வெள்ளி, ஏப்ரல் 15, 2005

பிட்ஸ் லொள்ளு

விகடன் கொடுத்தது பிட்ஸ்
நான் வழங்குவது லொள்ளு.


கும்பகோணம் பகுதியில் கோயில் கோயிலாகப் பயணம் போகிறார் சினேகா. என்ன வேண்டுதலோ?!

சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி விளம்பரத்தில் தனக்கு பதிலாக - ப்ரியா மணி வர ஆரம்பிச்சுட்டாரே என்னும் பயமோ?


சிறையில் இருந்தபடியே தன் வெளிநாட்டுப் பக்தர்களுக்காக பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் பத்திரிகை நடத்தி வருகிறார் பிரேமானந்தா.

சங்கர மடம் சந்தோஷப்படுகிறது


சந்திரமுகி ரிலீஸானதும் மறுபடியும் கேரளா கிளம்புகிறார் ரஜினி... ஆயுர்வேத சிகிச்சைக்காக!

தீவிர சிகிச்சை அளித்தாலும் படம் ஹிட்டாகாது என்கிறார் ரஜினி ரசிகர்.


தன் கைக்கடிகார நேரத்தை எப்போதும் அரைமணி நேரம்முன்கூட்டி ஓடும்படி செட் செய்து வைத்திருக்கிறார் வைகோ.

நேரத்தை வேகமாக்கினாலாவது, சீக்கிரமே திமுக தலைவர் பதவி கிடைக்காதா என்னும் நப்பாசைதான்?


குழந்தைகள் படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

அப்ப... மைக்கேல் மதன காமராஜன், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்பந்தம், மும்பை எக்ஸ்பிரஸ் எல்லாம் எதில் சேர்த்தி?


அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக, அரசின் சார்பில் அடுத்த மாதம் அமெரிக்கப் பயணம் செல்கிறார் ஜெயலலிதா!

மோடி மாதிரி இல்லாமல், விசா வழங்காவிட்டால், கடற்கரையில் உண்ணாவிரதத்தில் குதிச்சுடுவாங்க!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு