The Wead Tapes
ஜார்ஜ் புஷ் போதைப் பொருட்களை உட்கொண்டது குறித்த ஒப்புதல் வாக்குமூலம் சமீபத்தில் ஒலிபரப்பானது. 'எடுத்துக் கொண்டேன்' என்று ஒத்துக் கொள்ளலாமா அல்லது பில் க்ளிண்டன் போல் 'உள்ளே இழுக்கவில்லை' என்று உணமை விளம்பலாமா என்று சத்தமாக சிந்தித்ததை ரகசியமாக பதிவு செய்து அமபலப் படுத்தியுள்ளார் வீட் (Wead). கடைசியாக 'போதை சம்பந்தமாக கேள்வி எவராவது கேள்வி கேட்டால், பதில் சொல்ல மறுத்து விடுவேன்' என்று முடிவெடுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் சப்பைக்கட்டு:
"பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் கேட்கும்... 'நாட்டின் ஜனாதிபதியே டோப்பு அடிக்கறாரு! பெருசா என்ன திருத்த வந்துட்டியே' என்று நியாயப்படுத்தும்".
இந்த சம்பவத்தை வைத்து முந்தாநாள்,
ஜே லீனோவில் (Jay Leno):
"இப்பொழுது குழந்தைகள் பெற்றோரிடம் கேட்கப் போவது... 'நாட்டின் ஜனாதிபதியே டோப்பு அடிக்கறாரா இல்லையா என்று சொல்லமாட்டாராம்! பெருசா என்ன கேட்க வந்துட்டியே' !"
சில குறிப்புகள்:
இந்த நக்கலைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சித் தலைவர் யாரையும் ஜே லீனோ கிண்டல் செய்யவில்லை.
புஷ்ஷின் குடியரசு கட்சியை சேர்ந்த எவரையும் கூட கைவைக்கவில்லை.
பெண்கள் சம்பந்தமான சில காமெண்ட்கள் இருந்தாலும் ஹில்லாரி க்ளிண்டன் போன்ற புகழ்பெற்ற மகளிரணித் தளைவர்களை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளவில்லை.
இது போன்ற நிகழ்வு தமிழக ஊடகங்களில் நடந்திருந்தால்:
போதைப் பொருள் உட்கொள்வதை நியாயப் படுத்துகிறாரா 'ஜே லீனோ' என்று கேள்வி கேட்டிருப்பார்கள்.
அமெரிக்க அரசுக்கு எதிராக ஜே லீனோ செயல்படுவதாக புஷ் அறிவித்திருப்பார்.
'புஷ் டெக்சாஸை சேர்ந்தவர். அமெரிக்காவுடன் பிற்காலத்தில் இணைந்ததால்தான் -- மாஸாசூட்ஸின் ஜே லீனோ புஷ்ஷை கிண்டலடிக்கிறார். அவரை தாக்கியதன் மூலம் டெக்சாஸ் கொதித்துப் போயுள்ளது. மாஸாசூட்சஸின் ஆதிக்க போக்கு தெரிகிறது' என்று அறிக்கை விடுவார்கள்.
க்ளிண்டனின் மறைத்தல்களையும் அன்றைய நிகழ்ச்சியில் எடுத்து வைக்காததன் மூலம் ஜே லீனோ எதிர்க்கட்சி ஆதரவாளராக சித்தரிக்கப் படுவார்.
எதிர்கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் ஜே லீனோவை சந்தித்துப் பேசுவார்கள்.
ஜே லீனோ அரண்டு போய் தன்னிலையைச் சொன்னால், 'பணம் கொடுத்து ஆளுங்கட்சி வாங்கி விட்டது' என்றோ, 'கலிஃபோர்னியா கிட்டக்கத்தானே டெக்சாஸ் இருந்து என்று பயந்து போயிட்டார்' என்றோ விளக்கங்கள் தரப்படும்.
புஷ் ரகசியப்பதிவு : Tapes Suggest Bush Used Drugs as Youth
enna sollunga antha 'Hey Daddy' uchcharippu pramaatham. :ROFL:
சொன்னது… 2/24/2005 11:09:00 AM
I told you not to read too much of sitridhazh vimarsanams and intellectuals blogs. See you started viewing Jay Leno in multiple angles.
Kavalaiyudan
S.Thirumalai
பெயரில்லா சொன்னது… 2/24/2005 01:11:00 PM
மதி, அதை முன்பின் மாற்றி வைத்துக் கொண்டு லெட்டர்மேன் கூத்தடிக்கிறார் :))
திருமலை, வஞ்சப்புகழ்ச்சிக்கு நன்றி.
சொன்னது… 2/24/2005 01:38:00 PM
கருத்துரையிடுக