வெள்ளி, ஜனவரி 30, 2004

முரண்பாடுகள் - இந்திரா பார்த்தசாரதி

SAMACHAR -- The Bookmark for the Global Indian: "டால்ஸ்டாய் என்ற கலைஞன் தான் அவர் படைப்புகள் அனைத்திலும் வெற்றிப் பெறுகின்றான். 'ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?' என்ற அவருடைய சிறுகதைதான், உலகில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் மிகச் சிறந்தது என்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். ஆக்ரோஷமான தார்ம¦கக் குரலைக் காட்டிலும், 'irony'தான் இக்கதையின் அடிநாதம். இதுதான் ஓர் உயர்ந்த அழகுணர்வு மிகுந்த படைப்பாளியின் அடையாளம்."

வியாழன், ஜனவரி 29, 2004

சுற்றுபுற வீடுகள் - 3


Chennaiyil Oru Mazhai Kaalam

'காக்க... காக்க..." கௌதமின் அடுத்த பட ஆரம்பத்திற்கான சுவரொட்டியில் இருந்து...

நானும் உன்ன(க்?) காதலிகிறேன்னு
கண்டிப்பா என்னால
சொல்ல முடியாது...
ஆனா எனக்கு உன்ன(ப்?) பிடிச்சிருக்கு
வித்தியாசம் இருக்கு இல்ல?

நம்மில் பலருக்கு அறிமுகமான தளம் - Scribbles of a Lazy Geek. விருமாண்டியின் பெரிய்ய்ய விமர்சனத்துக்கு 56 பின்னூட்டங்கள் பெறுகிறார். ஐஐடி சாரங் கலைவிழாப் பதிவுகளைப் படித்தால் உங்க கல்லூரியின் இளமைக் காலங்கள் வந்து போகும். புத்தகக் கண்காட்சி கட்டுரையின் மூலம் பல நல்ல புத்தகங்களைத் தெரிந்து கொண்டேன். எழுத வேண்டியது நிறைய பாக்கி வைத்திருக்கிறார் :D

சோனியா அகர்வால்

சிஃபி தமிழ்: "எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. பொண்ணுங்ககிட்ட மட்டும், நீங்க ட்ரிங்ஸ் அடிப்பீங்களா சிகரெட் பிடிப்பீங்களான்னு கேட்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தி ஃபீல்டில் இது ரொம்ப சகஜம். ஆனால் தமிழ் ஃபீல்டில் இது தப்புன்னு நல்லா தெரியுது."

ஈரநிலம்

EeraNilam
ஓடாத படம்; பாரதிராஜா இயக்கம்; ஹீரோவாக மனோஜ் கே பாரதி;
என்று பல பயங்களுடன் பார்க்கத் துவங்கினேன். பாடல்கள் பலமுறை
கேட்டு மனதில் நின்றிருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத ஆரம்பம். அட்வைஸ்
கொடுக்காத நகைச்சுவை.

சுகாசினிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் இருவரும் ராணுவத்தின்
போர் வீரர்கள். திருமணமாகி ஆளுக்கு ஒரு ஆண் குழந்தை. வீட்டையும்
நிலத்தையும் பார்த்துக் கொள்ளும் கொழுந்தனராக மனோஜ். மதனிகள்
மேல் ரொம்ப பாசமும் மரியாதையும் வைத்துள்ளார்.

கார்கில் போரில் அண்ணன்கள் இறக்க கருமாத்தூர் பட்டி, கார்கில் பட்டி
என பெயர் மாற்றப்படுகிறது. மதனிகளின் பொறுக்கி அண்ணன் ('மெட்டி
ஒலி'யில் போஸ்) வில்லனின் மகுடிக்கு ஏற்ப ஆடி தங்கைகளை பிறந்த
வீட்டுக்கு அழைத்து செல்கிறார். கொஞ்சம் வெட்டு குத்துக்குப் பிறகு
மனோஜுக்கு விடுதலையும் கிடைக்கிறது.

முதல் பாதியில் நந்திதா-ஜெனி·பருடன் நிறைய ரொமான்ஸ். இப்பொழுது
வரும் எ.20.உ.18 போன்ற படங்களில் இருந்து நல்ல மாறுதலான
காதல் காட்சிகள். ஹீரோயினுக்கு ஒரு அப்பாவித்தனத்துடன் குறும்பு
நிறைந்த கிராமத்துக் களை. கொடுத்த வாய்ப்புகளில் கலக்கி இருக்கிறார்.
இவரை ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஆட வைத்துக் காணாமல் போக்குவது
அநியாயம்.

அந்த அம்மாவாக சுகாசினி மணிரத்னம் தேவையே இல்லை. போருக்கு
வழியனுப்பும் ரயில் ஸ்டேஷன் காட்சியில் மட்டுமே உருக வைக்க வாய்ப்பு.
இந்தப் படத்துக்காக 'சிறந்த குணச்சித்திர நடிகை விருது' கிடைக்கும்
வாய்ப்பு லேது. மனோஜின் காரெக்டர் மனதில் பதிந்தாலும் artificial sweetener
போட்ட காபி போல் எதையோ தொக்கி வைக்கிறார்.

அருணா போல் முழிக்கும் பெரிய அண்ணி, 'நாட்டுச் சரக்கு நச்சுனுதான் இருக்கு'
என்று ஆட வந்துவிடக் கூடிய சிறிய மதனி, சிறிய மதனியின் மேல் ஆசைப்படும்
வில்லன் என துணைக்கு வருபவர்கள் அனைவரிடமுமே ஒழுங்காக வேலை
வாங்கி இருக்கிறார் பாரதிராஜா. கோர்ட் சீன்களில் நம்மை ரொம்பப்
படுத்தாமல், சண்டைக் காட்சிகளைப் புகுத்தாமல், கிராமிய அழகுகளைக்
காமிராவில் மிரட்டாமல் ரொம்ப எதார்த்தமான திரைக்கதை.

படத்தின் அபார பலம் வசனங்கள். டைட்டில் படத்தின் முன்பே போட்டு
விட்டதால் முழுப் படத்தையும் பின்னோட்டிப் யார் என்று தெரிந்து கொள்ள
வைக்கும் வட்டார வழக்கு. தேன்மொழியின் வசனங்களில் தெறிக்கும்
சொலவடைகள் கிராமிய பாண்ட்ஸ் மணம் கொடுக்கிறது.

ஆர். செல்வராஜின் கொஞ்சம் பெரிய கதையை இரண்டரை மணி
நேரத்துக்குள் அடக்குவதில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் இயக்குநர்.
அவருக்கு யாராவது ஒன் லைனர் கதைகளான ஜேஜே-வைப் போட்டுக்
காட்டி இருக்கலாம். 'புதுமைப் பெண்'ணை விட வேகத்துடன், 'மண் வாசனை'யை
விட வாசனையுடன், 'ஜூட்'டை விட நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்
இந்தப் படம் கொஞ்சமாவது ஓடியிருக்க வேண்டும்.

நன்றி: திண்ணை

நான் படிக்க வேண்டிய புத்தக பட்டியல்

1.கு.ப.ராவின் 'விடியுமா',
2.அண்ணாவின் 'ஓர் யிரவு',
3.புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்',
4.தி.ஜானகிராமனின் 'மோகமுள்',
5.சுந்தரராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை',
6.விந்தனின்'பாலும் பாவையும்',
7.கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கார்',
8.கிருஷ்ணன் நம்பியின் 'மாமியார் வாக்கு',
9.ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே',
10.கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்',
11.க.நா.சுவின் 'பொய்த்தேவு',
12.கல்கியின் 'தியாகபூமி',
13.பா.ஜெயப்பிரகாசத்தின் 'யின்னொரு ஜெருசலேம்',
14.ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்',
15.நீல.பத்மனாமனின் 'பள்ளி கொண்டபுரம்',
16..மாதவனின் 'சாலைக்கடைத் தெருக் கதைகள்',
17.பொன்னீலனின் 'உறவுகள்',
18.கு.சின்னப்பபாரதியின் 'தாகம்',
19.சுஜாதாவின் 'ஊஞ்சல்',
20.சோ.தர்மனின் 'நசுக்கம்',
21.மையத்தின் 'கோவேறு கழுதைகள்',
22.பா.செல்வராஜின் 'தேனீர்',
23.பாமாவின் 'கருக்கு',
24.ராஜம் கிருஷ்ணனின் 'அமுதமாகி வருக',
25.கிருத்திகாவின் 'வாசவேச்வரம்',
26.அம்பையின் 'சிறகுகள் முறியும்',
27.பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்',
28.தோப்பில் முகம்மது மீரானின் 'ஒரு கடலோரக் கிராமத்தின் கதை',
29.சே.யோகநாதனின் 'மீண்டும் வந்த சோளகம்',
30.பெ.கருணாகரமூர்த்தியின் 'அகதி உருவாகும் நேரம்',
31.நகுலனின் 'நிழல்கள்',
32.அசோகமித்திரனின் 'பதினெட்டாவது அட்சக் கோடு',
33.யிந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப் புனல்',
34.ஜெயமோகனின் 'ரப்பர்',
35.மா.அரங்கநாதனின் 'காடன் மலை',
36.பாவண்ணனின் 'பாய்மரக் கப்பல்',
37.வண்ண நிலவனின் 'எஸ்தர்',
38.வண்ணதாசனின் 'தனுமை',
39.திலீப் குமாரின் 'மூங்கில் குருத்து',
40.எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்',
41.தஞ்சை பிரகாஷின் 'கள்ளம்',
42.குமார செல்வாவின் 'உக்கிலு',
43.பெருமாள் முருகனின் 'நிழல் முற்றம்',
44.நரசய்யாவின் 'கடலோடி',
45.தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்',
46.லா.ச.ராவின் 'அபிதா',
47.சி.சு.செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்',.
48.நாகூர் ரூமியின் 'குட்டியாப்பா',
49.சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்',
50.பா.விசலத்தின் 'மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்',
51.பாவை சந்திரனின் 'நல்ல நிலம்',
52.ஜெயந்தனின் 'நினைக்கப்படும்',
53.கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்',
54.எஸ்.பொவின் 'நனவிடைத் தோய்தல்',
55.வல்லிக்கண்ணனின் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்',
56.ந.பிச்சமூர்த்தியின் 'காட்டு வாத்து',
57.சி.மணியின் 'வரும்,போகும்',
58.கலாப்ரியாவின் 'எட்டயபுரம்',
59.ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை',
60.மனுஷ்யபுத்திரனின் 'என் படுக்கையறையில் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள்',
61.மீராவின் 'ஊசிகள்',
62.சுதேசமித்திரனின் 'அப்பா',
63.யுகபாரதியின் 'மனப்பத்தாயம்',
64.சோ.வைத்தீசுவரனின் 'நகரத்துச் சுவர்கள்',
65.பிரம்மராஜனின் 'கடல் பற்றிய கவிதைகள்',
66.மஹாகவியின் 'குறும்பா',
67.மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்',
68.காமராசனின் கறுப்பு மலர்கள்',
69.அ.சீனிவாசராகவனின் ('நாணல்') 'வெள்ளைப் பறவை',
70.சுகுமாரனின் 'பயணத்தின் சங்கீதம்',
71.அப்துல் ரகுமானின் 'பால்வீதி',
72.அபியின் 'மவுனத்தின் நாவுகள்',
73.கல்யாண்ஜியின் 'புலரி',
74.பழமலயின் 'சனங்களின் கதை',
75.கலாந்தி கைலாசபதியின் 'ஒப்பியல் யிலக்கியம்',
76.எஸ்.ராமகிருஷ்ணனின் 'கற்பின் கனலி',
77.ர்.கே.கண்ணனின் 'புதுயுகம் காட்டிய பாரதி',
78.சிட்டி-ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி',,,,,,
79.காஞ்சனா தாமோதரனின் 'வரம்',
80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

நன்றி: இரா. முருகன்/சாபு

செவ்வாய், ஜனவரி 27, 2004

தமிழா... தமிழா

விருந்தினராகச் சென்ற இடத்தில் இன்ஸ்டண்ட் காபி கொடுக்காமல் அதிசயமாக ·பில்டர் காபி கொடுப்பது போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா (ஒரே) ஒரு நாள் போட்டியில் ஜெயித்துள்ளது. அந்த ·பில்டர் காபியிலும் ஸ்டார்பக்ஸ், மாக்ஸ்வெல் என்று புளித்த கொட்டையை அரைக்காமால், நரசுஸ் காபி போட்டு எடுத்து வந்தால் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டின் பாலாஜி பந்துகளில் நாலு பேர் வீழ்ந்தது அவ்வளவு ஆச்சரியங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

தமிழ்நாட்டின் பிற வீரர்களைப் போல் இல்லாமல் பல ஆட்டங்கள் தொடர்ந்து ஆடவைக்கவும், ஆட்டத்தில் சரியான வாய்ப்புகள் கொடுக்கவும் இறைவனை வேண்டுவது அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 'தெற்குத் தேய்கிறது; வடக்கு வாழ்கிறது' என்று எதற்கோ குரல்கொடுத்தவர்கள், கிரிக்கெட்டையும் கண்டு கொள்ளாமல் விட்டது வருத்தமே.

தமிழ்நாட்டின் ரஞ்சி அணியை ஹிந்துவின் எழுத்துக்களில் தொடர்ந்து ரசித்து வந்த பலரில் நானும் ஒருவன். வி. சிவராமகிருஷ்ணனும், அப்துல் ஜபாரும் என்னுடைய பள்ளிக் காலங்களில் தொடர்ந்து ஏமாற்றாத வீரர்கள். ஒருவர் ஆட்டத்துக்கு ஆட்டம் ஒழுங்காக ஆடினால் அணியில் என்றாவது இடம் பெறுவார் என்னும் அணி அரசியல் தெரியாத பொற்காலம் அவை.

கல்லூரியில் சேர்ந்த பிறகும் வெங்கடரமணாவையும் சரத்தையும் ஆர்வத்துடன் தொடர்ந்து ஹிந்துவில் படித்து வந்தேன். பள்ளியில் கூடப் படிக்கும் போதே மிரட்டியவர் சரத். சரத்தின் ஆட்டம் நேரில் பார்ப்பதற்கு பயமாக இருக்கும். டீமுக்கு ஆள் எடுக்க மாங்கொட்டை டாஸ் போட்ட காலங்களிலேயே, வந்து விழும் முதல் பெயர் சரத் ஆகத்தான் இருக்கும். எதிரணியில் சரத் ஆடினால், ·பீல்டீங் வெகு சுலபம். சும்மா நின்றிருந்தால் போதும். தலைக்கு மேல்தான் பந்துகள் சென்று கொண்டிருக்கும்.

கருமமே கண்ணாயினார் மாதிரி சரியான குறிக்கோள்கள், விளையாட்டில் பயிற்சியின் மூலம் விடா முயற்சி, என பாடத்திட்டத்தில் வரும் வள்ளுவரின் குறளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய் இருப்பவன். தமிழ் நாட்டுக்காக ஆட வாய்ப்பு கிடைத்தவுடன், அடுத்து இந்தியாவுக்காக ஆடச் செல்லும் வாய்ப்பு மிக அருகில்தான் இருக்கிறது என்று தமிழ்நாடு அணியின் கிரிக்கெட் வீரர்களை அறிந்தவர்கள், இந்தியாவில் ரஞ்சிக் கோப்பையை முக்கியமாகக் கருதும் நபர்கள் அனைவரும் எண்ணியிருப்பார்கள்.

டீன் வயதின் எழுச்சி நாயகன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இந்த முடிவுகள் வலுப்பெற்றன. அவருக்காவது மட்டை மட்டுமே பிடிக்கத் தெரியும். நம்ம பையனுக்கு பந்தையும் சுழல விடத் தெரியுமே என்னும் நம்பிக்கைதான் காரணம். ஒன்றோ இரண்டோ 'ரெஸ்ட் ஆ·ப் இந்தியா' ஆட்டங்கள் மட்டுமே ஆடி முடித்த அவரை, இன்று பின்னோக்கிப் பார்க்கையில் அபிஜித் காலே கண்ணில் படுகிறார்.

பணமுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது போல காலே முயற்சி செய்தார். ஆனால், இந்தியாவிற்காக ஆட இன்னும் பற்பல விஷயங்கள் உள்ள பிள்ளையாக இருக்க வேண்டும். பாம்பேயில் பிறந்தால் நலம்; தேர்வாணைக் குழுவில் சித்தப்பா இருந்தால் சௌகரியம்; எம்.பி.யாக மாமா இருந்தால் வாய்ப்பு நிச்சயம்; இது எதுவும் இல்லை என்றால் லஞ்ச முதலீடு செய்யவாவதுத் தயாராக இருக்க வேண்டும்.

வி. சிவராமகிருஷ்ணன் ரஞ்சியில் ஒரு ஆட்டத்துக்கு 43 வீதம் ஆறாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கும் சரத் 55 வீதம் ஏழாயிரத்தைத் தாண்டி விட்டார். ஒரு உதாரணத்துக்கு வாயுள்ள பிள்ளை ராபின் சிங்கை எடுத்துக் கொள்வோம். அவர் ஓர் ஆட்டத்துக்கு 52 வீதம் 4127 ரஞ்சி ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

சரத்துக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை; நிரூபிக்கவும் இல்லை. வெங்கடரமணாவின் நிலை படு மோசம். மேற்கிந்தியத் தீவுகளிடம் இரண்டு மாட்ச் தோற்றுப் போய்விட்ட பிறகு கடைசி ஆட்டமான நான்காவது போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுக்கப் படுகிறது. எழுபது பந்துகள் மட்டுமே வீசிய பிறகு, இந்திய அணியை விட்டுக் கழற்றி விடப் படுகிறார். ஒரு நாள் போட்டியில் பத்து ஓவர்களில் 36 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்த மிக மோசமான ஆட்டத்திற்காக நீக்கப் படுகிறார். இதுதான் 'one-match wonder'.

தமிழ்நாட்டில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்தியவர்களில் சுனில் சுப்ரமணியம் மூன்றாவது நிலையில் உள்ளார். (வெங்கட்ராகவனும், விவி குமாரும் முதலிரண்டில் உள்ளார்கள்). நியுசிலாந்துக்கு எதிரான தன்னுடைய அரங்கேற்ற ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ¤க்கு மூன்று விக்கெட் வீதம் ஆறு விக்கெட் வீழ்த்தி 'சிறந்த பந்து வீச்சாளர்' பரிசையும் பெறுகிறார். அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காமல், தமிழ் நாட்டிற்காக மட்டுமே மிளிர்கிறார்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை இல்லை என்பது சோகத்தில் ஆறுதல். காட்டாக ரிஸ்வான் சம்ஷத் என்று என்னுடைய பள்ளிக் கால கவனத்தைக் கவர்ந்த உத்தர பிரதேசக்காரரை பார்ப்போம். 47 ரன்கள் வீதம் 6000 ரஞ்சி ஓட்டங்கள். ஓரளவு பந்தும் வீசக் கூடியவர். சரியான mentor-களோ, ஆதரவாளர்களோ இல்லாததுதான் இவர்களின் பிரசினை.

ராபின் சிங்குக்குக் கிடைக்கும் இந்திய இடங்கள் ஏன் வெங்கட ரமணாவுக்கும், ரிஸ்வான் சம்ஷத்துகளுக்கும் கிட்டுவதில்லை?

இந்த வருட ரஞ்சி நிலைமையைப் பார்த்தால் தனி மனித அக்கிரமிப்புகள் நன்று விளங்கும். பூனை, நாயும், கிளியும் கூட பெற்ற பிள்ளை போல மடியினிலே இருப்பது போல் ஏழு பாயிண்ட் மட்டுமே எடுத்த பெங்காலில் இருந்து கங்குலி. க்ரூப்பில் இரண்டு முறை தோற்று கடைசி நிலையில் இருக்கும் பரோடாவில் இருந்து கூட பலர் இருக்கிறார்கள். ஆனால் மும்பை போல் மூன்று வெற்றிகளை பெற்று க்ரூப்பின் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு அணிக்கு என்ன பயன். நமக்கு வளர்த்து விடத் தெரியவில்லை.

நடக்கும் விஷயங்களைச் சொல்லிக் குற்றப் பார்வையில் அடிபடாமல், அணியில் இருப்பதற்கான சமரசங்களையும் சரியான விகிதாசரங்களில் செய்து கொண்டு, அவ்வப்போது வெற்றியும் ஈட்டித் தந்து, தன்னுடைய வாழ்க்கையையும்சிதைத்துக் கொள்ளாத அனைத்து ரஞ்சி வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.

நன்றி: தமிழோவியம்

ஒரு படக்கதை - கிறுக்கல்கள் : ரா பார்த்திபன்

தமிழகத்தை சேர்ந்த பலரும் புத்தககங்கள்... மன்னிக்க.... இலக்கியங்களையும், ஆரோக்கியமான விஷயங்களையும் படிப்பதில்லை என்பது சிலர் சொல்லும் குற்றசாட்டு. இன்றைய தமிழ் சினிமா செல்லும் திரை ரசிகர்கள்தான் இவர்களின் முக்கிய இலக்கு. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வாஸ்துவும் சமையல் புத்தகங்களும் வாங்குபவர்களை நோக்கியும் இலக்கியவாதிகள் பலர் இவ்வாறு சொல்லி வருகின்றனர்.

இவர்களில் சிலராவது 'கிறுக்கல்கள்' போன்று ஒரு புத்தகத்தையாவது வெளியிட வேண்டும். பார்த்திபன் என்னும் பெயருக்காக பல பிரதிகள் விற்றாலும், புரட்டிப் பார்ப்பதற்கு அனைவருக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும் புத்தகம். தமிழ் தெரிந்தும் அதிகம் வாசிக்காத கல்லூரி நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். இருக்கும் ஒரு சில தமிழ் புத்தகங்களை பராக்குப் பார்த்து வந்தவர், மேற்கண்டதைக் கண்டவுடன் நின்றார். 'என்னப்பா இது? ஷேப்பே வித்தியாசமா இருக்கு' என்று எடுத்தார்.

என்னுடைய வீட்டில் இருந்து இதுவரை விசி++, சி#, ஜாவா என்று தொழிற்நுட்பப் புத்தகங்களையே கடன் வாங்கிச் சென்றவர், கடனாகக் கேட்ட முதல் புத்தகம் 'கிறுக்கல்கள்'. நல்ல வடிவமைப்புக் கொண்டிருந்தால், உள்ளிருக்கும் விஷய செறிவுகளைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்ளலாம் என்பதற்கு நல்ல உதாரணம். தமிழை உலக மயமாக்கப் போகிறோம், செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்பவர்களுக்கும் இது போன்ற வெளியீடுகள் வரப் பிரசாதம்.

ரயிலில் ஒரு நாள் புரட்டிக் கொண்டிருக்கையில், பக்கத்து இருக்கை அமெரிக்கர் கூடத் திரும்பி பார்த்து, படம் பார்த்து விட்டுத் தருவதாகக் கேட்கிறார். அவருக்கு பலான புத்தகமோ என்னும் சபலமோ என்றறியேன். ஆனால், முழுவதும் ஒரு சுற்று திருப்பி விட்டுக் கொடுக்கும்போது 'அற்புதமான ஆக்கம்' என்று நன்றி சொல்லி வியந்தார். இது பார்த்திபனுக்கு எகத்தாளமா அல்லது பாராட்டு முத்திரையா என்று எனக்குத் தெரியாது.

கறுப்புப் புள்ளியையும் பாரதியின் அவுட்லைன்னையும் வைத்து மேட்டர் எழுதுவது; 'ஹே ராம்' படம் குறித்த பதிவுகள், சினிமாவுக்கு வந்த கதை, 'அடுத்த வினாடி' ரூமி மாதிரி சுய முன்னேற்றக் கட்டுரைகள்; நிறைய காதல் புலம்பல்கள், நிறுத்தல் குறிகளை வைத்து வார்த்தை அடுக்குகள் எனக் கண்ணைப் பறிக்கும் இணையத்தளம் போல் உள்ளது இந்தப் புத்தகம். அனைத்துக்கும் சுவையான பார்த்திபனின் பின்னூட்டங்கள், குறிப்புகள் என சுய அலசலாக வருகிறது மேலும் மெருகு சேர்க்கிறது.

பார்க்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தில் இருந்து

"கிறுக்கலைக் கூட கவிதையென்று சொல்லிக் கொள்ளும் ஆசை... அதைப் புத்தகமாகப் பதிவு செய்து கொள்ளும் ஆசை... விமர்சகர்கள் கூட, 'போனாப் போகுது' என்று பாராட்டி விட மாட்டார்களா என்ற ஆசை...

இப்படிப்பட்ட அல்ப ஆசைகள் அறிவிப்பது என்னவென்றால், நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது புவியீர்ப்பு அல்ல...

ஆசை...ஆசை...ஆசை...ஆசை...!"

நன்றி: தமிழோவியம்

ஆஸ்கர் ஆட்டம் ஆரம்பம்

Normal Charlize Theron


இங்கிலீஷ் படங்கள் பார்ப்பதில் ஒரு பயன் இருக்கிறது. 'ஜேஜே'
வருகிறதா, 'செரண்டிபிட்டி'யை எப்படி பெயர்த்திருக்கிறார் என்று
அலசலாம். கமல் ஒரிஜினலாய் ஒரு சீன் வைத்தால் கூட ஹேமந்த்
சொல்வது போல் 'சைலன்ஸ் ஆ·ப் தி லாம்ப்ஸ்', 'ரோஷோமோன்',
'டெட் மான் வாக்கிங்', 'லை·ப் ஆ·ப் டேவிட் கேல்' என்று பல
படங்களின் தழுவல்தான் என்று பழி போட முடிகிறது.

'லார்ட் ஆ·ப் தி ரிங்' படத்தின் மேல் ஆஸ்கருக்கு என்ன பிரேமையோ!
முதல் படமே போர் என்று நினைக்க வைக்குமளவு சண்டைக் காட்சிகள்.
மரத்தடியின் மூலம் கையேடு கிடைத்தால் இரண்டையும், இப்ப
அனைவரும் சிலாகிக்கும் மூன்றாவதையும் பார்க்கும் தைரியம் வரலாம்.

'Lost in Translation' இயக்குநர் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர். அப்பாவின்
பெயரை வைத்து திரையுலகில் காலை வைத்துத் தட்டு தடுமாறி நம்ம
சூர்யா போல் இப்பொழுதுதான் தனித்துவம் எட்டி பார்த்துள்ளது. ('காட்·பாதர்'
எடுத்த அப்பா, நம்ம சிவாஜி மாதிரி திரையுலக பிதாமகன்; கஸின் நிகலஸ்
கேஜ்)


Monster Charlize Theron

'மான்ஸ்டர்' படம் பார்த்து விட வேண்டிய ஒன்று. தன் அழகைக் குறைத்துக்
கொண்டு படு சிரத்தையாக உண்மைக் கதையை வாழ்ந்திருப்பதாக
சொல்கிறார்கள்.

தமிழ்ப்படங்களோ, (ஒரு படம் கூடவா ஆஸ்காரின் மதிப்பீடுகளுக்கு இணையாக
இல்லை?) இந்தியப் படங்களோ இல்லாதது ஆச்சரியமாக இல்லை. ஆனால்,
சுவையான 'பெண்ட் இட் லைக் பெக்கம்' தவறவிட்டது எப்படி?

'மேட்ரிக்ஸ்' படத்தை எந்த பட்டியலிலும் நியமிக்காததும் டாம் க்ரூய்ஸ¤க்கு
சிறந்த நடிகருக்கான பரிந்துரை தராததும் சோகம்தான்.
சில சிந்தனையைத் தூண்டும் வசனங்களுக்காகவாவது மேட்ரிக்ஸ¤க்கு
அங்கீகரிப்பு கொடுத்திருக்கலாம்.



அதிகாரபூர்வமான இணையத்தளம்
மரத்தடி விவாதங்கள்

பிடிக்காத பாடல்கள்

1. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - தூர்தர்ஷனில் சின்ன வயதில் அடிக்கடி
போட்டு படுத்துவார்கள். சோகம் கர்னாடகக் காவிரி போல் வழிந்தோடும்.
பாடல் வரிகள் எல்லாம் கவனிக்காமல், காட்சியமைப்பும் பிடிக்காமல்,
கண்ணை மூடி, பல்லைக் கடித்து, அடுத்த பாட்டுக்காக காத்திருக்கும்
காலங்கள் நரகம்.

2. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - இது விவிதபாரதியில் அடிக்கடி ஒலித்ததால்
அலுத்துப் போனது என நினைக்கிறேன். பாடலைப் பார்த்த பிறகு
வெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன். என் வயசுப் பயல்
கார்த்திக் செய்யும் அட்டகாசம் எங்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும்
கொட்டிக் கொண்டது.

3. பசுமை நிறைந்த நினைவுகளே - பெருசுகளின் சிலாகிப்பு.
'முஸ்தபா..முஸ்த·பா' வந்ததோ, நான் பிழைத்தேன்.

4. பொன் மகள் வந்தாள் - ஏற்கனவே செயற்கைத்தனம் நிறைந்த காட்சியமைப்பு;
மறுபடி அதே பாட்டை உல்டா செய்ய என்னத்தைக் கண்டார்களோ?

5. அப்பனே...அப்பனே.. பிள்ளையாரப்பனே -
படத்தில் ரஜினி இருக்க,
பார்ப்பதற்கு ரசிகர்கள் நாங்கள் இருக்க,
யானையின் தயவு எதற்கு?

6. நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் -
அந்தக் கால கமலை விற்பதற்கு, மிருகங்கள் தேவைதான் என்றாலும்
மற்றுமொரு அறுவை பாடல்.

7. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் -
சாகப் போறவன் ரொம்ப சிரிக்கிறான்.
சீக்கிரம் முடிங்கப்பா பாட்டை.

8. என்னவளே... அடி என்னவளே - 'காதலன்' வந்த சமயம், பரிட்சையில் கேட்கக்கூடிய
முக்கிய பகுதி போல் அடிக்கடி கேட்டு/பார்த்ததாலோ என்னவோ, பிறகு
மொத்தமாக வெறுத்து விட்டது.

9. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - தலைவரை ஏமாற்றும் சரோஜா தேவியுடன்
கனவுலக டூயட் பாடுகிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், பாட்டு முழுக்க
சாரட் வண்டிதானே?

10. செண்பகமே... செண்பகமே - நாலு பேர், நாலு தடவை பாடறதுக்கு, அப்படி என்ன
இருக்குங்க இந்த பாட்டில்?

அடிக்க வருவதற்கு முன் நிறுத்திக் கொள்கிறேன்.

திங்கள், ஜனவரி 26, 2004

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவர்களுக்கு,

சந்தவசந்தம்
என்னும் பக்கத்துக்கு சென்று ilakkaNa nEsan_1.txt மற்றும்
ilakkaNa nEsan_2.txt என்னும் கோப்புகளை பார்வையிடலாம்.
(வாழ்த்துக்கள் ஏன் சரியில்லை என்றும் விளக்குகிறது ஒரு கட்டுரை).

--------------------------------------------------

இலக்கணக் கட்டுரைகளை, இணையத் தொடர்பு வசதி இல்லாதவர்க்காக, மின்னஞ்சல்
மூலமாக ..இலந்தையார் ஆலோசனைப்படி... இதுவரை இட்டுவந்தேன். முக்கியமான
கட்டுரைகள் பல வந்துவிட்டன.அதனால் தொடர் நிறைவேறுகிறது. இனிமேல் , தமி
ழண்ணல், நன்னன் மற்றோரின் கட்டுரைகளையும், தொடர்புள்ள மற்ற கட்டுரைகளையும்
படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தளங்களில் பார்க்கலாம்.

1) தமிழ் அறிவோம் தொகுப்பு--1 ( Dec 1998- March 2000)

2) தமிழ் அறிவோம் தொகுப்பு --2 (98- Dec 2000)

3)தமிழ் அறிவோம் தொகுப்பு --3 ( 2000--Aug 2001)

4) சொல் புதிது

5)மொழி பற்றிய மற்ற கட்டுரைகள்

6)மொழிவரலாறு

*******

நன்றி: சந்தவசந்தம்/ திரு. பசுபதி

கதை விட வாங்க - 5

இன்று திண்ணைய மேய்ந்து கொண்டிருந்தபோது தேடிக்
கொண்டிருந்த சில கதைகள் மாட்டிற்று.

ஏற்கனவே படிக்காதவர்களுக்கு உதவுமே என்ற
எண்ணத்தில், சில சுட்டிகள்.

1. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 1 - ஆதவன்
சி.உ... இரண்டாம் பாகம்
சி.உ... 3

2. நாதரட்சகர் - தி.ஜானகிராமன்
3. பத்து செட்டி - தி.ஜானகிராமன்
4. ...ப்பா - தி.ஜானகிராமன்

5. இவளோ? - லா.ச.ராமாமிருதம்
6. வரிகள் - லா.ச.ராமாமிருதம்

7. ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள

8. கணவன், மகள், மகன் - அசோகமித்திரன்
9. பாண்டி விளையாட்டு - அசோகமித்திரன்

இந்தக் கதைகள் தவிர மேலும் இவர்களின் மற்றும் புது எழுத்தாளர்களின்
கதைகளை இங்கு காணலாம்: திண்ணை - (சிறு)கதைகள்

வெள்ளி, ஜனவரி 23, 2004

இந்தியாவின் தலைசிறந்த வலையமைப்பு கொண்ட பல்கலை.: பிட்ஸ்

Wired BITS, Pilani
இந்தியா டுடே குடும்பத்தில் இருந்து வெளிவரும் பிஸினஸ் டுடே கம்பியிணைப்பில் முண்ணனியில் இருக்கும் நிறுவனங்களின் தலை இருபதை வெளியிட்டுள்ளது. பட்டியலில் இருக்கும் ஒரே கல்விக் கூடம் பிட்ஸ், பிலானி.

பிஸினஸ் டுடே கட்டுரையில் இருந்து:
இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே மிகப் பெரிய வலைப் பின்னல், ஜனவரி ஏழாம் தேதி முதல் இயங்க ஆரம்பித்தது.இருபது கிமீ வடத்தைக் கொண்டு நாலாயிரத்துக்கும் மேல் இடங்களில் வலையுடன் இணைய முடியும். சில முக்கிய இடங்களில் 802.11பி கொண்டு கம்பியில்லா வலைப்பின்னலும் எட்ட முடிகிறது.

சிறந்த தொழில்நுட்பங்களும், பத்திரபடுத்தப் பட்ட பாதுகாப்பு அரண்களும் புத்தம்புதிய மிண்ணனுவியல் உத்திகளும் சிஸ்கோ, விப்ரோ எனப் பெருந்தலைகளின் பங்குகளுடன் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

பெயரிலிக்கு சமர்ப்பணம்


Rose is Rose

இளைஞர்களிடையே மூன்றாவது ஒருங்கிணைப்பு குழு! - கேடிஸ்ரீ

சென்னை ஆன்லைன்:
பொதுவாகவே இன்றைய கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு தேசப்பற்று, மொழிப்பற்று, மண்ணின் மீது பிடிப்பு, சமூக அக்கறை இல்லை... இன்றைய இளைஞர்கள் சினிமா, வன்முறை, பார்ட்டி, டிஸ்கோ என்கிற ரீதியில்தான் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால், இப்போழுதே, இந்த கணத்திலேயே அந்த எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்... எங்களுக்கும் சமூகஅக்கறை, மொழிப்பற்று, நாளைய இந்தியாவைப் பற்றிய கனவுகள் எல்லாம் இருக்கிறது என்று உரத்த குரலில் குரல் கொடுக்கிறார் கபிலன் வைரமுத்து.

''தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை இளைஞர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்திருக்கிறது.. முதல் ஒருங்கிணைப்பு சுதந்திரப்போராட்ட காலத்தில் ஏற்பட்டது. அன்றைய காலத்தில் இளைஞர்களிடையே நாட்டின் சுதந்திரம், அடிமை சங்கிலியிலிருந்து வெளிவர வேண்டும் என்கிற எழுச்சியும், கோஷமும் ஏற்பட்டது. −ரண்டாம் முறை இளைஞர்களின் ஒருங்கிணைப்பு திராவிட இயக்க எழுச்சி தோன்றிய கட்டத்தில் ஏற்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களை சுயமரியாதை இயக்கங்களும், திராவிட வளர்ச்சியின் பரிமாணங்களும் ஒருங்கிணைத்தது.'' என்கிறார் கபிலன்.

தனிமனிதனின் முகத்தினால் மக்களுக்கு ஒர் இயக்கம் தெரியவருவதைவிட அவர்களின் கொள்கைகளின் மூலலே அந்த இயக்கம் மக்களிடையே தெரிய வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்... ஆகையால் இவ்வியக்கத்திற்கு என்று தனியாக தலைவர் கிடையாது என்பது சிறப்பம்சம்.

இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பு 'என்றான் கவிஞன்'. தினசரி தான் போகும் ரயில், பார்க்கும் ரயில் நிலையம், வகுப்புகள், மாணவர்கள், கல்லூரி காதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இவர் பார்த்த நிஜங்கள் அத்தனையும் கவிதை வடிவில் 'என்றான் கவிஞன்' மூலம் சொல்லியிருக்கிறார். இந்த கவிதை தொகுப்பில் விவேகானந்தரின் ஓர் சிந்தனையை அவருடைய பாணியிலேயே கவிதையாக வடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

''பற்றற்றிரு' எனக்கு பிடித்த தத்துவம்'' என்கிறார் கபிலன். தந்தை வைரமுத்துவின் 'வளர்சிதை மாற்றம்' என்கிற கவிதை தனக்கு பிடித்த கவிதை என்கிறார் கபிலன்.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கல்லூரிகளில் ஆங்கில வகுப்பில் பாடம் படிப்பவர்களின் மனரீதியான போராட்டத்தை இவரின் இரண்டாவது தொகுப்பான 'என்றான் கவிஞன்' என்கிற கவிதைத் தொகுப்பில் 'தமிழ்மீடியம்' என்றொரு கவிதையின் மூலம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழிலேயே படித்து தொழிற்நுட்ப கல்லூரிகளில் நுழையும் மாணவர்கள் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில்... மொழி ரீதியான துன்பம் அவர்களுக்கு மனரீதியான துன்பமாக மாறிவிடுகிறது... மிகச் சிலர் தான் அதில் போராடி வெளிவருகிறார்கள்... பெரும்பாலானவர்கள் அந்த நான்கு ஆண்டுகளாகவும் வெளிச்சம் இல்லாத ஓர் இருட்டறையாகவே இருக்கிறது...

மேலும் விவரங்களுக்கு:

தொலைபேசி எண் 24844767
மின்னஞ்சல் : to_kabilan@hotmail.com

திருச்சியில் விபத்து

52 people killed in Tiruchirappalli fire: மணமகன் உட்பட 52 பேர் திருமண மண்டப விபத்தில் உயிரழந்து விட்டார்கள். அமெரிக்காவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சட்டென்று வெளியேறுவதற்கு நிறைய வாசல்கள் வைத்திருப்பார்கள். ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலும், தீ பற்றிக் கொண்டால் எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதை விளக்கி யிருப்பார்கள். இங்கு வந்தவுடன் தங்கிய விடுதியில் அதைப் பார்த்து, அடிக்கடி விபத்து ஏற்படுமோ என்று விசாரிக்க வைக்கும்படி படம் போட்டு, அம்புக்குறியிட்டு தப்பிப்பதற்கு வழி சொல்லுவார்கள்.

விபத்துக்களைத் தடுக்க முடியாது. துயர் தீர்க்கும் உதவியாவது நேரத்தேக் கிடைத்து உயிர் பலிகளைத் தடுக்க வேண்டும்.

கதை விட வாங்க - 4 (பா. ராகவன்)

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத
ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின்
முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது
பாயிண்டுகள் எழுதிவைத்தேன்.

இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை
இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட்
என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு
அல்லது திரட்டு அல்லது திருட்டு.

1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை
வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான
சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு
அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று
தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.
ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக்
கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ
உன்னையோ எதையாவது ரெண்டு வரி
வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது
நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன்
உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது
மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம்.
உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம்
சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால்
உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள்
ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி
ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத்
தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு
மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில்
ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம்,கோபம்,
புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை,
பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம்
என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு
உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின்
கருப்பாக, உயரமாக..., லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில்
தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை.
இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும்
பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.

நன்றி: புத்தகப் புழு மடலாடற் குழு

வியாழன், ஜனவரி 22, 2004

கதை விட வாங்க - 3

கதைகள் எழுதுவது பற்றி சாண்டில்யன் எழுதியிருந்ததை
அகத்தியரில் பெயர்த்தெழுதிப் டாக்டர் ஜேபி போட்டிருந்தார்.

அவற்றை பார்க்க -->
1 - 19176
2 - 19184
3 - 19185
4 - 19186
5 - 19188

சில மாற்று கருத்துகள்

புதன், ஜனவரி 21, 2004

தமிழுக்கு வந்த சோதனை

எனக்கு preen என்னும் ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை; மெரியம் வெப்ஸ்டரைத் தேடுகிறேன். 'செவ்வி' என்றால் தெரியவில்லை; க்ரியாவை நாடுகிறேன். வெங்கட்டின் வலைப்பதிவை பார்த்து மகிழ்ந்த 'ஆர்வலர்' ஒருவர் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் கேள்வி கேட்கிறார். புரியவில்லை என்று சொல்பவர்களைக் கிண்டலடிப்பது வருந்தத்தக்கது. (மற்றவர்களைக் கிண்டல் அடிப்பதும் சில சமயம் மனமத ராசாவை விரும்பிக் கேட்கும் ஐந்து வயதுக் குழந்தையைப் பார்த்து முகம் சுளிக்கும் 'பெப்ஸி' உமா expression-ஐ வரவைக்கலாம்.)

Volunteer என்றால் தொண்டூழியர், விழையோர், விழைச்சேவையாளர் என்றும் பல சொற்கள் உள்ளன். ஆர்வலர் என்றால் interested persons என்று சொல்லலாம். ஆர்வலனுக்கு layman என்னும் அர்த்தமும் இருப்பதாக அகரமுதலிகள் சொல்லுகிறது. புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு பின்னூட்டத்திலாவது அர்த்தம் மட்டும் கொடுக்கலாமே; விகடன் வாசகர் என்னும் கேலி வேண்டாமே.

குமுதம் படிப்பவனாய் இருப்பதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. ஒருவருக்கு ஞானபூமி பிடிக்கும். வளர்ந்து விட்டாலும் கோகுலம் படிக்கும் ஆசாமி நான். காலச்சுவடும் பார்ப்பேன். மாலைமதி ரசிக்காது. அதற்காக, மாலைமதி வாசகர்களை கவருகிற எழுத்து, எப்படி குப்பையாகும்?

எளிமையாய் எழுதுவது ரொம்பக் கடினம். புரியாமல் எழுதுவது ரொம்ப சுலபம்.

பொய் மாளிகை

அசோகமித்திரன்: "குறையன்றுமில்லை என்ற பாடல் எழுதினவரல்லவா? இன்று வண்டிக் குறைகள் எல்லார் மீதும் யார்தான் சொல்லாமல் இருக்கிறார்கள்?"

மாலன் - இந்தியா: உலகிலேயே இளமையான தேசம்

SAMACHAR Tamil -- The Bookmark for the Global Indian: "வாழ்க்கையைப் பொறுத்தவரை இளைஞர்களது அணுகுமுறை பிரமிக்கத்தக்கது. விரும்புவது, கிடைப்பது அதாவது desirable, available என்று எல்லாவற்றிலும் இரண்டு நிலைகள் வைத்திருக்கிறார்கள். படிப்பு, வேலை, சம்பளம், வ¦டு, கணவன் அல்லது மனைவி இவை எல்லாவற்றிலும் இந்த இரண்டு நிலைகள் உண்டு. விரும்புவது கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். விரும்பியது கிடைக்கவில்லை என்றால் மனமுடைந்து போவதில்லை. ஏக்கம் கொள்வதில்லை. அடுத்தது என்ன, what next? என்று மேலே மேலே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். சென்ற தலைமுறைக்கு நாற்பது வயதுக்கு மேல் அனுபவத்தின் காரணமாக ஏற்பட்ட முதிர்ச்சியை இந்தத் தலைமுறையிடம் இருபத்தி ஐந்து வயதில் பார்க்க முடிகிறது.

இந்த மனோபாவத்தையும், நம்பிக்கைகளையும், அணுகுமுறைகளையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம். அல்லது எதிர்மறையாகவும் திருப்பிவிடலாம். இறைநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒழுக்கத்தை வளர்க்கலாம் அல்லது மதவாதத்தை வலுப்படுத்தலாம். தொழில்நுட்பத்தின் ம¦துள்ள நம்பிக்கையைக் கொண்டு கற்பனையை வளப்படுத்தி புதிய புதிய பொருட்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தலாம். அல்லது மனிதர்களை இயந்திரமாக செய்துவிடலாம். கிடைப்பதை ஏற்பது என்ற அணுகுமுறையைக் கொண்டு உணர்ச்சிவசப்படாத ஒரு சமூக ஒழுங்கைக் கொண்டு வரலாம். அல்லது கனவுகள் அற்ற வறட்டு சமுதாயத்தை ஏற்படுத்தலாம்."

புதிய மொந்தையில் பழைய சரக்கு

இன்றையப் பதிவுகள் அனைத்துமே 'தமிழோவியத்தில்' மவுஸ் போன போக்கில் என்று வெளிவந்தவை. என்னுடைய சௌகரியத்துக்காக இங்கு சேமித்து வைக்கிறேன்.

நன்றி: தமிழோவியம்

மெல்லினம்

(பா ராகவன் 'கல்கி'யில் எழுதிய தொடர்கதை 'மெல்லின'த்திற்கு ஒரு வாசகனின் எண்ணங்கள்).

"ஒரு பன்னிரண்டு வயதுக் குழந்தையின் சிந்திக்கும் திறன் எம்மட்டில் இருக்கும் என்று சுலபத்தில் யூகித்து விட முடியாது போலிருக்கிறது. பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். பழகிக் கொண்டேதான் இருக்கிறோம்" என்று ஆரம்பிக்கும் கடைசி அத்தியாயம்தான் கதையின் அடிநாதம். பன்னிரெண்டு வயதில், என்ன மனநிலையில் இருந்தேன் என்பதை அன்றும் இன்றும் அறியாத எனக்கு, சிறுவர்களின் உலகத்தில் உள்நுழைந்து அலசி ஆராய்ந்து செல்கிறது 'மெல்லினம்'.

நான் ஏழாவது படிக்கும் போது ஒரு விஷயம் தெரிந்த நண்பன் எல்.பி.டபிள்யூ என்றால் என்ன என்று தெரியுமா என்று பேச்சுவாக்கில் கேட்கிறான். நானும் கர்ம் சிரத்தையாக பந்து ஸ்டம்பை தகர்த்து விடும் என்று அம்பையர் தீர்மானித்து கொடுக்கும் அவுட்தானே என்று விளக்கினேன். 'லவ் பி·போர் வெட்டிங்' என்று கிசுகிசுத்து அவன் பறந்து விட்டான். மனதிற்குள் ஒரு இனம் புரியாத திருட்டுதனம். இன்று மாதிரியே ஏதாவது புதியதாக அறிந்து கொண்டால், அது பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ, தகவல்களைத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல்.

அடுத்த நாள் புலம்பிக் கொண்டிருக்கும் சரித்திர ஆசிரியரின் பிண்ணனியில் எனது புதிய ஞானத்தை பென்ச் சகாக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிளுகிளுவென்று சிரித்தவர்கள் வேறு முக்கிய விஷயங்களுக்குத் தாவி விட்டோம். பள்ளியில் எங்கும் எனக்கு நல்ல பெயர். "கெட்டிக்காரன். புத்திசாலி. கற்பூர புத்தி. சாது. நல்லவன். அன்பானவன். சமத்து." என்று 'மெல்லினம்' ஜக்கு போல் அமைதியானவன்.

எங்கிருந்துத் தோன்றியதோ தெரியவில்லை. டிவி செய்திகளுக்கு முன் நேரம் காட்டும்போது வருகின்ற, ஐந்து விநாடித் துண்டு விளம்பரம் போல் நான் சொன்ன தம்மாத்துண்டு மேட்டரை வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். என்னுடைய கட்டி காத்த நல்ல பேர், எக்ஸ்ட்ரா மார்க் வாங்கிக் கொள்ளும் சாம்ர்த்தியம் எல்லாம் கப்பலேறிப் போகும் அபாயம். பேந்தப் பேந்த விழித்து, அசடு வழிந்து, சோக மயமாகி, வாழ்க்கையே வெறுத்து, நண்பர்களுடன் பேசாமல், ·பேவரிட் ஆசிரியர்களின் பாடத்தை கவனிக்காமல் பயந்து பயந்தே வாழ்க்கை சென்றது.

டீச்சர்களிடம் பாவ மன்னிப்பாக தர்ம சங்கடத்தில் ஆழ்வதற்கு பதில் 'வாயைத் திறக்கவே செய்யாமல் தன் மனத்திலிருப்பதை ஒரு பொட்டலமாகக் கட்டி எடுத்து அவர்கள் மனத்துக்குள் வைத்துவிட முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். முடிந்த நேரத்தில் அவர்கள் பிரித்து எடுத்துப் புரிந்து கொள்ளட்டும்' என்று மெல்லின நாயகனைப் போல் நினைத்தேன்.

'மெல்லின'த்தின் கதாநாயகன் மிஸ்டர் ஜகன்னாதனும் இவ்வாறு பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி வீட்டை விட்டே ஓடி விடுகிறான். உப்புப் பெறாத விஷயம் என்று வாழ்க்கையில் நான் இப்பொழுது எண்ணும் ஒரு சம்பவத்துக்கு, அந்த நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன் என்று சிந்திக்கும் போது வேறொன்று விளங்குகிறது. இன்று அலுவலகம் இன்ன பிற வாழ்க்கையில் முக்கியம் என்று கருதுபவை, நாளை அர்த்தமிழந்து விடுகிறது. 'இருப்பியல் சங்கடங்கள். வெளியே பேசிவிட முடியாத, மிகவும் அந்தரங்கமான நெருடல்களைத் தரக் கூடியவை அவை' என்கிறது 'மெல்லினம்'.

"வியப்பு தீராதவரை மட்டுமே ரசிக்கக் கூடிய அவனது மந்திர வித்தைகள்" என்னும் போது வாழ்வியலின் சூட்சுமம் விளங்குகிறது. எல்லாருக்கும் எல்லாமும் செய்யக் கூடியவை ஆகிவிட்டால் ஆச்சரியங்கள் போய்விடும்.

அரசாங்க ஊழியருக்கு 'துடைக்கும் விதமகவே தூசிகள் இருந்தாலும் அவையும் இருக்கப் பணிக்கப் பட்டவை', மாலை தினசரிக்கு 'ரேஸ் டிப்ஸையும் ஷேர் உலகையும் வரி விளம்பரங்களையும் நம்பி இயங்குவது', பழைய டைரிகளை மீண்டும் படிப்பதை 'தன்னைத் தனக்கு மறு அறிமுகம் செய்து கொள்வது', பதற்றம் இல்லாததற்கு 'ஒரு டாகுமெண்டரி படத்தின் வருணனையாளர் தொனியில்' என்று உவமிப்பது மனதின் ஆழங்களில் உட்காரும்.

குழந்தை வளர்ப்பு, அவர்களின் நியாயமான ஆனால் நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் என்று அலசி நம்மை நிறையக் கேள்வி கேட்டுக் கொள்ள வைக்கிறார். பெரியவர்களுக்காகவும் 'அனைவரும் நிறைய சம்பாதிப்பதற்காக, மத்த எல்லா படிப்பையும் நிறுத்திட்டு, இஞ்சினீயரிங் படிப்பை மட்டுமே ஏன் கவமெண்ட் வெச்சிக்கக் கூடாது?' என்று சிறியவர்களை விட்டு கேள்வி கேட்க வைக்கிறார். தாத்தா பாட்டிகளைத் தெரியாமல் வளரும் பேரன் பேத்திகள், பெற்றோர் இல்லாத தனிமையான வீட்டிற்கு வரும் குழந்தைகள் என இந்தக் கால டபுள் இன்கம் குடும்பங்களையும் காட்டுகிறார்.

'மாமியாரும் மருமகளும் பேசிக் கொள்ள மேலதிக விஷயங்கள் இல்லாத தருணங்களில் ஸ்லோகங்கள் கைகொடுக்கும்', 'குழந்தைகளின் பெயரில் பெரியவர்கள் அனுபவிக்கவும் சில சங்கதிகள் இருக்கின்றன' போன்ற வரிகளால் அன்றாட வாழ்வு தெரிகிறது.

மனக் குரங்காக விக்கி என்னும் காரெக்டர் திடீரென்று முளைத்து கால் கை வைத்துக் கொண்டு ஜகனை தடுத்தாட் கொள்வதைப் பார்க்கலாம். சின்ன மூளையின் பெரிய கற்பனையாக, அப்பாவின் இளமைக் காதலை 'ghosts of the past' என்பது போல் ஆவி, இரத்த காட்டேறி என்று மாற்றி சொல்லும் குழந்தைகளின் கதைகளை அசை போடலாம். டைரிகளில் எழுதுபவை கற்பனையா என்பதை அறிய, ஊரு விட்டு ஊரு வந்து ஊர்ஜிதபடுத்தும் பனிரெண்டுகளின் தைரியத்தை வியக்கலாம். சிறார்களின் கனவுகளாக சொல்பவை, நமக்கு இன்றும் தோன்றி பயமுறுத்தலாம். வதந்திகளின் வள்ர்ச்சி பற்றியும் ஆராயலாம்.

'உள்ளம் எப்போதும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையுமே எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது', 'உலகின் ஒவ்வொரு அசைவையும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தன் வாழ்வின் அங்கதமாக நோக்கும் பக்குவம் மிகப் பெரிது' என்று கதையின் ஓட்டத்தோடு சொல்லும்போது நமது பெட்டகத்தின் குறிப்பிடத்தக்க வரிகளில் ஒன்றை சேர்த்துக் கொள்கிறோம்.

வட அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஒரே நாடு போன்ற பொருட் குற்றங்களைப் புத்தகமாக வெளியிடும்போது திருத்திக் கொள்ளலாம். எனக்கு இப்போது அடிக்கடி தோன்றும் 'உதவக் கூடியதெனப் பாடதிட்டங்களில் மேலதிகம் ஏதுமிருப்பதில்லை', 'தமிழும் வரலாறும் புவியியலும் வாழ்க்கைக்கு உதவுமா?' போன்ற வினாக்களுக்கு பதிலை யோசியுங்கள். (அலகில்லா விளையாட்டில் பல இடங்களில் இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விலாவாரியாக அலசல் கொடுக்கிறார்).

"தர்டீன் என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்.
"தர்டீன் என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்!"
என்று வைரமுத்துவின் பாடல் வரிகள் மாதிரி முக்கியமான வயதின் நிகழ்வுகளை காட் ப்ராமிஸ், குட் கேர்ள், டூ விடுவது, என்று குழந்தையாகவே மாறி பெரியவர்களுக்காக எழுதப்பட்ட சுவையான நாவல். படித்து முடித்தவுடன் ஒரு விஷயத்தை மறப்பதா தீர்ப்பதா என்ற தெளிவு ஏற்படும்.

போன வருடக் கல்கிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் படிக்கலாம். அல்லது தமிழ் மின்புத்தகமாகும் (தமிழ்ப்புத்தாண்டு) வரை காத்திருங்கள்.

அடுத்த பக்கத்துக்குப் போகுமுன் கதையில் இருந்து...

'எத்தனை முயற்சி செய்தாலும் தன் மனம் வேறெதிலும் ஈடுபட மறுப்பதை ஜக்கு மிகவும் உணர்ந்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் மாதிரி தான் ஆகிவிட்டோமா என்று அவனுக்கே அச்சமாக இருந்தது. எதை பார்த்தாலும் அதே ஞாபகம். எதை கேட்டாலும் அதே நினைவு. எதிலும் அதே சிந்தனை.' (இணையத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு இவ்வாறு விழித்து இருக்கிறேன். நீங்கள்?)

'அமெரிக்க கோயில் உலா'

இந்தியக் கோவில்களுக்கும் அமெரிக்காவின் கோவில்களுக்கும் ஆறு வித்தியாசத்துக்கு மேலேயே இருக்கும்.

சென்னையில் பெரிய மனிதர் வந்தால் மட்டுமே முழு சதத்தையும் அடிக்கும் நாமாவளி, அமெரிக்காவில் ஒவ்வொரு சாமானியருக்கும் கர்ம சிரத்தையாக அர்ச்சனை நடக்கும். அர்ச்சகரின் ஈடுபாடைக் கண்டு தட்டில் போடப்படும் வெள்ளிகளும் கோவில் உண்டியலையே அடையும்.

சிவா-விஷ்ணு கோவில் என்று தியாகராய நகரில் மட்டுமே பார்த்ததாக நினைவு. அமெரிக்காவில் இரண்டு பேரும் ஒருங்கே இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கோவில் திருவிழா என்றாலே அடிதடி, பெருங்கூட்டம் என்பது எல்லாம் இல்லை. சாதாரண வாரயிறுதிகளை விட புத்தாண்டு, பொங்கல் போன்றவற்றில் கொஞ்சம் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், அப்பொழுதும் தள்ளுமுள்ளு, காலணி காணாமல் போகுதல் என்ற அசௌகரியங்கள் கிடையாது.

திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழு மலை ஏறுவது, ஐயப்பனை பார்க்க விரதமிருந்து சபரி மலைக்கு செறுப்பில்லாமல் ஏறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிட்ஸ்பர்க் மலை மேல் இருப்பது மாதிரி தென்பட்டாலும், கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி, லி·ப்டில் மேல் சென்று, (கால் முடியாவிட்டால்) சேரில் உட்கார்ந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம்.

அதே லி·ப்டை பிடித்து கீழே இறங்கி வந்தால் அவசரப் பசிகளுக்கு அப்பிடைசர்களாக இரண்டு இட்லி சாப்பிட்டுக் கொண்டே, என்ன தமிழ் படம் வந்திருக்கிறது, யார் நடன அரங்கேற்றம் செய்கிறார்கள், ஒய்.ஜி எப்பொழுது டிராமா போடுகிறார் போன்றவற்றை 'அறிவிப்பு பலகை'யில் அறியலாம். நீண்ட காலம் கழித்து சந்திக்கும் நண்பர்கள், தெரிந்த முகங்கள், புதிய அறிமுகங்கள் என அனைவரிடமும் வேலை தேடுவதை அல்லது கஷ்டப்பட்டு வேலை செய்வதை அங்கலாய்த்துக் கொண்டே அரட்டை அடிக்கலாம்.

கோவில் பாலிடிக்ஸ், அர்ச்சகர் அரசியல் எல்லாம் பெரிய விஷயம். ஆந்திராகாருக்களுக்கு தனிக் கோவில், தமிழர்களின் கோவில், வட இந்திய பாணி, குஜராத்திய அமைப்பு என்று இங்கு சிறுபான்மையினராக இருந்தும் சிதறுண்டு வருகிறார்கள்.

சைட் அடிக்க கோவில் செல்வது, பரிட்சையில் பாஸ் பண்ண நூறு சுத்துவது, பிரதோஷத்திற்காக அட்டெண்டன்ஸ் கொடுப்பது என்று வருகிறவர்கள் கம்மிதான். நைட் க்ளப் சென்று எதிர் பாலாரைக் கவ்வுவது எளிது. வாரயிறுதியில் பிரதோஷம் வந்தால் மட்டுமே கோவில் வரமுடியும் போன்ற நிர்ப்பந்தங்களில் அமெரிக்க இந்தியர்கள் உள்ளார்கள்.

சென்னையில் கோவில் பக்கமே தலை காட்டாத என்னுடைய நண்பர்கள், அமெரிக்கா வந்த பிறகு வாரம் தவறாமல் ஆஜர். குழந்தைகளுக்கு இந்திய முகங்களை காட்டவும், கலாசாரங்களை சொல்லவும் கோவில் உதவுகிறது. சிறுவர்களுக்கு தாய் மொழி வகுப்பு, பெரியவர்களுக்கு வேத வகுப்பு, விளக்கங்கள் என்று தங்களைத் தங்களுக்கே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

என்னுடைய அலுவலகத்தில் கூட இருக்கும் இந்திய முஸ்லீம்களும், வெள்ளிக்கிழமை தொழுகைகளை தவற விடுவதில்லை. இந்தியாவில் அவர்கள் போன்ற சிலருடன் வேலை பார்த்தபோது கூட அவர்கள் சென்றதை நான் கவனித்தது இல்லை. ஆனால் அமெரிக்காவில் ஒரு மணி நேரம் தள்ளி உள்ள மசூதிக்கு வண்டி ஓட்டிச் சென்று, வணங்கிவிட்டு, தொடரும் மதிய உணவையும் முடித்து விட்டு வருவதைக் கடமையாக செய்கிறார்கள்.

தனது கலாசாரத்தை விட்டு விலகி இருக்கும் போதுதான், அதன் மேல் பற்றுதல் அதிகரிக்கிறது. குற்ற உணர்ச்சி கொஞ்சம் சேர்த்து ஆட்டுவிக்கும் போது, தனது கடமையை செய்து முடித்து விட்டதாக உலக்குக்கு அறிவிக்க கோவில்கள் தேவையாய உள்ளன.

தாத்தா, பாட்டி அருகில் இல்லையா... வாரா வாரம் தொலை பேசு. தாய்மொழியில் பேசவில்லையா... எழுதப் படிக்க மட்டும் கற்றுக் கொடு. ஏற்றி விட்ட இந்தியாவை விட்டு விட்டோமா... கோவிலுக்கு செல்.

உங்க ஓட்டு எதற்கு?

நண்பர்களுக்குள் யார் இந்த வருட சூப்பர் பௌல் ஜெயிப்பார்கள், ஆஸ்கர் யாருக்குப் போகும், என்று பந்தயம் கட்டுவோம்.

சில தேர்வு கேள்விகள். (என்னுடய பந்தயக் குதிரைகள் 'ஈ'யில் உள்ளன).

1. அமெரிக்காவிடம் அடுத்து அடி வாங்கப் போகும் நாடு

அ) வட கொரியா
ஆ) ஈரான்
இ) சிரியா
ஈ) பாகிஸ்தான்


2. மக்களவை தேர்தலில்

அ) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மைக்கும்
ஆ) பிஜேபி தக்கவைத்துக் கொள்ளும்
இ) ப.சிதம்பரம் முதல்வர் ஆவார்
ஈ) பால் தாக்கரே அமைச்சரவைக்கு இடது சாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவார்கள்


3. ஆட்சிபீடத்தில் இருந்து முதல் கல்தா

அ) முஷார·ப் (முஸ்லீம் தீவிரவாதிகள்)
ஆ) ஜார்ஜ் புஷ் (பொருளாதார சரிவு)
இ) ரஷ்யாவின் ப்யூடின் (வாக்காளர்கள் விழித்துக் கொண்டதனால்)
ஈ) க்யுபாவின் காஸ்ட்ரோ


4. பிய்த்துக் கொண்டு ஓடும் படம்

அ) கோவில்
ஆ) விருமாண்டி
இ) ஓடிப் போலாமா
ஈ) கில்லி
உ) அருள்


5. தேர்தலுக்கு முன் பிஜேபி கொடுக்கும் ஒட்டு வசியம்

அ) ஜெயித்தால் அத்வானியே பிரதம மந்திரி
ஆ) பாகிஸ்தான் மேல் முழு தாக்குதல்
இ) ப்ரியங்கா வெளிநாட்டவருக்குப் பிறந்தவர்
ஈ) அயோத்தியாவில் கோவில் கட்டுவோம்


6. ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தங்க பதக்க எண்ணிக்கை

அ) 0
ஆ) 1
இ) >10
ஈ) 3


7. அதிமுக தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்

அ) 25
ஆ) 30
இ) 35
ஈ) 40


8. மும்பை பங்குச் சந்தை

அ) 10,000-த்தை எட்டும்
ஆ) மீண்டும் 'ஹர்ஷத் மேதா' தகிடுதத்தங்களால் 3000
இ) 6000
ஈ) 20,000


9. ஒரு அமெரிக்க டாலருக்கு

அ) 45 ரூபாய்
ஆ) 60 ரூபாய்
இ) 1 ரூபாய்
ஈ) 40 ரூபாய்


10. அறிவியல் முன்னேற்றத்தின் புதிய கண்டுபிடிப்பாக

அ) புத்தியை தேக்குவதன் மூலம் வயாதாகுவதை நிறுத்தி வைத்தல்
ஆ) மனித மூளையில் இணைய இணைப்பு
இ) எயிட்சுக்கு மருந்து
ஈ) பியர் வடிவில் அனைத்து பாலாருக்கும் ஒரே வயாகரா


கொசுறு: செஷன்ஸ் கோர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம், ரிட் மனு, அப்பீல் என்று எல்லாவற்றிலும் இருந்து சுதந்திரம் அடைவார்:

அ) செரினா
ஆ) நக்கீரன் கோபால்
இ) ஜெயலலிதா
ஈ) சசிகலா

நத்தார் தினத்து எண்ணங்கள்

நான் கத்தோலிக்கப் பள்ளியில் படித்தாலும் நத்தார் தினத்தின் (கிறிஸ்துமஸ்) அருமை பெருமைகளை அறியாமலேயே வளர்ந்தேன்.

எங்கள் தெருவில் எதிர்த்த வீட்டில் மட்டுமே டேப் ரிகார்டர் உண்டு. அல்லது அவர்கள் மட்டுமே 'விநாயக சதுர்த்தி' திருவிழா ஸ்பீக்கராக 'நேயர் விருப்பத்தை' 144-வது வட்டாரத்துக்கே அலற விடுவார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் சஷ்டி கவங்களையும், 'ராஜா... ராஜாதி ராஜா'க்களையும் அதிக அளவில் கேட்டது அங்கேதான். டிசம்பர் 25 அன்று எங்களுக்கும் கேக் கொடுப்பர்கள்.

சாண்டா வந்து பரிசுகள் தந்தாரா என்று சொல்லவில்லை. இந்தியாவில் தேர்தல் வருவது போல் அடிக்கடி நான் கொடுக்கும் சென்னை வருகையில், கேட்க வேண்டும் என்று நினைத்து, மறக்கும் நிகழ்வுகளுள் ஒன்று. அவர்கள் வீட்டில் நட்சத்திரமும் தொங்க விடுவார்கள். மந்தவெளி தெருவின் மாட மாளிகைகள் பலவற்றிலும் வித விதமாக சிவப்பிலும், இன்ன பிற வண்ணங்களிலும் மரத்தில் பல்ப் நட்சத்திரங்கள் எரியும். புத்தாண்டு வரை இருக்கும். நட்சத்திரம் வைக்கும் வீடுகளில் மட்டுமே யேசு அருள்பாலிப்பார் என்பது வருத்தத்தை கொடுத்தது. நாமும் வைக்கலாமா என்று கேட்டால் சிவன் கோபித்துக் கொள்வாரோ, மார்கழி வெண்பொங்கல்கள் கிடைக்காதோ, அரையிறுதி பரிட்சையில் ·பெயிலாயிடுவேனோ, பள்ளியில் எல்.பி.டபிள்யூ. என்பதற்கு லவ் பி·போர் வெட்டிங் என்று சக மாணவனுக்கு சொன்னது டீச்சர் காதில் எட்டி, என்னை (செல்லப்பிராணி) பெட்-லிஸ்ட்டில் இருந்து கழற்றி விட்டு விடுவாரோ என்று பயந்து ஒதுங்கியே நடப்பேன்.

இன்றோ வீட்டின் அடுப்பு வழியாகவோ, டிவியிலிருந்தோ, சாண்டா வருகிறார். விளக்கேற்றிய கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் என் மகளுக்கும், மனைவிக்கும், (எனக்கும் கூடத்தான்) பரிசுப் பொருட்கள் வைத்து செல்கிறார். தோட்டத்துப் பச்சை பசேல் மரத்தின் வாசனை வீட்டை நல்ல நாற்றமடிக்க வைக்கிறது. ஒரு நாள் வரும் சாண்டாவிற்காக வருடம் முழுக்க சொன்னபடி கேட்கும் குழந்தைக்காகவாவது அனைவரும் கிறிஸ்துமசை விமரிசையாகக் கொண்டாடுதல் அவசியம்.

அண்டை அயலாரையும், நண்பர்களையும் கண்டாலேயே பயந்து எங்கள் பின் ஒளிந்து கொள்ளும் என் மூன்று வயதுப் பெண், பெருங்கடைகளில் இருக்கும் ஒட்டு தாடி சாண்டாவிடம் வாஞ்சையுடன் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். பிள்ளை பிடிப்பவர்களும், கடத்துபவர்களும் இனி சாண்டா க்ளாஸாக வேடம் கட்டிக் கொண்டால் போதும். ஒரு கத்தல், பிடிவாதம் இல்லாமல் குழலூதும் பைப்பராக சிறார்கள் சென்று விடுவார்கள்.

அமெரிக்காவில் பணம் நன்றாகப் புழங்கிக் கொண்டிருந்த காலங்களில் 'நன்றியறிவித்தல் தினம்' முடிந்ததில் இருந்தே அலங்காரங்கள் பிரமாண்டமாக இருக்கும். மயிலாப்பூரின் மாட வீதிகள், மல்லேஸ்வரத்தின் க்ராஸ் ஸ்ட்ரீட்டுகள், டெல்லியின் ரிங் ரோடுகள் என அமெரிக்கர்களின் ஒவ்வொரு முக்கிய தெருக்களும் அமர்க்களப்படும். கல்யாணத்தன்று மண்டபத்தின் வெளியில் இருக்கும் விளக்குச் சரம் போல், ஒவ்வொரு வீட்டிலும் எல்.ஈ.டி.க்களே ஆக்கிரமித்திருக்கும். கையாட்டும் சாண்டா, மான் வண்டி சாண்டா, கார் போனால் குதிக்கும் சாண்டா, பொம்மை பனி சித்திரங்கள், என்று பல வண்ணங்களில் மின்சார கட்டணத்தை சிரப்புஞ்சி தண்ணீராக செலவழிப்பார்கள்.

இன்றைய மந்த நிலையிலும், அனேக இலையுதிர்ந்த மரங்கள் சரவிளக்குகள் தாங்கியிருக்கின்றன. வீட்டு வாசலில் மாட்டுத் தொழுவத்தில் யேசு பிறந்த காட்சியமைப்பு நினைவு கூறப் படுகிறது. பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நாமும், நம் வீட்டை ஒளி வெள்ளத்தில் மிதக்க விட வேண்டும் என்று ஆசைப்பட வைக்கிறது. கிறிஸ்து பிறந்த சமயத்தில் பனி பெய்தால், நாம் இருக்கும் இடங்களில் பனி கொட்டினால், விழா பூரணமாய் ஏற்றுக் கொள்ளப் பட்டதாய் கருதுகிறார்கள். நல்ல வேளையாக இந்த கிறிஸ்துமசுக்கு, யேசு பாஸ்டனில் அருள்பாலிக்கவில்லை. கொஞ்சமாய் மழை மட்டுமே கொடுத்தார். ஸ்விஸ் மக்கள்தான் அதிக அளவு புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் நாட்டில்தான் அதிக தடவை நத்தார் தினத்தன்று பனி பெய்ததாக சொல்கிறார்கள். அமெரிக்காவில் யூடாவின் உப்பு ஏரி நகரத்தில் (சால்ட் லேக் சிடியின் தூய தமிழ்) இருக்கும் நண்பன் திட்டிக் கொண்டுதான் இருந்தான். மூன்றடி பனி வந்ததற்காக 'சந்தோஷப் படேண்டா' என்று நான் கேட்டேன். சுத்தம் செய்பவர்களும் கொண்டாட போய் விட்டதால் தெருவெங்கும் பனி அப்படியே இருந்து விட்டது. அடுத்த நாள் காலை அலுவலகம் செல்ல வேண்டிய அவசர நிலை. ஸ்கீ மொபைல் இருந்தால் ஒழுங்காக போயிருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

தீபாவளியாகட்டும், கிறிஸ்துமசு ஆகட்டும், எனக்கு காலை பேப்பர் தேவை; பனி நீக்கப்பட்ட சாலைகள் தேவை; பொதுப் போக்குவரத்து தேவை; தாறுமாறாக ஓட்டுபவர்களை பிடித்து உள்ளே தள்ள சாலையோர காவல் படை தேவை; அவசரமாக ரொட்டி வாங்க ஒரு பெட்டிக் கடை தேவை. டிவியில் பத்து சேனலகளின் செய்தி வாசிப்புகள் தேவை. அவர்களுக்கும் பைன் மரங்களின் புத்தம் புதிய வாசனையை உள்ளடக்கிய வீட்டில், ஒரு கையில் பேப்பரோடும், ஒரு கண்ணில் சி.என்.என்.னின் தலைப்புச் செய்திகளோடு, மற்றொரு கையில் காபியோடும், இன்னொரு கண்ணில் உறவினர்களின் பரிசுப் பொருட்கள் அங்கலாய்ப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, சன்னல் வழியாக பனி பொழிவதை ரசிக்க ஆசை இருக்காதா?

வைகுண்ட ஏகாதசி அன்று எங்கள் மரத்தின் அலங்காரங்களை நீக்கி, கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகளை அடுத்த வருஷத்துக்காக அட்டை பெட்டியில் அடைத்து வைக்கிறோம். பார்த்தசாரதிக்காக பட்டினியும் உண்டுதான். இந்திய சமூக உணர்விற்காக மஹாலஷ்மி கோவிலும் செல்வோம்.

செவ்வாய், ஜனவரி 20, 2004

'மக்கள் விருப்பமே' மகேசன் விருப்பம் விருதுகள்

NanjilOnline Makkal Cine Choice 2003: விவேக் சிறந்த துணை நடிகர். சிம்ரனைப் பின்னுக்குத் தள்ளி ஜோதிகாவுக்கு முதலிடம். பெண்களின் அபிமான சின்னத்திரை நாயகி தேவர்தர்ஷினிக்கு மூன்றாவது இடம் போன்ற அதிரடி முடிவுகளை வெளியிடும் கருத்துக் கணிப்புகள்.

சன் டிவி - 2

நல்ல எழுத்தாளராக வேண்டுமானால் நிறையப் படிக்க வேண்டும்
என்பது பல நல்ல எழுத்தாளர்களின் அறிவுரை. ஒரு தேர்ந்த செவ்வி
எப்படி எடுப்பது, எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும் இது பொருந்தும்
என்றே தோன்றுகிறது.

யேசுதாஸையும் தேனிசைத் தென்றலையும் பேட்டி கண்டவர்கள் இதை
தெளிவித்தார்கள். யேசுதாஸ் பேட்டியில் யேசுதாசும், தேவாவின் பேட்டியில்
'பெப்ஸி' உமாவும் நிறையப் பேசினார்கள். 'கமகம்' என்றால் என்ன என்று
பலரிடம் கேட்டு, பதில் தெரியாத பாமரன் எனக்கும் புரியும்படி பதில்
சொன்னார் யேசுதாஸ்.

கல் தோன்றி முன் தோன்றாக் காலத்தில் இருந்து கேட்கும் சம்பிரதாயக்
கேள்விக்கு, ர·பி போன்றவர்கள் சாஸ்திரீய சங்கீதம் ஒன்றும் தெரியாமல்
கலக்கியதை சொல்லி, 'அவரவர்க்கு அதது' என்று படு non-controversial-ஆக
சொல்லி வந்தவர், 'தெருக்கோயில்' குறித்து கிண்டல் செய்தவர்கள் இன்று
எல்லாவற்றையும் 'பருவாயில்ல' என்று விட்டுவிட்டுப் போவதை
காட்டமாக எதிர்த்தார்.

'கலைஞனுக்கு சவால் தேவை; பணத்திற்கு மட்டும்தான் என்றால் என்னைப் போல்
செல்வம் சேர்ந்த பிறகு அதிகம் பங்கெடுக்க மாட்டார்கள்' என்று அமெரிக்காவுக்கு
சென்றுவிட்டதை தொட்டார். ஒரு திரையிசை ரசிகனுக்கு கர்னாடாக
இசையின் முக்கியத்துவத்தையும், தன்னடக்கத்தின் பிரதிநித்துவமாகவும்
விளங்கிய அதிக விளம்பரதாரர் இல்லாத பேட்டி.

எல்லா விளம்பரதாரர்களும் திரைப்படங்களிலேயே தோன்றினார்கள்.
தூர்தர்ஷனில் 'மலரும் நினைவுகள்' அதிகம் பார்க்கப் படும் நிகழ்ச்சியாக
இருந்தது. அது போல் இப்பொழுது இல்லை போல!?

'பெப்ஸி' உமாவின் பதில்கள் தாங்கிய பெரிய கேள்விகளுக்கு சிறிய
பாட்டாக பதி சொன்னார் தேவா. 'ஆம்/இல்லை' அல்லது 'ஒரு வார்த்தைக்கு
மிகாமல் பதில் சொல்லவும்' என்று அறிவுறுத்தி விட்டாரோ என்னவோ...
ரொம்ப ஏமாற்றிய பேட்டி.

'கோயில்' படத்தின் இருபது நிமிட சிறப்பு நிகழ்ச்சியில், இந்தப் படம் மிக
எதார்த்தமானது என்பதை சிம்பு, ஹரி, நாசர் (?!), சிம்பு, ஹரி, சிம்பு, நாசர், ...
இருபத்தி மூணு முறை சொன்னார்கள். மிக எதார்த்தமான சண்டைக்
காட்சிகள் நிறைந்த படம் என்பதைத் தொடர்ந்து உருட்டைக் கட்டைகளுடன்
வரும் இருபது வில்லன்களை வெறும் கையாலேயே சிம்பு புரட்டி எடுத்தார்.

'பட்டிக்காடா... பட்டணமா?' என்று கங்கை அமரன் 'ஓ' நிறைய போட்ட நிகழ்ச்சியில்
புஷ்பவனம் கந்தசாமியின் பாடல்களைத் தவிரக் குறிப்பிடத்தக்கதாக ஏதுமில்லை.
'மன்மத ராசா', 'திம்ஸ¤ கட்ட'ப் பாட வைக்க வேறு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கலாம்.

'அனைத்து அமெரிக்க அமோகா ரசிகர் மன்ற'த்தைப் பதிவு செய்யும் எண்ணத்தை
ஸ்னேஹா மீண்டும் மாற்றி அமைத்தார். மைக்ரோசா·ப்ட் இயங்குதளத்தில் பரவும்
'ப்ளாஸ்டர்' போல் அவருடைய வாயில் இருந்து எதார்த்தமான சிந்தனைகள்
விழுந்தன. புடைவை கட்டுதலே கவர்ச்சிக்குத்தானே, கிளாமருக்கும் கவர்ச்சிக்கும்
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை, படமில்லாவிட்டால் கூட 'கமல் பட ஹீரோயின்'
மாதிரி நடிக்க மாட்டேன் (விரும்புகிறேன் ஒரு aberration) என்று அபிநயத்தோடுப்
பேசிக் கொண்டே சென்றார்.

'மக்களை கவனிப்பது பிடிக்கும். அவர்களின் விஷயங்களைத் தெரிவதில் ஆர்வம்;'
எனவே, உளவியல் படிப்பதில் விருப்பம் என்று சொன்னது புருவத்தை உயர்த்தியது.
இந்தக் குணம் பெண்கள் பலருக்கு பொதுவல்லவா? அடுத்த வீட்டு வம்பு கேட்பது,
பொதுப் பிரசினைகளைத் தீர்ப்பு வைப்பது என்பது கதை எழுத வைக்கலாம், சிறந்த
'மாத்ருபூதமா'க்குமா?

ஞாயிறு, ஜனவரி 18, 2004

கதை விட வாங்க - 2

Aa Mathavaiah: "அவரது பாத்திர உருவாக்கம், கதை நிகழும் களம் மற்றும் உரையாடல்களில் கூர்மையான விமரிசன நோக்கு வெளிப் படுகிறது. அக்காலத்துக்குரிய அரிய சிந்தனைகளையும் தனது படைப்புகளில் ஆங்காங்கு பதித்து விடுவார்.

பத்மாவதி சரித்திரம் நாவலில் ''மதம் மாறுவது தானா, சமூக வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டு களுக்கு மருந்து? மதம் என்ன ஒரு கோட்டா, தொப்பியா கிலுக்கினால் மாற்றிட? அவரவர் நாகரிகத்துக்கும், பயிற்சிக்கும் அங்கீகார மாயிருப்பது மதம் தானே? மதம் சம்பந்த மில்லாத விஷயங்களையும் மதம், மதம் என்று பாராட்டி அபிமானிப்பதால் தான் இப்படிப்பட்ட தர்மசங்கடங்களும் விபரீதங் களும் ஏற்படுகின்றன. அதைச் சீர்திருத்த வேண்டுமே அல்லது, மதம் மாறுவதெப்படி? மதம் அவரவரைப் பொறுத்தது என்று நமக்குள்ளும் ஆக வேண்டும். அதற்கு வேண்டிய முயற்சி செய்ய வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.

'குசிகர் குட்டிக் கதைக'ளில் ஒன்றான 'திரெளபதி கனவு' என்ற கதையை மாதவையா ஒரு சுயசரிதை வடிவில் எழுதியிருக்கிறார். "

இலக்கியம் எளிமையை இழக்க வேண்டும் - திலீப்குமார்

Interview with Dilip Kumar: "ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஒரு உரைநடைப் படைப்பாளியான எனக்கு கவிதைகளின் நுணுக்கங்கள் குறித்து ஆழ்ந்த பரிச்சயம் இல்லை. ஆரம்பத்தில் நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலும், என்னைப் பொறுத்தவரை 'கவிதை' ஒரு மிகை வடிவம்தான். அதில் வாழ்பனுவங்கள் மற்றும் எதார்த்தத்தின் பல்வேறு கூறுகள் உள்ளடங்கியதாக இருக்கும் போது கவிதை என்ற வடிவத்தின் ஆதார மிகைத் தன்மை இனம் காணக்கூடியதாகவே இருக்கிறது.

இன்றைய தமிழ்க்கவிதையின் உட்பொருள் தெரிவும், வார்ப்பும் தற்காலக் கவிதையின் பெரும்பாலான நியதிகளை நிறைவேற்றுவதாகவே உள்ளன. ஒரு சில கவிஞர்களைத் தவிர, பெரும்பாலான கவிஞர்களின் கவிதைகள் அந்தரங்கமான அனுபவத்தின் துல்லியமான விளக்கமாகவே நின்று விடுகின்றன. இதற்கப்பால் இவை நீட்சி பெறுவதில்லை. செம்மையான சொற்கள், படிமங்கள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதை, தன் ஆதார அனுபவத்தை வாசக மனத்தைத் தடுமாறச் செய்வதிலும் அதைத் தொடர்ந்து உணர்வுபூர்வமான வாசிப்பை ஏற்படுத்துவதிலும் வெற்றியடைய வேண்டும்.

ஒரு படைப்பாளியின் அக உலகின் அலாதியான கூறுகளுக்கெல்லாம் இடமளிக்கும் வடிவமாக கவிதை இருந்தாலும் கூடவே அது பல சிக்கலான சவால்களையும் முன் வைக்கக் கூடியது. கவிதை என்பது அதன் உருவாக்கத்தில் எல்லா நிலைகளிலும் கடுமையான மன உழைப்பை வேண்டி நிற்கும் ஒரு வடிவம்.

கவிதையின் ஆரம்ப உந்துதல் வாழ்பனுவத்தின் மிக அற்பமானதொரு துணுக்கிலிருந்து கூட வர முடியும். ஆனால் அத் துணுக்கைப் பற்றிச் சென்று கவிதையாக்க முனையும் போதுதான் தன் போதாமை பற்றிய நிதர்சனம் படைப்பாளிக்குத் தெரிய வரும். இப் போதாமை மொழி சார்ந்தவையாகவோ உள்ளீடு சார்ந்தவையாகவோ எப்படியும் இருக்கலாம். இவற்றில் பல போதாமைகள் நிர்ணயிக்கப்பட்டவை. வேறு பல கடந்து செல்லக் கூடியவை. நிர்ணயிக்கப்பட்ட போதாமைகள் குறித்து கவிஞன் செய்வதற்கு அதிகம் ஒன்றும் இல்லை. ஆனால், கடந்து செல்லக் கூடியவற்றை அவன் எதிர்கொண்டேயாக வேண்டும். இதற்குத் திறந்த மனதும் எல்லையற்ற பணிவும் அவசியம்.

தமிழ்நாட்டில் 70 களுக்குப் பின் நிறைய முற்போக்குக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகளைப் படைப்பாக்கத் தளத்தில் நின்று ஈழத்துக் கவிதைகள் தான் அம்பலப்படுத்தின. ஈழத்துக் கவிதைகளின் இந்த வீச்சு தமிழகத்தின் வெற்று முற்போக்குக் கவிஞர்களைத் தம் சுய நினைவுக்குக் கொண்டு வந்ததோடு 'முற்போக்கு அல்லாத' கவிஞர்களிடையே கூட அரசியல் சார்ந்த கவிதைகளிலும் நுட்பமும் தரிசனமும் சாத்தியம் என்பதையும் நிரூபித்துக் காட்டின. வ.ஐ.ச.ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சேரன், அரவிந்தன், செல்வி, சிவரமணி, என்று பல பெயர்கள் என் நினைவுக்கு வருகின்றன. கழிவிரக்கத்தின் பள்ளத்துக்குள் விழுந்துவிடாமலும், அரசியல் நெருக்கடிகளின் தீவிரத்தில் ஆவேசம் கொண்டு விடாமலும் இவர்களது கவிதைகள் நிரந்தரமான இலக்கிய அனுபவத்தை உள்ளடக்கிக் கொண்டவையாகத் திகழ்கின்றன.''

இன்று ஒரு வாசகன் படைப்பை விடவும் அப் படைப்புக்குப் புறம்பான சர்ச்சைகளிலேயே பெரிதும் ஈடுபட ஆசைப்படுகிறான்.

ரசிகர்களை விடவும் வாங்குபவர்கள் தான் முக்கியமானவர்கள் என்ற நிலை வந்துவிட்டது."

பார்த்த ஞாபகம் இல்லையோ?




ஹாலிவுட்டில் ம.கோரா.வைக் கவர்ந்த நட்சத்திரங்கள்:
எரால் ஃப்ளின் (மேலுள்ள படத்தில் காணப்படுபவர்) மற்றும் டக்ளசஸ் ஃபேர்பாங்க்ஸ்.


நன்றி: டீகட

வெள்ளி, ஜனவரி 16, 2004

லாரி ஸ்ட்ரைக் அல்ல


It is not a Lorry strike
அமெரிக்க வடமேற்கு மாகாணம் ஒரேகானில் இரண்டு நாள்கள் சாலை மூடப்பட்டிருந்தது. அதன் விளைவு.

கதை விட வாங்க - 1

தமிழின் பல இணைய தளமெங்கும் அடிபடும் 'மரத்தடி சிறுகதைப் போட்டியில்' வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய அம்மாவின் எழுத்துகள் மூலம் எழுதும் ஆசை வந்தாலும் கல்லூரிக் காலம் வரை வெகுஜன பத்திரிகை வாசகனாக மட்டுமே காலம் தள்ளி வந்தேன். கையெழுத்துப் பத்திரிகை நடத்த இயலாத வட இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் கல்லூரி. இப்பொழுது மாதிரி வலைக் குறிப்புகள், இணைய சஞ்சிகைகள், மடலாடற் குழுக்கள் எதுவும் மாட்டாததால் பலர் என்னுடைய எழுத்துக்களில் இருந்து தப்பித்து வந்தனர்.

தினம் ஒரு கவிதையில் சேர்ந்தது மடலாடற் குழுக்களுடன் ஆன முதல் தொடர்பு. திஒக-வில் செவ்வாய்தோறும் வரும் கொத்து பரோட்டவிலாவது எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. அப்பொழுதுதான் அகத்தியர் குறித்து திஒக மடலில் தெரியவர, அங்கு சேர்ந்தேன். பிரமிக்கத் தக்க அளவுகளில் ஆழமான மடல்களைப் பார்த்து ஒதுங்கியே இருந்தேன்.

கொஞ்ச காலத்தில் இரா.மு. ராயர் காபி க்ளப் துவங்க அங்கும் இணைந்தேன். இப்பொழுது வலைப்பூக்கள் முளைப்பது போல், போன வருடங்களில் தோன்றிய, நான் கண்டுபிடித்த வேறு பல மடலாடற் குழுக்களிலும் சேர்ந்தேன். மதில் மேல் பூனையாக ஒதுங்கி இருக்கும் சிலரையும் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் புலிகளையும் உசுப்பி விட சொக்கர் சிறுகதைப் போட்டியை அறிவித்தார்.

'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்னும் தலைப்பு. நான் ஒரு புரியாத கதையும், பிரசன்னா பரிசுக் கதையையும், எல்லே சுவாமிநாதர் ஒரு நகைச்சுவைக் கதையையும், இன்னும் பலர் தங்கள் முதல் சிறுகதையையும் எழுத வைத்த போட்டி. அதன் பிறகு பல முயற்சிகளில் தடுக்கி விழுந்தாலும் இன்னும் தொடர்ந்து கதை விட முயல்கிறேன். என்னுடைய இந்த வாரக் கதையைப் படித்து விட்டு விமர்சித்தால் அடுத்த கதையில் அவற்றை மனத்தில் கொண்டு எழுதுவேன்.

இணையத்தில் ஆங்காங்கே இருக்கும் 'எப்படிக் கதை எழுதுவது' என்னும் அட்வைஸ்களையும், ராகாகி மடல்களில் டிப்ஸ் கொடுத்த சிஃபி வெங்கடேஷ், புத்தகப் புழுவில் பட்டியலிட்ட பாரா அவர்களின் மடல்களையும் வரும் நாட்களில் பகிர்ந்து கொள்வேன்.

சுற்றுபுற வீடுகள் - II

Dubukku- The Think Tank: "மாமா மிக கண்டிப்பானவர். அவருக்கு தலை வழுக்கையானாலும் மாதா மாதம் இசக்கியின் 'சந்திரா சலூனில்' முடி வெட்டிக் கொள்ள செல்ல வேண்டும். அப்பாவுடன் முடி வெட்டிக்கொள்ள செல்வதென்றால் ஜாலி. கையில் 50 பைசா தருவார். ஆனால் மாமா வீட்டிலே வளர்ந்ததால் அந்த சந்தர்பம் எப்போவாவது தான் கிடைக்கும். மாமா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். இசக்கியின் மகன்கள் மாமாவின் ஸ்கூலிலே படித்து வந்தார்கள்.அதற்காக மாமா சொல்வதை விட தாராளமாகவே முடி -வெட்டுவார் இசக்கி.

பின் தலையில் நனறாக மெஷின் கட்டிங் செய்து நல்ல புல் தரை போல் இருக்க வேண்டும். முடி வெட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்தால் எனக்கே அடையாளம் தெரியாது. எனக்கு அப்புறம் மாமாவுக்கு இல்லாத முடியை தேடி தேடி இசக்கி பொறுமையாக வெட்டுவார். முடி வெட்டிக் கொண்டு ஆத்தங்கரைக்கு போகும் வழியில் வெட்கம் பிடுங்கி தின்னும். பெண்கள் எல்லாம் சிரிக்கிறர்களா என்று ஒரு முறை நிமிர்ந்து பார்பேன்.

அன்றைக்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ."என்ன அறுவடை ஆயாச்சு போல.." என்று பின்ன்ந் தலையில் தடவிப் பார்பார்கள். குறுக வெட்டியிருந்தால் அப்படி செய்யும் போது கையில் கிச்சு கிச்சு மூட்டுவட்து போல இருக்கும். ஸ்கூலில் அன்று முழுவதும் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பையன் தொல்லை தாங்க முடியாது..தலையை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பான். சில வம்பு பிடிதவர்களும் அவ்வப்போது வந்து தடவி வம்பு செய்வார்கள். அப்போதெல்லாம் மனதில் இசக்கியை திட்டுவேன்.

ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொண்டு வரும் நண்பர்களை ஆதங்கத்துடன் பார்த்த நாட்கள் அவை. இசக்கியை பொறுத்த வரை ஸ்டெப் கட்டிங்கெல்லாம் காலி பசங்கள் தான் வைத்துக் கொள்வார்கள். "

இந்தியா பேசும்பொழுது (இன்னும் உண்மை அறியாத பிராமணக் குடும்பத்தின் சம்பாஷணைகளில்) இவை வரலாம் என்று சொல்வது nostalgic ஆக உள்ளது:
"இப்போ அங்க மணி எத்தனை?
ரொம்ப குளிரா அங்கே?
உடம்பப் பாத்துக்கோங்கோ...
குழந்தைக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?
எப்போ வரேள் ஊருக்கு?
ஆபீஸ் ஒண்ணும் ப்ரச்னை இல்லையே?
மேல ஏதாவது படிக்கிறாயா?
செவன் ஸீஸ் மாத்திரை ஒழுங்காப் போட்டுக்கறியா?
ஓழுங்கா சந்தி பண்ணு. தெனமும் நூத்தியெட்டு காயத்ரி ஜபிக்கிறியோ?"

சன் டிவி பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் அன்றும் அலுவலகம் வந்ததில் கரும்பு, சக்கரைப்
பொங்கல், வடைகளை விட சன் டிவி நிகழ்ச்சிகளை
உடனடியாகப் பார்க்காததே மனதில் நின்றது. சென்னைப்
பொங்கல்களில் பெரிதாக ஒன்றும் தவற விடவில்லை.
கொல்லைப் புறத்தில் இரண்டு கரும்பு, மஞ்சக் குலைகள்,
பட ரிலீஸ் என்று கழித்த நாட்கள்.

பாஸ்டனில் சூரியன் நன்றாக எட்டிப் பார்த்தாலும் உறைய வைக்கும் குளிர்.
இரயிலில் சென்று பத்து நிமிடம் நடக்கும் போது கூட குளிர்
அதிகம் தெரிவதில்லை. நடக்கிறேனா, ஓடுகிறேனா என்று அறியாமல்
உடம்பின் அத்தனை பாகங்களையும் மூன்று நான்கு ஆடை தடுப்பிட்டு
குளிரில் நடுங்காமல் அலுவலகம் வந்து விடலாம். ஆனால் காத்திருக்கும்
நிமிடங்கள்தான் அரள் வைத்தது. நாலைந்து நிமிடங்கள்தான் ரயிலுக்குப்
பொறுத்திருக்க வேண்டும். காதலிக்காக, தேர்வு முடிவுக்காக என பல
காத்திருத்தல்களில் இல்லாத கொடுமை அது.

சன் டிவியின் பனிரெண்டு மணி நேர சிறப்பு நிகழ்ச்சிகளை ஒரு மணி
நேரத்தில் இரவில் மேய்ந்தேன். கமல் சுவாரசியமாய்ப் பேசினார். தவற
விடக் கூடாத பல கருத்துகளைத் தாங்கிய பேச்சு. இணைய எழுத்துக்களைப்
படிக்கிறார்.

என்ன படிப்பீங்க என்ற கேள்விக்கு கதைகள் எல்லாம் இணையத்தில் கூட
நன்றாக இருக்கிறது என்றார். அம்பலமா, திண்ணயா என்று சொல்லவில்லை.
தன் கவிதைகளைப் பொதுவில் வைப்பதற்கு தைரியம் இருந்தால் போதும்
என்ற தன்னடக்கப் பார்வை கவர்ந்தது. கஷ்டப்பட்டு செதுக்கிய படம்
தோல்வி அடையும்போது ஏற்படும் வருத்தத்தை, குப்பையான படங்கள்
ஓடியதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் என்றது ஏதோ
பற்றற்றவர் மாதிரி ஆக்கிவிட்டது.

ஆனால், தொடர்ந்து வந்த 'உன்னை விட' காட்சிகள் விருமாண்டிக்கு
அன்னலட்சுமியுடன் இருக்கும் பற்றை நன்றாகவே சொன்னது.
பேரம் சரிப் படாததால் அமெரிக்காவில் படம் முக்கிய நகரங்களில்
மட்டுமே ரிலீஸ். முக்கிய நகரம் என்பது ரஹ்மானுக்கு நியு யார்க்
மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ். இவருக்கு எவை என்பது சொல்லவில்லை.

ஆனால், 'விருமாண்டி உருவான கதை, 'நீக்கப் பட்ட காட்சிகள்',
'விடுபட்ட பாடல்', 'கமல் இன்ன பிறர் பேட்டி' என்று விஷய அடர்த்தியுடன்
கூடிய அமெரிக்காவில் மட்டுமே பார்க்கக் கூடிய திரை வட்டு வருகிறது.
உருப்படியான சிந்தனை என்று சொல்ல வேண்டும். 'அன்பே சிவம்'
அதிகாரபூர்வமாக வந்தாலும் அதிகாரபூர்வமற்ற டிவிடிகளே அதிகம்
சுழற்சியில் இருக்கும் அமெரிக்க இந்தியர்களிடம், காசு சம்பாதிக்க
சரியான வழி.

மேக்ரோவிஷன் நகல் தடுப்பு, சகாய விலை என்று சீக்கிரமே வந்தால்
படம் வெளியிட்டு பணம் பண்ணுவதை விட வட்டு வெளியிட்டு லாபம்
ஈட்டலாம்.

அடுத்து ஒரு ஆங்கிலப் பேட்டிக்குத் தமிழில் விளமபரங்கள் வந்தது.
'அலைகள் ஓய்வதில்லை - 2'-இல் நடிக்கும் சோனியா அகர்வால் என்று
சரியாக எழுதியிருந்தார்கள். மற்ற பல பெயர்கள் 'அபர்னா', 'சிநெகன்'
என்று போட்டார்கள். நிஜப் பெயரே அப்படித்தானா இல்லை அபர்ணா,
சிநேகன் என்பதா என்று கேட்டு சொல்லுங்கள். எல்லா விளம்பரத்திலும்
'வாழ்த்து*க்*கள்' சொன்னார்கள்.

ஆணாதிக்க மனோபாவத்தை ஸ்ரீகாந்த அழகாக வெளிப் படுத்தினார்.
பெண்களைக் கிண்டல் செய்வது, பைக்கைத் தாறுமாறாக ஓட்டுவது,
சமைப்பதற்காகத் திருமணம் செய்து கொள்வது என்று ஒரு தமிழ்க்
குடிமகனுக்குரிய எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் பேசினார்.

கல்லூரியில் காதல் கவிதை எழுதுபவனும், ரக்ஷ¡பந்தனுக்கு ராக்கி
அமைத்துக் கொடுப்பவனும் அல்டாப்பாக ஊர் சுற்றுவான் என்பது
நம்ப முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் கலை நேசம் கொண்டவர்களை
எங்கள் கல்லூரியில் பெண்கள் கூட்டம் மொய்க்கும். அதற்காகவே
ஓவிய, அழகியல் உணர்ச்சி கொண்டவர்களாகக் காண்பித்துக்
கொண்டவர்கள் சிலர்.

காதல் கடிதம் கொடுத்ததை ஒப்புக் கொள்ளும் ஸ்ரீகாந்த்தும் காதலே
செய்யவில்லை என்னும் சோனியா அகர்வாலும் நம் ஹீரோ ஹீரோயின்களின்
ஆதர்ச அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
எடுத்துக்காட்டு. இருவரும் மாற்றி சொல்லி இருந்தால் பத்திரிகைகளுக்கு
சரக்குக் கிடைத்திருக்கும். (பத்திரி*க்*கையா? பத்திரிகையா?)

'பு.ச' மலேசியாவில் எடுக்கப் பட்ட படம். 'வாலி' படத்தை உல்டா
செய்யும் கருணாஸ் காமெடி. 'மலர்களே' பாடல் குறித்து யாரும்
காமெராவில் பதிவு செய்யவில்லை. தனுஷ்ஷின் பேட்டி எதார்த்தமாக
இருந்தது.

தான் நடிப்பதை, ரசிகர்களின் கைதட்டலை ரசிப்பதை, தன் பெயர்
டைட்டிலில் வருவதை, திரையில் வருவதை கூட்டத்தோடுப் பார்ப்பதற்காக
முதல் காட்சி செல்வேன் என்றார். ஒருவர் கஷ்டப்பட்டு செய்யும்
சண்டைக் காட்சியை விட, பார்வையாளர்கள் ரசிக்கும் காதல் காட்சிகளே
அதிகம் அடிபடுவதற்கு வருத்தப் பட்டார். சூப்பர் ஸ்டார் ஒருவரே என
ஒத்துக் கொண்டார்.

நற்பணி மன்றம் வைப்பதற்கு அவசரப்படாததும் நம்ம உஷா போன்று
வெற்றிகளைக் கண்டு போதை தலைக்கேறாமல் இன்னும் நல்ல படைப்புகளைத்
தர வேண்டும் என்னும் ஆர்வமும், ரசிகர்களுடன் எப்போதும் நெருங்கி
இருக்க வேண்டும் என்னும் எண்ணங்களும் சுவாரசிய படுத்தியது.

பட்டிமன்றத்தின் 'பெண்கள் அதிகமாக நேசிப்பது புகுந்த வீடா,
பிறந்த வீடா' என்னும் அரதப் பழசான வாதங்களையும், politically correct
ஆனால் தவறான கணிப்பான புகுந்த வீடு என்னும் முடிவையும் நாளை
பார்க்க வேண்டும். உருப்படியான தலைப்பாக 'ஆணாதிக்க மனோபாவத்தை
அதிகம் வெளிப்படுத்துவது ஆண்களே, பெண்களே' என்று எல்லாம்
எங்காவது வாதிடுவார்களா?

தமிழ் உலகம் வழங்கும் சங்கமம்

இ-சங்கமம்:
பொங்கல் முதல் மலர்ந்துள்ள ஒரு புதிய வலைத் தளம்.

என்னினிய தமிழர்களுக்கு என தனது தலையங்கத்தைத் தொடங்கியுள்ளார் ஆல்பர்ட். தமிழர்களின் கலை, கலாசாரம், மரபு சேவையைப் பிரதானப்படுத்த இ-சங்கமம் ஓர் தளமாக அமையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இ-சங்கமம் தொடங்கப்பட்டுள்ளதாக தமது தலையங்கத்தில் விளக்கியுள்ளார் ஆல்பர்ட்.

பொங்கல் சிறப்பு மலராக முதல் இதழ் மலர்ந்துள்ளதால், பொங்கல் பற்றிய கவிதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் புகாரியின் கவிதையுடன், நண்பர்கள் இளங்கோவன், வாசன், ஐயா ஞானவெட்டியான் ஆகியோரின் கட்டுரைகளும் பொங்கலின் சிறப்பைக் கூறுகின்றன. கவிதைகள் பிரிவில் சகோதரிகள் புதியமாதவி, புஷ்பா கிறிஸ்ட்டியின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இணையத்தில்
நகைச்சுவைக்கு என தனி முத்திரையைப் பதித்துள்ள அன்பர் சுவாமிநாதன் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டுமா? நட்டம் என்ற அவரின் கதை ஒன்றுடன் அவரின் படமும் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூர், இந்திய செல்வாக்கின் கீழ் இருந்த தீவு என்பதைக் குறிக்கும் எழுத்துக்கள் கொண்ட பழங்காலப் பாறைக்கு என்னவாயிற்று? அத்தீவுக்கு முதன் முதலில் சென்ற தமிழன் யார்? சிங்கப்பூர் வரலாறு அறிமுகத்தில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கட்டுரைகள் பகுதியில் இ-சுவடியை நடத்தும் கண்ணன், அத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் சுபாஷினி, கணினி பகுதியில் முகுந்தராஜ், உமர் என மேலும் பலரும் எழுதியுள்ளனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திகள் அனுப்ப வேண்டுமானால், அத்தகைய சேவையை
இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

தமிழ்-உலகம்: பழனி




சுட்ட பழமா? சுடாத பழமா?

K A T H A M B A M - The Complete Tamil Web Portal: பா.ராகவனின் 'தமிழ் இலக்கியம் 2004' மற்றும் பத்ரி சேஷாத்ரியின் 'நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா? ' கட்டுரையும் வலைப்பதிவுகளில் இருந்து ஒழுங்காக அனுமதி பெறபட்டதா? அல்லது எதையும் ப்ளாக் செய்கிறேன் என்று மறு பதிப்பு விடுவது போல் copy/paste தொழில் நுட்பமா?

புதன், ஜனவரி 14, 2004

படைப்புகளும் புரிதல்களும்


Rose is Rose


சுற்றுபுற வீடுகள் - 1

பவித்ராவின் ஷாங்ரி-லாவில் ஃப்ளூபுல்லின் டாஃக்லர் விளையாட்டு கிடைத்தது. வலைப்பதிவில் விநியோகஸ்த உரிமை கொடுத்த வாரம் நிறைய விளையாடித் தோற்று அவமானத்தில் கம்மென்று இருந்து விட்டேன். நேற்று மீண்டும் விளையாடியதில் முதல் தடவையே வெற்றி!

இருபது தடவையில் முடித்திருந்தேன். கொஞ்சம் அலசி ஆராய்ந்து அடுத்த முறை ஆறே ஆட்டத்தில் சுத்தம் செய்தேன். இதை விடக் குறைவாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து ஆடியதில் பனிரெண்டு முறை ஆகிப் போச்சு. நீங்களும் ஆடிப் பார்த்து எத்தனை தடவையில் முடித்தீர்கள் என்று உண்மையை சொல்ல வேண்டும்.

என்னுடைய மற்றும் ஐகாரஸ் போன்ற முக்கியமான பலரின் சுந்தர வசிப்பிடமான மயிலாப்பூரின் அந்தக் காலங்கள் வரும் எஸ்.வி.வி நாவலை நான் முழுவதும் படித்துப் பார்க்க வேண்டும்.

'கல் ஹோ ந ஹோ' இன்னும் திருட்டு வட்டில் பிஸியாக பலர் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதால் பார்க்கவில்லை. ஆனால், ரிடிஃப் அலசலலும் பவித்ராவின் விமர்சனமான "படம் முழுக்க New Yorkஐத் தான் வட்டமிடுகிறது. இருந்தாலும், யதார்த்தம் மீறாமல், இயல்பாக எடுத்திருக்கிறார்கள்" கருத்துகளும் நேர் எதிர். நான் படம் பார்த்த பிறகுதான் எதார்த்தத்தை குறித்த கருத்துகளை சொல்ல முடியும்.

The Sum of All Fears: A Glance

படம்: எல்லா பயங்கரத்துக்கும் ஒரு மொத்த கவலை

கதைத்தது: ஊர் பேர் தெரியாதவன் ரஷிய முதல்வன் ஆகிறார்.
அவர்தான் அடுத்த நெ.1 என்று ஜோசியம் சொன்ன துடுக்கு
007, பெரிய பதவிக்கு வரும் சமயம், அமெரிக்காவில்
அணுகுண்டு வெடிக்கிறது. அதன் பிறகு?

நடந்தது: பதினைந்தே நிமிடத்தில் என்னுடைய மனைவி 'கொர்.. கொர்ர்...'

மேலும் நடந்தது: அணுகுண்டு வெடித்த இடங்களுக்கு நடுவே, ஹீரோ, வில்லன்களை
விரட்டி சென்று அடித்து உதைத்து, லேட்டாக வரும் போலீஸிடம்
ஒப்படைப்பது.

நடக்காதது: அணுகுண்டு வெடிப்பதற்கு ஒரு வினாடியே பாக்கி இருக்கும் போது,
ஹீரோ களத்தில் குதித்து, கம்பிகளை சோதித்து, சிந்தித்துத் துண்டிப்பது.

ரசித்தது: காத்திருக்கும் காதலியிடம், ரஷியா செல்வதாக உண்மை சொல்லி,
திட்டு வாங்குவது.

ரசிக்காதது: க்ளைமாக்ஸில் மாற்றி மாற்றி பட்டன் தட்டி, வெடி வெடிப்பது.

விரும்பியது: வேலையில் புதியவர், நிதானிக்காமல் செயலில் இறங்குவது.

கேட்டது: 'நான் அறிவுரை கேட்டா, நீ நிசமாவே பேசணும்னு அர்த்தம் இல்ல!'

ஒத்துக்கொண்டது: 'மக்கள் ஹிட்லரை பைத்தியக்காரன் என்கிறார்கள். அவர் லூசு இல்லை; முட்டாள்.'

பிடித்தது: இரண்டு மணி நேரம் ரொம்ப யோசிக்காமல் ஒரு படம் பார்த்தது.

புரியாதது: ஹீரோவின் காதலி அழகாக இருந்தாலும், ஒன்றுமே செய்யாமல்,
(குறைந்தபட்சம் ஒரு டூயட் கூட இல்லாமல்) எதற்கு வந்து போகிறார்?

தெரிந்து கொண்டது: ஊர் ரெண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்!

தெரியாதது: ஐநா, NATO, மற்ற நாடுகளால் இன்னொரு உலக யுத்தத்தைத் தடுக்க முடியாதா?

செவ்வாய், ஜனவரி 13, 2004

அகராதிகள்

அடோபி அகராதி - 1: தூய தமிழ்ப் பதங்கள்

அடோபி அகராதி - 1 (மாற்றுப் பதி): தூய தமிழ்ப் பதங்கள்

அடோபி அகராதி - 2: எளிமையான அன்றாட வார்த்தைகள்

அடோபி அகராதி - 2 (மாற்றுப் பதி): எளிமையான அன்றாட வார்த்தைகள்

சுஜாதாவின் கலைச்சொற்கள்

சுஜாதாவின் கலைச்சொற்கள் (மாற்றுப் பதி)

தமிழ் இணையப் பல்கலை.: கலைச்சொற்கள்

தமிழ் இணையப் பல்கலை. (மாற்றுப் பதி): கலைச்சொற்கள்

இணையத்தில் எடுத்தது - 1: ஆங்காங்கே கண்டதில் பிடித்தது

இணையத்தில் எடுத்தது - 1 (மாற்றுப் பதி): ஆங்காங்கே கண்டதில் பிடித்தது

திரு. ஞானவெட்டியான் கொடுத்தது - 1: திரு. இராம.கியின் சொல்லாக்கங்கள்

திரு. ஞானவெட்டியான் கொடுத்தது - 1 (மாற்றுப் பதி): திரு. இராம.கியின் சொல்லாக்கங்கள்

தூய தமிழ் மற்றும் இன்ன பிற: திரு. இராம.கி., திரு. ஞானவெட்டியான், திரு. ஆசாத் மற்றும் பலரின் மடல்களின் தொகுப்பு.

தூய தமிழ் மற்றும் இன்ன பிற (மாற்றுப் பதி): திரு. இராம.கி., திரு. ஞானவெட்டியான், திரு. ஆசாத் மற்றும் பலரின் மடல்களின் தொகுப்பு.

நன்றி: தமிழ் உலகம்

வாழ்த்துகள்: பொங்கலோ பொங்கல்

ஐடியா கொடுத்தவர்: இரா. முருகன்
நிறைவேற்றியவர்: பிபி
உரு மாற்றி: பொங்கு தமிழ்

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மரைஞ்சிருக்கு

அட காடு வெளைஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்

இப்போ காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே

திங்கள், ஜனவரி 12, 2004

வைரமுத்துவின் வாய் - ரஜினி படம் (ப்ளாக் Syndication)

::Internet Bridge of World Tamils:Webtamilan.com::: "ரஜினிகாந்த் அநேகமாக ஜுன்2004மாதன் தன் அடுத்த படத்தை துவங்குவார்.படம்2005ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இனிப்பான புத்தாண்டு செய்தியை அறிவித்தார் வைரமுத்து."

சுவையான தளம். தமிழ் வலைப்பதிவுலகின் அரசர்களான சுபா, வெங்கட்டின் சில பதிவுகளும் மறு ஒலிபரப்பாகிறது!

கொரிய சுற்றுப்பயணம்(4) -சுபாஷிணி கனகசுந்தரம்(ஜெர்மனி)
மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம்-வெங்கட்(கனடா)

ஞாயிறு, ஜனவரி 11, 2004

தாசில்தார் அனுபவங்கள்

அமுதசுரபி - தமிழ் சிஃபி: "தாசில்தார் என்ற வார்த்தையைக் கேள்விப்படாதவர் மிகமிகக் குறைவாகத்தான் இருக்க முடியும். பிறந்தாலும் வாழந்தாலும் வீழ்ந்தாலும் இறந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தாசில்தாரிடம் சென்றாக வேண்டிய அவசியம் பெரும்பாலோருக்கு வந்தே தீரும். ஒன்றுமே இல்லாதவனிýருந்து இல்லாதது எதுவுமே இல்லை என்ற நிலையில் உள்ளவன் வரை எப்போதாவது ஒரு முறையாவது தாசில்தாரைச் சந்தித்தாக வேண்டிய கட்டாயம் நிர்பந்தம் வரும்.

தாசில்தார் என்றதுமே அவரது அதிகாரம் நினைவுக்கு வரும். கூடவே தங்கள் அலைச்சல் நினைவுக்கு வரும். எரிச்சலும் வரும். இருந்தாலும் சமூகத்தில் தாசில்தார் எண்பவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி இன்று வரை.

தாசில்தார் என்பது அரபி வார்த்தை.தமிழில் வட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர். "

வியாழன், ஜனவரி 08, 2004

போடுங்கம்மா ஓட்டு

BBC NEWS: புஷ், டீன், கெர்ரி, ஷார்ப்டன், லீபர்மான் என்று பல முகங்கள் நிற்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தப் பருந்துப் பார்வை.

என்ன செய்திருக்கிறார்கள், என்னென்ன வாக்குறுதிகள், விளம்பர வாசகம் என்ன என்று பத்து நிமிடத்தில் நுனிப்புல் மேயலாம்.

கொஞ்சம் வம்பு

1. சூர்யாவுக்கு ஃபிலிம்·பேர் விருது!? (மிஸ்டர் மியாவ் - ஜூவி - யாரோ சொன்னாங்க)

2. ரஜினி அடுத்த படம் ஆரம்பிப்பதாய் பட்டி தொட்டி எங்கும் பேச்சு. நான் கேள்வி பட்ட இரு இடங்கள்: வைரமுத்து வாய், சினிசவுத்

தமிழோவியம் - Blatant Self Promotion

என்னுடைய போன வார மவுஸ் போன போக்கில் இந்த வாரமும் படியுங்கள். எழுதும் விதத்திலோ, கருத்திலோ குறை (நிறை) சொல்லுங்கள். போன வருடம் நிகழ்வுகள் குறித்த பட்டியலையும் அலசலாம்.

காமகோடி - ஜனவரி 2004 - அம்மாவின் எழுத்துகள்

ஆர். பொன்னம்மாளின் ஜனவரி மாத பரமாசார்யாள் பாதையிலே, விசேஷ தினங்கள், கிராம தேவதைகள் இணையத்தில் கிடைக்கிறது.

Top Ten Replies by Literati

தங்கள் கதை வெளிவரவில்லை என்பதற்கு எழுத்தாளர்களின் தலை பத்து பதில்:

10. அந்த பத்திரிகையின் 'நடை'க்கு உட்பட்டு நான் எழுதவில்லை.

9. வெளிவந்தால்தான் 'நல்ல' எழுத்தா?

8. போன கதை மாதிரிதானே இதையும் எழுதினேன்!

7. வெகுஜன ஊடகங்களுக்காக நான் எழுதுவதில்லை.

6. நல்ல எழுத்துக்கு இப்போது மதிப்பேது?

5. என் கதைகள் சாதாரணர்களுக்குப் புரியாது.

4. புகழ் பெற்றவர்களையும், விதண்டாவாதம் செய்பவர்களையும்தான் மதிக்கிறார்கள்.

3. எனக்கு பதிப்பாளர்களுடன் அறிமுகம் கிடையாது.

2. சினிமா, அரசியல், டிவியில் எல்லாம் பங்கு பெறாததால்தான்....

கடைசியாக...

1. இறந்த பிறகுதான் பாரதி போன்றோருக்கே அங்கீகாரம் தரப்படுகிறது.

யார் மனமாவது புண்பட்டிருந்தால், அவரே உண்மையான படைப்பாளி! :-)

புதன், ஜனவரி 07, 2004

சிரிச்சுடுங்க... ப்ளீஸ்


Hmmm... Indian in a rare comic appearance

செவ்வாய், ஜனவரி 06, 2004

நாட்குறிப்பு என்பது கடிகாரத்துடன் இணைக்கப்படாத டைம்பாம

டயரி எழுதுவோர் கவனிக்க! - மதுரபாரதி

நன்றி: தென்றல்

"புத்தாண்டு பிறந்தாச்சு. எல்லோருக்கும் புதிய நாட்குறிப்புப் புத்தகங்கள் வரும் நேரம் இது. அதைப் பற்றிய சில முன்னெச்சரிக்கைகளைச் சொல்லிவிடுவது எல்லோருக்கும் நல்லது என்று தோன்றியது.

நாட்குறிப்பு எழுதுவதால் நிறையப் பலன்கள் உண்டு. நீங்கள் என்னைப் போல் மறதி மகாதேவனாக இருந்தால், அன்றைய விஷயங்களையெல்லாம் அதில் எழுதிவைத்துவிட்டால் மறக்காமல் இருக்கும். "பதினாலு பைசா குடுத்தாப் போதும், திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து டவுனுக்குப் போயிடலாம் தெரியுமா அந்தக் காலத்தில்" என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ள உதவும். ஆனால் அப்போது வாங்கிய மொத்தச் சம்பளமே முந்நூறு ரூபாய்தான் என்பதைச் சொல்லக்கூடாது.

'காலையில் கெட்ட கனவு கண்டு எழுந்தேன். தோசைமாவு புளித்திருந்தது. கடைசிவீட்டுக் கமலாம்பாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆபீசுக்குப் போனேன். பஸ்சில் ஒரே கூட்டம். மதியம் கொண்டுபோன தயிர்சாதமும் புளிப்பு" என்று இவ்வாறு மிக முக்கியமான சமாசாரங்களை எதிர்காலத்தின் பொருட்டாக, சரித்திரக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்களும் உண்டு. ஆனந்தரங்கம்பிள்ளையின் வாரிசுகள். என் பெரியப்பா ஒருவர் துருப்பிடித்த (ஒரிஜனலாகப் பச்சைப் பெயிண்ட் அடித்து மூடிமேல் கிளிப்படம் வரைந்த) டிரங்க் பெட்டிகள் நிறைய அவர் சிறுவயது முதல் எழுதிய பல நாட்குறிப்புகளை அடைத்து வைத்திருக்கிறார். 'டைம் காப்ஸ்யூல்' என்று சில அரசுகள் தமது 'சாதனை'களையும் தனக்கேற்றவாறு சரித்திரம் எழுதுபவர்களின் படைப்புகளையும் ஆழப் புதைத்து வைப்பதுண்டு.

பிற்காலத்தில் தோண்டியெடுத்துப் பார்ப்பவர்களுக்கு இதன் மூலம் நமது நகைச்சுவை உணர்வு நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோலப் பெரியப்பாவின் டயரிகளையும் ஆழப்புதைத்து வைத்தால் நல்லது என்று நான் நினைப்பதுண்டு. மொத்தத்தில் இரண்டுமே ஆழப் புதைக்கப்படவேண்டியவை என்பதில் கருத்து வித்தியாசம் இருக்கமுடியாது.

என்னுடன் படித்த பிரகாஷ் பரிட்சைக்குப் படிப்பதாகச் சொல்லிவிட்டு ராத்திரி பத்து மணிக்குமேல் உட்கார்ந்துகொண்டு அன்றைக்குத் தன்னைப் பார்த்து மையல் கொண்ட மடந்தையரின் பெயர் இத்தியாதிகளை எழுதி மகிழ்வான். பெரும்பாலும் இவனுடைய கற்பனைதான்.

ஆனால் எழுதி எழுதி தானே நம்பத் தொடங்கிவிட்டான். சின்ன வயதில். கல்யணமானபின் பெண்டாட்டி கையில் மாட்டினால் என்ன ஆவது. விவாகரத்து வரைக்கும் போய்விடுமே!

அதனால்தான் நிறையப்பேர் நாட்குறிப்பு எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

என்னுடைய தூரத்துச் சித்தப்பா (அவர் கனடாவில் இருந்தார் - ரொம்ப தூரம்தானே) டயரியின் எல்லாப் பக்கங்களிலும் மேலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுக் கீழே விதவிதமாய்க் காக்காய்ப் படங்கள் போட்டிருப்பார். ஆர்.கே. லக்ஷ்மணுக்குப் போட்டிதான். ஆனால் வரைந்திருப்பது காக்காய் என்று அவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டும். சலவைக்கணக்கு, ஹைக்கூ, ஸ்ரீ ராம ஜயம், பழைய பேப்பர்க்காரனுக்கு விலைக்குப் போட்டவைகளின் கணக்கு, தான் செய்த, செய்யவேண்டிய, செய்ய மறந்த வேலைகளின் பட்டியல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டும் எழுதப் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஜனவரி 7ஆம் தேதி புது டயரி கிடைத்ததும் 'இன்றைக்கு இந்த டயரியை ராமசாமி கொடுத்தார். இனிமேல் தவறாமல் எழுதுவேன்' என்று சூளுரைத்துவிட்டு, 9ஆம் தேதியோடு மறந்துவிட்டவர்கள் ஏராளம்.

என் நண்பன் சுப்பு மறக்கமாட்டான். காலையில் எழுந்து பல்தேய்த்ததும் டயரியை எடுத்துவைத்துக்கொண்டு மணிரத்னம் அடுத்த படத்துக்குக் கதை யோசிக்கிற தோரணையில் உட்காருவான். ஊஹ¥ம், ஒன்றும் தோன்றாது. கொஞ்சநேரம் உட்கார்ந்தபின் தன் மனச்சிக்கலை (காலையில் எவ்வளவு முக்கினாலும் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும்) ஒப்புக்கொண்டு, டயரியை மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்பான். முதல் பக்கத்தில் பெயர், முகவரி, பிளட்குரூப் எழுதியது தவிர அந்த நாட்குறிப்பில் மற்றப்படி வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதற்கு நீங்கள் சுப்புவைப் பழிக்கமுடியாது.

ராம்கி கொஞ்சம் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றவன் - அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. "டயரி என்று சொல்லுவதே தப்பு, அந்த வார்த்தைக்கும் பால்பண்ணைக்கும் தொடர்பு உண்டு" என்பான். டைரி என்பதுதான் சரியாம். எப்படியோ பத்துக்கு அஞ்சு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ கூடாது என்று தமிழர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இதில் சரி தப்பெல்லாம் பார்க்கவா முடியும்?

நான் பார்த்தவரையில் யாருடைய நாட்குறிப்பு செக்ரட்டரியால் எழுதப்படுகிறதோ, அதுதான் தவறாமல் ஒழுங்காகச் செய்யப்படுகிறது. நானும் ஒரு அழகான செக்ரட்டரிக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன் - தவறாமல் நாட்குறிப்பு எழுதத்தான். அட, யாரய்யா அது, டைம்பாமை நினவுபடுத்தறது!"

முழுவதும் படிக்க

எனக்குப் பிடித்த பாடல்கள்

1. பூங்குருவி பாடடி; சுக ராகம் தேடித்தான் - சுந்தர காண்டம்
2. அன்பெனும் மழையிலே - மின்சார கனவு
3. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு - விடுதலை
4. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
5. மந்திர புன்னகையோ, மஞ்சள் நிலவோ - மந்திர புன்னகை
6. தீர்த்தக்கரையினிலே - வறுமையின் நிறம் சிகப்பு
7. அக்கம்பக்கம் பாரடா - உன்னால் முடியும் தம்பி
8. கவிதைகள் சொல்லவா - உள்ளம் கொள்ளை போகுதே
9. அடி பெண்ணே - முள்ளும் மலரும்
10. வேறு இடம் தேடிப் போவாளோ? - சில நேரங்களில் சில மனிதர்கள்
11. கண்டதை சொல்லுகிறேன் - do -
12. சிந்தனை செய் மனமே - ???
13. சுந்தரி சௌந்தரி நிரந்தரியே - தூக்கு தூக்கி
14. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் - மலைக் கள்ளன்
15. வாராங்கோ... வாராங்கோ - செந்தூரப் பூவே
16. My Name is Birlaa - பிர்லா
17. ஆசை நூறு வகை - (அடுத்த வாரிசு?)
18. நானாக நானில்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே
19. சக்கரை நிலவே - யூத்
20. வேதம் நீ! இனிய நாதம் நீ - ???
21. பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் - ???
22. அது இருந்தா இது இல்லே... இது இருந்தா அது இல்லே. - ???
23. இதோ இதோ என் வாழ்விலே - வட்டத்துக்குள் சதுரம்
24. வாழ்வே மாயமா? வெறுங்கனவா? - காயத்ரி
25. மேரா நாம் அப்துல் ரெஹ்மான் - சிரித்து வாழ வேண்டும்
26. உனக்கென்ன குறைச்சல் - வெள்ளி விழா
27. கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு - வெற்றி கொடி கட்டு
28. கொஞ்ச நாள் பொறு தலைவா - ஆசை
29. முத்தைத் தரு - அருணகிரிநாதர்
30. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் - ???
31. அழகிய கண்ணே - உதிரிப்பூக்கள்
32. பூமாலையே தோள் சேரவா -
33. நான் தேடும் செவ்வந்திப் பூவிது -
34. அகரம் இப்போ சிகராமாச்சு - சிகரம்
35. ஒரு கிளி உறங்குது; உரிமையில் பழகுது. ஓ மைனா - கீதாஞ்சலி
36. ஆண்டவனைப் பார்க்கணும் - ???
37. காதல் என்பது பொதுவுடமை - பாலைவன ரோஜாக்கள்
38. ஆறும் அது ஆழமில்ல - ???
39. சோலை புஷ்பங்களே - ???
40. வைகைக் கரை காற்றே நில்லு - ??? (தங்கைக்கோர் கீதம்?)

படம் தவறு என்றாலோ, இடாத படங்கள் தெரிந்தாலோ
சொல்லுங்கள்.

கடந்த வருடத்தில்... (புலம்பல் - 1)

மரத்தடியில் ஒன்றைத் தேடப் போகையில் என்னுடைய பழைய மடல்களைக் கிண்ட கொஞ்சம் நேரம் கிடைத்தது. கடந்த ஒரு வருடத்தில் சினிமாவை குறித்தே அதிக அளவில் எழுதியுள்ளேன். திரைப்படம் அது சார்ந்த பாடல்களைத் தவிர வேறு எதற்கும் பதிலும் ஒழுங்காகத் தருவதில்லை. பரவாயில்லை... ஒன்றிலாவது ஏதோ கொஞ்சம் கிறுக்க முடிகிறதே!

ஈ-கலப்பையில் யூனிகோட்

புதிய தட்டெழுத்து விசைபலகையை எ-கலப்பையில் பூட்ட, கீழ்கண்ட முறையினை பின்பற்றுங்கள்.

1. UNICODETAMIL.kmx

Alternate Location

என்ற வலைசுட்டியில் இருந்து UNICODETAMIL.kmx(அல்லது வேறு தேவையான .kmx கோப்பு) என்ற கோப்பை வலையிறக்கி உங்கள் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.
(Do a Right Click on the Link and 'Save Target As...')

2. எகலப்பை இயக்கத்தில் இருக்கிறதா என சரிபார்த்து, இயக்கத்தில் இல்லை என்றால் ஓடவிடுங்கள்.

3. உங்கள் கணினியில் வலதுகை பக்கம், கீழ் ஓரத்தில் எகலப்பையின் 'அ' அல்லது 'k'வடிவம் இருக்கும் அல்லவா, அதன் மேல் mouse pointerஐ வைத்து , right click செய்யவும், அப்போது தோன்றும் சிறு சாளரத்தில், "keyman configuration"ஐ தேர்ந்தெடுக்கவும்.

4. பிறகு வரும் 'Tavulte soft configuration' சாளரத்தில் , "install keyboard" பொத்தானை அழுத்தவும்.

5. பிறகு இந்த "UNICODETAMIL.kmx" டைப்ரைட்டர் கீபோர்டை கோப்பை தெரிவு செய்து 'ok' பொத்தானை தட்டினால், புதிய கீபோர்ட் நிறுவிவிடும்.

6. 'Keyboard Details' பகுதியில் உங்களுக்குத் தேவையான குறுக்குவழியை(Shortcut) தேர்ந்தெடுங்கள். நான் பயன்படுத்துவது
டிஸ்கி: Ctrl + Alt + 2
யூனிகோட்: Ctrl + Alt + 3
ஆங்கிலம்: Ctrl + Alt + 1

பிறகு புதிய கீபோர்டை எகலப்பையில் பயன்படுத்தலாம்.

7. பின்னூட்டங்கள் பகுதியில் நேரடியாக யூனிகோட் பயன்படுத்தலாம். யூனிகோட் சில சமயம் நோட்பேடில் சரியாக அடிக்க முடியாமல் போகலாம். Wordpad பயன்படுத்தி பாருங்கள்.

எழுதியவர்: முகுந்தராஜ் (mugunth@thamizha.com)
தேதி: 04 மார்ச் 2003

சில இடைச் செருகல்கள்: பாலாஜி (bsubra@india.com)

திங்கள், ஜனவரி 05, 2004

புதுகோட்டையிலிருந்து சரவணன்

பாடியவர்கள்: குணால், ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால், யூகி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

M:
ஆ...
நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

M 1:
புதியதா பாடுடா மச்சி

M:
கோரஸ் 1:
நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு
தங்கக் குடமே தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டுப் புட்ட மலையாளப் படமே!

கோரஸ் 2:
என்ன சைஸு இது மாமேய்
என்ன வயசு இது,
அய்யே ஐஸு இது ஆமா
ரொம்ப நைசு இது
நெஞ்சை நசுக்கி
கண்ணை அசக்கி
என்னை மசாஜுதான் செஞ்சி புட்டாளே

கோரஸ் 1

பள்ளிக்கூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான்
ஓன்னா பாத்ததுலே லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்

F:
ஆறடி சந்தையிலே தினமும் அல்வா வித்தவதான்
ஆட்டு மந்தையில இருந்து ஆனைப் புடிச்சவதான்

ஹோய்....

M:
ஓட்டை பாலத்தில் ஊதும் பீடி தான்
ரயிலு புகையாக தான் விட்டோமடி

F:
காட்டு பல்லத்தில் கள்ளன் புடிக்கவே
கொத்தும் மைனாவும் சுட்டோமடா

M:
மஞ்ச கிழங்கே, மச்சினி உன் உடம்பா
நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா
பச்ச நரம்பா பத்தினி நீ கரும்பா
உன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா

G:
ரரரறே....ஆ...
லுளுலு...
போடு....
அமுக்கிப் போடு....

M:
வாடி வஞ்சியம்மா நெஞ்சை வலைச்சிப் பூட்டிகிட்டே
இடுப்பில் மடிப்பு இல்லே எங்க இஸ்திரி போட்டுகிட்டே

F:
அரும்பு மீசையில நீதான் ஆளத் தூண்டி விட்ட
அருணாக் கைத்துலதான் என்ன கட்டிப் போட்டுபுட்ட

M:
சுருக்கு பைய்யில சுருக்கு பைய்யில
சுருங்கிப் போவோமே உன் கைய்யில

F:
அடுத்தத் தையிலே வீட்டில் சொல்லித்தான்
பொண்ண பாத்துக்கோத் தங்கத்தில

M:
கோரஸ் 1
கோரஸ் 2
கோரஸ் 1

M 2:
ஹேய் வாந்தி எடுக்காதே மடையா...

ஞாயிறு, ஜனவரி 04, 2004

அர்மீனியாவுக்கும் அணுகுண்டு: பாக். புது திட்டம்

பாராவின் பதிவை பிரதிபலிக்கிறது
டைம்ஸ்.

* பாகிஸ்தானுக்கு என்றுமே தனி வழி. வட கொரியா, ஈரான், லிபியா
என்று பல நாடுகளுக்கு அணு அயுத தொழில் நுட்பத்தை தாரை
வார்த்துள்ளது.

* ரஷியாவிற்கு எதிராக ஒரு நட்பு நாட்டின் அவசியம் கருதி கண்டுக்காமல்
விட்டு விட்டிருந்தார்கள்.

* நெதர்லாண்ட்ஸில் இருந்து 1976-இல் பாகிஸ்தான் திரும்பிய முனைவர் கான்
பல முக்கியமான வடிவமைப்புகளைத் திருடி எடுத்துக் கொணர்ந்துதான் முக்கிய
திருப்பம்.

* 'மேற்கத்திய நாடுகளின் எதிரி பாகிஸ்தான் மட்டுமல்ல; ஒட்டுமொத்த
இஸ்லாமுக்கும் எதிரிகள்' என்கிறார் கான்.

* யூரேனியம் செண்ட்ரி·ப்யூஜ்களை தயாரிக்கும் வித்தைகளை
'யான் பெற்ற இன்பம் ...' என 1998-இல் கான் அறிவியில் சஞ்சிகைகளில்
வெளியிட்டு விடுகிறார்.

* 1987-இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவை
மிரட்டவும் எச்சரிக்கவும் பயன்படுகிறது.

* 'அழுகிற பிள்ளை பால் குடிக்கும்' என்பது போல் அமெரிக்க உளவுத் துறை
1986-இல் பாகிஸ்தானிடம் அணுகுண்டுக்கான யூரேனியம தயார் என்ற அறிக்கை
சமர்ப்பிக்கப் பட்டவுடன் நான்கு பில்லியன் (அம்மாடியோவ்...) டாலர் உதவித்
தொகை வழங்கப் படுகிறது.

* சைனாதான் எல்லாவற்றிற்கும் கால்கோள் போட்டது. 1960-இலேயே
பக்கத்து வீட்டுக்காரருக்கு அணுகுண்டுகள் தயரிக்க பாலபாடம் ஆரம்பித்தது.

* பதிலுக்கு உதவி செய்ய முனைவர் கானும் தான் எடுத்து வந்த ஐரோப்பிய
வடிவமைப்புகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

* மாப்பிள்ளை கொடுத்து மருமகள் எடுப்பது போல் வட கொரியாவிடம்
ஏவுகணை வித்தையை வாங்கி செண்ட்ரி·ப்யூஜ் நுட்பங்களைத் தர
ஒப்புக் கொண்டார்கள்.

* முஷார·ப்பை இதுவரையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க இவற்றை
பொதுஜனத்திற்கு வெளியிடுவதை தவிர்த்து வந்தவர்கள், இப்பொழுது டைம்ஸ்,
போஸ்ட் இன்ன பிற நாளிதழ்கள் மூலம் அமெரிக்கர்களை வெளிச்சத்துக்கு
அழைக்கிறார்கள்.

* ஜெர்மானி, இத்தாலி, தாய்வான், ஜப்பான் என்று பல தேசங்கள், கைகள் மூலம்
பொருட்கள் வட கொரியாவிற்கும் மற்ற அமெரிக்க எதிரிகள் கையிலும்
சிக்காமல் தடுக்கிறார்கள். சீனா போன்ற மற்ற நாடுகள் உதவுகிறதா, தடுக்கிறதா
என்று சொல்லவில்லை.

* அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் அனைவருமே நண்பர்களாக விளங்கி,
ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள்.

பாடம்: அமெரிக்காவை ஏமாற்றுவது எளிது. ஆனால், ஏமாறியதாகக்
காட்டிக் கொள்ளாது.

பாகிஸ்தானின் அனவருக்கும் அணுசக்திக் கொள்கை

நன்றி: நியு யார்க் டைம்ஸ்








A brochure from Dr. Khan's laboratory, advertising technology used in centrifuges to make nuclear arms, was circulated to aspiring nuclear states and a network of middlemen. It was provided to The New York Times by the Institute for Science and International Security, in Washington.





பெயரிலிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

காசியின் இன்றைய நியூக்ளியஸ் வலைப்பதிவில்
'யாரோ'க்களின் இணைய முகவரியை கண்டுபிடிக்கும் வழிகளை சொல்கிறார்.
ஹெரால்ட் ட்ரிப்யூனின் வலைப்பக்கங்களுக்கு
சென்றால் நமது கணினிக்களை நச்சரிக்கும் கிருமிகளையும்,
நாம் செல்லும் அல்லது தடுக்கி விழுந்து விடும் வலைப்பக்கங்களில்
இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் அறியலாம்.

அரேபியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா என்றும், வேவு
பார்க்கும் ஓற்று நிரலிகளையும், இன்ன பிற ஜந்துக்களையும்
நம் வலை மேய்தலில் இருந்து காக்க உதவுகிறார்கள். அந்தரங்கம்
புனிதமானது!?

சத்தியமாய் நான் பெயரிலியோ, முதுகெலும்பிலனாரோ அல்ல!

மயூரா நெட் - வலைத்தமிழ் அந்தம்

சுவைத்தவை: "
'வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக்கு ஒருநீதி'

- மனோன்மணீயம்



திருக்குறளில் அடங்கியுள்ள 1330 குறள்களும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழியாக்கத்துடனும், பேராசிரியர் - டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி அவர்களின் எளிய உரையுடனும் பகுதி பகுதியாகப் பிரித்து இவ்வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த இணைப்பினை அழுத்தி அவற்றினைப் பார்வையிடலாம். "

புத்தக அறிமுகங்கள் - ஆர். பொன்னம்மாள் (5)

கடவுளின் கருணை, கல்லுக்குள் ஈரம், புடமிட்ட பொன், மனமாற்றம் முதலான நான்கு கதைகள் கொண்ட முதல் தொகுப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது.

புடமிட்ட பொன்: ஒரு சிறுவன் வீட்டை விட்டுப் போனால் எப்படிபட்ட துன்பங்களை அனுபவிக்க நேரிடும், பெற்றோரை தண்டிப்பதாக எண்ணி அவன் வாழ்க்கையை அவலப்படுத்திக் கொள்ளும் விதத்தை சித்தரிக்கிறது. இதைப் படிக்கும் சிறுவர், சிறுமியர் வாழ்க்கை என்பது, திரைப்படம் அல்ல. பணக்காரன் கையில் செல்லக் குழந்தையாய் வாழ்வோம் என்பது கனவு என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை மகனை டேபிள் துடைப்பவனாகப் பார்த்தும் கூட கண்ணீரை சொரியாமல், கட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வா என்று அழைக்காமல் பேசுவது பெற்றோருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்த்தலாம்.

கல்லுக்குள் ஈரம் பொல்லாதவனான ஒரு பையனின் கல் போன்ற மனதிலுள்ள ஈரத்தை ஒரு சிறுமி பொறுமை என்னும் உளி கொண்டு உடைத்து வெளிபடுத்தும் விதத்தை சொல்லும் கதை. (இரண்டாம் பரிசு என்பது சற்றே வயதான குழந்தைகளுக்கு என்பதாலே என்று விழாவில் திரு. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கருணை விழிகள்: மோகன் ஏழைச் சிறுவன். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவன். பெற்றோரை இழந்த அவனுக்கு பாட்டி மட்டுமே உறவு. ஏழையாலும் பிறருக்கு உபகாரமாக வாழ முடியும் என்பதை உணர வைக்கும் நாவல். பாட்டியின் கருணை நிரம்பிய விழிகள் சாகாமல் மோகனோடு படிப்பவர் விழிகளையும் ஈரமாக்குகின்றன. இது வானதி பதிப்பகத்தாரின் 1984-ம் ஆண்டு வெளியீடு.

அன்பு உள்ளம்: ராஜேஷ¤ம், அவன் தங்கையும் விடுமுறையில் மாமா வீடு சென்று பின்னர் காணாமல் போய் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் சிறுவர் நாவல். 1978-இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. இதை வெளியிட்டவர் கவர்னராயிருந்த திரு. பட்வாரி அவர்கள்.

(சிறு குறிப்பு வளரும்)

சனி, ஜனவரி 03, 2004

பாரிஸ் ஹில்டன் (பாரிஸின் ஹில்டன் அல்ல :)

Paris Hilton

பாரிஸ் ஹில்டன்

Dominos Pizza and some useless Research

பாரிஸ் ஹில்டனை அறியாத அமெரிக்கர்கள் அரிது.
ஹில்டன் ஹோட்டல் என்னும் பெயர் கேள்விபட்டதாக இருந்தாலும்,
சுய அடையாளத்துக்காக 'முப்பதே நாட்களில் முன்னூறு
மில்லியன் செலவழிப்பது எப்படி' என்று செய்து காட்டி
புகழ் பெறுபவர். பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே தன்னுடைய
பெயரை நிலை நாட்டியவர், இணையத்தின் உபயத்தால்
இப்போது சன் டிவி, ரேடியோ மிர்ச்சி வரை அடிபட
ஆரம்பித்துள்ளார்.

போதையில் மயக்கமுற்ற நிலையில், பாய் ·ப்ரெண்ட் காம லீலா வினோதங்களைப் படம் பிடித்து 'யாம் பெற்ற இன்பம் ...' என இணையத்தில் ஒரு இரண்டு நண்பர்களுக்கு அனுப்ப, அவர்கள் ஒரு நாலு பேருக்கு அனுப்ப, இன்று பட்டி தொட்டி எங்கும் 'ஹில்டன் வீடியோ பார்த்தாச்சா' என்று புள்ளி ராஜா
அளவுக்கு செல்வாக்குடன், ·பாக்ஸ் டிவியிலும் 'கதையல்ல...
நிஜம்' மாதிரி ஒரு நிஜ நாடகம் நடத்துகிறார்.

டாமினோஸ் பீட்ஸா வரவழைப்பவர்கள் அதிகம் சொல்லும்
போலி பெயர் 'பாரிஸ் ஹில்டன்'. அண்களுக்கு அமெரிக்காவின் அட்டர்னி
ஜெனரல் ஜான் ஆஷ்க்ரா·ப்ட் பெயர் பயன்பட்டிருக்கிறது. ஜனநாயக கட்சி
சார்பாக நிற்க போகும் ஹோவார்ட் டீனின் ஆதரவாளர்கள், ஜார்ஜ் புஷின்
கட்சிகாரர்களை விட அதிகம் அன்பளிப்பு வழங்குகிறார்கள். அம்மணமாகக் கதவை
திறப்ப்வர்களும் இருக்கிறார்கள். காது, மூக்கு, வாய் என வளையம் இன்ன
பிற சொருகிக் கொண்டவ்ர்களை விட அரைகுறை ஆடையாளர்கள்
அதிகம் வழங்குகிறார்கள்.

சதாமை கைப்பிடித்த அன்றும், மடோனாவும் ப்ரிட்னியும் பின்னிப்
பிணைந்து கிஸ் அடித்த எம்டிவி விழா அன்றும் தாராளமாகக்
கொடுத்திருக்கிறார்கள்.

நம்ம ஊரு டாமினோஸ் மக்களிடம் tip வருகிறதா,
என்று அதிக அளவு விற்பனையாகிறது, என்ன
பெயர் சொல்லி அழைக்கிறார்கள் (எவ்வளவு சிம்ரன்),
எப்படி எதிர்கொண்டு அழைக்கிறார்கள் போன்ற
விவரங்களை கேட்டு சொல்லுங்களேன்!

மேலும் பீட்ஸா அன்பளிப்பு விவரங்கள்

குழந்தை எழுத்தாளர் சங்கம் - ஆர். பொன்னம்மாள் (4)

தாய்மாமன் வீட்டிலிருந்த என் அன்னை தன் மாமன் மகனை மணக்க 'எழுதக் கூடாது', என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாட்டியின் கண்ணீர் அன்னையின் பேனாக்களை மூடிக் கொள்ள வைத்தது.

முதல் கதை பிரசுரமான நாள்: நவ. 28, 1956
திருமணமான நாள்: ஜன. 28, 1958.

தந்தையின் அனுமதியோடு சில கதைகள் மீண்டும் பிரசுரமாக ஆரம்பித்தது. முதல் குழந்தை பிறந்த நாள்: ஜன. 19, 1960. ஆறாவது மாதம் ஜுரத்தில் அந்தக் குழந்தை மடிந்ததால் தன் எழுத்துப் பணியைத் துறந்த என் தாய் குடும்பமே உலகம் என வாழ்ந்தார்கள்.

என் தமையனுக்கு 15 வயது. என் தமக்கைக்கு 13 வயது. என் தந்தை விரும்பிப் படிக்கும் 'தினமணி' நாளிதழில் குழந்தை எழுத்தாளர் சங்க (கு.எ.ச.) சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளி வந்திருந்தது. அக்காவும், அண்ணனும் தூண்ட மீண்டும் எழுத ஆரம்பித்தார்கள்.

நவ. 13, 1976 அன்று 'எல்.எல்.ஏ. பில்டிங்கில்' (தேவநேயப் பாவாணர் நூலகத்தில்) ஏவிஎம் பரிசளிப்பு விழா நடக்கப் போவதாகவும், என் தாய்க்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கடிதம் வந்தது. இப்போது எங்கள் குடும்பத்துக்கே இறக்கை முளைத்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு பரிசை வாங்கி வந்தோம்.

(கொஞ்சம் இடைச் செருகல்: கு.எ.ச.வின் 1978 வரலாற்றுப் போட்டியில் கலந்து கொண்ட என் சகோதரியும், 'திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று'க்கு ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்றாள்.)

1983-இல் என் தாய் எழுதிய 'கருணை விழிகள்' என்ற நாவல் கு.எ.ச. மூலமாக முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்ததோடு, கோகுலத்தில் தொடராகவும் வெளிவந்து சிறுவர்களிடையே பெரும் பாராட்டினை பெற்றது.

(சிறு குறிப்பு வளரும்)

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு