கணை விடும் களங்கள்
ஜெயமோகனைக் கேளுங்கள் முடியப்போகிறது. அதற்கு முன் அவரின் படைப்புகளை அலசி விட்டு வினா தொடுக்கலாம். பொதுவான சில கேள்விகளைப் பாராவிடம் கேட்டு அவரது எண்ணங்களைப் பெறலாம். அப்படி எதுவும் தோன்றாவிட்டால் சில இலக்கிய-ஸ்டாண்டர்ட் கேள்விகள்:
1. படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் - நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
2. உங்கள் சம - கால எழுத்தாளர்களின் உங்களை வாசிக்கத் தூண்டிய எழுத்து யாருடையதாக இருந்தது?
3. பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். உங்கள் Sensitivity - யை இவைகள் பாதித்தனவா அல்லது மேலும் எழுத வித்திட்டதா?
4. சென்னை நூல் வெளியிட்டு விழாக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
5. பொதுவாக இன்று "சாதி" எழுத்துக்கள் "தனித்த அடையாளம்" என்ற பெயரில் உருவாகின்றனவே? இது ஆரோக்கியமான போக்கா?
6. டி.வி. மெகாசீரியல்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?
7. நீங்கள் ஏன் இலக்கியத்தின் மற்ற வடிவங்களை பிரயோகிக்கவில்லை. அதாவது கவிதை உலகில் நீங்கள் பரவலாக கவனம் பெறாமல் போன காரணம் என்ன?
8. தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?
9. உங்கள் படைப்புலகத்திற்கு உந்து சக்தியாய் அமைந்த இளமைக்கால அனுபவங்களைக் கூறமுடியுமா?
10. அடுத்து என்ன முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்?
நன்றி: வெப்-உலகம்
கருத்துரையிடுக