வியாழன், மார்ச் 11, 2004

குண்டராய் பார்த்து குறைக்காவிட்டால்...

பரியின் இன்றைய பதிவில் அவசியமான சில கேள்விகளை எழுப்புகிறார்.


என் கேள்வியெல்லாம், இதையெல்லாம் சட்டம் போட்டுதான் தடுக்க வேண்டுமா? எதைத் திண்ணலாம் எவ்வளவு திண்ணலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்களா மக்கள்?


இந்த சட்டம் "276-139" என்னும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது. செனட்டில் இருக்கும் நூறு பேரும் தலையாட்ட வேண்டும்; கடைசியாக பெருந்தலைவர் ஜி.டபிள்யூவின் கையெழுத்தும் பாக்கி. வெகு விரைவில் சட்டமாகி விடும். மெட்டொனால்டும், பிட்ஸா ஹட்டும் போண்டியாகக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தவறான உணவு வகைகளை மொக்குவது; அனுபவித்து ருசித்த இடத்தையே குற்றஞ்சொல்லி, வழக்கு தொடுத்து உணவின் சுவைதான் என்னை சாப்பிட வைத்தது என்று விதண்டாவாதம் செய்பவர்களைத் தடுக்க ஒரு சட்டம்.

இதற்கும் நேற்று ஜாமா எனப்படும் மருத்துவர்களின் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

* தவிர்த்துவிடக் கூடிய காரணங்களால் ஏற்படும் மரணங்களில் 'உணவு கட்டுப்பாடின்மை'க்கு இரண்டாம் இடம்.
* 2000-ஆவது ஆண்டில் 400,000 பேர்கள் இவ்வாறு இறந்திருக்கிறார்கள்.
* புகை பிடிப்பது 435,000த்தைக் கொன்று இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.
* இதே மாதிரி போனால் உணவு பழக்கவழக்கங்களினால் இறப்பவர்களுக்கு 2005-இல் முதலிடம் கிடைத்துவிடும்.
* அடுத்த வருடமே 500,000-ஐ எட்டும்.
* அமெரிக்காவில் 64 விழுக்காடு மக்கள் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட அதிகம் உள்ளார்கள்.
* (நாங்கள்) 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்தியத்திற்கு செலவு செய்தோம்.
* சர்க்கரை வியாதி போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டால் $117 பில்லியன்.

மக்களுக்கு விழுப்புணர்வும் உடற்பயிற்சியை செய்ய ஊக்கததுயும் தருவதற்காக அரசாங்கமும் "ஆரோக்கியமான வாழ்க்கை" போன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. சவுத்வெஸ்ட் விமான சேவை சில மாதங்களுக்கு முன் குண்டாக இருப்பவர்கள் இரு பயணிகளின் டிக்கெட்டுக்கான காசை செலுத்தவேண்டும் என்னும் புது நியமனத்தை வழிவகுத்தது. அரசும் நிறுவனங்களும் அறிவுறுத்தி என்ன பயன்?

என்னவோ.. நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒன்னுமே புரியலை உலகத்துலே.. (இட்லி வடை, பெயரிலி வரிசையில் மற்றுமொறுவர்; சாப விமோசனம் மாதிரி சுவையாக இருக்கிறது. புதுமை விரும்பும் பித்தன் மாதிரி பாதியிலேயே நிறுத்தாத வரைக்கும் சரி!?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு