ஆனந்த விகடன்
மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மை: ‘மின்னணு இயந்திரத்தின் மூலம் நடந்த வாக்குப் பதிவு நம்பிக்கைக்கு உரியதாக இல்லை. எனவே ஏற்கெனவே இருந்தபடி வாக்குச்சீட்டு முறையையே கடைப் பிடிக்க வேண்டும்' -- ஜெயலலிதா.
"விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் போட்டு விளைச்சலைப் பெருக்குகிறோம். ஆனால், அந்த ரசாயனக் கலவையால் உருவாகிற பொருட்கள் உடலுக்குக் கேடு என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அதனால் மீண்டும் இயற்கை எரு, தழைகளைப் பயன்படுத்துங்கள்' என்று விவசாய அமைப்புகளே குரல் கொடுக்கின்றன. -- க.சுப்பு (அ.தி.மு.க)
"சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்' என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை." -- எழுத்தாளர் சுஜாதா
‘இனி நான் கோட்டைக்கு காரில் போகமாட்டேன். ஏனென்றால் நிறைய விபத்து ஏற்படுகிறது. அதனால் இனிமேல் பல்லக்கில்தான் பயணிப்பேன்' எனச் சொல்வது போல் இருக்கிறது மீண்டும் வாக்குச்சீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது." -- ஞாநி
தயவு செய்து தமிழ்ல சிரிங்க -- இரா.நரசிம்மன்: "ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், விஜய், அஜீத், கமல்ஹாசன், த்ரிஷா, ஜோதிகானு நிறைய நடிகர்களும் நடிகைகளும் இப்போ ஆடிப்போய் இருக்காங்களாம்...!"
"ஏன்?"
"சினிமா தலைப்பு மட்டும் இல்லாம நடிகர்களும் நடிகைகளும் கூட தங்கள் பெயரை வடமொழிக் கலப்பு இல்லாம தூய தமிழ்ல வெச்சுக்கணும்னு அரசியல் தலைவர்கள் போராடப் போறாங்களாம்!"
வடி வடிவேலு... வெடிவேலு : ஓரஞ்சாரமா ஒதுங்க வந்தவய்ங்களெல் லாம் ‘ச்சு...ச்சு... நல்லாத்தேன் பாடறானப்பா'னு ஏத்தி விட்டுப் போயிருவாங்க. மனுசப் பயலுக்கு அதுல ஒரு ஆனந்தம். ‘நீயெல்லாம் மொறயா பாட்டு கீட்டு கத்துக்கிட்டா எங்கியோ போயிருவே'னு ஆளாளுக்கு உசுப்பேத்திவிட, நானும் நம்பி, மேலவீதியில ஒரு சங்கீதக்காரரு வீட்டுக்கு ஓசித் தாம்பாளம் வாங்கி மல்லிப்பூ, மாம்பழம், வெத்தல, பாக்குனு வெச்சி பதினோரு ரூவா காணிக்கை யோட போயிக் கதவத் தட்டிப்புட்டேன்.
பாட்டுக்கு மட்டும் ஒரு தனிக் கொணம் உண்டுண்ணே. மனசுக்குப் பிடிச்ச எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதை முதல்ல எப்போ கேட்டோமோ அந்தக் காலத்துக்கே கூட்டிப் போயி கொஞ்ச நேரம் கொஞ்சிட்டுத்தேன் விடும். அதுனாலயே நான் வீட்ல, கார்லனு எங்கியும் என் மனசுக்குப் புடிச்ச பழைய பாட்டுக்களாக் கேட்டுக் கிருப்பேன்.
ஹாய் மதன்: 'இரு பறவைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிப் போடுங்கள். அவற்றால் பறக்க முடியாது. இத்தனைக்கும் இப்போது நான்கு இறக்கைகள்!' என்கிறார் ஜலாலுதீன் ரூமி. சூஃபி தத்துவம் பற்றிப் பல புத்தகங்கள் (ஆங்கில மொழி பெயர்ப்புடன்) கிடைக்கின்றன. Idries Shah எழுதிய ‘The Way of the Sufi’யிலிருந்து ஆரம்பியுங்கள்.
ஜக்கி வாசுதேவ்: நீங்கள் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடந்துகொள்ளாதபோது, கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. எங்கே மனிதர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்காமல், உங்களுக்குப் பணிந்து உங்கள் செய்கைகளைச் சகித்து ஏற்றுக்கொள்கிறார் களோ, அங்கே அமைதியாக உணர்கிறீர்கள். அதாவது, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் அகங்காரத்துக்குத் தீனி போட வேண்டி இருக்கிறது.
கருத்துரையிடுக