வியாழன், மார்ச் 18, 2004

பார்த்ததுவே... கேட்டதுவே... நினைப்பதுவே...

Hail Pakistan
பாகிஸ்தான் குறித்த இவரின் எண்ணங்களுக்கு மறுபேச்சே கிடையாது :P அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்!?



அமுதசுரபியின் புதிய புத்தகங்களாக காந்தளகம் அனுப்பிய பட்டியல்:
1. தமிழில் இணைய இதழ்கள்: அண்ணா கண்ணன் - ரூ. 80/-
2. மலர்மன்னன் கதைகள்:மலர்மன்னன் - ரூ. 100/-
நாற்பத்தைந்து ஆண்டுகளாய் எழுதிவரும் மலர்மன்னனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

3. பாரதியார் சரித்திரம்: செல்லம்மா பாரதி - ரூ. 60/-
1943-இல் முதல் முதலாக வெளியான நூல். அதே வடிவில் 63 ஆண்டுகளுக்குப் பிறகும்.

4. கேப்டன் கல்யாணம்: அமரர் வசுமதி ராமசாமி - ரூ. 125/-
1959-இல் வெளியான புதினம் இப்பொழுது மீண்டும் அச்சில் வந்துள்ளது.

5. விவாதங்கள் சர்ச்சைகள்: வெங்கட் சாமிநாதன் - ரூ. 120/-
இலக்கிய முகமூடிகள், க.நா.சுவும் கோவிந்தாக்களும், வல்லிக்கண்ணனுக்கு ஒரு பாராட்டு, தமிழினி 2000, பிச்சமூர்த்தி நினைவு விழாவில், இன்னும் பல சுவையான கட்டுரைகள்.


தமிழ்நூல் இணையதளத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடினபோது கிடைத்த விடைகளைப் பாருங்களேன்! நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் பேரைக் கொண்டோ, புத்தகத்தின் தலைப்பைக் கொண்டோத் தேடிப் பார்க்கலாம்.


நடைபெறும் தேர்தலை நாளையோடு ஏறக்கட்டிவிட்டு புதிய கருத்துக்கணிப்பை ஆரம்பிக்க எண்ணம்.
கேள்வி: பின்னூட்டங்களின் மூலம் கவனத்தைப் பெரிதும் கவர்பவர் யார்?
எனது எண்ணத்தில் இதுவரை உதித்தவர்கள்: 1. பத்ரி 2. டைனோ 3. பரி 4. பிரபு ராஜதுரை 5. ரமணீதரன் 6. ரவியா 7. உஷா 8. மறுமொழிகளில் எவரும் அக்கறை ஏற்படுத்துவதில்லை!
நான் தவறவிட்ட உகப்பானவர்களை பின்னூட்டத்திலோ bsubra at india . com முகவரியின் மூலமோ சொல்லுங்கள்.


0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு