புதன், மார்ச் 17, 2004

யார் இவர்?

LTTE leader Mr. V. Pirapaharan at Heroes dayTamil: "இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?" என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார். புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.

பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். 'இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

Book by Balasinghamஇலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

பண்டுருட்டியார். 'எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு" என்றார். 'இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்" என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார்."

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு