செவ்வாய், ஜனவரி 18, 2005

Your Opinion Matters

மனிதர்களில் இரண்டு ஜாதி. ஒருவர் விடாமல் ஓட்டுப் போடுபவர். இன்னொருவர் வாக்கெடுப்பு நடக்க நடக்க, 'இந்த மாதிரி நிலவரம்..', ஸ்விங் வோடடுகள், பெண்டுலம் வாக்காளர்கள் என்று அலசி ஆராய்பவர். 'டுபுக்கு'ம் 'தமிழ்மண'மும் முண்ணனி கட்சிகளாக தொண்டர் மேக்ரோக்களை ஏவியிருக்க, தேசிகனும், பத்ரியும் பதுங்க விட்டிருக்கிறார்கள். படிக்கவே வராத வலைவாசகர்கள், வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது தமிழர்களின் ஜனநாயக கடமைக்கு செவிசாய்க்கும் குணத்தை காட்டுகிறது.

இதே தமிழ் வலைப்பதிவு தேர்தலை 'தமிழ்மணம்' மூலம் நடத்த வேண்டும். இப்போதிருக்கும் அனைத்து வலைப்பதிவுகளும் தேர்தலில் இடம் பெற வேண்டும். பல வகை தலைப்புகளில் நடத்தப்படும் 'Gallup Poll News Service' கருத்துக் கணிப்பு போல் மாதத்திற்கு விதவிதமான களங்களில் வலைப்பதிவு வாசகர்களின் துடிப்பை அறிந்துகொள்ளலாம்.

எனக்கு இந்த மாதிரி தேர்தல் நடத்துவது உவப்பில்லை என்றாலும், இந்த களியாட்டங்கள், வலைப்பதிவரிடையே பொதுவாக ஊக்கத்தையும், பெருவாரியான ஆக்கங்களையும் ஒருசேர நிகழ்த்தவல்லது என்றறிவேன். இதன் மூலம், சிலர், இது தேவையற்ற நடவடிக்கை என்று வசை பாடினாலும், அதன் உள்ளர்த்தத்தை நாமெல்லாரும் அறிந்தேயிருப்பதும் நமக்கெல்லாருக்கும் தெரிந்தேயிருந்தாலும் உணராதிருப்பது நீங்கள் அறிந்ததே. இன்ஷா அல்லாஹ்...

இந்த மாதிரி முறையான தேர்தல் எல்லாம் தேவையா என்பதற்கு சில காரணங்கள்:

1. ரகசிய முறையில் பாதுகாப்பான வாக்களிப்பு கொடுக்க முடியும்.

2. எவ்வளவு பேர் வோட்டு போடுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

3. மின்மடல் மூலம் ஓட்டுப் போடுபவர்களை கட்டுப்படுத்துவதன் மூலம், போலி வாக்குகளை களையலாம்.

4. புதிதாக பலரை வலைப்பதிய ஆர்வமூட்டலாம்.

5. வலை வாசகர்களின் நாடி துடிப்பு எவ்வாறு இருக்கிறது/செல்கிறது என்று உணரலாம்.

6. சாதாரணமாக இருக்கும் நம்பிக்கைகளை/கற்பனைகளை உடைத்தெறிய பயன்படலாம்.

7. தேர்தலை வைத்து கொஞ்சம் அலசல் போஸ்ட்களை போட வழிவகுக்கலாம்.

- பாஸ்டன் பாலாஜி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு