வெள்ளி, பிப்ரவரி 27, 2004

படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன?


A poster of the Saudi dissident for sale in  Rawalpindi, Pakistan (c) Washignton Post
1. ஆயுத எழுத்தின் ஆதிமூலங்கள்: 'சிடி ஆஃப் காட்' என்பதின் தாக்கம் ஆய்த எழுத்தில் நிறைந்திருக்கும் என பேச்சு அடிபட ஆரம்பித்து இருக்கிறது. டீகடையில் சொல்லியிருக்கும் 'கடவுளின் நகரம்' கதைக்கும் மணியின் படத்திற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கலாம். பிரேசில் படத்தில் இரண்டு பேர் இரு துருவங்களானால், மணி ரத்னம் இன்னொருவரையும் சேர்த்துக் கொண்டு மூன்று வழிப்பாதை போட்டிருக்கார். அமெரிக்காவில் City of God பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையானால் ஆஸ்கார் மாட்டுகிறதா என்பதும் தெரிந்து விடும்.

மணிரத்னம் என்ன செய்தாலும் 'க.மு.'வை 'ஏ.ஐ'யின் தழுவல்தானே என்று கேள்வி கேட்பார்கள்! அந்த மாதிரி....

Pardon My Planet2. மவுசு குறைஞ்சு போச்சுங்க - Sify.com: 'இந்தியா டுடே' கருத்துக் கணிப்புகளில் எனக்கு அதிக நம்பிக்கை கிடையாது. புரட்சி தலைவிதான் இருப்பதிலேயே 'மோசமான' முதலமைச்சர் என்று சொன்னார்கள். காங்கிரசில் சேர்ந்து எதுவும் சாதிக்காத சிரஞ்சீவிக்குக் கூட தலை ஐம்பதில் இடம் கொடுத்து விட்டார்கள். வாயே திறக்காமல், தமிழகத்தின் அனைத்து முக்கிய பத்திரிகை, வலைத்தளம், விஐபி, கட்சி, என எல்லாவிடங்களிலும் நீக்கமற காட்சி தரும் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஷாருக் - 27
ரெஹ்மான் - 29
ஐஷ்வர்யா - 42

கமல்/ரஜினியை விடுங்க; சிம்ரன்/ஜோதிகாவை விடவா ஏ.ஆர்.ரெஹ்மான் மக்களை பாதிக்கிறார்?


Beetle Bailey
3. ஆபத்தான வழிகள்: அமெரிக்காவில் எந்த சந்து பொந்துகளில் அதிகம் விபத்துகள் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். அங்கு வண்டியோட்டும்போது முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பீர்கள்.

எதற்கெல்லாம் தலை-பத்து இருக்கிறது என்று நினைத்தால்...

வியாழன், பிப்ரவரி 26, 2004

மிஸ்டர் மியாவ்

ஜூனியர் விகடன்: "முன்பு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கரூரில் ஒரு கோயிலில் சில இளைஞர்கள் கோபுர உச்சியில் நின்று போராடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு காட்சியை Ôதென்றல்Õ படத்திலும் வைத்திருக்கிறார் தங்கர். இந்த காட்சியைப் பார்த்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மெய்சிலிர்த்துப் போய், தங்கருக்கும் பார்த்திபனுக்கும் பாராட்டுக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார்."

அ.தி.மு.க-வில் கார்த்திக்..

JuniorVikatan.com: "தேர்தல் சூட்டில் அடுத்து வறுபடத் துவங்கியிருக்கிறார் நடிகர் கார்த்திக். வெளியுலகப் பிரவேசத்தை எப்போதும் விரும்பாத கார்த்திக், கடந்த புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு அ.தி.மு.க|வின் தலைமைக்கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் ராதாரவியோடு திடீரென பிரசன்னமாகி அரசியல் பரபரப்பில் ஐக்கியமாகியிருக்கிறார்.

அலுவலகத்துக்கு சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு ராதாரவியுடன் நடைபோட்டு அந்த அலுவலகத்தில் நுழைந்த கார்த்திக், அங்கிருந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் ஒரு கடிதம் அடங்கிய கவரைக் கொடுத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த பூச்செண்டையும் கொடுத்தார்!

அப்படியே பக்கத்து அறையையும் எட்டிப்பார்த்த கார்த்திக், அங்கு இருந்த அமைச்சர் வளர்மதி, செங்கோட்டையன், சுலோசனா சம்பத் ஆகியோரைச் சந்தித்து, ÔÔநான் அ.தி.மு.க. அனுதாபிÕÕ என்று சொல்லி திரும்பியிருக்கிறார். "

ஜெயமோகன்

ஜெயமோகனிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம். அதற்கு முன் அவருடைய
படைப்புகள் சிலவற்றையாவது படித்திருப்பது அவசியம்!?

திண்ணை

இரு கதைகள்: வி கெ என் (அஞ்சலி , மொழியாக்கம் : ஜெயமோகன்)
வடக்குமுகம் ( நாடகம் )
படுகை: திசைகளின் நடுவே தொகுதியில் உள்ளது.
பதுமை (நாடகம்)
மாடன் மோட்சம்: 1991 புதிய நம்பிக்கை
கண்ணாடிக்கு அப்பால்: தினமணி தீபாவளி மலரில் வெளிவந்த கதை. கூந்தல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முகம்
தேவதை: இந்தியா டுடே இதழில் வௌ¤யானது
போதி: 'நிகழ் ' - 1990
மாபெரும் பயணம்
நதிக்கரையில் - 1: கதைசொல்லி- மார்ச் மே 99
நதிக்கரையில் - 2: கதைசொல்லி- மார்ச் மே 99
நிழல்


நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும்
தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையில் வெளிவரும்
எழுதுபவர் ஜெயமோகன் !!!

நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)
நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் - ஏழு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் - ஒன்பது )
நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)
நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)
நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)


என்னுடைய பின்னூட்டங்கள்:

1. 'நான்காவது கொலை' எழுதியதன் நோக்கம் என்ன?

2. எனக்கு அறிமுகமாகம் அண்டை வீட்டார்கள், தமிழ்ச்சங்க நண்பர்கள் என்று
சிலருக்கு தமிழ் புத்தகங்கள் அறிமுகம் செய்வதை முயற்சித்து வருகிறேன்.
இதுவரை விகடன், கல்கி, காலச்சுவடு படித்து வந்தவர்கள். புதுமைபித்தன்,
நரசய்யா, இரா.முருகன், சு.ரா. என நான் கொடுக்கும் புத்தகங்களை ரசிக்கிறவர்கள்,
'விஷ்ணுபுரம்' கொடுத்தால் திருப்பியடிக்கிறார்கள். நானே மிகவும் கஷ்டப்பட்டு
அறுபது பக்கம் தாண்டுகிறேன். ஏன்?

3. செய்திகளை சிறுகதையாக்கித் தருவது சிறப்பா? வரலாறாகவே மிகைப்படுத்தி
சுவைபட சொல்லல் மேலா?

ஜெயமோகனும் இலக்கியமும்

திண்ணை

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு.
அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!
தமிழில் சிறுபான்மை இலக்கியம்
சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

கலைச்சொற்களைப்பற்றி
தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?
முடிவின்மையின் விளிம்பில்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
சாக்கியார் முதல் சக்கரியா வரை
உலகெலாம்...[சேக்கிழாரின் கனவு ]
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -- 2
இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்

கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. - மாலன்: (கலாச்சாரம் பற்றிய பதில்களுக்கு எதிர்வினை)
கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில ...
கலாச்சாரம் பற்றிய விவாதம் -- சில கேள்விகள்

அவதூறுகள் தொடாத இடம்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
மௌனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு
நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்
தேவதேவனின் கவிதையுலகம்
அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
மகாராஜாவின் இசை

புன்னகைக்கும் கதைசொல்லி --- -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து.... (முதல் பகுதி)
புன்னகைக்கும் கதைசொல்லி --- -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து.... (இறுதிப்பகுதி)
புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல், பி ஏ கிருஷ்ணன் [தொகுப்பு அருண்மொழி நங்கை]
'' நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் !'' அ.முத்துலிங்கம் நேர்காணல்

தக்கையின்மீது நான்கு கண்கள் - குறும்படம்
மாறுதலின் இக்காலகட்டத்தில்.......: எட்டு நூல் வௌ¤யீட்டு விழாவில் ஏற்புரை
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.

அன்புள்ள ஆசிரியருக்கு
சுந்தர ராமசாமிக்கு அன்புடன்
' XXX ' தொல்காப்பியம்
குறள்- கவிதையும் நீதியும்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - இரண்டாம் பகுதி
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு - மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - பகுதி :மூன்று - தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன?
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - மூன்றாம் பகுதி

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு - அனுபவப் பதிவுகள். -1
குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு - அனுபவப் பதிவுகள். -2

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( எழுதிய "பின்தொடரும் நிழலின் குரல்" நாவல் விமர்சனம்): க . மோகனரங்கன்

ஒரு விபூதியும் Matterum...

நேற்று பல அமெரிக்கர்கள் விபூதி வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். எல்லோருடைய
நெற்றியிலும் கருஞ்சாம்பல்; சிலர் வட்டமாக, சிலர் திலகமாக; இன்னும் சிலர் பஸ்ஸின்
கூட்டத்தில் தேய்ந்து விட்டடது போல; பலருக்கு ஒரு பெரிய கட்டை விரல் அவசரமாகத்
தீற்றி விட்டது போல. விசாரிக்க தைரியம் வரவில்லை. கண்ணும் கண்ணும் சந்தித்த
ஒரு விநாடியில் சிநேகப் புன்னகைத்து, விசாரித்ததில் 'ஆஷ் வெட்னெஸ்டே' தெரிய வந்தது.
அமெரிக்காவுக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டாலும்,
ரயிலில் அலுவலகம் சென்று வருவது இப்போதுதான். இதுவரை இந்த விஷயத்தை அறியாமல்,
என் கேள்விகளுக்கு தெளிவு தரும் வலைபக்கங்களை படிக்கிறேன். தமிழில் எங்காவது எழுதியுள்ளார்களா?




போன வாரம் ஒரு நாள், என்னுடைய ஆங்கில வலைப்ப்பதிவுக்கு திடீரென்று விருந்தினர்
வருகை எகிற ஆரம்பித்தது. ஓரிருவரே சுட்டி கொடுத்திருப்பதும், என்னுடைய
நண்பர் ஒருவர் மட்டுமே பார்வையிடும் ஆங்கில காப்பி/பேஸ்ட் பதிவுக்கு எப்படி இப்படி
ஒரு வரவேற்பு என்று விளங்கிக் கொள்ள முயன்றேன். எல்லாம் அந்த மனீஷா செய்த
மாயாஜாலம். 'ஏக் சோடிஸி லவ் ஸ்டோரி' என்று பந்தா செய்து ஏமாற்றிய மாதிரி
மீண்டும் ஒரு முயற்சி செய்வதை எண்டிடிவி
சொல்லியிருந்தது. அதை எடுத்து லிங்கியிருந்தேன். வலையில் பலரும்
மனிஷாவின் சூடான 'டம்' படத்துப் புகைப்படங்கள் என விழுந்து விழுந்து தேட,
கூகிள் சுறுசுறுப்பாக தேடி கொடுத்திருக்கிறது. கூட்டம் இப்பொழுது வழக்கம் போல் குறைந்து விட்டது. கூகிள் எப்படியோ
புத்திசாலித்தனமாக என்னுடைய வலைப்பதிவுக்கும் சூடான விஷயத்துக்கும் சம்பந்தமில்லை என்று
முடிவு செய்து கழற்றிவிட்டுவிட்டது. Sex Sells!

சுஜாதாவிடம் சில கேள்விகள்

அம்பல அரட்டை -

kajan: புகழ் அடைந்தவர்கள் மீடியாவில் கருத்துச் சொல்லும் போது
அக்கருத்தில் தங்களுக்கு நிச்சயமற்ற தன்மை இருப்பின்
அது பற்றி கதைக்கலாமா ?

krishnan: சார் location பார்க்க ஏன் பாடலாசிரியர் செல்ல
வேண்டும் (வைரமுத்து bangkok போனது பற்றி) ?

ஹரன்பிரசன்னா: சுஜாதா.. பின்நவீனத்துவம் பற்றி தமிழில் எதாவது
புத்தகம் இருக்கிறதா?

சுந்தர்: ஷங்கர்.. உங்கள் கருத்தில் உடன்பாடில்லை.. இந்தியர்கள்
வௌ¤தேசத்தில் மட்டுமே கடுமையாக உழைக்கிறார்கள் என்று எந்த general சொன்னார்?

krishnan: சார் நீங்கள் foreign film festivalsக்கு செல்வதுண்டா..
சென்னையில்? மற்ற இடங்களில் ?

krishnan: சார் சாகித்ய அக்கா தம்பி சாரி..அக்காதமி மீது உங்களுக்கு
என்ன கோவம் :-)

ஹரன்பிரசன்னா: வணிகப்பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான சிறுகதைகள்
மிக மோசமாக இருக்கின்றன. அதற்கென ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா?
இல்லை ஆழமாகப் படிக்காதவர்களை அந்தக் கூட்டத்தில் சேர்த்துவிட்டார்களா?

ஹரன்பிரசன்னா: சுஜாதா.. அன்னியன் ஏன் தவறு? எனக்குத் தலை வெடித்துவிடும்.
சீக்கிரம் சொல்லுங்கள். :(

usha1986: சுஜாதா, சின்ன வயதில் உங்களுக்கு நடிக்க ஆசை வரவில்லையா?

shankar: sir i want to participate in director discussion for thrshing out
stories? how it be possible? what to do for that? that too part time??

krishnan: நன்றி பிரசன்னா..சார் ஆசியுடன் ழ அமைப்பு மாதிரி கைப்பேசி
கலைச்சொற்கள் தொடங்கலாமா ?

ஹரன்பிரசன்னா: வர்ணஜாலம் என்றொரு படம் எண்டமூரி வீரேந்திரநாத்தின்
கதை எனக்கேள்விப்பட்டேன். நிஜமா?

krishnan: சார் நான் கூட ஆயுத எழுத்து எதோ ஆங்கில படத்தின் inspiration
என்று கேள்விப்பட்டேன்..உண்மையா ?

ஹரன்பிரசன்னா: உயிரே நாவல் வடிவம் எப்போது வெளிவரும்? அல்லதுவந்துவிட்டதா?

விடைகளுக்கு: அம்பல அரட்டை.

புதன், பிப்ரவரி 25, 2004

பயண நேரம் - சல்மா

பாபு மற்றும் பிகே சிவகுமார் ராகாகியிலும் மரத்தடியிலும் தங்களை ஈர்த்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சல்மா சிலசமயம் பழக்கப்படுத்திய உருவகங்களையே கொடுப்பதாக பட்டது.

'கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின்
தனிமையை'


என்று முடிக்கும் அவர் 'இரண்டாம் ஜாமத்துக் கதை'யில்

'சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது'
என மீண்டும் பயன்படுத்துகிறார்.

பெண்ணியக் கவிதைகள் தொலைக்காட்சி சீரியல்களைவிட
ரொம்ப கழிவிரக்கம் பேசுகிறது என்று தோன்றும் எனக்கு,
அவருடைய தொகுப்பில் வேறுபட்ட பதிவுகளையும் பார்த்தது
நல்ல அனுபவமே.



பயண நேரம் - சல்மா

பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்

சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட

மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்

பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு

முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க

ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.

பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்

சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்

நன்றி: ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - சல்மா -
காலச்சுவடு பதிப்பகம் - விலை ரூபாய் 40

வலைப்பூ மேய்தல்

1. சங்கர்:
குட்டி இளவரசியின் அறிதல்கள்
காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சகானா
'நாளைக்கு மழை பெய்தது'
என்கிறாள் அமைதியாக
- மனுஷ்யப் புத்திரனின் 'இடமும் இருப்பும்' தொகுதியிலிருந்து.
நன்றி: சுவடுகள்

2. ராதாகிருஷ்ணன்:

"தமிழ்நாட்டுப் பறவைகள்"
டேவிட் ஆட்டன்பரோவின் 'The Life of Birds'-ஐ வாசித்த சமயத்தில், தமிழிலும் இப்படி ஒரு புத்தகம் இருந்தால்....என்று ஏங்கியதுண்டு. இந்த அளவிற்கு நேர்த்தியான, அரிய புகைப்படங்கள், ஆழமான செய்திகளுடன் ஒரு புத்தகத்தைத் தரமாகப் பதிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்று தோன்றுகிறது. நமக்குள்ள திறமை குறைவு காரணமல்ல, வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததுமே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இன்றைய வாழ்க்கையில் பறவைகளைப் பார்க்கவேறு நேரம் இருக்கிறதா நம் மக்களுக்கு! இருப்பினும் ஹிந்து பத்திரிக்கையின் புத்தக மதிப்புரைப் பகுதியில் தமிழ்நாட்டுப் பறவைகள் என்ற தலைப்புடன் ஒரு மதிப்புரையைக் கண்டவுடன் மகிழ்வேற்பட்டது. தமிழில் இம்மாதிரியான பல்துறைப் புத்தகங்கள் அடிக்கடி வந்தால் நன்றாயிருக்கும்.
நன்றி: நினைவோடை

3. யாழ்.NET:

பேசாப் பொருளை பேச துணிதல்
ஆழமான பன்முகப்பட்ட சில பிரச்சினைகள் பற்றி எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் பேசுதல் முறையல்ல என்பது ஒரு அனுபவ உண்மை. எனினும், அவற்றைப் பற்றிப் பேச வேண்டிýய வேளையில் பேசாமல் விடுவதும் மிகப் பெரிய தவறாகும்.

வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு அத்தியாவசிய அரசியல் நிலைப்பாடாகும். அதிர்ஷ்டவசமாக அந்த அரசியல் இலக்கு நோக்கைச் சுலபப்படுத்துவதற்கான பண்பாட்டு ஒருமைப்பாடு கிழக்கிலேயே அதிகம் உள்ளது.
நன்றி: Yarl.net Groupblog மற்றும் தினக்குரல் - 15.02.04

4. திவாகரன் முருகானந்தன்:

திரை ஆய்வு: தென்றல்
பறை இசை அனைத்து இசைகளின் தாய் இசை உடல் உழைப்பின்றி கம்பியை மட்டும் நீட்டி இசை வாசிப்பது அவாளுக்கு சுகமானது தவிலை தூக்கி, தப்பை தூக்கி உடலை வருத்தி இசையைச் சொல்வது தமிழனின் கலை. கர்நாடக இசைக்கு அளிக்கும் முக்கியத்துவம் தாய் இசையான பறைக்கும் அளிக்கப்பட வேண்டும்.

தமிழன் பூமியை வைத்து விவசாயம் செய்தால் பார்ப்பனர்களாகிய நீங்கள் சாமியை வைத்து விவசாயம் செய்கிறீர்களா? தமிழ்நாட்டு ஆலயங்களில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும். இதை தடுத்தால் இதோ நாங்கள் உயிரை விடுகிறோம் என்று கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யும் 3 தமிழ் இளைஞர்கள்
நன்றி: படித்ததில் சுட்டது மற்றும் தமிழ்நாதம்

5. மயிலாடுதுறை ஜெ. ரஜினி ராம்கி:

ஜெயா வணக்கம் - கோவையின் பிரபல தொழிலதிபர் வானவாராயர்
சுவாமி விவேகானந்தர் தன்னை அதிகமாக பாதித்திருப்பதாக சொன்னார். விவேகானந்தர் சொன்ன ஆன்மீ£கத்தில் தெளிவு இருந்தது தேடல் இருந்தது.. அதெல்லாம் இந்த காலத்தில் குறைஞ்சுகிட்டே வருது என்றார். இந்தியா தனக்கென்று லட்சியம் எதையும் கொள்ளாததுதான் நமது பிரச்சினை என்றவர் மகாத்மா காந்திஜியின் பொருளாதார கொள்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும் என்றார்.

பாரதீய வித்யாபவனின் தலைவராக இருந்து கொண்டு இந்திய கல்வி முறையை மாற்றியமைக்கும் பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக சொன்னார். விஞ்ஞானத்தோடு மெய்ஞானமும் இணைந்து செயல்பட்டே ஆகவேண்டும். அதை முன்னெடுத்து செல்ல இந்தியா போன்ற ஆன்மீக கலாசாரத்தை அடிப்படையாக தேசத்தால்தான் முடியும் என்று சொல்லி நிமிர வைத்தார்
நன்றி: சில்லுண்டியின் சிந்தனைகள்

செவ்வாய், பிப்ரவரி 24, 2004

ஆண்களை மிரள வைக்கும் கேள்வி!?


Rudy Park by Darrin Bell and Theron Heir

புத்தக வெளியீடுகள் - எழுத்தாளர்கள் சங்கம்

28.02.2004 சனி 6:00 PM
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்
அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: கி.ஆ. சச்சிதானந்தம்
ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்ரமணியம்
தலைமை: டாக்டர் சுந்தரமூர்த்தி

புத்தக வெளியீடு: (1)
'கொங்குதேர் வாழ்க்கை' (சங்க காலச் செய்யுள் சில உரையுடன்) - எஸ். சிவகுமார்
வெளியிடுபவர்: எஸ். ராமச்சந்திரன்
பெற்றுக் கொள்பவர்: பல்லடம் மாணிக்கம்

புத்தக வெளியீடு: (2)
'புதுக்கவிதை வரலாறு' - ராஜமார்த்தாண்டன்
வெளியிடுபவர்: வெங்கட் சாமிநாதன்
பெற்றுக் கொள்பவர்: கா மோகனரங்கன்
நன்றியுரை: ராஜமார்த்தாண்டன்

புத்தக வெளியீடு: (3)
'தென்குமரியின் கதை' (கன்யாகுமரி மாவட்டம்: சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை) - அ.கா. பெருமாள்
வெளியிட்டு பேசுபவர்: பழ. கருப்பையா
நன்றியுரை: அ.கா. பெருமாள்

புத்தக வெளியீடு: (4)
'இரவு' (எலி வெசெல்: சுயசரிதை) - தமிழில்: ரவி இளங்கோவன்
வெளியிட்டு பேசுபவர்: கோபாலகிருஷ்ணன் ('சூத்ரதாரி' எழுதியவர்)
பெற்றுக் கொள்பவர்: அ. சாரங்கன் (ஓவியர், கு. அழகிரிசாமியின் மகன்)

புத்தக வெளியீடு: (5)
'ஏழாம் உலகம்' (நாவல்) - ஜெயமோகன்
வெளியிடுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: ·ப்ரான்சிஸ் கிருபா (கவிஞர்)
நன்றியுரை: ஜெயமோகன்

மேலும் விவரங்களுக்கு: tamilininool@yahoo.co.in/044 28110759

ஒரு காதல் கதை - சாரு நிவேதிதா

முகம் I: "சரி, பேசி விட வேண்டியதுதான்' எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று நினைத்த
படி, வாங்கி வந்த போகர் வைத்தியம் 700 என்ற நுõலைப் புரட்ட ஆரம்பித்தேன். கண்ணில்
தென்பட்ட பக்கம் சுவாரசியமாக இருந்தது. இதோ:

""உலகத்தில் மக்கள் கழுதையை இழிவாகக் கருதுகிறார்கள். ஆனால், உண்மை அப்படியன்று.
கழுதைப் பிறவி மாண்புடையதாகும். அதற்கு மறுபிறவி இல்லை. கழுதையைக் கொண்டு பற்பல
வித்தைகளை உலகில் செய்து முடிக்க முடியும்.

உதாரணமாக, சுழல் வண்டு, குழியானை, மின்மினிப்பூச்சி, ஈப்பு1⁄4 என்னும் பூச்சி, நாய்ப்பால்,
மருள் ஊமத்தை விதை, ஐவிர1⁄4ச்சாறு, பேய்க்கரும்பின் சாறு, செந்நெல்முளையரிசி, பாதரசம்,
கோரோசனை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கல்வத்தில் இட்டு அதோடு கழுதையின் விந்தை
எடுத்துச் சேர்த்து அரைக்க வேண்டும். இதனோடு சல்1⁄4க்கொடியின் வேரையும் அரைத்துச் சேர்த்துக்
குளிகையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இக்குளிகையோடு பெண்ணை வசியம் செய்ய நினைப்
பவனுடைய கண் பீளை, காதுக்குறும்பி, மூக்குச்சளி, எச்சில், வேர்வை ஆகிய ஐந்து அழுக்குகளை
யும் அவனுடைய விந்தையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட குளிகையைப் பால்,
பழம், காய்கறி, சாப்பாடு, வெற்றிலைப் பாக்கு, பலகாரம் ஆகியவற்றுள் எதனுடனாவது சேர்த்துத்
தனக்கு வேண்டியவளை உட்கொள்ளச் செய்தால் அவள் வசியமாவாள்...''

என்னவென்று சொல்ல முடியாத அதி ஆச்சரிய உணர்வுகளுடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு
நிமிர்ந்தேன்.



நான் மிக நேர்த்தியாக ஆடை அணிவேன். ஒரு நாள்... தலை குளித்திருந்தேன். தலை பின்ன நேரம் இல்லை.
தலைமுடி விரிந்து கிடந்தது. கருஞ்சிவப்பு நிறப் புடவை. நான் கரும்பலகையில் எழுதிக் கொண்டே
இருந்தேன். பொதுவாக மாணவர்கள் முன்னே புடவைத் தலைப்பை பறக்க விட மாட்டேன். இதிலெ
ல்லாம் நான் மிகவும் கண்டிப்பு. ஆனால், அன்றைக்கு என்று பார்த்து செருகியிருந்த புடவைத்
தலைப்பு அவிழ்ந்து விட்டது. வழுக்கிக் கொண்டு போகும் சேலை அது. அந்த வகுப்பில் குறும்பு
செய்பவர்கள் அதிகம் என்று பேர்.



நன்றி: கோணல் பக்கங்கள்

தமிழோவியம் மின்புத்தகங்கள்


Tamiloviam Ebooks
நம்ம வலைப்பதிப்பாளர்களுக்காக தமிழோவியம் பதினைந்து சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறது. புத்தகங்களை உடனடியாக வலையிறக்கி வாசிக்கும் சௌகரியம். ஷிப்பிங் அண்ட் ஹாண்ட்லிங், இந்தியா விஜயம், என்றெல்லாம் பிக்கல் பிடுங்கல் கிடையாது என்பதையும், கட்டிலில் தாச்சுண்டு படிக்க முடியாது போன்றவற்றையும் வெங்கட்/பத்ரி என அனைவரும் அலசி விட்டார்கள். இந்தப் புத்தகங்களில் பலவற்றை நான் வாங்கி இருந்தாலும், படித்து முடித்திருப்பது 'அலகில்லா விளையாட்டு' மட்டுமே. அதன் விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.

தமிழோவியம் வெளியிட்ட மின்-புத்தகங்களின் பட்டியல்:

ஆயிரம் வாசல் உலகம் - என். சொக்கன்
வலைத்தமிழ் - ஐகாரஸ் பிரகாஷ்
அலகிலா விளையாட்டு - பா. ராகவன்
அம்பானி - என். சொக்கன்
உள்ளம் உதிர்த்த பூக்கள் - பா.ராகவன்
பேனா மன்னர்கள் - முத்துராமன்
முதல் பொய் - என். சொக்கன்
பிருந்தாவனில் வந்த கடவுள் - நாகூர் ரூமி
விவாஹப் பொருத்தம்: ஒரு விவாதம் - ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

கூபான் எண்ணை இங்கிருந்து வெட்டி ஒட்டலாம் --> VCT02EB029

இணையத்து ஸ்டைல் டிஸ்க்ளெய்மர்கள்:
1. இந்த புத்தகங்களை நீங்கள் வாங்குவதால் எனக்கு நயா அணா கூலி கிடையாது.
2. இணையத்தில் தவணை அட்டையை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விடவும்.
3. புத்தகம் படிக்கும்போது உங்கள் மானேஜர் வந்தால் நான் பொறுப்பல்ல.
4. புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை (என் போன்றவர்களுக்காக) வெட்டி வேறெங்கும் நோட்பேடிட முடியாது.
5. இருநூறு பக்கத்தை பிரிண்டருக்கு அனுப்பி அதில் வரும் சத்தத்தில் கூட்டாளிகள் தூக்கம் கலையலாம்.
6. புத்தகத்தை ஊடுருவி கொந்த முடிந்தால் எனக்கும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

திங்கள், பிப்ரவரி 23, 2004

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

rhizomes&nodes: "நாடெர் எடுத்துள்ள முடிவு குறித்தும் எழுத வேண்டும்.அவர் ஜனநாயக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையே- ஆனால் இம்முடிவு யார் தரப்பை வலுப்படுத்தும், ஒட்டுகள் சிதறினால் யார் பயனடவார்கள்?".

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் 'ராமஜெயம்' என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்ஃப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் பல மாநிலங்களில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில் ஆல் கோர் தோற்கக் காரணமானவர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர்: நாடர்.

த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. பஞ்சதந்திரக் காலத்தில் இருந்து சொல்லி வரும் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' ஏனோ நினைவுக்கு வருகிறது.

மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா....

சில நாட்கள் முன்பு பிபிசியின் இந்த நாள் பகுதியில் லுமும்பா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்திருந்தார்கள். இவரை குறித்து எனக்கு முதலில் அறிமுகம் செய்தவர் கணேஷ். ராகாகி-யில் அவர் எழுதியதில் இருந்து:


காங்கோ நாட்டின் முதல் பிரதமர் "லூமும்பா".... சுருக்கமாகச் சொல்வதானால் காங்கோ நாட்டு காந்தி...

Patrice Lumumbaதனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்.....ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் "மொபுட்டு" வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்.... ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்... அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்.....சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் "மொபுட்டு" லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது........

படம் பாருங்கள்.. நமக்கு பரிச்சயமில்லாத, பழக்கமில்லாத ஓரு நாட்டின் தலைவன்....இருந்தாலும் படம் பார்த்தபின் லூமும்பா நம் மனதை தொட்டுச் செல்வது உறுதி... அதுவே இந்த படத்தின் படைப்பாளிகளின் வெற்றியும்.........

படம் பிரெஞ்ச் மொழியில், ஆங்கில sub titles......


பிபிசி செய்தித்தளம் மேலும் தகவல்களைக் கொடுக்கிறது.

(அமெரிக்காவில் எந்த ஊடகமாவது இதே போல் 'ஹைதி' குறித்து பாரபட்சமற்ற அலசல்களைக் கொடுக்கிறதா?):

* கசாய் மாகாணத்தில் ஆயிரம் பேரை கொன்று குவித்ததாக லுமும்பாவின் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.

* நான்கு மாதமே அரியணையில் இருந்த பிறகு, கம்யூனிச சிந்தனைகளால் ராணுவத்தின் ஆதரவை இழக்கிறார்.

* புதிய ஜனாதிபதி மொய்ஸே ஷோம்பெ "இது எங்களுடைய பிரச்சினை; மற்றவர்கள் தலையிட வேண்டாம்" என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க முயற்சித்ததை (இந்தியா காஷ்மீர் விவகரத்தைத் தடுப்பது போல்) தடுத்து விடுகிறார்.

காலம்நிகழ்வு
ஜூன் 1960லுமும்பா பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
அக்டோபர் 1960பதவி பறிக்கப் படுகிறது
டிசம்பர் 1960லுமும்பா கைதாகிறார்.
18 ஜனவரி 1961லுமும்பா மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் encounter முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
செப்டம்பர் 1961புதிய ஜனாதிபது கசுவுபூ ்கர்னல் சோசப் மொபுட்டுவை ஆட்சியிழக்க வைக்கிறார்.
நவம்பர் 2001அமெரிக்கா மற்றும் பெல்ஜியாவுக்குத் தெரியாமல் லுமும்பா கொலை அரங்கேறியிருக்காது என்னும் பெல்ஜியாவின் அறிக்கை வெளியாகிறது.்
பிப்ரவரி 2002பெல்ஜியா தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறது. சுதந்திரத்தை நிலைநாட்ட கொங்கோவுக்கு மூன்று மில்லியன் நிதி அள்ளித் தருகிறது.

ஆஸ்கர் - 'அ' முதல்... - சந்திரன்

நச்சாதார்க்கும் இனியன் : "ஆஸ்கர் பரிசு பெற்ற படங்களின் வரிசையையும் சிறு குறிப்பை மட்டுமே ஆசிரியர் தந்துள்ளார். ஏன் அந்தப் படம் ஆஸ்கர் பரிசு பெற்றது- போன்ற செய்திகள் நூலில் இல்லை. வெறும் தரவுகள் வாசகனுக்கு எந்தவித அனுபவத்தையும் தரப்போவதில்லை. படம் பார்க்காத பார்வையாளர்களையும் பார்க்க வைக்கும்படி படங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். நூலாசிரியர் பார்க்காத காரணத்தினால் பல படங்களை வாசகன் அறிந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருப்பது இந்நூலின் குறை!"
நன்றி: ஆறாம்திணை

பீடி - (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை): கோபி கிருஷ்ணன்

சிறுகதைகள் மீது என்னுடைய பார்வை, ஒரு சிலரின் கவிதை மேலான கருத்து போல் ஆகி வருகிறது. குமுதம்/விகடனாலோ அல்லது இணையத்தில் காணப்படும் கதைகளினாலோ, இப்படி ஒரு எண்ணம் மேலோங்கி விட்டது. (இவ்வாறு தோன்றுவதற்கும் நான் கதை எழுத ஆரம்பித்ததுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை Smile). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் பிடித்த ஒன்றில் இருந்து சில பகுதிகள்:

"பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு... கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.

சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.

புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.

புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.

1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் 'உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?' என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.

பீடி ஒரு குறியீடு."

நன்றி: ஆறாம்திணை

யோசிப்பாரா ரஜினி? - ஆர்.வெங்கடேஷ்

தமிழ் சிஃபி - சமாச்சர்:: ரஜினி: "நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இந்தியா முழுவதுமே, சினிமா தரும் பாப்புலாரிட்டியை நம்பி, அரசியலில் கால் வைக்கும் பிரபலங்கள் ஏராளம். குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யாகவோ, மந்திரியாகவோ கூட ஆகிவிடுகிறார்கள். கவர்ச்சி அரசியல் என்பது இன்றைய இந்தியாவின் தலையெழுத்துக்களில் ஒன்று. அதை இந்தியர்கள் ஏற்கவும் பழகிவிட்டார்கள்.

ஆனால், ரஜினி விஷயத்தில் எம் கவலையெல்லாம், ரசிகர்கள் பக்கம்தான். இன்னும் ரஜினி வாயைத் திறந்து தமது அரசியல் பயணம் பற்றியோ, கொள்கைகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை. தனக்கென இயக்கம் கண்டு, ஜனநாயக அரசியலில் அவர் பங்கெடுத்துக்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கவும் இல்லை. ஆனால், ரசிகர்கள் மட்டும் உதைபட்டுக்கொண்டும், மண்டை உடைந்துகொண்டும் இருக்கிறார்கள்."

வெள்ளி, பிப்ரவரி 20, 2004

சுற்றுபுற வீடுகள் (4) - Muse Log

நான் கோக் குடிப்பதில்லைதான் என்றாலும், விரும்பி அருந்தும் மனைவி மற்றும் நண்பர்களை உஷார் செய்யவேண்டும். இந்தியாவில்(லும்) எந்தவிதமான நச்சுப் பொருளகளும் இல்லை கற்பூரமேற்றி சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் தயார் செய்யும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் புட்டிகள் வாங்குபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்தத் தண்ணீர் குடித்தாலும் ஆபத்தே. பேசாமல் சக்கரவாகப் பறவையாகி மழையை மட்டும் அட்மாஸ்ஃபியருக்கு அப்பால் சென்று குடித்து விட்டு உயிர் வாழவேண்டும்.

குமரகுருவின் ம்யூஸ்-லாஃக் மூலம் என்னுடைய வருகைப் பதிவேடு அதிகரித்தது. அவருடைய Muse Log-க்கு ஒரு அறிமுகம் தேவையில்லை. கல்யான் வர்மாவின் கோக் ஏன் குடிக்கக்கூடாது என்னும் செய்முறை விளக்கத்தை பார்க்க சொல்லியிருந்தார்.

குமரகுரு சொல்வது போல் இந்தியா மிளிர்கிறது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது. விஐபி லக்கேஜ் விளம்பரத்தில் வந்த அம்மா-பையன் பிரிவாக இருக்கட்டும், இப்போது வரும் ஐசிஐசிஐ 'நான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும்' ஆகட்டும், ரிலயன்ஸ் மொபைலின் சம்பந்தம் இல்லாமல் ஊக்கமடைபவர்களைக் காண்பிக்கும் செல்பேசியாகட்டும், 'ஹமாரா பஜாஜ்' உருக்கமாகட்டும், ஒரு செண்டிமெண்டல் ஃபூலாகிய எனக்குப் பிடித்த விளம்பரங்கள் அனைத்துமே.

அவர்கள் தாய்மண்ணையும், இந்தியப் பற்றையும், பாசபந்தத்தையும் காட்டி காசு செலவழிக்க சொல்கிறார்கள். வாஜ்பேயி ஓட்டு கேட்கிறார். தவறா?
நன்றி: வர்மா






ஆஸ்கார் ஆருடங்கள்

ஆஸ்கர் விருதுகளில் கிட்டத்தட்ட நிறையவற்றை ஹேமந்த் சரியாகவே கணித்துள்ளார்.

என்னுடைய பட்டியல்:

விருதுபெறப்போகிறவர்பெற்றிருக்க வேண்டியவர்
சிறந்த நடிகர்ஜானி டெப்சான் பென்
சிறந்த துணை நடிகர்டிம் ராபின்ஸ்பெனிசியோ டெல் டோரோ
சிறந்த நடிகைடயான் கீடன்சர்லீஸ் தெரான்
சிறந்த துணை நடிகைஹாலி ஹண்டர்ரெனீ செல்வகர்
சிறந்த வரைமுகட்ட படம்ஃபைண்டிங் நீமோ??? (தெரியாது)
சிறந்த கலைலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்நான் விரும்பும் படம் பரிந்துரைக்கப் படவில்லை (பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்) எனவே, தி லாஸ்ட் சாமுராய்
சிறந்த உடை அமைப்புலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்லாஸ்ட் சாமுராய்
சிறந்த முகப்பூச்சுலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்லாஸ்ட் சாமுராய்
சிறந்த இயக்கம்லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்மிஸ்டிக் ரிவர்
சிறந்த எழுத்து (புத்தகத்தை அடிப்படையாக வைத்து)லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்
சிறந்த எழுத்து (திரைக்கதை)லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன்ஃபைண்டிங் நீமோ
சிறந்த மாயாஜால வித்தைலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்
சிறந்த இசை (திரைப்படம்)லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்பிஃக் ஃபிஷ்
சிறந்த படம்லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்மாஸ்டர் அண்ட் கமாண்டர்: தி ஃபார் சைட் ஆஃப் தி வோர்ல்ட்



ஆஸ்கார் பரிந்துரைகள் வந்தவுடன் கொடுத்த வலைப்பதிவு.

கணினி உபயோகங்கள்


For additional tech toons visit jklossner.com

எனக்குப் பிடித்தக் கதைகள்(73) - பாவண்ணன்

தேடியதும் கிடைத்ததும் - கரிச்சான் குஞ்சுவின் "நூறுகள்"

1)
பிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட தூரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நூறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம்.


"அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே" என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.


எல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார்.

----
2)
வாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.

எப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர். வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நூறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நூறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது நம் மனத்தில் "நூறுகள்" என்னும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதை ஆழமாக வேரூன்றுகிறது.

*

http://www.thinnai.com/ar0822035.html

'நாவலும் யதார்த்தமும்' - சுந்தர ராமசாமி

1.
பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் மேடைப் பேச்சுகளை உள்ளூர ஒரு அநாகரிகம் என்றுதான் என் மனம் மதிப்பிடுகிறது. தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து தான் விரும்பும் கருத்துக்களை பேச்சாளர் கூறுவது; அதற்கான நேரத்தையும் அவரே தீர்மானித்துக் கொள்வது; பேசி முடித்ததும் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பேச்சைப் பற்றி என்ன அபிப்ராயம் என்பதை அறிய துளிகூட அக்கறை இல்லாமல் மற்றோரிடத்துக்குப் பேசப் போய்விடுவது. பேச்சாளர் என்ன நினைக்கிறார் என்பது கேட்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் பேச்சைக் கேட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பேச்சாளருக்குத் தெரிவதேயில்லை. அவருக்கு அதற்கான அக்கறையும் இல்லை. சிந்தனை உலகத்தைச் சார்ந்த இந்த ஒருவழிப் போக்குவரத்தைத்தான் நான் அநாகரிகம் என்கிறேன்.

----
2.
எங்களுக்கு அந்தக் கவலை இல்லை என்று நீங்கள் சொன்னால் அதிகக் கவலை கொண்டிருக்கிறீர்களோ என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். ஏனென்றால் எந்த விஷயத்தைப் பற்றி நான் கவலை கொண்டிருக்கிறேனோ அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் யாராவது விசாரித்தால் எனக்கு அதுபற்றி கவலையில்லையே என்றுதான் சொல்வேன். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதுதானே மனித சுபாவம். மனிதர்களுக்குரிய அநேக சுவபாவங்கள் எனக்கும் உண்டு. என் பிம்பத்திற்கு அந்தச் சுபாவங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்டு.

----
3.
ஒரு நாவலைப் படிக்கும்போது அது ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உறவு சாதகமானதா? பாதகமானதா? நிறைவைத் தரக்கூடியதா? அல்லது குறையுணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதா என்பதையெல்லாம் இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது. நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். நமக்குக் கட்டோடு பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். நண்பர்களைவிட அதிகமாக அவர்களை நினைத்துக் கொள்கிறோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் நமக்குப் பிடிக்கும் நாவல்கள்தான் நம்மைப் பாதிக்கின்றன என்பது அல்ல. பிடிக்காத நாவல்களும் நம்மைப் பாதிக்கின்றன. எதிர்மறையாகப் பாதிக்கின்றன. எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாத நாவல் மனதிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறது. நேற்றுப் படித்து முடித்த ஒரு நாவல் இன்று மனதிலிருந்து உதிர்ந்துபோய்விட்டது; 20 வருடங்களுக்கு முன்னர் படித்த நாவல் மனதுக்குள் இன்றும் ஜீவகளையுடன் இருக்கிறது. ஏன் ஒன்று உதிர்ந்துபோயிற்று? ஏன் மற்றொன்று உயிர்ப்புடன் வாழ்கிறது? படைப்புச் சம்பந்தப்பட்ட அடிப்படையான பிரச்சனையே இதுதான்.

----
(திருவண்ணாமலை, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை - 16.8.1999)

http://www.thinnai.com/ar0815033.html

தமிழில் எழுதலாம் வாருங்கள்! - காசி

வலையில் பரப்பலாம் வாருங்கள்: "புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன."

சுவாரசியமான கேள்விகளுக்கு விடையளிப்பதாக வாக்கு கொடுத்து காசி ஆரம்பித்திருக்கிறார்.

வியாழன், பிப்ரவரி 19, 2004

கம்பீரம் - திரைப்பாடல் அறிமுகம்

நட்சத்திரங்கள்: சரத்குமார், லைலா, ப்ரணதி
இசை: மணி ஷர்மா

ஒரு சர்க்கரை நிலவேவும், ஆள்தோட்டா பூபதியும் கொடுத்த பின்பு மணி ஷர்மாவின் இசைக்குப் பெரிய ரசிகனாய் ஆகி யிருந்தேன். ஏழுமலை, நரசிம்மாவுக்குப் பிறகு 'சித்தப்பா' படத்துக்கும் இது போதும் என்பதாலோ என்னவோ அடக்கியே வாசித்திருக்கிறார்.


1. ஒரு சின்ன வெண்ணிலா கல்பனா 1/4 (பாடல் வரிகளுக்காக)
காதலனின் நினைப்பில் கசிந்துருகும் காதலி தாலாட்டுகிறார். காதலியின் தோழிகளும் கோரஸ் நடனமாடுகிறார்கள். தூக்கம் வராமல் கஷ்டப்படும்போது கேட்டால் பாடல் முடிவதற்குள் 'கொர்' விடலாம். தமிழ் சினிமா தத்துவத்தின் படி, இவ்வாறு ஆராதித்தால், இடைவேளைக்குப் பிறகு அனேகமாக ஹீரோயினுடன் சண்டையோ, அல்லது மனைவியின் அகால மரணமோ நிச்சயம். எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாக, உதயசூரியனை குறித்தும் மறக்காமல் நினைவூட்டுகிறார்.

சிரிக்க வைக்கும் வரிகள்:

'அந்தக் கோவில் கதவை மூடு
இவள் கைகூப்பும் கடவுள் நீதான்!
அடக் கண்ணீரே இல்லாக் கண்கள்
இனி என்னோட கண்கள்தானே!'


2. கண்ணின் மணியே எஸ்.பி.பி., குழந்தை வைஷாலி 2/4
ரொம்ப நாளைக்குப் பிறகு அப்பாவும் பையனும் பாடும் அழகிய மெலடி. நடுநடுவே வரும் குழந்தை குரலில், கொஞ்சம் ரங்கீலாவின் சிறுவன் டைப் ராப்பும் பொருத்தமாக இருக்கிறது.

குழந்தையின் கேள்வி வரிகள்:

'மிக்கி மவுஸா மாறி டிஷும் போட வாப்பா...
உர்ருன்னுதான் எப்பவுமே இருப்பது ஏம்ப்பா?'


3. செம்பருத்தி பூவே ஸ்ரீனிவாஸ், கங்கா 1.5/4

சரத்தும் லைலாவும் வெளிநாட்டில் டூயட் பாடுகிறார்கள். நொடிக்கொரு சுற்றுலா தளம். ஜிகினா ஆடைகள். குழப்பமான உள்ளூர்காரர்களின் பார்வைகளுக்கு நடுவே ஆடுகிறார்கள். நாம PG-13 மட்டும்தானே பொதுவிடங்களில் செய்வோம், இவர்கள் கிட்டதட்ட R படத்துக்கான செய்கையெல்லாம் பப்ளிக்காக செய்கிறார்களே என வியக்கிறார்கள்.

சிந்திக்க சில வரிகள்:

'மனசுக்குள்ள வந்து மைதா அரச்சியே
முரட்டுத்தனமே உன்ன நான் முறுக்கிக் காட்டட்டா'


4. சம்பல் காட்டு கொள்ளைகாரி சங்கீதா 1.5/4
வெண்குழல்விளக்குப் பிடிக்க நிச்சயம் தியேட்டருக்கு வெளியே சென்று வரலாம். அதற்குள், அரைகுறை ஆட்டத்தை ரசிக்கும் வில்லனின் குகைக்குள் சரத்குமார் புகுந்திருப்பார். தங்கர் பச்சானுக்கு 'பத்திரக்கோட்ட மாமா' தேவைப்படுவது போல் 'கம்பீர'த்துக்கும் ஆட்டப் பாடல் அவசியம்தான் போல!

கொஞ்சம் XXX காட்டும் வரிகள்:

'இதோ இந்த இடுப்பு...
செங்கல் சூளை நெருப்பு
பஸ்மமாகத் தொட்டுக்கோடா டேய்!
ஒரே ஒரு சுண்டு விரல்
என்மேல வச்சுப்பாரு
ஒரு கிலோ எடை கூடும் டோய்'


5. நானாக நானிருந்தேன் விஜய் யேசுதாஸ், சுஜாதா 3/4

கிராமப்புற லொகேஷன். சுங்கிடிப் புடவையில் பாடலின் ஆரம்பத்தில் தோன்றும் லைலா, தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் தாவணி, அதுவும் இல்லாத பாவாடை-சட்டை என விதவிதமாக வெட்கப்படுகிறார். மணி ஷர்மாவின் அட்டகாசமான தெலுங்கு பீட் + சொக்கும் வரிகள் + காதல் தெறிக்கும் பாடகர்கள், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.


'குறுத்தோலையாய் நானும் உன் வாசல் வந்து ஊஞ்சலாட
மாவிலையாய் நீ சேர்ந்து கொள்வாயோ?
தூரிகை உதடு நீதான்
காகிதக் கன்னம் நான்தான்
இரவும் பகலும் எழுதேண்டா'


பாடல்களைக் கேட்க இங்கே செல்லவும்.
நன்றி: தமிழோவியம்

வலைப்பூ வைரஸ்

கோழி சுரம், சார்ஸ் போன்று இணையத்தில் மட்டும் தோன்றியிருக்கும் நோய் உங்களைத் தாக்கிவிட்டதா?

10. கணினி திரை ஒளிர ஆரம்பிப்பதற்கு முன்பே வலைப்பதிவுகள், உங்கள் கண்களுக்குத் தெரியும்.
9. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல், நான்கு தடவையாவது வலைப் பதிவீர்கள்.
8. உங்களுக்கென மூன்று வலைப்பதிவாவது இருக்கும்.
7. கேட்கும் பாடல், boss சொல்லும் வணக்கம், காலையில் ட்ரெயின் தவறவிட்டது என எதைப்பற்றியும் வலைக்குறிக்க விருப்பம்.
6. புதிதாக யாராவது இலவசமாக வலைப் பதிக்க வாய்ப்பளித்தால், பயனராகப் பதிந்து விடுவீர்கள்.
5. பத்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பின்னூட்டம் பகுதியை நோட்டம் விடுவீர்கள். அரை மணிக்குள் பதில் எதுவும் வராவிட்டால், பதில் வராத சோகத்தையே வலைப்பதிய வேண்டும்.
4. தினசரி நூறு வலைப்பதிவுகளையாவது மேய்ந்து, மறுமொழி வாயும் வைத்து விடுவீர்கள். பதில் பெரிதாகத் தோன்றினால், அதை அப்படியே உங்கள் பதிவுக்கு புதிய கருவாக்கி விடுவீர்கள்.
3. வார்ப்புருவை வாரத்துக்கு ஒருமுறையும், பின்னூட்ட சேவகரை மாதத்துக்கு ஒரு முறையும், வண்ணக்கலவைகளை பத்து நாளுக்கு ஒரு தடவையும், வடிவமைப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுவீர்கள்.
2. இன்று புதிதாக பார்த்த ஸ்மைலிகளையும், புதிய சின்னங்களையும் பின்னூட்டப் பெட்டிகளில் கொடுக்க வேண்டும்.
1. எட்டு விதமான வருகைப் பதிவேடோடு, அரட்டை பெட்டி, அறிவிப்புப் பலகை, செய்தியோடை, விருந்தினர் கணக்கெடுப்பு இத்யாதி வைத்துக் கொண்டிருப்பீர்கள்.

கொசுறு: அரசியல் சின்னமாக எங்கவது விளம்பரம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், வலைப்பதிவின் முகவரியை சுவரொட்டுவீர்கள்.

மூன்றுக்குக் கீழே ஆம் சொன்னால் - நீங்கள் கூகிள் மூலமாக இங்கு தடுக்கி விழுந்திருப்பீர்கள்.
மூன்று-ஐந்து கேள்விக்கு ஆம் என்றால் - வலைப்பூ மயக்கத்தில் உள்ளீர்கள்.
ஆறு கேள்விக்கு மேல் ஆம் என்றால் - வலைப்பூவிற்கு அடிமையாகி விட்டீர்கள்...

நன்றி: பவித்ரா அரசி

புதன், பிப்ரவரி 18, 2004

இந்தியனென்று சொல்லடா... இந்தியில் பேசடா...

தமிழ் தழைக்குமா என்று இலக்கிய உலகில் இருபத்தி ஆறாம் முறையாக (நான் கணக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து) விவாதம் நடந்து கொண்டிருக்க, இந்த ஹிந்திகாரர்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. இன்னும் பெயரிலிகள் கால் வைக்காத விரல் விட்டு எண்ணக் கூடிய வலைப்பதிவுகள் மட்டுமே (நானறிந்த வரையில்) உள்ளன. சேவாக் தன்மானம் பார்க்காமல் ஆங்கிலக் கேள்விகளுக்கு ஹிந்தியில் பதிலளிக்கிறாராம். அவர்களும் நியாயமான கோபத்துடன், ஆங்கிலப் பத்திரிகைகளை மொத்தமாக தாக்கியும், ஹிந்தியில் பேசுவதில என்ன அவமானம் என்றும் (நம்மைப் போன்றே) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

எனக்கு ஒரு டவுட்: பந்து வீச்சாளர் 'பாலாஜி' தமிழில் பேசினால் இந்திய ஊடகங்கள் வறுத்தெடுப்பதை விடுங்கள்; இவர்காள் என்ன சொல்வார்கள்!
(பின்னறிவிப்பு: "நான் ஹிந்திக்கு எதிரியல்ல; ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவாளனுமல்ல")

அட்வைஸ் கொடுக்க வயசு ஒரு தடையா?

©WONG MAYE-E/AP பதினேழு வயதே நிரம்பிய பாடகியானாலும் ஸ்டேசி ஆர்ரிகோ, ஆடை துறக்கும் சக பாடகிகளை கிண்டலடிக்கிறார். க்ரிஸ்டினாவும் ப்ரிட்னியும் பெண்ணினத்துக்கே இழுக்கு என்று சொல்லிவிட்டு, தான் ஒருபோதும் பாடல் விற்பதற்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ ஆடை குறைப்பு நடத்தமாட்டேன் என முழங்குகிறார். உண்மையான கவர்ச்சியான தன்னம்பிக்கை நிறைந்த மனதையும், மரியாதை தரக் கூடிய தோற்றத்தையும், பண்பட்ட நடத்தையையும் கொண்ட மதிக்கத்தக்க பெண்ணாக வேண்டும் என்னும் இவர் போன்ற எம்.டி.வி கால கலைஞர்களை பார்ப்பது அரிது.

உலக விற்பனை பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள இவர் பாடுவது என்ன பாடல் தெரியுமா? தற்கால கிறித்துவ போதகப்பாடலகள்!

எனக்குப் பிடித்த பத்து நடிகர்கள்

1. கிரீஷ் கர்னாட் - 'காதலன்' படத்தில் பார்த்திருப்பீர்களே!?
2. நக்மா - 'பாட்சா' படம் ஒன்று போதுமே!?
3. பிரபு தேவா - 'காதலன்' படத்தில் பார்த்திருப்பீர்களே!?
4. வடிவேலு - 'ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி' பார்த்ததுண்டா!?
5. எஸ்.பி.பி. - - 'காதலன்' படத்தில் பார்த்திருப்பீர்களே!?
6. ரகுவரன் - - 'காதலன்' படத்தில் பார்த்திருப்பீர்களே!?
7. நந்திதா தாஸ் - 'அழகி' படத்தில் பார்த்திருப்பீர்களே!?
8. சீமா பிஸ்வாஸ் - தலை பத்தில் இப்படித்தான் பெயர்கள் போட வேண்டும்!
9. நாகேஷ் - தலை பத்தில் இப்படித்தான் பெயர்கள் போடக் கூடாது
10. இயக்குநர் ஷங்கர் - 'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்'
பாட்டில் ஒரு விநாடி அசத்துவாரே.... பார்த்திருக்க மாட்டீர்கள்!

ஊக்கம்: மரத்தடி மடலில் சுரேஷ்

இருக்குமென்பார்... இருக்காது! இல்லாதென்பார்... கிடைத்து விட


Bush... another warrior from Texas

விஸ்கான்சினிலும் கெர்ரி (கொஞ்சம் வாலறுந்து) வெற்றி


Kerry... another Liberal from Mass.

திங்கள், பிப்ரவரி 16, 2004

எவ்வாறு புரிந்து கொள்வது!?

Birchtown Snakeday (c) 2001 - Morgan Bulkeley
மார்கன் பல்கெலியின் ஆயிலோவியம். மார்ச் 9 வரை பாஸ்டனின் ஹோவார்ட் யேஜெஸ்கி காலரியில் பார்க்கலாம்.

ஹார்வர்ட் பல்கலை. வழங்கும் 'மஞ்சப் பத்திரிகை'

Harvard University to have porn magazine - Sify.com: கல்லூரி மாணவர்களின் கலை தாகத்தைத் தீர்த்துக் கொள்ள ஹார்வார்ட் பேராசிரியர்களின் ஒப்புதலோடு 'சரோஜாதேவி' மேட்டர்கள் இல்லாத 'மஞ்சப் பத்திரிகை' வெளிவரப் போகிறது. இணையத்தில் கிடைக்குமா என்று இன்னும் தெரியாத இந்த சஞ்சிகையில் முழு வண்ண, 'ப்ளேபாய்' ரக, இளங்கலைப் பெண்மணிகளின் படங்களும் இருக்கும். ஆனால், அவற்றை தூண்டில்களாக வெளியிட்டு - புத்தகப்புழுக்களின் பால்வினை பிரச்சினைகளை அலசவும், செக்ஸ் கேள்விகளுக்கு விடையளிக்கவும், காமத்தை கலைக் கண்ணோட்டத்தோடு அணுக வைப்பதற்குமே இந்த 'H - அணுகுண்டு' என்னும் முயற்சி.

விளம்பரங்களின் மூலமும், பல்கலை.யின் பண உதவியின் மூலமே வெளியிடப்படுவதால், வருடத்திற்கு இரண்டு முறைதான் என்பது பல ஹார்வார்ட் மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறதாம்.

ஒப்புதல் அளித்த குழுவில் ஒரு பேரா. என்னுடைய சந்தேகத்துக்கு விடையளிக்கும் விதத்தில் சொல்கிறார்: "இந்தப் பத்திரிகையில் வரும் விஷயங்கள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், அங்கீகரிக்க மறுப்பது - பேச்சு சுதந்திரத்தை அடக்குவதற்கு ஈடாகும், என்பதையும் நாங்கள் நன்றாகவே அறிந்ததாலே அனுமதி கொடுக்கிறோம்".

ஃபிடல் காஸ்ட்ரோ

Photo of Fidel Castro addresses the crowd after his inauguaration பிபிசி: இந்த நாள்...: முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், இன்னும் அதே தாடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.


விளம்பரங்களும் விளம்பரதாரர்களும்

அமெரிக்கர்களுக்குக் கால்பந்தாட்டம் ரொம்பப் பிடித்த ஆட்டம். ரவுண்ட் ராபின் ஆட்டத்திலேயே இந்தியா-ஆஸ்திரேலியா பத்து முறை மோதி, காலிறுதி, அரையிறுதி, அது தவிர மூன்று இறுதி ஆட்டங்கள் என்பது மாதிரி ரொம்ப அலைக்கழிக்காமல் சடசடவென்று சீஸனை முடித்துவிடுவார்கள். கூடைப்பந்து மாதிரி ஸ்கோர் நொடிக்கொருதரம் ஏறாது. கிரிக்கெட் மாதிரி நாள் முழுவதும் சிக் லீவ் எடுத்து பார்க்க வேண்டாம். ·புட்பால் மாதிரி ஓரிரண்டு கோல்கள் போட்டால் கூட ஆறு, ஏழு என்று எண்ணிக் கொள்ளலாம்.

முதலில் இதை பார்க்க ஆரம்பித்தபொழுது தெருவோர கிரிக்கெட்டில் ஆட்ட எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டே போவதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்கோரை குறித்துக் கொள்ளும் எங்க டீம் ஆள், அவ்வப்போது ஒன்றிரண்டு 'கவனித்துக்' கொள்வார். "என்னடா... இப்பத்தானே வந்தே... அதுக்குள்ள எப்படிடா முப்பது எடுத்தே?" என்று எதிரணி வியந்தாலும், அவர்களும் போலி ஓட்டுக்கள் நிறையவே போட்டு ரன்களை குவிப்பார்கள். இங்கு ஆடும் ·புட்பால் அதிகாரபூர்வமாகவே ஒரு கோலுக்கு நிறைய ஸ்கோர் வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

இந்த வருட அமெரிக்க ·புட்பால் 'உலகக் கோப்பையை' எங்க ஊர் பாஸ்டன் அணி வென்றுள்ளது. அரையிறுதியில் பதினாலுக்கு பத்து என்று நாங்கள் முண்ணனியில் இருந்ததும், கடைசியில் மூன்று ரன் வித்தியாசத்தில் கோப்பையைத் தட்டி சென்றதும், 31,36 அடியிலிருந்தே கோலடிக்கத் தெரியாத வீரர், முப்பது நொடிகளே இருந்தபோது நாற்பத்தியோரடியில் இருந்து பந்தை புல்லட்டாக்கியது என்று மேலும் விளக்கி ஊசிப்போன வர்ண்ணை கொடுக்க விரும்பவில்லை.

அனேகமாக சூப்பர் பௌல் பார்ப்பது அதனூடே வரும் விளம்பரங்களுக்காகத்தான். நிகழ்ச்சியில் வரும் விளம்பரங்கள் இதற்கு முன் ஒளிபரப்பப் பட்டிருக்கக் கூடாது. விளம்பரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு என்று ஒரு வல்லுநர் குழு கூட உண்டு. அனைத்து விளம்பரங்களும் நகைச்சுவையுடன் விளங்க வேண்டும். இவ்வளவு கிராக்கி செய்தாலும் ஒரு நிமிடத்துக்கு மூன்று மில்லியன் டாலர் கட்டணம். சூப்பர் பௌல் ஆட்டம் ஏமாற்றினாலும் நடுவில் வரும் இவை நம்மை ஏமாற்றாது. ஜான்ட் ஜாக்ஸன் புண்ணியத்தினால் இனி அந்த லிஸ்டில், அரையிறுதியில் வரும் கேளிக்கை ஆட்டங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சில விளம்பரங்களையும், அதற்கு மனதில் தோன்றிய திரைப்பாடல்களையும் முதலில் பார்ப்போம்.


---------------------------------------------------

'இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்': இரு நண்பர்கள் தங்களின் நாய்களை நடைபயில கூட்டிச் செல்கையில் சந்திக்கிறார்கள்.

முதலாமவர்: 'என்னுடைய நாய் நான் சொன்னபடியெல்லாம் கேட்கும் தெரியுமா?'
இரண்டாமவர்: 'ஓ... அப்படியா'
மு: (ஆஜானுபாகுவான தன் நாயை பார்த்து) 'கொண்டு வா'
நாய் சமர்த்தாக ஓடிப்போய் ஒரு பியரை கொண்டு வந்து எஜமானரிடம் கொடுக்கிறது.
இ: (நோஞ்சானாய் இருக்கும் தன் நாயை பார்த்து) 'கொண்டு வா'
நாய் முதலாமவரின் மர்மஸ்தானத்தைக் கவ்வ, 'பட்-லைட்' பியரை காட்ச் பிடித்துக் கொள்கிறார்.

'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே': இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் போல் விறுவிறுப்பான ஆட்டம். ஆஸ்திரேலியர்கள் நடுவரை திட்டுவதை விட (அமெரிக்க பாணியில்) படு மோசமாக அர்ச்சனை செய்வதை கண்டுக்காமல் நிற்கிறார். பின்னாடியில் ஒலிக்கும் குரல், 'இவர் இந்த பொறுமையை எங்கு கற்றுக் கொண்டார்... தெரியுமா?' என காட்சியை அவர் வீட்டுக்கு மாற்றுகிறது.

அவரின் மனைவி முன்பு காட்டிய ஆட்டக்காரர்களை விட படு மோசமாக 'வீட்டை சுத்தம் செஞ்சு எத்தனை நாளாச்சு தெரியுமா? பாத்ரூம் குழாய் ஒழுகுதே... என்னிக்கு ரிப்பேர் பண்ணப் போறே? எனக்கு ஒரு புது டோஸ்டர் ஓவன் கேட்டேனே... அடுத்த எலெக்சனுக்குள்ளவாவது வாங்கித் தருவாயா? என்னை பார்த்து ஒரு தடவையாவது 'ஐ லவ் யூ' சொல்றியா?' என்று காச்மூச்.

இது பியருக்கான விளம்பரம் என்று சொல்லவும் வேண்டுமோ?

'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்': காலியான கோடை வீட்டிற்குள்ளே கரடிகள் பிரவேசிக்கின்றன. ·ப்ரிட்ஜை திறந்து மீந்து போன பீட்ஸாவையும், மற்ற உணவையும் பார்க்கிறது. கூலர் பெட்டியில் காலியான தண்ணீர் பாட்டில்கள். குளிர் கண்ணாடியையும், ம·ப்ளரையும், ஜாக்கெட்டையும் அணிந்து கொள்கிறது. நேராகக் கிளம்பி பக்கத்து கடைக்குள் புகுந்து சாமான் வாங்க முயலுகிறது. கடைகாரர் எங்கே உன்னுடைய லைசன்ஸை காட்டு என கேட்க, கரடியும் சிரித்துக் கொண்டே ஒன்றை நீட்ட, அவரும் காசு வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறார்.

இதுவும் மதுபான விளம்பரம் என்று நினைத்தால் தவறு. 'பழஞ்சோற்றின் சுவையே பெப்ஸி உடனிருந்தால்தான்' என முடிகிறது.

''திருடாதே... பாப்பா திருடாதே': 'நான் மாட்டிக் கொண்டேன்'; 'நான் குற்றஞ்சாட்டபட்டேன்'; 'நான் தவறு செய்தேன்'; 'நான் அபராதம் கட்டினேன்'; என்று பலர் சோகமாக இறுக்கமான முகத்துடன் வருத்தம் தெரிவித்தார்கள். ஒரு இளம்பெண் 'இணையத்தில் இருந்து இசையை வலையிறக்கியதற்காக நான் தண்டிக்கப் பட்டேன்... ஆனால், இன்னும் தொடர்ந்து இசையை இலவசமாக இறக்கத்தான் போகிறேன்' என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

பெப்ஸி அருந்தினால், இலவசமாக பாடல்களை அதிகாரபூர்வமாக வலையிறக்கலாம் என்று முடிகிறது.

'ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவந்தான் மண்ணுக்குள்ள': முழுக்க முழுக்க வெள்ளைப் பின்புலத்தில் தனியாக சிறுவன். பின்புற குரலாக 'உலகத்தைப் புரட்டி போடு' என்னும் மெல்லிய குரல். மீண்டும் மீண்டும் 'உலகத்தைப் புரட்டி போடு' குரல், கொஞ்சம் வலுவாக, ஆனித்தரமாக, நம்பிக்கையூட்டும் விதமாக. பார்த்துக் கொண்டிருக்கும் டிவியின் வழியாக தொடர்கிறது. டிவியில் குத்துச்சண்டை வீரர் மொகமதலி இப்பொழுது சொல்கிறார். டிவியில் இருந்து சிறுவனின் எதிரே அமர்ந்து அலி சொல்வதுடன் முடிகிறது.

'லீனக்ஸ்' என்னும் எழுத்துக்கள் தோன்றியவுடன் பிண்ணனியில் 'உலகத்தைப் புரட்டி போடுவோம்' குரல். 'ஐபிஎம்' என்று கொட்டை எழுத்துக்களை தேக்கிவிட்டு முடிகிறது.

'குண்டு..குண்டு.. குண்டு பொண்ணே': உணவகத்தில் கருப்பின வாலிபன் சோகமாக இருக்கிறான். ஹோட்டல் சிப்பந்தி 'என்னப்பா வருத்தம்' என்று வினவ, காதலி கைவிட்டதை சொல்கிறான். 'இதுக்குப் போய் அலட்டிக்கலாமா' என்று அவனை பெப்ஸி அருந்தச் செய்கிறாள். அடுத்த காட்சியில் அந்த குண்டு சிப்பந்தியுடன் டூயட் பாட காதல் செய்கிறான்.

'பெப்ஸி உடனிருந்தாலே சாண்ட்விட்ச்கள் சுவைக்கின்றன' என்கிறது இந்த விளம்பரம்.

'ஆசை அதிகம் வைச்சு': பீச் மணலில் பிகினி ஆடையில் இளங்கன்னிகள் வாலிபால் ஆடுகின்றார்கள். கடுங்குளிர்காலம் என்பதை பனியாகிப் போன நதிக்கரை காட்டுகிறது. ஒருவருக்கு கீழே விழுந்து பந்தை அடித்ததில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. சரி... பியரை வைத்துக் கொண்டு, தொப்பையை ஆட்டிக் கொண்டு கோட்டு மாட்டிக் கொண்டு ஆடவர் உட்கார்ந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒலிம்பிக்குக்குத் தயார் செய்து வருகிறார்களாம். 'விசா' தவணை அட்டையை வைத்துதான் ஏதன்ஸில் நுழைவுச்சீட்டு வாங்க முடியுமாம்.

'வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்': முதிர் ஜோடிகள் உல்லாசமாக சூரியனில் காய்கின்றனர். நடுத்தர வயது ஆடவர், மகிழ்ச்சியுடன் பெண்ணை நெருங்குகிறார். வயாகராவுக்குப் போட்டி வந்தாச்சு. முப்பத்தாறு மணி நேரம் தாக்குப்பிடிக்க வைக்கும் 'சியாலிஸ்' என்னும் புதிய மருந்து அறிமுகமாகிறது.

'உன்னை விட... இந்த உலகத்தில் உசந்தது': ரம்மியமான வீட்டுக்கு சூப்பர் ·பிகரை அழைத்து வருகிறான் நாயகன். அவன் வளர்க்கும் செல்லப்பிராணியான சிம்பன்சியை பார்த்து பயப்படுகிறாள் நாயகி. 'அது ரொம்ப சாது! ஒரு நிமிடம் இரு... குடிக்க எடுத்து வருகிறேன்' என்று உள்ளே செல்கிறான். சிம்பன்ஸி உரிமையுடன் சோபாவில் பக்கத்தில் உட்கார்ந்து தோளில் கைபோட்டுக் கொள்கிறது. 'அவனுக்கு விவரம் பத்தாது... பயந்தாங்கொள்ளி! என்னுடன் மாடி பெட்ரூமுக்கு வா... சொர்க்கத்தையே காட்டுவேன். ஜாலியாக இருக்கலாம்' என்று அமர்க்களமான முக பாவனையுடன் சொல்லிவிட்டு, அவன் வருவதை பார்த்தவுடன் 'நான் உன்கிட்டப் பேசினதா காட்டிக்காதே' என்று மெல்ல கிசுகிசுக்கிறது.

ஓணான், தவக்களை என்று எல்லா மிருகங்களுக்கும் குரல் கொடுக்க வைக்கும் 'பட்' என்னும் பியரின் விளம்பரம்.

'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்': முன்னூறு மைல் தள்ளி செல்லும் காதலிக்குப் பிரியாவிடை தருகிறான். விமானத்தில் வழியனுப்பிய பிறகே, பக்கத்து சீட்டில் உதட்டுச்சாயத்தை மறந்துவிட்டதை பார்க்கிறான். போலீஸிடம் பிடிபடாமல், அதிவேகமாக காரை செலுத்தி, அவளை பறந்த இடத்துக்கே, விமானத்துக்கு முன் ஓட்டி அடைகிறான். காதல் மயக்கத்துடன் அவனின் ஆர்வமான வருகையை ரசிப்பவள், காண வந்த காரணத்தை கேட்கிறாள். 'அந்த லிப்ஸ்டிக் என்னுடையது இல்லையே' என்று கோபக் கேள்விப்பார்வையில் முடிகிறது.

இதற்கும் பியருக்கும் எப்படி சம்பந்தமென்றால், அவள் அனாதையாக்கி சென்றபிறகு அவன் குடிக்க வேண்டிய மதுவகையை சொல்கிறது என நினைத்துக் கொள்ளலாம்.

'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை': இது பின் நவீனத்துவமோ, இலைமறை காயோ, குறிப்பால் பொருளுணர்த்தும் வகையையோ சார்ந்த ஒரு விளம்பரம். ஒழுங்காகப் புரியாததால் மனதில் இன்னும் நிற்கிறது. தண்ணீரை சுமந்து கொண்டு வரும் கருப்பு கார்கள். எப்படி ஒரு கார் தண்ணீர் தூக்கமுடியும் என்று தெரியவில்லை. 'நில்' என்னும் சாலைவிதிகளையும் மதிக்காமல் விரைகின்றன. முச்சந்தியில் கூட நின்று கவனிக்காமல் நொடி நேரத்தில் ஒன்றையொன்று மோதிக் கொள்ளாமல் தண்ணீரை மேலே வைத்துத் துரத்திக் கொண்டு செல்கின்றன. 'காடிலாக்' காரை வாங்கினால் விபத்து நேராது என்கிறார்களா? 'கழுவுற மீனில் நழுவுற மீன்' மாதிரி தப்பிக்கலாம் என்கிறார்களா?

'செட்டப்ப கெட்டப்ப மாத்தி...': டீனேஜ் பெண் வீட்டில் இசைக்கு ஆடுகிறாள். அவளைப் பார்க்க தோழி வருகிறாள். குசுகுசுவென்று பேசிவிட்டு வெளியேக் கிளம்புகிறார்கள். தலைமுடியை கோதிவிட்டு சிகையலங்காரத்தை மாற்றிக் கொள்கிறாள். வேலையில் இருக்கும் பெண்டிர் உடுத்தும் ஆடைகளுக்கு மாறுகின்றனர். உதட்டுக்கு லிப்ஸ்டிக், கண்ணுக்கு மை, காதுக்கு ஒரு வளையம் என் 'இந்தியன் சுகன்யா பாட்டி' போல் இல்லாவிட்டாலும் ''ஆனந்தம்' சுகன்யா போல் வயதாக்கி கொள்கின்றனர். மதுவை வாங்க அலட்சியமாக கடன் அட்டையை நீட்ட அசராத கடைகாரர் லைசன்ஸை எடுக்குமாறு சிரிக்கிறார். பேந்தப் பேந்த விழிப்பவர்களின் பிண்ணனியில் 'நாங்கள் வயது வந்தவர்களா என சரி பாக்கிறோம்', குரல் மற்றும் எழுத்து.

இவை தவிர புரியாத மேஜிகல் ரியலிசமாக சில 'செவ்ரோலேட்' கார் இடுகைகளும், வைரமுத்து கவிதை போல் உள்ளங்கை நெல்லிக்கனியாக புரியவைத்த சவர ப்ளேட்களும், 'சிகரெட் தவிர்', 'போதை மறுத்து விடு' போன்ற சில உருப்படியான பிரசாரத் துளிகளும், 'ட்ராய்', 'தி அலாமோ' , 'ஹிண்டால்கோ' போன்ற எண்ணற்ற திரைப்பட விளம்பரங்களும், மறந்துவிட வேண்டிய வேறு சிலவும் கூட விளம்பரித்தார்கள்.

இடைவேளையில் ஜானட் ஜாக்ஸன் கட்டின ஆட்டம் காணக் கிடைக்காத காட்சி. அதைப் பற்றி வேறு என்றாவது பார்ப்போம்.

நன்றி: தமிழோவியம்

ஜனவரி மாசத்துச் சிதறல்

* நியு யார்க் டைம்ஸ்: அமெரிக்கப் பங்குசந்தையில் கிட்டதட்ட அனைத்து பங்குகளுக்கும் கொண்டாட்டம்தான். வரலாறு காணாத அளவு சிறுதொழில் பங்குகளும் சக்கைபோடு போடுகின்றன. பணம் புரள விடுவதில் நுகர்வோர்கள் மூன்றில் இரண்டு பங்கு செலவழித்துக் கொண்டு, தொழில் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். உணவுக்கும் ஆடைக்கும் செலவழிப்பதை விட பன்மடங்கு படிப்புக்கும், மருத்துவர்களுக்கும், காப்பீடுகளுக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் செலவழிக்க நேரிடுகிறது. சூதாட அதிகம் செல்கிறார்கள். அமெரிக்காவில் வாரந்தரிகளும், தினசரிகளும் படிப்பது குறைவது கவலை தந்தாலும், டிவி பார்ப்பதும், இணையம் சுற்றுவதும் அதிகரித்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடாமல் அதிகரித்து இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் தொடர்ந்து பணத்தைக் கரைப்பதிலும், டால்ர் மதிப்பு ஏறாமல் இருப்பதிலும்தான் அடுத்த சுற்று ஆட்குறைப்பு நடக்காமல் இருக்க வழிவகுக்கும்.

* பிபிசி: முன்பொருமுறை சென்னை திரையரங்கில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஹேண்டிகாம் வைத்து படம் எடுக்க முயற்சித்ததாக வதந்தி சாற்றபட்டார். இணையத்தின் உபயத்தில் 'உலகக் கணினி பெட்டியில் முதன்முறையாக' என்று 'மேட்ரிக்ஸ்' முதற்கொண்டு பல படங்கள் வெளியிடப்பட்டதால், இனி தியேட்டரில் சொந்த உபயோகத்திற்காகக் கூட வீடியோ எடுக்கக்கூடாது என்று பல மாநிலங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கின்றன. 'திரைப்பட சங்க' உறுப்பினர்களே சொல்வது போல் படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் திருடாமல் இருந்தால்தான் விசிடி உலா வருவதைத் தடுக்க முடியும்.

* பிபிசி: இணையத்தினால் ஓழுங்காக வீட்டுக்கணக்குப் போடுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள், அண்ணாக்கள், அக்காக்களின் உதவியையும் பள்ளி மாணவர்கள் விட்டு வைப்பதில்லை. வலைத்தளங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு வீட்டுவேலை அதிகமானதா அல்லது வீட்டுவேலை அதிகமானதால் இணையத்தை நாடுகிறார்களா என்று தெரியவில்லை.

* நியுயார்க் டைம்ஸ்: மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ரவி ஷாம் சவுத்ரி ஒவ்வொரு நாளும் சிகாகோ வர்த்தக மைய நிலவரங்களைப் பார்வையிடுகிறார். சோயாபீனின் விலைமாற்றங்களை கவனிக்கிறார். விலை ஏறிக்கொண்டிருந்தால் உள்ளூர் வியாபாரிகளை காலம் கனிய காத்திருக்கவோ, இறங்க ஆரம்பித்தால் உடனடியாக விற்கவோ அறிவுறுத்த முடிகிறது. ஒரு இ-சௌபல் 2500 விவசாயிகளை சென்றடைகிறது. உலக சந்தை பட்டியல், வானிலை விவரங்கள், மண் சோதனை டிப்ஸ், என அவசியமான அனைத்து விஷயங்களும் கீபோர்ட் நுனியில் கிடைக்கச் செய்கிறது. அறுபது நிறுவனங்கள் பங்கு கொண்டு மூவாயிரம் இ-சௌபல்கள் அமைத்து பதினெட்டாயிரம் கிராமங்களையும் பதினெட்டு லட்சம் விவசாயிகளையும் உலகப்பொருளாதாரத்தோடு ஐக்கியப்படுத்துகிறது. கொசுறாக மின்னஞ்சல் அனுப்புவதும், இந்தியா எ·ப்எமில் பாட்டு கேட்பதும் அரட்டை அடிப்பதும், பத்தாவது பரீட்சை முடிவுகள் பார்ப்பதும் செய்கிறார்கள்.

* பிபிசி: இரத்தகுழாய்களில் இருந்து கொழுப்பு வெளிவரும் கொடூரமான சித்தரிப்பை புகைபிடிப்பவர்களுக்கான புதிய பயமுறுத்தலாக விளம்பரம் செய்கிறார்கள். புகைபழக்கத்தால் பிரிட்டனில் வருடத்திற்கு 120,000 மக்கள் இறக்கிறார்கள். விளம்பரம் நண்பர்கள் சிகரெட் பத்த வைப்பதில் தொடங்குகிறது. புகை வருவதற்கு பதிலாக சிகரெட் நுனியில் இருந்து கொழுப்புக் கசிவதாக தொடர்கிறது. 2010-க்குள் ஒண்ணரை மில்லியன் மக்களை மனம் மாறச் செய்யும் என்னும் நம்பிக்கையில் விளம்பரம் ஆரம்பித்துள்ளது.

* பிபிசி: இங்கிலாந்து மக்களின் குணாதிசயங்களை மாற்றும் வலையகங்களாக கூகிள், ஈ-பே, ·ப்ரெண்டெஸ் ரியுனைடெட் தளங்கள் உள்ளது. புதுமையான வலைத்தளங்கள் பட்டியலில், நண்பர்கள் பலரை வலைப்பதிய வைக்கும் ப்ளா·கர், அரட்டை அடிக்கும் ஏஓஎல்-மெஸெஞ்சர், எம்பி3 திரைப்பாடல்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் நேப்ஸ்டர் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

* பிபிசி: மக்களின் தேடலுக்கு முதல் காரணம் 'வதந்தி'. பிரிட்டிஷ் மகாபிரபுகளுக்கு இளவரசர் சார்லஸ் செய்யும் லூட்டிகள் தேட வைத்தது என்றால், உலகத்தில் உள்ள அனைவரும் ப்ரிட்னி ஸ்பியர்ஸின் கல்யாணம், காதல், எம்டிவி முத்தம் என்று தேடினார்கள். 'குழந்தை பொறுக்கி' என்று பட்டம் பெற்ற முன்னாள் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜேக்ஸன், 'இணைய கவர்ச்சி ராணி' என்று புகழ் தேடிக் கொண்ட பாரிஸ் ஹில்டன் ஆகியோருடன் ஈராக் யுத்தம், 'மேட்ரிக்ஸ்' திரைப்படம் ஹாரி பாட்டர் ஆகியோரும் தலை பத்துத் தேடலில் இடம் பிடித்துள்ளார்கள்.

* ஐஎச்டி: 'குடியரசு' கட்சியின் முக்கிய கொள்கைக்கே சோதனை. அரசாங்கம் எதிலும் மூக்கை நீட்டாமல் ஒதுங்கியே இருந்து குறைந்த செலவில் இயங்க வேண்டும் என்பது அவர்களின் தார்மீகக் கொள்கை. நிறுவனங்களுக்கு பல துறைகளிலும் கால்பதித்து லாபத்தை அதிகரிக்க வாய்ப்பு. செனேட்டில் அதிக அளவில் 'சுதந்திர' கட்சிவாதிகள் இருந்ததனாலும், பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருப்பதனாலும்தான் இதை செயல்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டிவந்தார்கள். கடந்த மூன்றாண்டுகளாக செனேட், காங்கிரஸ், ராஷ்டிரபதி எல்லோரும் 'குடியரசு' கட்சிவசம் என்றாலும் அரசு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதேத் தவிர குறையவில்லை. மக்களுக்குப் பிரச்சினைகள் தன்னலேயே தீர்ந்து கொண்டால் போதும். அரசு இயந்திரத்தைக் குறைத்துத் தன் மேல் பாரத்தை சுமத்தாதவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

* நியு யார்க் டைம்ஸ்: சீனா சார்ஸ் கிருமியின் தாக்குதலை தடுக்க பத்தாயிரம் (சிவெட்) பூனைகளைக் கொளை செய்தார்கள். கிராமப்புற சீனர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளுள் இந்தப் பூனை வகையும் அடக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் போன வருடம் அதிக அளவு சார்ஸ் பரவியதாக நம்பப்படுகிறது.

* நியு யார்க் டைம்ஸ்: இசைவிரும்பிகள் காசு கொடுக்காமல் எம்பி3க்களைத் திருடுவதை தடுக்க தொழிற்நுட்பத்தின் ஐந்து 'தாதா' நிறுவனங்கள், இண்டெல், நோக்கியா, சாம்சங், தோஷிபா, மாட்ஸ¤ஷிடா கைகோர்த்துக் கொண்டன. மைக்ரோசா·ப்ட் 'என் வழி தனி வழி' என்று இன்னொரு காக்கும் வித்தையை முன் வைத்திருக்கிறது. இந்த இரண்டு பேர் தவிர ஆப்பிள் மெக்இண்டாஷ், ரியல் நெட்வொர்க்ஸ், சோனி, ·பிலிப்ஸ் இன்ன பிறர் சேர்ந்து கொண்டு எங்கள் காப்புரிமை நுட்பமே தலை சிறந்தது என்று பறை சாற்றி வருகிறார்கள். 'ஊர் ரெண்டு பட்டால் 'கூத்தாடி' திருடனுக்குக் கொண்டாட்டம்'.

* பிபிசி: இந்தியாவில் மீன்களைக் கொண்டு மலேரியாவைக் கட்டுபடுத்துகிறார்கள். இந்தியாவின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதியை பூச்சி மருந்துகள் மூலம் மலேரியா தடுப்பதில் செலவழிக்கிறார்கள். ரொம்ப சுளுவான இந்தப் புது ஐடியா மூலம் மலேரியா பரப்பும் கொசுக்கள் உள்ள குட்டை குளங்களில் இந்த மீன்களை விட்டு விடுகிறார்கள். கொசுக்கள் முட்டை பொரித்தவுடன், குஞ்சுகள் பறப்பதற்குள் மீன்களுக்கு உணவாகி விடுகின்றன. பூச்சி மருந்துகளுக்கு பாச்சா காட்டும் எதிர்ப்புத்தனமை வளர்ந்துவிட்ட கொசுக்களை அழிப்பதற்கு இதுதான் எளிதான உத்தி.

நன்றி: தமிழோவியம்

காதலர் தினத்துக்கு ஒரு அமெரிக்க அபலையின் கடிதம்

என் முன்னாள் காதலன் எழிலனுக்கு,

எப்படி இருக்கிறாய்? நான் இப்போது தான் உனது கல்யாணப் பத்திரிகை கிடைக்கப் பெற்றேன்.

உங்களுக்கு எல்லாம் திருமணமாவது புத்தி புகட்ட வேண்டும். அப்பாவி இந்தியனாய் கல்லூரியில் நுழைந்தாய். இந்திய மாணவர்களில் பலருக்கு அமெரிக்கப் பெண்களைப் பற்றிய பிம்பம் தான், உன் மனத்திலும் குடி கொண்டிருந்திருக்கும்.

வெள்ளைக்காரியோடு படுத்து எழுந்திருப்பதுதான் லட்சியம். முடி வெள்ளையாக இருந்தால் வலையில் விழ வைப்பது எளிது. கொஞ்சம் பணம், மனதை வசீகரிக்கும் பரிசுகள் கொடுக்க வேண்டும்.

இந்தியப் பெண்கள்தான் குடும்பப் பாங்கானவர்கள். வீட்டுக்கு விளக்கேற்ற பொருத்தமானவர்கள். அமெரிக்க வனிதைகளோ, விலைமாதருக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு திருமணம் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம். மனசாட்சி கூட கிடையாது.

உங்கள் ஊரில் பெண் என்றால் மதிக்கத்தக்கவள். அமெரிக்காவில் அவர்கள் பாலுறவைக் கற்றுக் கொடுக்கும் சாதனம். தமிழ் நாட்டில் தெய்வீகக் காதல் செய்வாய். அமெரிககாவில் அதுவே டைம் பாஸ¤க்கு செய்யப்படும் கேளிக்கை. அங்கு கல்யாணம் செய்து கொண்டால், வாழ்நாள் முழுக்க ஒருத்தியோடு அனுசரித்துப் போய் குடும்பம் நடத்துவாய். இங்கு மோதிரம் மாற்றினால், விவாகரத்துக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பாய்.

எப்படி உன்னால் தமிழ் நாட்டில் இல்லாத போது ஒரு கொள்கை, உன் பெற்றோருடன் இருக்கும் போது வேறோரு கொள்கை என்று வாழ முடிகிறது?

இனப் பாகுபாடு, வெள்ளை, கருப்பு, பழுப்பு என்று எல்லாம் என்னைப் பிரித்து பார்க்கிறார்கள் என்று நீ புலம்பும் போது, எனக்குப் பாவமாய் தோன்றும். ஆனால், உண்மையில் நீங்கள் தான் இன வெறியர்கள்.

உன்னுடைய அம்மாவின் விருப்பதிற்காக, உங்களின் குலம், கோத்திரம், மொழி, ஜாதியை சேர்ந்த ஒருவரைத்தான் நீ மணமுடிப்பாய். நமது காதல் முக்கியமில்லை, நம்முடைய உண்ர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை.

எனது அப்பா, அம்மா எவ்வளவோ தேவலை. அவர்களுக்கு உன்னை நான் வாழ்க்கத் துணையாய் தேர்ந்தெடுப்பது பிடிக்காவிட்டாலும், என் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நான் சந்தோஷமாய் இருப்பதற்காக அவர்களின் கோட்பாடுகளை உடைத்துக் கொள்ளத் தயங்காதவர்கள்.

நான் வெள்ளை என்பதால், உன் குடும்பம் நமது திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் வெள்ளை என்பது எனது நிறம். அதை விட உனது மனதைக் கவர்ந்த பெண் என்பது முக்கியம். நான்கு வருடங்களாய் கழித்த, மனம் ஒன்றிய நேரங்களும், நம்மில் நாம் கண்ட குணாதசியங்களும், ஆசைகளும் பகிர்ந்து கொண்ட நேர்மையையும் விட, உன்க்கு இப்பொழுதுதான் தெரிந்த அந்த புதியவள் முக்கியமாகி விட்டாள்.

கோவிலுக்கு வாரம் தவறாமல் செல்கிறாய். நானும் வருவேன். அப்போழுது வேற்று மதக்காரி என உரைக்க வில்லை. எனது நாட்டில், நீ இருக்கிறாய். அப்பொழுது வேற்று ஊர்க்காரர்கள் எனஉணரவில்லை. என்னுடன் சேர்ந்து இருந்தாய். அப்பொழுதும் இனம், மொழி எல்லாம் காரணமாகப் படவில்லை.

இவற்றை உங்கள் அம்மாவிடம் விளக்கத்தான், புரிய
வைக்கத்தான் உனக்குத் தெரியவில்லை. அப்படி
எல்லாம் கிடையாதென்றால், அமெரிக்க ப்ளாண்ட்
உனக்கு ஒரு காட்சிப் பொருள். நயாகரா அருவி
சென்று குளிப்பது போல், நீர்வீழ்ச்சியில் ஒதுங்கி
வருவது போன்று அமெரிக்கப் பெண்களிடம் உறவு
வைத்துக் கொள்வது, எப்பொழுது வேண்டுமானாலும்
சென்று வரலாம். அனுமதிப்பார்கள். பார்ப்பதற்கு,
இரசிப்பதற்கு அழகாக இருக்கும். காசு கொடுத்தால், எப்படி சென்றடைய வேண்டும் என்று தெரிந்தால் போதும்.

ஆனால் வீட்டிற்குத் திரும்பிய பிறகு ஷவரில் குளிப்பது போன்றது தமிழ்ப்பெண் மண முடிப்பு. நிரந்தரமானது. அழுத்தம் அதிகமாக, வேகமாகத் தண்ணீர் வராது. அவ்வப்போது ரிப்பேரும் ஆகலாம்.

நயாகராவின் மேல் காதல்; ஆனால், ஷவரிடம் அனுதினம் உபயேபாகம். இருந்தாலும், வீட்டிலேயே நயாகரா இருந்தால் வேண்டாம் என்று சொல்லும் உன்னை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.

நாங்கள் காட்சிப்பொருள் அல்ல. உன்னுடைய அம்மாவுக்கோ, அக்காவுக்கோ கொடுக்கும் மரியாதையை எங்களுக்கும் கொடு. நாங்கள் வளர்ந்த விதம் வேறு, கொடுக்கப் பட்ட சுதந்திரம் அதிகம் என்பதால், நாங்கள் உங்கள் ஊர் பெண்களை விட கீழ்த்தரமானவர்கள் இல்லை.

அடுத்த முறை விமானத்தில் இருந்து இறங்கும் போதோ, கோடை விருந்தின் பீயர் கெ·க்கின் அருகிலோ, கல்லூரி நூலகத்தின் உணவகத்திலேயோ எங்களைப் பார்த்தால், எங்களோடு அறிமுகப் ப்டுத்திக் கொண்டால், எங்களின் ஆர்வங்களையும், அழகையும், நிறத்தை மட்டும் வைத்து பார்க்காதே.

உன்னுடைய இனம் திருந்தும் என்னும் நம்பிக்கையுடன்,
(இன்னாளிலும்) உனது காதலி.

வெள்ளி, பிப்ரவரி 13, 2004

சதா புராணம்

Shankar confirms Sada! - Sify.com:
ஐஸ்வர்யா கிடைக்கவில்லையே என்று மீண்டும் மனீஷா மாமியின் பின்னால்
அலையாமல், 'ஜெயம்' சதாவை கதாநாயகி ஆக்கிவிட்டார் ஷங்கர். சிம்ரனுக்குப்
பிறகு கண்களால் நடிக்கும் நடிகை என்றால் அது இவர்தான். நான் வலைப்பூவில்
பூசுற்றிக் கொண்டிருந்தபோதே சதாவுக்காக ரொம்ப ·பீலிங் ஆகி இருந்தேன்.
இப்பொழுது இந்த செய்தி, திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் கதவை தட்டிக்
கொண்டே இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Sada (c) Sify.com
மாதவனுடன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கம், விக்ரமுடன் ஷங்கர் இயக்கம்,
ஸ்ரீகாந்த்துடன் வர்ணஜாலம் என்று சோனியா அகர்வாலுக்கு சரியான போட்டி ரெடி.
ஷங்கரும் வைரமுத்துவினால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு மாறி விட்டார். பாடல்களை
இயற்ற இசையமைக்க சென்னையில் முடியாது என்பதால் பாங்காக் சென்று
மூன்று கம்போஸ் செய்திருக்கிறார்கள்.

இந்தப் பொங்கலுக்கு விருமாண்டி கலக்குகிறார்;
அடுத்தப் பொங்கலுக்கு 'அன்னியன்' வருகிறார்!

யுகபாரதியின் 'மனப்பத்தாயம்'

மரத்தடியில் எஸ். பாபு கொடுத்த முன்னுரையை
பார்த்தவுடன் யுகபாரதியின் 'மனப்பத்தாயம்' தொகுப்பில் இருந்து....




'மூன்று குறிப்புகள்' என்று தலைப்பிட்ட கவிதையில் கவிஞனின்
தொழில் (கலை) அவஸ்தையைக் குறிப்பிடுகிறார் யுகபாரதி.

குறிப்பதற்குக்
காகிதம் தேடும்
சந்தர்ப்பத்தில் கூட
சிலவரிகளைத்
தொலைத்து விடுகிறேன்.

என்று ஒரு பகுதி மிக நுட்பமான அழகான கவனிப்பு.

(ஞானக்கூத்தன்)



"மூத்திர வாடை நிரம்பி வழியும் பேருந்து நிலையத்தில் முழம்போட்டு
விற்கும் பூக்காரி, அறிந்த கழிப்பறைகள் அத்தனையிலும் உடைந்தே
கிடக்கும் நீரள்ளும் குவளைகள்" என பல்வேறு காட்சிகளைப் பதிவு
செய்கின்றன.

"சோறுடைத்த சோழ வளநாடு காவிரி வறண்டதால் பக்கத்து ஊர் பனியன்
கம்பெனிகளில்", "அம்மண சிலைகள் நிரம்பிய ஆலயங்களில் பிரும்மச்சரிய
கட்டுப்பாடுகள்", "வராத முகூர்த்தம் மழையோடாவது வந்து தொலயட்டுமென
அரிசியை அதக்கும் முப்பத்தாறு வயது முருகேஸ்வரி", "தலை நனைய
ஊற்றுகிற நீரிலும் ஒளிந்திருக்கும் குளியலின் சூட்சுமம்", "பண்ணை
வீட்டு வயக்காடுகளில் இன்னுமிருக்கும் அடிபடாத எலிகள்", "அழுகி
விழுகிற வாழைத்தாராய் எழவு செய்திகள்" கேட்டு உடைந்த மனசை
நம்மூருக்கும் ஈழத்திற்கும் எட்டுமைல்தாம்ல" என்கிறவர்கள் கவிஞனின்
சமூக அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

(இராஜேந்திர சோழன்)



கல்லெறிதல் - யுகபாரதி


சாலையைச்
செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட
மணலில்தான்
கோயில் கட்டி
விளையாடுவோம்.

கலசத்திற்கு
பதிலாக
ஒரு கொத்து
காட்டாமினுக்கை
நட்டு வைப்போம்.

நடுவிலொரு
குழி பிரித்து
உருண்டையாய்
களிமண்ணை
பிடித்து
கர்ப்பக் கிரகம்
அமைப்போம்.

காகிதப் பூவால்
அலங்கரித்து
கன்னத்தில்
போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்
மீண்டும் வந்து
பார்க்க

கலசத்தில்
பட்டிருக்கும்
நீரபிஷேகத்தில்
சற்றே
கரைந்திருக்கும்
அதன் உரு.
சோகத் தூவானமாய்
கண்கள் அரும்பும்.

கோயிலை சிதைத்த
நாயின் மீது
கல்விட்டெறிவர்
ஹமீதும், பீட்டரும்.

Cartoon Strip (c) John Klossner
அவன்: கடிதங்களில் எப்படி பிறரை அழைப்பது என்று தெரியவில்லை...
அவன்: முன்பின் தெரியாத ஒருவனை 'அன்பிற்கினிய' என்பது அன்னியமாக இருக்கு. 'ஹலோ' என்றால் பக்கத்து வீட்டுப் பையனை சொல்வது போலிருக்கு...
அவன்: எல்லா சந்தர்ப்பத்திற்கும் பொறுத்தமான பாந்தமான ஒரு அடைமொழி விளிப்பு எனக்குத் தேவை!
கடிதத்தில்: 'அனைவரின் கவனத்திற்கும்...'

பிகேஎஸ் மொழிபெயர்த்திருக்கிறாரே என்று பார்த்துவிட்டு செய்த முயற்சி

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

இதயத்தின் எளிமை (Simplicity of the heart)
நற்பண்பு (Virtue)
அனுபவித்தல் (Experiencing)
அரசியல்
கௌரவம் (Respectability)
சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)
பணக்காரரும் ஏழையும்
அறிவு (Knowledge)
தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)
எண்ணமும் அன்பும்
வம்பு பேச்சும் கவலையும்
பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)
அடையாளம் காண்கிற தற்காப்பு
உரிமை கொண்டாடுகிற ஆளுமை
பொறாமை
தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு
தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்
சீடனும் குருவும்

நன்றி: திண்ணை.காம்

தமிழ் சிறுகதைப் போட்டி (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்)

Thinnai - Weekly Tamil Magazine: "கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி - கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004

போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பவேண்டிய முகவரி:
Tamil Short Story Contest
16, Hampstead Court,
Markham, ON L3R3S7
Canada

போட்டி விபரங்கள்:

* சிறுகதைகள் தட்டச்சில் அல்லது கம்புயூட்டரில் அச்சடிக்கப்பட்டு, 2000 வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும். இந்த விதிகளை புறக்கணிக்கும் சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.

* முதல் மூன்று கதைகளைத் தவிர மேலும் பிரசுரத்துக்கு உகந்தவற்றை, ஆசிரியர் சம்மதத்துடன், காலம் இதழ் பிரசுரிக்கும்.

* சிறுகதையின் எந்தப் பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்கக்கூடாது. கதையுடன் வரும் மேல் இணைப்பில் கீழ் கேட்கும் விபரங்களை குறிப்பிடுதல் அவசியம்.

அ) சிறுகதை வார்த்தைகளின் எண்ணிக்கை.
ஆ) ஆசிரியர் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல், ஈமெயில் போன்ற விபரங்கள்.
இ) நூறு வார்த்தைகளுக்கு மேற்படாமல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு. "

ஜானட் ஜாக்ஸன் போனார்... கெர்ரிகேட் அவல் வருகிறது

ட்ரட்ஜ் ரிபோர்ட் வலைப்பக்கங்கள் இன்னொரு சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் முதல் சிகாகோ சன் டைம்ஸ் வரை ஆராய ஒரு புது திரியை உலவ விட்டிருக்கிறார்கள். சுதந்திர கட்சி என்றாலே காதல் மன்னன் கென்னடியும், காதல் இளவரசர் கிளிண்டனும் நினைவில் வருவார்கள். அவர்கள் ஜனாதிபதியானது போலவே, கெர்ரியையும் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களில் ஜான் கெர்ரி முண்ணனியில் உள்ளார். சுதந்திர கட்சி சார்பாக பதினான்கு மாகாணங்களில் நடந்த தேர்தல்களில் பன்னிரெண்டை கைப்பற்றி விட்டார். மார்ச் 2-க்குப் பிறகுதான் சண்டியர் புஷ்ஷை யார் எதிர்ப்பவர் என்று தெரியும் என்றாலும், அனேகமாக கெர்ரிதான் என்று பரவலாக பேச வைத்துள்ளார். முதல்கட்டத்தைத் தாண்ட வேண்டும் என்பதற்காக பாஸ்டனில் பெரிதாக அடிபடும் ஓரினக் கல்யாணங்கள் சர்ச்சையிலும் வழவழா கொழ கொழா பதிலகள் கொடுப்பது, புஷ்ஷை வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவராக காண்பித்துக் கொள்வது என்று காய்கள் நன்றாகவே நகர்த்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய பணக்கார மனைவி தெரஸா ஹெய்ன்ஸை 1995-இல் மணமுடிக்குமுன், 1988-இல் முதல் மனைவியுடன் விவகரத்தானது. இடைப்பட்ட சொர்க்க காலமான ஏழு வருடத்தில் பல பெண்பார்க்கும் படலம் நிறைவேறியது சகஜம். அப்பொழுது சந்தித்த அஸோசியேடட் ப்ரெஸ் நிருபர் ஒருவருக்குக் குழந்தையும் கொடுத்து, அவளை நாடு கடத்தியதும்தான் இப்பொழுதைய சர்ச்சை.

தேர்தல் சமயத்தில் விவகாரங்களை பிரபலபடுத்துவது சாதாரணமான விஷயம். வாக் தி டா·க் திரைப்படம் முதல் என்.பி.சி.யின் வெஸ்ட் விங் வரை எல்.கே.ஜி. சொல்லிக் கொடுப்பது போல் அமெரிக்க அரசியல் அல்வாக்களை செய்முறை விளக்கியுள்ளார்கள்.

பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம்தான்... கெர்ரியே இப்படி செய்தி உண்டு செய்தாரா? அல்லது தேர்தலில் பரபரப்பக பேசப்பட்டு, அப்புறம் ஊளையிட்டு, இப்பொழுது மூலையில் தள்ளப்பட்டு தமிழகத்தின் உழவர் உழைப்பாளர் கட்சி போல் தள்ளாடும் ஹோவார்ட் டீன் விதைத்த செய்தியா?

வியாழன், பிப்ரவரி 12, 2004

விவாதத் திறமை

- சொ.சங்கரபாண்டி
புத்திசாலித்தனமான ஆனால் விஷமத்தனமானவர்கள்
தன் கருத்துக்கு ஒவ்வாதவர்களையோ, தன் எதிரிகள் என்று கருதுபவர்களையோ
இழிவுசெய்து எழுதக் கையாளும் உத்திகள் பல உண்டு:

1. இலேசாக பொய்களை ஆங்காகே தூவுவது (Machiavellian strategy).
2. எதிரிகளின் கருத்தை சிறிது திரித்து எழுதுவது (distortion or misrepresentation).
3. எதிரிகளின் கருத்தை சுருக்கி எழுதும் சாக்கில் தனக்குச்சாதகமான சிலவற்றை
எடுத்து எதிரிக்குச் சாதகமான பலவற்றை விடுத்து களங்கம் ஏற்படுத்தல் (The
Straw Man Fallacy or writing out of context).
4. எதிரியின் கருத்துக்களை விடுத்து, உருவ மற்றும் செயல்படும் திறமைக்
குறைவை பெரிதுபடுத்தல் (focussing on physical discrepancies).

நன்றி: தமிழோவியம்

புதன், பிப்ரவரி 11, 2004

மனோரமா இயர்புக் 1997 - காலந்தோறும் தமிழிசை

கவிதாசரண்-சிஃபி:
"முனைவர் இ. அங்கயற்கண்ணி
இசைத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

இன்றைக்குத் தேவாரப் பாடல்களைப் பாடிவரும் முறையினை அடிப்படையாகக்கொண்டு சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் இருபத்தி நான்கு பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. இவை பாடப்பட்டு வரும் காலங்களுக்கேற்ப பகற்பண்கள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எண் --/ பண்கள் / இராகம்

பகற் பண்கள்
1. / புற நீர்மை / பூபாளம்
2. / காந்தாரம் / நவரோசு
3. / பியந்தைக்காந்தாரம் / நவரோசு
4. / கெüசிகம் / பைரவி
5. / இந்தளம் / நாதநாமக்ரியை
6. / தக்கேசி / காம்போதி
7. / நட்டராகம் / பந்துவராளி
8. / சாதாரி /பந்துவராளி
9. / நட்டபாடை / கம்பீர நாட்டை
10. / பழம் பஞ்சுரம் / சங்கராபரணம்
11. / காந்தார பஞ்சமம் / கேதார கௌளை
12. / பஞ்சமம் / ஆகிரி

இரவுப் பண்கள்
13. / தக்கராகம் / காம்போதி
14. / பழந்தக்க ராகம் / சுத்த சாவேரி
15. / சீகாமரம் / நாதநாமக்ரியை
16. / கொல்ý / நவரோசு
17. / கொல்ýக்கெüவாணம் / நவரோசு
18. / வியாதுக்குறிஞ்சி / செüராஷ்ட்ரம்
19. / மேகராகக் குறிஞ்சி / நீலாம்பரி
20. / குறிஞ்சி / குறிஞ்சி
21. / அந்தாளிக்குறிஞ்சி / சாமா

பொதுப் பண்கள்
22. / செவ்வழி / எதுகுலகாம்போதி
23. / செந்துருத்தி /மந்தியமாவதி
24. / திருத்தாண்டகம் / அரிகாம்போதி"

ஒரு அரட்டையும் ஒரு பதிவும்

அம்பலம் அரட்டை - தேசிகன் பக்கம்: "
w-sujatha: டகடேசுவரன அமுத சரபியில் ரவி சப்ரமண்யம் வெ சா இரா முருகன் கட்டுரைகளை படிததீர்களா
மகுடேசுவரன்: சார். அவசியம் படிக்கிறேன். கொஞ்ச காலமாகவே அமுத சுரபி படிக்கவில்லை
w-sujatha: மகுடேசுவரன் அதில் உங்கள் கவிதைகளைப் பற்றி இராமுருகன் எழுதியள்ளார் ரவி வைரமுத்து வுக்க சாகித்திய அகாதமி விருது பற்றி எழுதியுள்ளார்
மகுடேசுவரன்: தமிழ் இலக்கியம் 2004 மாநாட்டில் கவியரங்கப் பங்கேற்பிற்கு சென்னை வந்திருந்தேன். அந்நிகழ்ச்சியை ஒட்டி என் கவிதைகள்குறித்து அவர் எழுதியுள்ளாரோ ?
மகுடேசுவரன்: சார். அந்த மாநாட்டில் அவருக்கு ஒரு வணக்கம் போடத் தவறிவிட்டேன்.
w-sujatha: மகுடேசுவரன் இந்த வணக்கங்கள் எல்லாம் அவசியம்
மகுடேசுவரன்: சார், தாமதமாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

shankar: i have a theory. v always blame the rulers for dishonesty and currption. but recnetly i have seen many of the public are equaly currupt and not honest in their own way from cheating taxes to govt etc. so when we will become currupt free if most of us corrupted already?? may be good law is required
w-sujatha:நிறைய பேசிவிட்டோம் அடுதத வாரம சந்திப்போம் ஷங்கர் நீங்கள்சொல்லும கருத்தினஅடிப்படையிலதான் டைரகடர் ஷங்கரின் அடுதத படமான `அன்னியன்` அமைந்திருக்கிறது எல்லோருக்கம் வணக்கம்

சிஃபி/அமுதசுரபி - தமிழ் இலக்கியம் 2004 - இரா. முருகன்: "என் கருத்து - எஸ்.பொ.வின் பாலுணர்வுத் தேடல்கள், அவருடையவை. அவற்றை வாழ்க்கை வரலாற்றில் பகிர்ந்து கொள்வதால் என்ன நிறைவு அடைந்திருக்கிறார், அவர்? அதுவும் அவரோடு இருந்த, பெயர் குறிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிப் பெண்கள் பற்றியெல்லாம், அவர்கள் மூலம் தனக்கு பால்வினை நோய் வந்ததைப் பற்றி எல்லாம் எழுதித்தான் இருக்க வேண்டுமா? அது மெல்லிய குரூரம் இல்லையா? இந்தப் பெயர்களும் எஸ்.பொ. வுக்குப் பால்வினை நோய் வந்ததும் எப்படி வரலாற்றில், வரலாற்றோடு வாழ்வதாகும் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேல் ஞானி பேசினாலும் அவையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம். பேசி முடித்து அவர் கீழே இறங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு ஓர் அன்பர், அவர் காலில் விழுந்தார். ஞானியின் புன்சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரிகிறது.
----
கவியரங்கில் ஏமாற்றம், மகுடேசுவரன். சுஜாதாவின் செல்லப் பிள்ளையாகக் கணையாழியில் எழுதி வளர்ந்தவர். (இலக்கியச் செல்லப்பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றித் தோழமை அரங்கில் மாலன் குறிப்பிட்டதாக நினைவு). தான் தற்போது எழுதிவரும் "மூன்றாம் பால்" தொகுப்பில் இருந்து கவிதைகளைப் படித்தார், மகுடேசுவரன். ஊர்ப் பெயர்களாக அடுக்கி ஒரு காதல் தம்பதியின் கதையைச் சொல்லும் கவிதை ஒன்று இப்படி முடிந்தது.

இப்போது / பழனியில் அவன்
திரிகிறான் / பரதேசியாக.
வேலூரில் அவள்
இருக்கிறாள் /வேசியாக.
'Don’t send me such trash anymore’"

செவ்வாய், பிப்ரவரி 10, 2004

விமான விபத்து - கிஷ்

சென்னை ஆன்லைன்: கிஷ்: "அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்
இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான். பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது." என்று பிரசன்னா எழுதித்தான் கிஷ் மகாத்மியம் அறிந்து கொண்டேன்.

'வெற்றி கொடி கட்டு' கனவுகளுடன் கிஷ்ஷில் இருந்து ஷார்ஜாவுக்குப் திரும்பிக் கொண்டிருந்த நாற்பத்தி நான்கு பேர்கள் விமான விபத்தில் இறந்து விட்டார்கள். இருவர் மட்டுமே உயிருக்குப் போராடி வருகின்றனர். பன்னிரண்டு இந்தியர்களும், ஒரு பங்களாதேஷியும் இறந்துள்ளார்கள்.

ஹரன்பிரசன்னா கிஷ்ஷை வைத்து ஒரு கதையும் எழுதியுள்ளார்.

திங்கள், பிப்ரவரி 09, 2004

ஆடோகிராஃப்
















நன்றி: குமுதம்


வாழ்க்கையை இன்ச் பை இன்ச் ரசிக்கிறேன் - அனுராதா ரமணன்

சந்திப்பு : மாயன் (குமுதம் ஜங்ஷன்): "நான் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் பக்தை. அன்னைக்காக தினமும் நூறுரூபாய் வரை பூக்கள் வாங்குவேன். தாமரைப்பூ, செண்பகப்பூ என்று பலவிதமான பூக்கள்.

எழுதுவதற்காக உட்கார்ந்தால் எழுத்துகள், வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது என் பழக்கம். எழுதிக் கொண்டிருக்கிறபோதே முன்பின் தெரியாத சிநேகிதிகள் எனக்கு போன் செய்வார்கள். அவர்களின் பிரச்னையை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பிரச்னையை போனிலேயே தீர்த்து வைப்பேன்.

பகல் நேரத்தில் என்னை யாராவது பார்த்தால் புல் மேக்கப்பில் இருப்பேன். ‘மேடம், எங்கேயாவது வெளியே போறீங்களா?’ என்று என்னைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள். இந்த அலங்காரத்தை நான் வேஷமாக நினைப்பதில்லை. உற்சாகமாக இருக்க இதுவும் அவசியம் என்று எனக்குப் படுகிறது."

மரபு காக்கும் தமிழ் நாள் காட்டி -- தமிழ்க்கனல்

ஆறாம்திணை: "அனைத்தும் தமிழ்மயமாக வேண்டும் எனும் குரல்கள் வலுப்பெற்று வரும் நிலையில், முழுவதும் தமிழ் முறையிலான தமிழ் நாள்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்ற குரலும் கூட வலுத்து வருகிறது.

'வழக்கில் −ருந்து வரும் பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகளும் தமிழ் ஆண்டுகள் அல்ல. −வற்றுக்குச் சொல்லப்படும் கதை அறிவியலுக்குச் சற்றும் பொருத்தமானதாக −ல்லை. சித்திரை தொடங்கி பங்குனி வரை தமிழ் மாதங்களாகச் சொல்லப்படுபவை தமிழ்ப் பெயர்களே அல்ல.

கி.மு. 31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு, திருவள்ளுவர் (தமிழ்) தொடர் ஆண்டின் அடிப்படையில் −ந்த நாள்காட்டி அமைக்கப்பட்டுள்ளது. −ன்றைய எண்களுக்கு மூலமான தமிழ் எண்களே −ந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன. கோள்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழர் பின்பற்றி வந்த மாத, நாள் முறையே −தில் −டம் பெற்றுள்ளது.

மேழம் (ஆடு வடிவம்), விடை (காளை), ஆடவை (−ரண்டு ஆடவர்), கடகம் (நண்டு), மடங்கல் (சிங்கம்) கன்னி (பெண்), துலை (தராசு), நளி (தேள்), சிலை (வில்) ஆகிய மாதங்களும் பெயரிடப்பட்டன.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆரிய −னக் குழுவினர் ஏற்படுத்திய மாதங்களை நடைமுறைக்கு வரச் செய்தனர். அறிவன், காரி ஆகிய நாள்களை முறையே புதன், சனி என வடமொழிமயமாக்கினர். பக்கல் என்பதைத் தேதி என மாற்றினர். பற்சக்கர முறையிலமைந்த பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் முறையைப் புகுத்தினர். பெண்ணாக மாறிய நாரத முனிவனுடன் கிருஷ்ணன் அறுபதாண்டுகள் கூடியிருந்ததாகவும் அப்போது ஆண்டுக்கு ஒன்றாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களே பிரபவ முதல் அட்சய வரையும் என்ற கதையும் கூறப்பட்டது.

மறைமலையடிகள் தலைமையில் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடினர். எந்த சாதி, சமயப் பிரிவையும் சாராத உலகப் பொதுமறையை −யற்றிய திருவள்ளுவரின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தொடராண்டு பின்பற்றுவதென அவர்கள் முடிவு செய்தனர். −லங்கைத் தனித் தமிழ் அறிஞர் கா.பொ. ரத்தினம் உள்பட உலகெங்கும் உள்ள தனித்தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேவநேயப் பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம், பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், தென்மொழி −தழ், கல்பாக்கம் வேம்பையன் எனப் பல தரப்பினராலும் அப் பணி −ன்றும் தொடர்ந்து வருகிறது. "

தமிழோவியமும் தத்துவமும்

மனத்திற்கு : கன்றுக்குட்டி டெக்னிக்: "
கம்பராமாயணத்தில் ஒரு இடம்...

செத்துக்கிடந்த ராவணணைப் பார்த்து அழுகிற மண்டோதரி, " ஐயா.. இளமையில் நீ தவம் தவம் என்று காமத்தை அடக்கினாய். அதனால்தான் அந்தக் காமம் இன்று உன்னைப் பின்னாளில் பழிவாங்கிவிட்டது.." என்று புலம்புகிறாள். எனவே எதையும் எதிர்த்து நீங்கள் உங்கள் சக்தியை பிறயோகிக்கவேண்டாம். அடக்குமுறை நிச்சயம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். தாயுமானவர் " மனம் அடங்க கல்லாருக்கு வாய் ஏன் பராபரமே " என்றார். " மனம் அடக்க " என்று பாடவில்லை. மனம் தானே அடங்கவேண்டும். நீங்கள் அதை அடக்கக்கூடாது. "

எதையுமே திணித்தால் எடுபடாதுதான்; அந்த சிந்தனையோடு ஒத்துப் போகிறேன். ஆனால், விளையாட்டாக ஒரு கேள்வி:
காமத்தை சில காலம் அடக்கின ராவணனுக்கே அந்த கதி என்றால், பல காலம் அடக்கியாண்ட ராமருக்கு? மனைவியே பக்கத்தில் இல்லாமல் இருந்த இலக்குமணருக்கு எப்படி பழி வாங்கியதாம்!?

ஞாயிறு, பிப்ரவரி 08, 2004

இதுதான் நியூயார்க் - வைரமுத்து

வானைத் தொடத் துடிக்கும்
விஞ்ஞான விரல்களாய்க்
கட்டடங்கள் புடைத்து நிற்கும்

கால்வலித்த மேகம்
உச்சிமாடியில்
உட்கார்ந்து போகும்

தீப்பிடித்த வீடாய்
வாழ்க்கை விரையும்

மூழ்கும் கப்பலின் எலிகளாய்க்
கார்கள் பறக்கும்

கார்நிறுத்த இடம் கிடைத்தால்
உலோபியின் புதையலாய்
உள்ளம் களிக்கும்

போகத்தின் உச்சத்தில் பேசும்
பொருளற்ற வார்த்தைகளாய்
அங்கங்கே மெல்லிசை காதுகிழிக்கும்

வீதியில் பூக்கும்
வெள்ளை ரோஜாக்கள்
பெண்மையின் அடையாளங்களை மட்டும்
மூடி மறைத்து முறுவலிக்கும்

'வா' என்று கேட்க
வண்டுக்கும் உரிமையுண்டு

'போ' என்று தள்ளப்
பூவுக்கும் உரிமையுண்டு

கணவனுக்கு - மனைவியினும்
காரின் கற்பு
முக்கியமாகும்

மனைவிக்கு
பர்த்தாவை விடவும்
'பாத்ரூம்' சுத்தம் முக்கியமாகும்

நடைபாதைக் காதல்
மூச்சுவிட மறந்து
முத்தமிட்டுக் கொண்டிருக்கும்

சுற்றிவரும் போலீஸ்
ஒட்டிய உதடுபிரிக்க
உதவும்

0

ஷாம்பூ போட்டுக் குளித்த
மரங்கள்

வாழை இலைச் சாலைகள்

முடிவெட்டிக் கொண்ட
புல்வெளிகள்

கட்டடங்களை
உரசி பறக்கும்
உலோகப் பறவைகள்

எல்லாம் இருந்தும்
ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கை

0

அறிவு -
உறவை
டாலர்களாய்ப் பார்க்கும்
உணவை
வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்
அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு
அவர்களை சாப்பிடும் உணவு

வாரத்தில் ஐந்துநாள்
வாழ்க்கை விற்கப்படும்

வாரத்தில் இரண்டுநாள்
வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்
பாலித்தீன் பை

காதல்
கைதுடைக்கும் காகிதம்
....

அங்கங்கே
ரகசியக் குரலில்
கோஷம் கேட்கும்

வீட்டுக் கூரையில்
நிலா வேண்டுமா?

மாத்திரை போடு

சூரியனில் நடக்க வேண்டுமா?
மாத்திரை போடு

கிளியோபாட்ராவை
எழுப்பித் தருகிறோம்

மாத்திரை போடு

இப்படி
வீதி முனைகளில்
சுலபத் தவணையில்
தற்கொலை விற்கும்

0

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே
பள்ளி மாணவி சொல்வாள்:

'இன்றைக்கே
கலைத்து விடுங்கள் டாக்டர்

நாளை
பத்தாம் வகுப்பு பரீட்சை'

0
1989

நன்றி: வைரமுத்து கவிதைகள்
(கி.பி. 2000 வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளுள்
அறிஞர்கள் தேர்ந்தெடுத்த தொகுப்பு)

உரிமை: டாக்டர் பொன்மணிவைரமுத்து

ரூ. 300/-
சூர்யா வெளியீடு





என்னுடைய சில சிதறல்கள்:

* அமெரிக்கா வருவதற்கு முன்பே படித்து விட்ட கவிதை.
* வார்த்தைகளும் எண்ணங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியது அந்தக் காலம்.
* சொல்லமைப்புகள் மட்டுமே ஒரு 'அட...'வையும், தட்டையான பிம்பங்கள் மேல் ஒரு 'ஹ்ம்ம்ம்...'மும் போடுகிறேன் இந்தக் காலம்.
* நியூ யார்க்கை குறித்து மற்றவர்கள் இன்னும் இப்படித்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறார்களா....!

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு