வியாழன், ஜூலை 01, 2004

இணையப் பொறுக்கன்

 1. எழுத்து விளையாட்டு: சே... 142-தான் கிடைத்தது! :( :-( அவ்வளவு மெதுவாகவா தட்டுகிறேன்!
 2. நவீன மொழி இயக்கம்: தமிழுக்கு இடம் இல்லை; ஹிந்தி கூட பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.

 3. இசை விமர்சகர்களின் வார்ப்பு: சுப்புடுக்களைத் திருப்திபடுத்தும்படி இசையமைத்தல் எப்படி?
 4. வலைப்பதிவுகளில் வலம் வரும் புத்தகங்கள்: புத்தகப் பட்டியல்கள் தவிர சுவாரசியமான வேறு சில விஷயங்களும் இருக்கிறது. கூகிளில் எந்த வார்த்தைகள் அதிகம் 'ஹிட்' கொடுக்கிறது என்று அலசலாம்.
  நான் பார்த்தது:
  # ஜெ.ஜெ (88)
  # கலைஞர் (86)
 5. எந்த புத்தகம் படிக்கலாம்? இன்பமா, துன்பமா? நகைச்சுவையா, நோ நானசென்ஸா? எதிர்பாராத திருப்பங்கள் வேண்டுமா? வன்முறை இருக்கட்டுமா? என்ற கேள்விகளுக்கு பதில் சொன்னால், படிப்பதற்குப் பரிந்துரைகள் கிடைக்கும்.
 6. மேலும் மேலும் நுண்ணிய தேடல்: ப்ரெஞ்ச் நிறுவனம், ஆப்பிரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக மனிதர்களிடம் செய்யப்படும் சோதனைகளைக, முப்பத்தேழு வயது ஜப்பானிய விவசாயி கண்டுபிடித்த வழக்கை, அமெரிக்க ஜூரிகள் கண்துடைப்பாக விசாரிக்கும் கதை வேண்டுமா? இங்கே சென்றுத் தேடிப் பார்க்கவும். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்த புத்தகங்கள் வேண்டும் என்று நான் தேடிப் பார்த்ததில் 'Line of Control - Tom Clancy's Op-Center 8' முதலிடத்தைப் பிடித்தார்.
 7. உங்க ஊரில் என்ன படிக்கிறார்கள்? அமெரிக்காவின் அனைத்து நூலகங்களிலும், பெரிய புத்தகக் கடைகளிலும், ஒவ்வொரு மாதமும் படிக்கவேண்டிய புத்தகம் 'இவை' என்று பட்டியல் போட்டு கொடுப்பார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் 'விஷ்ணுபுரம்' படித்து சென்று, இன்று போல் ஒரு பௌர்ணமி இரவில் விவாதிப்பதற்கு சௌகரியமாக இருக்கும்!?
 8. வானிலை ஆய்வு மையம்: ஒரு புயலின் பாதை.

நன்றி: நியு யார்க் டைம்ஸ்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு