வெள்ளி, ஏப்ரல் 15, 2005

ஏப்ரல் 10 & 14

நன்றி: Yahoo Groups: Rajinidotcom Message 12651 :: ஷாஜஹான்


புத்தாண்டு படங்கள் :: முதல் நாள் ரிப்போர்ட்



சென்னையில் சந்திரமுகி


Rajini attended function for K.Balachander :: ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.வியை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். எம்.எஸ்.வி.யை சந்தித்தபிறகு சோறு சாப்பிட நேரமில்லை என்று. அதேமாதிரிதான் இந்த நான். வாழ்க்கையை பார்த்து பயந்தவன் இந்த சிவாஜிராவ். பாலசந்தர்சாரை சந்தித்தபிறகு அவர் என் பெயரை ரஜினின்னு மாத்திவச்ச பிறகு வாழ்க்கை என்னை பார்த்து பயந்தது. அதுதான் பாலசந்தர் டச். அவரிடம் எத்தனையோ கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய மகான் 130 வருடம் வாழ்ந்தார். அவரிடம் நீங்கள் இப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன காரணம் என்றhர்கள். அதற்கு அந்த மகான் சொன்னார். வாழ்க்கையில் 3 ஒழுக்கத்தை கடைபிடித்தால்போதும் நீங்களும் அப்படி வாழ முடியும். அந்த 3 ஓழுக்கம் ஒன்று physical(உடல்ரீதியான ஒழுக்கம்), moral (உள்ள ரீதியான ஒழுக்கம்), spiritual (மத ரீதியான ஒழுக்கம்).

உடல் ரீதியான ஒழுக்கம் என்பது உன் உடலை பற்றி தெரிந்துக்கொண்டு, அதில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சீர்செய்து கொள்ள வேண்டும், மோரல் என்பது பெத்த அப்பா, அம்மாவை நன்றhக பார்த்துக்கொண்டு, தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ஜhஸ்தியாகவும் இல்லாம, கம்மியாகவும் இல்லாம, கரெக்டா செய்யணும், ஸ்பிருட்சவல் என்பது நீ இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அந்த மதத்தின் கொள்கைகளை சரியாக கடைபிடித்து வாழ்வது. இந்த மூணும் சரியாக இருந்தால் நீயும் அப்படி வாழலாம்.


Black tickets selling like hot :: கோயம்பேடு தியேட்டர் காம்ப்ளக்சில் "சந்திரமுகி' டிக்கெட் 200 ரூபாய்க்கு பிளாக்கில் விற்கப்பட்டது. "மும்பை எக்ஸ்பிரஸ்' டிக்கெட் நூறு ரூபாய்க்கு "பிளாக்'கில் விற்கப்பட்டது. விஜய்யின் "சச்சின்' பட டிக்கெட் 100 ரூபாயிலிருந்து 125 ரூபாய் வரை "பிளாக்'கில் விற்கப்பட்டது.


ரஜினி குடும்பம் :: "நேற்று மதியம் 2.30 மணி காட்சியின் போது ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகனும் நடிகருமான தனுஷ் ஆகியோர் படம் பார்க்க வந்தார்கள். காரில் இருந்து இறங்கிய தனுஷை ரசி கர்கள் அலேக்காக தியேட்டருக்குள் தூக்கிக் கொண்டு போனார்கள். இந்த காட்சியை தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்."

1 கருத்துகள்:

ரஜனி சார் பால் குடித்த காட்சி கண்டு புளாங்கிதம் அடைந்தோம்.தொடுப்புக்கு நன்றி

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு