கால் பங்கு மட்டுமே பெண்மணிகள்.
சிஎன்என்: ஹஃப் - 6 எனப்படும் ஷாஹீன் - 2 ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்திருக்கிறது. முன்பு புது டில்லி அல்லது பம்பாய் வரையிலுமே தாக்கும் திறன் கொண்ட (435 மைல்) ஹஃப் - 4-ஐ விட, சென்னை/கொல்கதா வரை (1250 மைல்) சென்று அணுகுண்டை விட்டுவிடும் திறன் கொண்டவை.
ஸ்டேட்ஸ்மேன் - மன்னிப்போம்... மறப்போம்: காங்கிரஸை விட பிஜேபி அரசு முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்ததாக மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசேன் "நாங்கள் கூட செல்பேசி வைத்துக் கொள்கிறோம்" என்கிறார். பிஜேபி அடுக்கும் சாதனை பட்டியல்.
* ஹஜ் உதவித்தொகை
* முஸ்லீம் ராஷ்டிரபதி
* இந்தியா பாகிஸ்தானிடையே மேம்பட்ட உறவு
மக்கள் மறக்கவேண்டியதை ஸ்டேட்ஸ்மான் பட்டியலிடுகிறது:
* குஜராத் நிணைவுகள்
* உணர்ச்சிகளைத் தூண்டும் நரேந்திர மோடியின் சொற்பொழிவுகள்
கருத்துரையிடுக