புதன், மே 04, 2005

முன்னுமொரு காலத்தில்

வலையில் இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பதிவது பெரிய விஷயம். இரண்டாண்டு காலமாக ரமணீதரன் வலைப்பதிந்து வருகிறார். வலைப்பதிவு ஏன், நியு ஜெர்ஸி பெட்னா விழா குறித்த பதிவுகள், திரைப்படங்கள், PBS / NPR-இன் All Things Considered, The Connection, On Point என்று விளாசுகிறார்.

லிட்டில் பிக் மேன், The Hudsucker Proxy, தி ஸ்டிங், Rio Lobo, பிக் ஜேக், The Comancheros, Rio Grande , Sands of Iwo Jima, Cradle will rock, ரிபல் விதவுட் அ காஸ், ப்ளூ க்ரஷ், தி பேட்ரியாட், தி ரெக்ரூட், தி ஹவர்ஸ், தி வேனிஷிங் ஹாரி, un ami qui vous veut du bien (With a Friend Like Harry), சவுண்ட் அண்ட் ஃப்யூரி, Yadon ilaheyya (Divine Intervention), லீவிங் ஜெருசலம் பை ரயில்வே, தி எண்ட் ஆஃப் தி அஃபேர், எ க்ரையிங் கேம், மிட்நைட் இன் தி கார்டன் ஆஃப் குட் அண்ட் ஈவில், என்று பார்த்த படங்களுக்கு எல்லாம் பார்வையோ விமர்சனமோ (இப்பொழுதாவது) முன்வைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அப்பொழுது எனக்கு வந்த சந்தேகம். மனிதர் தூங்குவாரா அல்லது கண்ணிமைக்கும் நேரங்கள்தான் உறக்கம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும். பிறகு புள்ளை குட்டிக்காரர் ஆகிப்போனார். பாஸ்டன் வந்தபிறகு சகவாசமும் சரியில்லை. கெட்டுப் போயிருக்கிறார் :-/

The redistricting plan, வானொலி நாடகங்கள், கதைசொல்லிகள், ஞானக்கூத்தனின் கவிவகுப்பு, தமிழன் அடையாளம், கண்ணில் தெரியுது வானம், அவருக்கு ரொம்பப் பிடித்தமான எழுதுபொருளான கவிதை, அன்றைய நாளிலே அவர் அஞ்சிய இன்னொரு சொல்லான பாரதி, உயர்வு நவிற்சி, சரிகைக்குஞ்சச்சொற்கள்,
காற்றடைத்தபைக்கூற்றுகள், சில கெட்ட உறுப்புகள் என்று எழுந்தவை, எதிர்ப்பட்டவை, பார்வை, மற்றவை என்று அடுக்கி உங்களை வலைபாஸ் (தமிழில் என்ன?) பாதையில் விடப்போவதில்லை.

(தமழ்ச் சொல் என்றவுடன் கண்ணில் படுவது: மறுப்புக்கூற்று (disclaimer), narcissist masks -- தன்னீர்ப்புமுகமூடிகள் போன்ற சொல்லாக்கங்கள்.)

வானவியற்றுறையையும் விடவில்லை. பெயரிலி ஆகிப் போனதும் இங்கே பதிவது குறைந்து போனது.

அவருடைய பதிவுகளில் இருந்து:

  • blogger.com தனது அண்மைய அமைப்பு மாற்றுதலோடு நீண்ட உள்ளிடுகைகளை ஏற்றுக்கொள்வதைத் தடை செய்கின்ற நோக்கமேதும் கொண்டதாலேயே, இந்த இரண்டு உள்ளிடுதல்களோடும் BIG POST ERROR என்று சுருக்கமான வரப்புயர விளக்கத்தைப் பெற்றேனோ தெரியாது :-) [அல்லது தமிழிலே நீண்டதாய் எழுதியதை ஆங்கிலத்திலே, "நல்ல கருத்துக்களைச் சொன்னார்; கைதட்டிவிடுங்கள்" என்ற பகிடிபோல மொழிபெயர்ப்பாகச் சொல்லியதோ தெரியாது :-D]

  • இன்னொரு ஆறுதலான விடயம், இணையத்தின் அறியப்பட்ட "I don't care what kind of cake you bake; but, I will top it with my sour cream" அறிஞ்ஞ ஆசாமிக்குஞ்சுமோன்கள் இவரின் திரைப்படவிமர்சனங்களிலே தங்கள் உள்ளீடு என்றளவிலே இதுவரை குப்பை சொட்டாமல், கொட்டாமலிருப்பது.

  • வலைப்பதிதலிலே உள்ள எதையும் விரும்பியவாறு என்ற நாட்குறிப்புச்சுதந்திரத்தைக் கண்டு கொண்டாலும், சொல்லும் பாங்கிலே கொஞ்சம் நிதானமாக, பின்னாலே இரண்டடி வைத்து நின்று நான் சொல்லவருவதை நானே கேட்டு எழுதுவதாகத் தீர்மானம். அன்றாடம் கேட்பதும் காண்பதும் வாசிப்பதுமாக உள்ளே வருவனவற்றிலே எந்தளவு உள்ளே தங்குகிறது என்று தெரியவில்லை. ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், 'இத்தனையையும் உள்வாங்கிக்கொண்டதால் என்ன பயன்' என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. சில மாதங்களிலே அடையலின்மேலே அடையற்படிவாய்த் தேங்கி, பாறையாகிப் போய்விடுகிறது. கதை, கவிதை, கட்டுரை எழுதுவதே சூழல்-->இருப்பு-->மூட்டம் காரணமாகத் தேய்ந்து போகையிலே, இந்த வலைப்பதிவு குறைந்த பட்சம் அன்றாட அறிதலிலே ஓரிரண்டையாவது பதித்துக்கொள்ள உதவும்; இன்னும், பத்தாண்டுகளிலே திரும்பிப் பார்க்கையிலே வந்த பாதையும் அறிந்த கருத்துக்களும் எந்தளவு குறிகளையும் நிலைகளையும் மாற்றியிருக்கின்றன என்றாவது அறிவதிலே ஒரு திருப்தி ஏற்படக்கூடும்.
  • 7 கருத்துகள்:

    appappa thalaiyil kuttu vizunthaalum, ippadiyum thattikkudukkiraar illa? ;)

    //இன்னொரு ஆறுதலான விடயம், இணையத்தின் அறியப்பட்ட "I don't care what kind of cake you bake; but, I will top it with my sour cream" அறிஞ்ஞ ஆசாமிக்குஞ்சுமோன்கள் இவரின் திரைப்படவிமர்சனங்களிலே தங்கள் உள்ளீடு என்றளவிலே இதுவரை குப்பை சொட்டாமல், கொட்டாமலிருப்பது.
    //

    sari, what is so special that you had to drag all these old post?

    naan kaekkalaiya, peyarili vanthu ungaLaith thittuRathukku munnaadi kaettuttu vEdikkai paarkka kaetkiraen. ;)

    'அந்தக்காலத்திலே...' என்று பெருசுகள் ஆரம்பிப்பது போல், சொல்லி வைக்கலாமே என்றுதான் ;;-)

    எங்கே அவள்(ர்)... என்றே மனம்....
    தேடுதே ஆசையால் ஓடிவா....

    ப்ளாக்டிரைவ் ஆர்க்கைவ்ஸ் சேமித்து வெச்சிருக்கிறீரா?

    Prakash,

    ennidam oru cd'il irukku. vEnumaa? ;)

    ஐகாரஸ்,
    இன்னும் துளி பாக்கி இருக்கிறது போலிருக்கே...

    peyarili
    peyarili

    //ennidam oru cd'il irukku. vEnumaa? ;) //

    ஆமாம். வேணும். நெவர்டைஸில் இருந்து ஹார்ட் டிஸ்கில் ஒரு காப்பி எடுத்து வச்சிருந்தேன். முட்டலும் மோதலுமாக இருந்த அச்சமயத்தில், அன்னாருக்கு ஞானத்ருஷ்டியில் தெரிந்து, சூ மந்திரகாளீ என்றிருப்பார் போலிருக்கிறது. வைரஸ் உபயத்தில் எல்லாம் காலி. சிடி, பீடி எல்லாம் வேலைக்கவாது, எங்காவது அப்லோட் செய்து லிங்க் கொடுக்கவும், அல்லது icarusprakash [a] gmail [dot] com முகவரிக்கு அனுப்பவும். 'சுதி' க்கு கம்பெனி கிடைக்காத நேரங்களில், படித்து கிக்கு ஏத்திக் கொள்ள வசதியாக இருக்கும். நான் சீரியஸாகத்தான் கேக்கிறேன். அனுப்பி வையுங்கள்.

    பாலாஜி : பிளவாளுமையின் பூர்வாங்கம் தெரிந்தது :-). உரலுக்கு நன்றி.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு