திங்கள், மார்ச் 21, 2005

Barbershop

Barbershop Official Movie Site : PG-13

கறுப்பர்களின் ஒரு நாள் வாழ்க்கையை மசாலா மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

நாம் கீழே விழுந்திருக்கும் சமயத்தில் கூறப்படும் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதற்கு ஒரு சீன். கறும்புள்ளி ஒரு முறை வைக்கப்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் சந்தேகக் கண் விழும் என்பதற்கு ஒரு சீன். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் ஒளிவு மறைவில்லாமல் உரையாடும் ஓரிரு காட்சிகள். குழுவிற்கு வெளியில் இருந்து வரும் வெள்ளையன், மாற்றுக் குழுவான கறுப்பர்களுடன் ஒட்டிக் கொள்ளப் போராட சில காட்சிகள். படித்தவனின் அறிவு செருக்கை எடுத்துக்காட்ட ஒரிரு மேன்மை உணர்வு உரையாடல்கள்.

அருமையான படமாக இல்லாவிட்டாலும், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை கிரகிக்க உதவுகிறது. தமிழக சூழ்நிலையில் பலவற்றோடு இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்ப்படத்தின் இறுதியில் 'சுபம்' போடுவது போல் படத்தின் முடிவில் பிரச்சினைகள் அனைத்தும் மாயம் ஆகிப் போகிறது. தலித்துகள் பெரியாரைத் தாக்குவது போல் பார்பர்-ஷாப்பில் ரோஸா பார்க்ஸையும் ரோட்னி கிங்கையும் போட்டுத் தள்ளுகிறார்கள். திடீரென்று 'காதல் எஃப்.எம்' போன்ற கழிவிறக்கக் காதல் ஒன்றும் எட்டிப் பார்க்கிறது.

ஹீரோவைத் தவிர 'ஆண்களில் ராமன் கிடையாது' என்பதாக நேர்மையாக சைட் அடிக்கிறார்கள். 'செய்யும் தொழிலே ஜீசஸ்' என்று அட்வைஸும் கொடுக்கிறார்கள். பல நாள் திருடனாக இல்லாவிட்டாலும் ஒரு நாள் அகப்படுவான் என்று சிதறலாக பலதையும் தொட்டுச் செல்கிறார்கள்.

அந்தக்கால திண்ணைப் பேச்சு போல கலந்துகட்டியாக சில சமயம் அச்சப்பட வைக்கிறது; சில சமயம் வெறிக்க வைக்கிறது; சில சமயம் சிந்திக்க; சில சமயம் சிரிக்க வைக்கிறது; மொத்தமாக கிராமத்தைப் புரிந்து கொள்ள 'பரட்டை கும்பலோடு' ஒன்றரை மணி நேரம் செலவழித்தால் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளாமல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

2 கருத்துகள்:

Is it Barbershop 1 or 2??Ippo thaan padam paartheengala??Yeah..movies ellam namma ooru kathai madiri irukkunaaa..i guess they have closeknit family and relations unlike Caucasians..

Just watched the first one. I heard the second one was not 'that' great!?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு