திங்கள், நவம்பர் 15, 2004

பொய்விளம்பி

ஜெயேந்திரரின் கைது அனைவரும் அறிந்ததே. அதையட்டி நமக்கு மட்டுமே கிடைத்த சில உண்மையில்லாதத் தகவல்கள்.

-- ஜயேந்திரருக்கும் விஜயேந்திரருக்கும் கடும்போட்டி நிலவுவதாக கூகிள் சொல்லுகிறது. ஜயேந்திர (சரஸ்வதி) என்று தேடினால் 22,100 பக்கங்கள் கிடைக்கும். விஜயேந்திர (சரஸ்வதி) என்றால் 19,000 பக்கங்களைப் பெறுவதால், வெகு விரைவிலேயே 'பெரியவரை' முந்தி விடுவார் என்று கூகிளறிந்த வட்டாரங்கள் எழுதுகிறது.


-- ஜயேந்திரர் சமீபத்தில் 'சத்ரபதி' படத்தை ரசித்திருக்கிறார். 'நம்மை மாதிரியே முதல் பாதியில் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல், பிற்பகுதியில் உலகுக்கு வெளிக்கொணருவது நன்றாக இருக்கிற'தாக சக சிறைக் கைதிகளிடம் சொன்னதாகத் தெரிகிறது.


-- இந்து முண்ணனி தலைவர் இராம. கோபலன் சிறையில் ஜயேந்திரரை திடீர் விஸிட் அடித்தார். சந்தித்தபொழுது ஆதி சங்கராச்சாரியார் எழுதிய கீதையின் உரையை படிக்கக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.


-- 'அட்டகாசம்' சரணின் அடுத்த படத்தில் இரட்டை வேடம் கட்ட பொருத்தமான நடிகரைத் தேடி வருவது நாம் அறிந்ததே. கதையைக் கேட்ட 'ஜயேந்திரர்' இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், 'இந்து ஞான மரபில் ஏழு தரிசனங்கள்' கிடைக்கும் விதமாக திரைக்கதை அமைக்கும்படியாக சொல்லியிருப்பதால் உதவி இயக்குநர்கள் மண்டை உடைத்துக் கொள்கிறார்கள்.


-- தனது அடுத்த அம்பலத்தை விரைவாக வெளியிடுவதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிவிப்பார். "சுய மரியாதைத் தோழர்கள் அனைத்து ஹிந்து மத அமைப்புக்குள்ளும் ஊடுருவி 'விடுதலை' அளிக்கும் கடைசி நிலையில் இருக்கிறார்கள். நமது முதன்மைத் தலைவர் மாட்டிக் கொண்டிருப்பதை இந்த நேரத்தில் அம்பலப் படுத்தினால் -- 'குருதிப்புனலில்' கமல் செய்யாத தவறை நாம் செய்தவர்களாகும் அபாயம் இருக்கிறது" என ரகசிய சுற்றறிக்கையில்
எழுதியுள்ளார்.


-- முதல்வர் ஜெயலலிதா 'நக்கீரனை' எட்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தின் தமிழ் துணைப்பாடமாக ஆக்கப் போகிறார். உண்மை, திறனாய்வு, எளிய தமிழ், அரசல் புரசலான செக்ஸ் செய்திகள் போன்ற டீனேஜ் மக்களுக்கு ஏற்ற விஷயங்களை செம்மொழியில் சொல்வதால் இந்த அந்தஸ்து கிடைக்கிறது. இதன் மூலம், எதிர் பிரச்சாரத்தில் இயங்க நினைக்கும் 'நக்கீரனும்' தன் பக்கம் சேர்ந்து விடும் என்று நம்புகிறார்.
--------------------


- பாஸ்டன் பாலாஜி


பிகு: முழுக்க முழுக்க கற்பனை செய்திகளே :-)

3 கருத்துகள்:

பிகு: முழுக்க முழுக்க கற்பனை செய்திகளே :-)

எனக்கு அப்படித் தோன்றவில்லை. நடக்க வாய்ப்புள்ள செய்திகளாகவே தோன்றுகின்றன.

Damn :)...You better copyright all the rumours you heard, because they are going to be true and you can get the royalties :).

Jokes aside, I read Thirumalai's views on this issue in Rayar Kapi Club and so far I consider that as the best article on the other side(while reading that article, sometimes I feel his views as a "paranoid theory", but still it is worth).

It is very unfortunate that so many of our friends(inc. PaRa) already passed the accused as guilty.

Disclaimer: I am not a follower of Shankaracharya.

பிள்ளையார் பால் குடித்த மாதிரி, அரோரா போரியாலிஸ் (Aurora Borealis, the Northern Lights) நிகழ்வதும் என்னாலே, நிகழ்த்தியதும் நானே என்று கரடி விடாத வரை சரிதான் :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு