வியாழன், பிப்ரவரி 24, 2005

வாழ்த்துக்கள் - பதிவுகள்

Pathivukal:

நடுவர்கள்: அ.முத்துலிங்கம், 'பூரணி' என்.கே.மகாலிங்கம்.

ஹெமிங்வே சொல்லுவார் சிறுகதையின் முக்கிய அம்சம் அதன் நடுப் பிரச்சினையை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வாசகர்களுக்கு சொல்லாமல் தள்ளிப்போடுவது என்று. 'இளம் எழுத்தாளர் நாவலுக்கு முன் எழுதுவது, முதிய எழுத்தாளர் இரண்டு நாவல்களுக்கு இடையில் எழுதுவது' என்று சிறுகதையை பற்றி சொல்வார்கள். 50 சத வீதத்துக்கு மேலான கதைகள் மிகத் தரமானவையாக இருந்து உற்சாகமூட்டின. எழுத்திலே முதிர்ச்சியும், வடிவத்தில் இறுக்கமும், சொல்லவந்த விடயத்தில் வேகமும் இருந்தது. மொழி, நடை, உருவம், கரு என்று ஏறக்குறைய அனைத்து கதைகளும் தரமாகவே இருந்ததால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்கு நடுவர் குழு சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டது:

1) கருவிலே புதுமை இருக்கவேண்டும்
2) உலகைப் புரிவதில் ஒரு புது வெளிச்சம் தர வேண்டும்
3) ஏதோ விதத்தில் மனசை நெகிழவைக்க வேண்டும்

பரிசு பெற்றவர்கள்
1: 'எல்லாம் இழந்த பின்னும்..' -- சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)
2: 'நான், நீங்கள் மற்றும் சதாம்' -- ஆதவன் தீட்சண்யா (தமிழ்நாடு)
3. 'தீதும் நன்றும்' -- அலர்மேல் மங்கை (அமெரிக்கா)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு