வியாழன், டிசம்பர் 02, 2004

கமல் & ராஜ்ய சபா

மாவீரர் மருதநாயகம்முகமது யூசுப்கான் - கே.வி.குணசேகரன்
மாவீரர் மருதநாயகத்தின் வரலாறு தெளிவான முறையில் சொல்லப் பட்டிருக்கிறது. நூல் முழுவதும் துறுதுறு நடையில், வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கிச் சொல்கிறார் கே.வி.குண சேகரன். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய வீரத்தால் குறுநில மன்னர் அளவுக்கு உயர்ந்தவர் மாவீரர் மருதநாயகம். அவரது வரலாறும், அவர் வாழ்ந்து மறைந்த இடங்களின் புகைப்படங் களும் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக் கிறது. நல்ல ஆவணம்!

பசும்பொன் பதிப்பகம், 9-கி, சித்தார்த்தா அபார்ட்மெண்ட்ஸ், 203, அபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை|600017. விலை: ரூ.60.கழுகு விகடன்: "அரசியல்ரீதியான தாக்குதலில் இருந்து ஜெயேந்திரரை அதே அரசியல்தான் காப்பாற்ற முடியும். எனவே, அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்குவதுதான் நல்லது. தேவைப்பட்டால், பி.ஜே.பி.யிலோ அல்லது வேறு சங்பரிவார் அமைப்பிலோ ஜெயேந்திரருக்கு முக்கிய பதவி ஒன்றையும்கொடுத்து, தேசிய அளவில் அரசியல் அந்தஸ்து கொடுப்போம்..." என்று வாஜ்பாயிடம் சொல்லியிருக்கிறாராம் சுரேந்தர் குல்கர்னி.

எது எப்படியோ ஜெயேந்திரரின் தமிழக ஆதரவாளர்கள் மத்தியில் பரவிவிட, "இந்தளவுக்கு ஆனபிறகு பெரியவாள் அரசியலுக்கு வர்றதும் நல்லதுதான். தென்னிந்தியாவிலிருந்து விஸ்வரூபம் எடுக்கும் ஒரு சாது, இந்திய தேசத்துக்குத் தலைவராக வந்து இந்தியாவை வல்லரசாக ஆக்குவார் என்று தீர்க்கதரிசி நாஸ்டர் டாமஸ் சொல்லியிருக்கிறார். அது பலிக்கத் தான் போகிறது!" என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.


3 கருத்துகள்:

மருதநாயகம் படத்தின் முன்னோட்டம் சிங்கப்பூரில் கமல் போட்டுக்காட்டினார்.அப்படியே படம் முழுவதும அமைந்தால் உலக அளவில் பேசப்படுவதாகத் தான் இருக்கும்.அதே போன்று மருதநாயகம் என்னும் வீர இளைஞனின் பெயரும் வெளியே தெரியவ்ரும்.

மருதநாயகரின் ப்ரிவ்யூ எவ்வாறு இருந்தது? சண்டைகள் மட்டும்தானா அல்லது முழுக் கதையின் பிண்ணனியில் இருந்தும் காட்சிகள் இருந்ததா? படிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்.

அன்பின் பாபா.
இது பத்து நிமிடங்கள் மட்டுமே திரையில் ஆடிய மருதநாயகம்.ஆனால் அந்தப் பத்துநிமிடங்களும் சபையில் எந்த வித சலனமும் இன்றி கட்டிப்போட்டுவிட்டது.அது முடிந்தபின் சபையில் நிலவிய சில நிமிட மௌனம் தான் படம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு அத்தாட்சி.
படம் முழுவதும் சண்டையாகத் தான் இருக்கும் போலிருக்கிறது ஆயினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்டினார்கள்.எதிரிகளிடமிருந்து கமல் தப்பியோடல்.மலைகளிலும் காடுகளிலும் பதுங்கி வாழ்தல் போன்றவற்றிலிருந்து சில துளிகளைக் காண முடிந்தது.எல்லாவற்றுக்கும் மேலாய் பிரமிக்க வைத்தது இளையராஜாவின் இசை சில துளிகள் தான் என்றாலும் இருபது வயது இளையராஜாவை இசையில் பார்க்க முடிந்தது.எப்போது வரும் எனக் கேட்டதற்கு அடுத்த வருடம் எனப் பதில் கூறினார்.பார்ப்போம்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு